.

Sunday, June 5, 2011

பிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..

நண்பர்களுக்கு வணக்கம்..

பிளாக் பெர்ரி போன்களுக்கும் ஸ்மார்ட் போன்களுக்கும் என்ன வித்தியாசம்னும் நன்மை தீமைகள் என்னன்னு எனக்குத் தெரிஞ்ச விசயங்களை இங்கே சொல்லலாம்னு நினைக்கிறேன்..

இந்த ரெண்டு வகையான மொபைல்களுக்கும் வித்தியாசம் என்னன்னா.. பிளாக் பெர்ரி போன்கள் யூ.கேயில் இருந்து ஒரு கம்பெனி மூலமாகத் தயாரிக்கப்பட்டு விக்கப்படுது.. ஸ்மார்ட் போன்கள் ஏதாவது ஆபரேட்டிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு வேலை செய்யுது.. அந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தை யூஸ் பண்ணி பல நிறுவனங்கள் அவங்கவங்க டிசைன்ல மொபைல்களை வெளியிடறாங்க..

பிளாக் பெர்ரி போன்கள் பிசினெஸ் பீப்பிள்ஸுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கு.. காரணம் இந்த வகையான போன்கள்ல நாம வேலை பாக்கற கம்பெனி மெயில்களை பார்க்க ஏதுவாக கான்பிகரேசன்ஸ் பண்ணிக்க முடியும்.. ரொம்ப சுலபமாக ஈமெயில் பரிமாற்றங்களை செய்துக்க முடியும்.. ஆனால் மெயில்களை ஒரு லிமிட் வரைதான் ஸ்டோர் பண்ண முடியுது.. நம்முடைய தரவுகள் அனைத்தும் யூ.கேல இருக்கற சர்வர்லதான் ஸ்டோர் ஆகறது காரணமாக இருக்கலாம்.. சோ அங்கே சர்வர்ல ஏதாவது பிராபளம்னா.. இந்த காஸ்ட்லியான மொபைல்களை சும்மாதான் வைச்சிருக்க வேண்டியிருக்கும்..

பிளாக் பெர்ரி போன்கள் 30,000ரூபாய், 40,000ரூபாய்ன்னு விலை கொடுத்து வாங்க இது ஒன்னுதான் காரணாமான்னு நாம யோசிக்கறோம் இல்லையா.. இந்த போன்களுக்கு இன்னொரு சூப்பர் ஸ்பெசாலிட்டி இருக்கு.. அது என்னன்னா.. நார்மலாக தகவல் தொடர்பு சாதனங்களைக் கொண்டு ஒருத்தரையொருத்தர் தொடர்பு கொள்ளும்போது.. அதை தொழிற்நுட்ப வசதிகளை வைச்சு.. இடைமறிச்சு அவங்க செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியும்.. ஆனால் பிளாக் பெர்ரியில் இருந்து அனுப்பப்படும் தரவுகளையோ பேச்சுகளையோ.. எந்த வகையான தொழிற்நுட்பத்தைக் கொண்டும் இடைமறிச்சு கண்காணிக்க முடியாது.. இது பிசினஸ் பீப்பிள்ஸுக்கு ரொம்ப வசதியாக இருக்கு..

இப்படி ஒரு வசதி இருக்கும் போது.. அதை நல்லதுக்கு பயன்படுத்த முடியும், கெட்டதுக்கும் பயன்படுத்த முடியும் இல்லையா.. அதனால.. தீவிரவாதிகளும் கண்டிப்பாகப் பயன்படுத்த வாய்பிருக்கறதால ஆரேபிய நாடுகள் உட்பட பல நாடுகள் பிளாக் பெர்ரியைத் தடை செய்திருக்காங்க.. அப்போ ஏன் இந்தியாவுல மட்டும் தடை செய்யலைன்னு நமக்கு கேள்வி வரும்.. இந்தியா அரசாங்கமும் பிளாக் பெர்ரி நிறுவனத்துக்கு ஒரு கோரிக்கையை வைச்சிருக்கு.. தேவைப்படும் போது பிளாக் பெர்ரி சர்வரை ட்ராக் பண்ற வசதிதான் அது.. ஆனால் அந்த நிறுவனத்துக்காரங்க ஒரு லிமிட் வரைக்கும்தான் தகவல் பரிமாற்றங்களைத் தரமுடியும்னும்.. அவங்க சர்வரை யார் ட்ராக் பண்ணவும் அனுமதிக்க முடியாதுன்னும் சொல்லிட்டாங்க.. அதனால இந்தியா அவங்களுக்கு அதிர்ச்சி தர்ற வகையாக ஒரு காலக்கெடுவை விதிச்சிருக்காங்க.. அதுப்படி இந்திய அரசாங்கத்தோட வேண்டுகோளுக்கு அடிபணியாத பட்சத்தில்.. இங்கேயும் பிளாக் பெர்ரியோட விற்பனைகள் நிறுத்தப்படலாம்..

உலக சந்தையில் இந்தியாவில்தான் பெரும்பாலான போன்கள் விற்கப்படறதால.. இந்த போன்கள் நிறுத்தப்பட்டா.. கண்டிப்பா அந்த நிறுவனத்துக்கு பெரிய லாஸ்தான்.. சோ என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.. :-)

ஸ்மார்ட் போன்கள் முன்பு சொன்னது போல "ஆண்ட்ராய்டு", "சிம்பியன்", "விண்டோஸ்" மாதிரியான ஆபரேட்டிங் சிஸ்டங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குது.. மொபைல் நிறுவனங்கள் இந்த OSகளை அவங்க தயாரிக்கற மொபைல்கள்ல நிறுவி வெளியிடறாங்க.. இந்த மொபைல்கள்ல எல்லாத்துலயுமே டச் ஸ்கிரின் ஸ்பெசாலிட்டி இருக்கும்..

இது என்ன பெரிய அதிசியம்.. போன வருசம் வரைக்கும் பாப்புலராக இருந்த சீனா மொபைல்கள்ல கூடத்தான் இந்த வசதி இருந்ததுன்னு நீங்க நினைக்கலாம்.. இந்த வகையான போன்கள் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு வசதிகள் கிடைக்கவே தயாரிக்கப்பட்டிருக்கு..

உதாரணத்துக்கு எந்த நேரமும் ட்விட்டர், பேஸ்புக், ஜீசாட் மாதிரி எல்லா பொழுதுபோக்கு சேவைத் தளங்கள்லயும் ஆன்லைன்லயே இருக்க முடியுது.. இந்த மொபைல்கள்ல எல்லாத்திலும் பெரிய திரை இருக்கறதால வீடியோ, போட்டோஸ் எல்லாம் பார்க்க அருமையாக இருக்குது.. மற்றபடி 3G, வைஃபைன்னு இப்போ இருக்கற எல்லா புது டெக்னாலஜிகளுமே இந்த மொபைல்களுக்குள்ள அடங்கிடும்..

ஸ்மார்ட் போன்களைப் பொருத்த வரைக்கும் மற்ற ஆபரேட்டிங் சிஸ்டங்கள்ல இயங்கற மொபைல்களை விடவும்.. "ஆண்ட்ராய்ட்" மொபைல்களுக்குத்தான் பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கு.. காரணம் ஆண்ட்ராய்ட் OS.. லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்துல இருந்து டெவலப் பண்ணப்பட்டிருக்கு.. அதனால இந்த மொபைல்களுக்குத் தேவையான அப்ளிகேசன்ஸ் எல்லாமும் இலவசமாகவே கிடைக்குது.. அதனால் இப்போ இந்த வகை மொபைல்கள் ஆப்பிலோட ஐஃபோனோடவே போட்டி போட்டுட்டு இருக்கு..

ஸ்மார்ட் போன்லயும் என்னோட ஆபிஸ் மெயில் ஐட்டங்களை என்னால காண்பிகர் பண்ணிக்க முடியுது.. இந்த வகையான மொபைல்களை சாம்சங், எல்.ஜி, டெல் மாதிரியான பெரிய நிறுவனங்கள் தயாரிச்சு வெளியிடறாங்க.. விலையும் ஓகேயாத்தான் இருக்கு..

இதுல எந்த எந்த மொபைல்கள் நல்லா இருக்குன்னு இன்னொரு சந்தர்ப்பத்தில சொல்றேன்.. :-)

27 comments:

  1. என்னை பொறுத்தவரை போனை போனாக மட்டும் உபயோகப்படுத்தினால் போதும்

    ReplyDelete
  2. அருமை பாபு, ஸ்மார்ட் போன்களை பற்றி சீக்கிரம் எழுதுங்க.........!

    ReplyDelete
  3. நல்ல உபயோகமுள்ள பதிவு நண்பா. ஆனா எனக்கு ஒரு சந்தேகம்? போன்லயே எல்லாத்தையும் யூஸ் பண்ணிட்டா, கணினிய என்ன பண்றது?

    ReplyDelete
  4. எல் கே said...

    என்னை பொறுத்தவரை போனை போனாக மட்டும் உபயோகப்படுத்தினால் போதும் /////

    வாங்க எல்.கே.. வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  5. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    அருமை பாபு, ஸ்மார்ட் போன்களை பற்றி சீக்கிரம் எழுதுங்க.........! /////

    வாங்க நண்பா.. அடுத்த பதிவு ஸ்மார்ட் போன்களைப் பற்றி கலக்கலாக எழுதிடலாங்க.. :-)

    ReplyDelete
  6. N.H.பிரசாத் said...

    நல்ல உபயோகமுள்ள பதிவு நண்பா. ஆனா எனக்கு ஒரு சந்தேகம்? போன்லயே எல்லாத்தையும் யூஸ் பண்ணிட்டா, கணினிய என்ன பண்றது? ////

    ஹா ஹா ஹா.. என்னதான் மொபைல் டெக்னாலஜி வளர்ந்தாலும்.. கம்ப்யூட்டர்ல பண்ணக்கூடிய அனைத்து வேலைகளையும் மொபைல்லயே பண்ணிட முடியாதுங்க நண்பா.. :)

    ReplyDelete
  7. சகோ, இவ்ளோ நாளா எங்கே போயிருந்தீங்க,

    தாங்கள் நலமா?

    ReplyDelete
  8. ப்ளாக் பெரியின் சாதக பாதக விடயங்களை அருமையாக அலசியுள்ளீர்கள்...

    நமக்குத் தான் ரகசியமாக பேச ஒன்னும் இல்லையே.. இருந்தால் நாமளும் ஒரு ப்ளாக்பெரி வாங்கிடலாமில்ல;-)))

    ReplyDelete
  9. அலைபேசிபற்றிய தொழிநுட்ப தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  10. நிரூபன் said...

    சகோ, இவ்ளோ நாளா எங்கே போயிருந்தீங்க,

    தாங்கள் நலமா? /////

    ரொம்ப நல்லேயிருக்கேன் சகோ.. நீங்க நல்லாயிருக்கீங்களா?.. :-)
    வேலைப்பளு அதிகம் இருக்கறதால தொடர்ந்து எழுத முடியலைங்க..

    ReplyDelete
  11. மாணவன் said...

    அலைபேசிபற்றிய தொழிநுட்ப தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே ///

    நன்றிங்க மாணவன்..

    ReplyDelete
  12. வெல்கம் பேக் டூ பாபு.. என்னது? ரூ 30000? லேப்டாப்பே வாங்கிடலாம் போல.. ம் ம்

    ReplyDelete
  13. சி.பி.செந்தில்குமார் said...

    வெல்கம் பேக் டூ பாபு.. என்னது? ரூ 30000? லேப்டாப்பே வாங்கிடலாம் போல.. ம் ம் ////

    வாங்க சி.பி. :-).. வரவேற்புக்கு நன்றிங்க.. :-)

    ReplyDelete
  14. நல்ல தக்வல் நன்றி

    ReplyDelete
  15. எனக்கு என்னவோ "ஆண்ட்ராய்ட்" OS ல இயங்குற ஸ்மார்ட் போன் தான் ரொம்ப நல்லா இருக்கும்னு தோணுது. காரணம் அதுல தமிழ் மொழி எழுதா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். அதே சமயம் நோக்கியா ஸ்மார்ட் போன்கள் எப்படின்னு தெரியல :-)

    ReplyDelete
  16. கோமாளி செல்வா said...

    எனக்கு என்னவோ "ஆண்ட்ராய்ட்" OS ல இயங்குற ஸ்மார்ட் போன் தான் ரொம்ப நல்லா இருக்கும்னு தோணுது. காரணம் அதுல தமிழ் மொழி எழுதா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். அதே சமயம் நோக்கியா ஸ்மார்ட் போன்கள் எப்படின்னு தெரியல :-) ////

    வாங்க செல்வா.. உங்க கருத்து சரிதான்.. ஆண்ட்ராய்ட் OSதான் டாப்பா இருக்கு.. நோக்கியா ஸ்மார்ட் போன்கள் ரொம்பக் காஸ்ட்லியா இருக்கு.. எந்த அப்ளிகேசன்ஸ் வேனும்னாலும் எல்லாத்தையும் காசு கொடுத்துதுதான் வாங்கனும்..

    ReplyDelete
  17. Speed Master said...

    நல்ல தக்வல் நன்றி ///

    வாங்க ஸ்பீட் மாஸ்டர்..

    ReplyDelete
  18. நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டேன் மாப்ள நன்றி!

    ReplyDelete
  19. இதில் முக்கியமான விஷயம் "ஆண்ட்ராய்ட்" OS க்கு இலவச சாஃப்ட்வேர் டவுண்லோட், கூகிள் டெவலப் செய்த OS. செல்போன்களின் வருங்காலமே "ஆண்ட்ராய்ட்" ஐ நம்பித்தான் இருக்கும்.

    ReplyDelete
  20. நல்ல தகவல் பாஸ் ..

    ReplyDelete
  21. வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க

    காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

    ReplyDelete
  22. nalla pathivu, blackberry pathi nalla purinchuthu .

    ReplyDelete
  23. நல்ல பதிவு. உங்களுக்காக ஒரு விருது இதோ.. http://sadharanamanaval.blogspot.in/2012/02/blog-post_20.html

    ReplyDelete
  24. romba nalla padhivu, indru dhan indha irandu phone kalai patrium puriudhu :)

    ReplyDelete
  25. nanba. vanakam enudaiya Micromax a45 os'2.3android adahi os 4 kku apdat panna mudiyuma

    ReplyDelete