EXAM - திரில்லர் (உங்களுக்கு ஒரு சவால்)


  
பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்..

பதிவு எழுதி கிட்டத்தட்ட 2 மாசம் ஆகப்போகுதுன்னு நினைக்கறேன்.. சரி அப்போப்போ ஒரு அட்டென்னெஸாவது போட்டுடலாம்னுதான் நினைச்சேன்.. ஆனால் ஒர்க் லோட் ரொம்ப அதிகமாக இருந்ததாலவும்.. ஆபிஸ்ல பிளாக்கர் சைட்ஸை பிளாக் பண்ணிட்டதாலவும் எழுதவே முடியல.. :-)

சரி ரொம்ப நாள் கழிச்சு.. இப்போ ஏதாவது எழுதலாம்னு யோசிச்சா.. என்ன எழுதறதுன்னே புரியமாட்டேங்குது.. சரி முன்போலவே ஒரு ஆங்கிலப் பட விமர்சனம் எழுதிடலாம்னு நினைக்கிறேன்..

இந்தப் பதிவுல நான் எழுதப் போற படத்துக்குப் பேரு எக்ஸாம் (EXAM - 2005)..

உலகத்துல அதிகமான பேரும் புகழோடவும்.. ரொம்ப மதிப்போடவும் இருக்கற கம்பெனியில ஒரு பெரிய பதவிக்கு.. 8 பேர் பைனல் ரெளண்டுக்கு செலக்ட் ஆகி.. பைனல் ரெளண்ட் நடக்கற ஒரு ரூமுக்குள்ள வர்றாங்க.. அந்த ரூமுக்குள்ள அவங்களை கண்காணிக்கறதுக்கு கைத்துப்பாக்கியோட ஒரு செக்யூரிட்டி வேற..

80 நிமிஷம் நடக்கப்போற டெஸ்ட் இது.. இந்த டெஸ்ட் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி.. அதோட 3 ரூல்ஸை சொல்ல ஆரம்பிக்கிறார்.. அந்த டெஸ்டை வைக்கிறவர்..

1. எக்ஸாம் ஆரம்பிச்ச பிறகு என்னையோ, செக்யூரிட்டியையோ கம்யூனிகேட் பண்ண ட்ரை பண்ணினாலோ
2. உங்க டெஸ்ட் பேப்பரை தவறுதலாகவோ, வேணும்னோ ஸ்பாயில் பண்ணினாலோ
3. ஏதாவது காரணங்களுக்காக இந்த ரூமை விட்டு வெளியே போக நினைச்சாலோ

நீங்க இந்த எக்ஸாம்ல தோல்வியடைஞ்சதாக அர்த்தம்.. அப்புறம் உங்களுக்கு முன்னே ஒரே ஒரு கேள்வி இருக்கும்.. அந்த கேள்விக்கு யார் கரெக்டா பதில் சொல்றாங்களோ அவங்களுக்கு வேலைன்னு சொல்லிட்டு.. ஏதாவது டவுட் இருக்கான்னு கேக்கறார்.. எல்லாரும் டெஸ்ட் எழுதத் தயாராகறாங்க.. டெஸ்ட் ஆரம்பிக்குது..

டெஸ்ட் பேப்பரை பார்க்கற எல்லாரும் பெரிய அதிர்ச்சி.. அது ஒரு பிளான்க் ஷீட்.. எதுவுமே அதுல எழுதப்படல.. என்னடா இதுன்னு எல்லாரும் மண்டையைப் பிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்க.. ஒரு பொண்ணு மட்டும் எழுத ஆரம்பிக்குது.. அந்தப் பொண்ணு கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்றார் செக்யூரிட்டி... சோ தவறான விடை எழுதினாலும் வெளியே தள்ளப்படறாங்க..

மீதம் இப்போ 7 பேர்.. யாரும் பேசக்கூடாதுன்னு ரூல்ஸ் இல்லையே.. அதனால 7 பேரும் பேசிக்க ஆரம்பிக்கறாங்க.. ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்ணிக்கிட்டு கொஸ்டின் என்னன்னு கண்டுபிடிக்கலாம்னு முடிவு எடுக்கப்படுது..

பேப்பர்ல கண்ணுக்குத் தெரியாத இங்க் யூஸ் பண்ணி ஏதாவது எழுதப்பட்டிருக்கலாம்னு.. கூர்ந்து பார்க்கறாங்க.. தண்ணீர் ஊத்திப் பார்க்கறாங்க.. ரூம்ல இருக்கற லைட்டை எல்லாம் உடைச்சிட்டு.. இருட்டுல ஏதாவது தெரியுதான்னு பார்க்கறாங்க.. எதுவும் வேலைக்கு ஆகல.. கொஸ்டின் என்னன்னு கண்டுபிடிக்க முடியல.. 80 நிமிசத்துல 30 நிமிசம் முடிஞ்சுடுது..

7 பேர்ல ஒருத்தன் ரொம்ப டாமினேட்டிங்கா எல்லாத்துக்கிட்டயும் நடந்துக்கிறான்.. சில சூழ்ச்சிகள் பண்ணி ரூம்ல.. அவங்களோட இருந்த 2 பேரை வெளியே போக வைச்சிடறான்.. மீதம் 5 பேர்.. இந்த நடவடிக்கையால கைகலப்பு ஏற்படுது.. இன்னொருத்தன் அங்கே இருக்கற ஒரு பொண்ணுக்கு கொஸ்டின் தெரிஞ்சிருக்கனும்னு நினைச்சு.. டார்ச்சர் பண்ண ஆரம்பிக்கிறான்.. எல்லாமே பெய்லியர்.. ஒரு மணி நேரம் முடிஞ்சுடுது.. மீதம் 20 நிமிசம்தான்..

அங்கே இருக்கற ஒவ்வொருத்தரையா வெளியே அனுப்பிட்டா.. கடைசியா இருக்கறவங்கதான் ஜெயிப்பாங்கன்னு நினைச்சுட்டு.. ஒருத்தன் செக்யூரிட்டியோட துப்பாக்கியைப் பிடுங்கி எல்லாரையும் வெளியே போக சொல்றான்.. இந்த கலேபரத்துல ஒருத்தனுக்கு குண்டடிபட்டு மயக்கமாகிடறான்.. இந்த எல்லா பிரச்சினைகளும் முடிஞ்சு.. அங்கே அவங்களுக்கு கேட்கப்பட்ட கொஸ்டின் என்னன்னு.. ஒரு பொண்ணு கண்டுபிடிக்குது.. ஸ்ஸ்ஸ்.. ப்ப்பாபான்னு ஆயிடுச்சு..

படம் ஓடின ஒன்னரை மணிநேரமும் ஒரே ரூமுக்குள்ள நடக்குது.. செக்யூரிட்டி, டெஸ்ட் நடத்தறவரை சேர்த்து பத்தே கேரக்டர்.. படம் தீயா ஓடுது.. படம் ஆரம்பிச்ச 10வது நிமிசத்துல இருந்து.. அங்கே 9வது ஆளா நாமலும் உட்கார்ந்துட்டு கொஸ்டின் யோசிச்சுட்டு இருக்கறமாதிரி ஃபீலிங்..

கேள்வியைக் கண்டுபிடிக்க அவங்க நடத்தற ஒவ்வொரு முயற்சிகளும் அற்புதமாக இருக்கும்.. அங்கே இருக்கற லைட்ஸை ஒடைச்சா.. அதுக்குள்ள இன்னொரு லைட் இருக்கு.. அதையும் உடைச்சிட்டா.. மறைச்சி வைக்கப்பட்டிருக்கற இன்னொரு லைட்ஸ் எரியும்.. இந்தமாதிரி அந்த ஒரு ரூமுக்குள்ள நிறைய விசயங்கள் மறைச்சி வைக்கப்பட்டிருக்கும்..

செக்யூரிட்டி வைச்சிருக்கற துப்பாக்கியை.. ஒரு கேரக்டர் எடுக்கற சீன் செம.. ஒவ்வொரு சீனும்.. நம்முடைய எதிர்பார்ப்பையும்.. பிரஷரையும் அதிகரிக்குது..

அப்பாடா.. ஒரு வழியா என்ன கொஸ்டின் கேட்டானுங்கன்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு..

நீங்களும் கெஸ் பண்ணுங்களேன்.. அவங்களுக்கு கேட்கப்பட்ட கேள்வி என்ன? பின்னூட்டத்துல சொல்லுங்க.. :-)

டிஸ்கி: ஏற்கனவே படத்தைப் பார்த்தவங்க.. கொஸ்டினை லீக் பண்ணீடாதீங்க.. :-)

க்ளூ: கேள்வி இந்தப் பதிவிலேயே இருக்கு.. :-)


69 Responses So Far: