மன்மதன் அம்பு - திரை விமர்சனம்


கமல்ஹாசன், மாதவன், ரமேஷ் அரவிந்த் கூட்டணினாலே.. ஒரு பெரிய காதல் நகைச்சுவைப் படத்தைக் கொடுக்கப் போறாங்கன்னு நினைச்சுட்டு.. வேற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலே போனேன்.. படம் ஆரம்பிச்சதுல இருந்து.. கடைசி வரைக்குமே.. ஒவ்வொரு டயாலாக்கும் தத்துவமா உதிர்க்கிறாங்க.. இரண்டு வார்த்தைக்கு ஒரு வார்த்தை ஏதாவது நச்சுன்னு கருத்து வந்து விழுது.. படத்தோடவே ஒரு மெலிதான காமெடியை உணர முடியுது.. கடைசி ஒரு 45 மணிநேரம் மட்டும்.. முழு நகைச்சுவை.. உண்மையில் அவ்வளவு நேரம் ஓடிய படத்துக்கும்.. கடைசிக் காட்சிகளுக்கும் ஒத்து வரல.. ஆனால் ரசிக்க முடியாதபடி இல்ல.. நன்றாகவே இருந்தது..

படத்தோட டைட்டிலே ரொம்ப சிம்பிளாகப் போட்டாங்க.. எந்த கிராபிக்ஸும் இல்ல.. சாதாரணமாக எழுத்துப் போடறாங்க.. இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம்.. கமல்ஹாசன்.. ஆனால் கதை ஏற்கனவே இரண்டு உலகப்படங்களில் இருந்து கமல் சுட்டுட்டார்னு படிச்சேன்.. சுட்ட கதையாக இருந்தாலும்.. இந்த வருடத்தில் ஒரு அருமையான படமே..

இப்படத்தில் திரிஷா.. ஒரு நடிகையாகவே வர்றாங்க.. திரிஷாவை மாதவன் காதலிக்கிறார்.. முதல் காட்சியிலயே ஒரு பாடல்காட்சி.. அதில் சூர்யாவுடன்.. திரிஷா சூட்டிங்ல இருக்கறமாதிரி அந்தப் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கு.. சூட்டிங் ஸ்பாட் வர்ற மாதவன்.. திரிஷாவையும் சூர்யாவையும்.. சந்தேகப்பட்டு திரிஷாகூட சண்டைபோடறார்.. ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே மலைப்பாதையில் கார் ஓட்டிட்டு வர்றப்போ.. எதுத்து வர்ற வண்டியைப் பார்க்காமல் ஒரு ஆக்சிடெண்ட் ஆயிடுது.. எப்படியோ சமாளித்து.. வண்டியை நிப்பாட்டித் திரும்பிப் பார்க்க.. ஆக்சிடெண்ட் ஆன மற்றொரு வண்டியைக் காணோம்.. சரி இடிச்சுட்டு ஓடிட்டாங்க போலன்னு நினைச்சுட்டு.. திரிஷாவும் மாதவனும் சண்டையைத் தொடர்றாங்க.. இதனால மனசு வருத்தப்பட்டு.. மன மாறுதலுக்காக அவருடைய தோழி சங்கீதா இருக்கற ஊருக்குப் போறார் திரிஷா..

இங்கேதான் கமல் அறிமுகமாகிறார்.. இவர் யாருன்னா.. திரிஷாவை ஃபாலோ பண்ணி அவர் வேற யார் கூடயாவது தொடர்பு வைச்சிருக்காரான்னு மாதவன் துப்பறிய அனுப்பி வைத்த ஒரு டிடெக்டிவ்.. சங்கீதாவை அறிமுகப்படுத்தியதில் இருந்து திரிஷாவுக்கு அதிகமான டயலாக்கே இல்லை.. சங்கீதாவே நிறையப் பேசறார்.. அசால்ட்டா நிறைய லந்தடிக்கறார்.. அவருடைய குழந்தைகளாக வரும் கதாப்பாத்திரங்களும் சூப்பர்..

ஒருகட்டத்தில் திரிஷா மற்றும் சங்கீதாவுடன் கமல் நட்பாகிறார்.. அப்போது கமல் கூறும் அவருடைய ஃபிளாஸ்பேக்கில் ஒரு ஆக்சிடெண்ட் வருது.. அந்த ஆக்சிடெண்ட் திரிஷா பண்ணினதுதான்.. அதனால் குற்ற உணர்ச்சியில் திரிஷா தவிக்கிறார்.. கமலும் பணத்தேவைக்காக.. திரிஷா யார்கூடவோ சுத்தறார்ன்னு மாதவன்கிட்ட பொய் ரிப்போர்ட் கொடுத்துட்டு குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார்.. ஒருபட்சத்தில் கமலுக்கு நடந்த ஆக்சிடெண்டுக்கு காரணம் தான்தான்னு திரிஷா சொல்ல.. கமல் அதை ஸ்போட்டிவாக எடுத்துக்கறார்.. ரெண்டு பேருக்குள்ளேயும் இப்போ காதல்..

மாதவன் திடீர்னு கமலையும்.. திரிஷாவின் மோசடியையும் நேர்ல பார்க்கனும்னு வர.. அப்போ இருந்து காமெடி+மொக்கை ஆரம்பம்.. கடைசியில் கமலும் திரிஷாவும் சேர்றாங்க.. சங்கீதாவும், மாதவனும் சேர்றாங்க.. படம் ஓவர்..

படத்தின் முதல் காட்சியில் இருந்து வசனங்கள் எல்லாம் கவிதை மாதிரியே பேசறாங்க.. நிறைய ஆழ்ந்த கருத்துள்ள வசனங்கள்.. மாதவன் அவருடைய பார்ட்டை சிறப்பாகவே செய்திருக்கிறார்.. கமலைப் பற்றி சொல்லவே வேண்டாம்.. அருமை..

அடுத்து.. படத்தின் ஹீரோயின் திரிஷாவை விட.. சங்கீதாவே மனசில் நிக்கிறார்.. காமெடிக் காட்சிகளில் அவருடைய நடிப்பு சூப்பர்.. அதுவும்.. கடைசிக் காட்சிகளில்.. மாதவனிடம் மாட்டிக் கொள்ளவிருக்கும் கமலைக் காப்பாற்ற போட்டப் பிளான் சொதப்ப.. கமல் தன்னைத் துப்பறிய வந்த ஒரு டிடெக்டிவ்ன்னு தெரியாத திரிஷா.. அதே இடத்துக்கு வர.. அங்கு நடக்கும் லூட்டியில் தியேட்டர் முழுவதும் ஒரே சிரிப்பு.. அந்தக் காட்சிகள் சிறப்பாக அமைந்ததற்கு சங்கீதாவின் நடிப்பே காரணம்..

ரமேஷ் அரவிந்தை அடையாளமே தெரியல.. ரமேஷ் அரவிந்த் பார் எப்படி ஆயிட்டார்னு.. கூடபடத்துக்கு வந்திருந்த நம்ம பிரியமுடன் ரமேஷ் சொல்லத்தான்.. ஓ அப்படியான்னு பார்த்தேன்..

கமல் ஃபிளாஸ்பேக் சொல்ல ஆரம்பிக்கும் போது.. வரும் பாடல் காட்சி.. ஆக்சிடெண்ட் ஆனதில் இருந்து.. காட்சிகள் பின்னோக்கி நகர்வதுபோல காமிச்சிருப்பாங்க.. பதிவாக்கிய விதம் அருமை.. ஆனால் காட்சிகள் எல்லாம் கமலுடன் சேர்ந்து பின்னோக்கி செல்லும்போது.. கமலின் வாய் அசைவுகள் மட்டும்.. பாடல் வரிகளை கரெக்டா உச்சரிச்சது எப்படின்னு தெரியல.. ரொம்ப நல்லாயிருந்தது..

திடீர்னு ஊறுகாய் மாதிரி.. ஓவியாவும் வர்றார்.. அதைப் படத்துலயே மாதவன் நக்கலாக சொல்லிக் காமிச்சிட்டார்..

இந்தப் படத்தின் பிரச்சினைக்குரிய கவிதை.. இரண்டுமுறை வருது..

கடைசிக் காட்சிகள் காமெடியாக இருந்தாலும் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது..

மன்மதன் அம்பு - கடைசி 45 நிமிடக் காட்சிகளைத் தவிர்த்தால் இரண்டு முறை பார்க்கலாம்..


52 Responses So Far: