பெங்களூரில் ஒரு ஃபிளை "ஓவர்" - மறுபக்கம்


பெங்களூரில் ஒரு ஆண்டுக்கு முன்பு 11 கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்ட ஒரு ஃபிளை ஓவரைப் பற்றி.. "பெங்களூரில் ஒரு ஃபிளை "ஓவர்"" என்ற பதிவில் முன்பு விவரித்திருந்தேன்.. பெங்களூரில் இருந்து ஒசூர் செல்லும் சாலையில் இந்தப் பாலம் அமைஞ்சிருக்கு..

இந்தப் பாலம் கட்டப்பட்டதோட நோக்கம் இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதே.. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.. ஓசூர் சாலையில் உள்ள பொம்மனஹல்லி மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி மாதிரியான பகுதிகளினுள் அதிகமாக வாகனங்கள் சென்று வருவதே..

சரி இந்தப் பாலம் கட்டியாகி விட்டது.. இப்போது இங்கு போக்குவரத்து நெரிசல்கள் குறைந்துள்ளதா என்றால் அது இல்லைன்னுதான் சொல்லனும்.. காரணம் என்னன்னா.. இந்த பாலம் ஆரம்பிக்கறதே நான் முன்பு குறிப்பிட்ட பொம்மனஹல்லிங்கற பகுதிக்கு முன்னாடி இருக்கற ஸ்டாப்பிங்லதான்.. அதனால அந்தப் பகுதிகளுக்குள்ள போகவேண்டிய வாகனங்கள் நேராக ஓசூர் சாலையில போகவேண்டிய வாகனங்களை மறிச்சு போயிக்கிட்டுதான் இருக்கு.. அதுபோலவே.. இந்த பாலம் முடிவடையறதும்.. எலக்ட்ரானிக் சிட்டி தாண்டிதான்..

இந்தப் பாலத்துக்கு நடுவுல மொத்தம் ஏழு ஸ்டாப்பிங் இருக்கு.. அதுல ஒரே ஒரு ஸ்டாப்பிங் தவிர மற்ற இடங்கள் எல்லாவற்றிலுமே.. மக்கள் அதிகமாக ஸ்டே பண்ணியிருக்கிற ஏரியாதான்.. அதனால இந்தப் பாலத்தை இவங்களால பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுட்டுச்சு..

இங்கே எலக்ட்ரானிக் சிட்டியில இருக்கற பெரும்பாலான சாஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு அவங்களோட வாகனங்கள் வர்றது எப்படியும் ஆயிரத்தை மீறும்.. அதனால அந்த நிறுவனங்கள் எல்லாம் இந்தப் பாலத்தை பயன்படுத்தறாங்களான்னா அதுவும் இல்லை.. குறிப்பிட்ட ஒரே ஒரு நிறுவனத்தைத் தவிர..

காரணம் இந்தப் பாலம் பே அண்ட் யூஸ் டைப்.. காரணம் இதுதானான்னு சரியாகத் தெரியல.. ஆனால் எப்போதும் போல அந்த கம்பெனி வண்டிகள் எல்லாம்.. சாலையைத்தான் பயன்படுத்தறாங்க..

சரி ஊருக்குப் போறதுக்காகவாவது இந்தப் பாலம் யூஸ் ஆகுதான்னா அதுவும் இல்ல.. அரசாங்க பேருந்துகள் யூஸ் பண்ணாததுக்கு காரணம் நான் மேல சொன்ன மாதிரி பாலத்தை யூஸ் பண்ணினா பணம் கொடுக்கனும்னுதான்.. ஓசூர் சாலையில ஒவ்வொரு பிரைவேட் பஸ்களுக்கும் பிரான்ச் இருக்கறதால.. அங்கே நிக்கறவங்களை பிக்கப் பண்ணிக்கனும்னு அவங்களும் யூஸ் பண்றதில்லை..

எப்பவும் போல மக்கள் அவதிப்பட்டுட்டேதான் இருக்காங்க.. என்னைப் போன்று இந்தப் பாலம் முடிவடையற இடத்துல இருக்கறவங்களும் இந்தப் பாலத்தை யூஸ் பண்றதில்லை.. காரணம் ஒரு நாளைக்கு அப் அண்ட் டவுன் இந்தப் பாலத்தை யூஸ் பண்ணினா 20 ரூபாயும், ஒரு வழிப் போக்குவரத்துக்கு யூஸ் பண்ணினா 15 ரூபாயும் செலவாகுது.. ஒரு மாசத்துக்கு யூஸ் பண்ணனும்னா.. இதுக்காகவே தனி பட்ஜெட் ஒதுக்க வேண்டியிருக்கு.. எப்பவாவது சீக்கிரம் வீட்டுக்குப் போகனும்னு இந்தப் பாலத்தை யூஸ் பண்ணுவேன்.. ஒவ்வொரு முறையும் எத்தனை வண்டிகளைக் கிராஸ் பண்றேன்னு எண்ணிக்கிட்டே வருவேன்.. ஒருமுறைகூட பத்து வாகனங்களைத் தாண்டினது இல்ல..

சுமார் இரண்டு ஆண்டுகள் இந்தத் திட்டம் நடந்துச்சு.. அந்த சமயங்கள்ல இங்கே இருக்கற மக்கள் பட்ட அவஸ்தை கொஞ்சம் நஞ்சமல்ல.. சூழ்நிலை சீர்கேடு, டிராபிக்குன்னு நிறைய அவஸ்தைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது.. இப்பவும் அதேநிலைதான் தொடருது..

பெங்களூர்.. அதிகமாகப் பாலங்கள் கட்டப்பட்டுள்ள நகரம்.. போக்குவரத்து நெரிசல்தான் காரணம்..

ஓசூர் சாலையிலும் பிரச்சினைக்குரிய இடங்களான பொம்மனஹல்லியிலும், எலக்ட்ரானிக் சிட்டியிலும் சிறிய பாலங்களை அமைச்சிருந்தாலே.. அவங்கவங்க.. எந்த பிரச்சனையும் இல்லாம பயணம் செய்திருக்க முடியும்.. ஒரே ஒரு நிறுவனம் பயனடையறதுக்காக இந்தப் பாலத்தை அமைச்சிருக்காங்கன்னா அது எவ்வளவு பெரிய மோசம்..

போக்குவரத்து நெரிசல் உண்டாகற இடங்கள்ல என்னைப் போல பைக் வைச்சிருக்கறவங்களும்.. ஆட்டோக்காரங்களும் பண்ற சர்க்கஸ் இருக்கே.. பாதசாரிகளுக்கு அதெல்லாம் கடுப்பாகத்தான் இருக்கும்.. வேற வழியில்ல.. விக்ரம் மாதிரி லைன்கட்டி வந்திட்டு இருந்தா.. நைட் பத்து மணிக்குத்தான் வீடு வந்து சேரமுடியும்.. ஏதாவது ஸ்பெசல் பவர் இருந்தா.. பில்டிங் மேலயே வண்டி ஓட்டிட்டு வந்திடலாம்னு தோனுது..

வெகுஜனத்திற்கு தொல்லை கொடுத்து.. கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..50 Responses So Far: