.

Friday, March 18, 2011

ஃபிளைட் பிளான் - திரை விமர்சனம்

எனக்குப் மிகவும் பிடிச்ச ஆங்கிலத் திரைப்படங்கள்ல வகைகள்ல.. விமானத்துல நடக்கற மாதிரியான திரைக்கதையுள்ள படங்களை மிகவும் விரும்பிப் பார்ப்பேன்.. விமானத்துல நடக்கற கதைனாலே.. விமானத்தை ஹைஜாக் பண்றதும்.. அங்கே பேசஜ்சராக இருக்கற ஹீரோ எப்படி அந்த திட்டத்தை முறியடிக்கிறார் அப்படிங்கற மாதிரி திரில்லிங்கா கதை நகரும்..

இந்தப் பதிவுல நான் சொல்லப்போற படம் முழுவதும் விமானத்திலதான்.. ஆனால் ஹைஜாக் மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியாசம்..

ஃபிளைட் பிளான் - 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்..

கைல் பிராட் தன்னோட கணவரை இழந்த துக்கத்தில இரயில்வே ஸ்டேசன்ல உட்கார்ந்திருக்கார்.. கைல் தன்னோட கணவர் சடலத்தை ரிசீவ் பண்றதை.. ஸ்டேசன்ல உட்கார்ந்து நினைச்சுப் பார்த்துட்டு இருக்கும் போது.. திடீர்னு அவரோட இறந்த கணவர்,, அங்கே வந்து..வா வீட்டுக்குப் போலாம்னு அழைச்சிட்டுப் போறார்.. (ம்ம்.. ரைட்டு..)

சும்மா.. தன்னோட கணவர் வந்தமாதிரி நினைச்சுப் பார்த்திருக்கார் கைல்.. :-)..

கைல் பிராட்டுக்கு ஆறு வயசுல ஒரு மகள்..

இறந்த கணவரோட சடலத்தை தன்னோட ஊர்ல கொண்டு போய் அடக்கம் பண்ணலாம்னு.. தன்னோட மகளோட விமானத்துல கிளம்பறார் கைல்.. அந்த விமானத்தை வடிவமைச்ச இஞ்சினியர் கைல்தாங்கறது எக்ஸ்ட்ரா இன்ஃபர்மேசன்..

விமானம் கிளம்பினதும் அசந்து தூங்கிடறவர்.. கண் விழிக்கும் போது அவரோட மகளைக் காணோம்னு தேட ஆரம்பிக்கிறார்.. விமானத்துல இருக்கற யாருமே அவரோட மகளைப் பார்க்கலைன்னு சொல்றாங்க.. கைல் மகளைக் காணோம்னு விமானத்துக்குள்ள அனெளன்ஸ் பண்றாங்க.. அப்புறம் அவரோட தொல்லை பொறுக்காம.. கேப்டனோட பர்மிஷனோட.. ஃபிளைட் ஸ்டாஃப்ஸ் எல்லாருமே சேர்ந்து சின்னப் பொண்ணைத் தேட ஆரம்பிக்கிறாங்க.. ம்ஹும் எங்கேயும் கிடைக்கல..

கேப்டனுக்கு ஒரு நியூஸ் கிடைக்குது.. கைல் விமானத்துக்குள்ள ஏறும்போது அவர்கூட எந்த சின்னப் பொண்ணும் இல்லைங்கறதுதான் தகவல்.. அப்புறம் அதோட தொடர்ச்சியா இன்னொரு நியூஸ்.. கைலோட கணவர் இறக்கும்போதே.. அவரோட மகளும் இறந்திட்டார்ங்கறதுதான் அந்த நியூஸ்.. ரைட்டு அப்போ முதல் காட்சி மாதிரி கற்பனையாக நினைச்சுப் பார்த்திட்டு வந்திருக்கார்னு முடிவுக்கு வரமுடியுது நம்மால.. ஆனால் கைல்.. மகளோடதான் விமானத்துக்குள்ள வந்தேன்னு அடம் பிடிக்க.. கேப்டனுக்கு கோவம் வந்து அவரைக் கண்காணிக்கிற பொறுப்பை.. அந்த விமானத்துல இருக்கற கார்சன் அப்படிங்கற அதிகாரிகிட்ட ஒப்படைக்கிறார்.. கைல்லோட கணவர் இறந்ததால அவருக்கு மூளை பிசகிறுச்சுன்னு எல்லாரும் நினைக்க ஆரம்பிக்கிறாங்க..

விமானத்துல இருக்கற ஒரு டாக்டர்.. கைல்கிட்ட வந்து பேசறார்.. டாக்டர் பேசப்பேச.. தன்னோட மகள் செத்துதான் போச்சுன்னு கைல்லும் நம்ப ஆரம்பிக்கிறார்.. ஆனால் அந்த யோசனையை உடனே மாத்திக்கிற மாதிரி ஒரு காட்சி வருது..

கண்காணிப்புல இருக்கற கைல்.. அதிகாரி கார்சனை ஏமாற்றிட்டு.. பயணிகள் எல்லாரும் பயப்படற மாதிரி சில வேலைகள் செய்திட்டு.. அவரோட கணவரோட சவப்பெட்டி இருக்கற இடத்துக்குப் போய்.. பொண்ணைக் காணோம்னு அவரைப் பார்த்து அழுதுக்கிட்டிருக்கார்.. அவரை கைவிலங்கு போட்டு திரும்பவும் அவரோட சீட்ல கொண்டு போய் உட்கார வைச்சிடறாங்க..

கைலை இன்னொரு பணிப்பெண்கிட்ட பார்த்துக்க சொல்லிட்டு அதிகாரி கார்சன்.. கைல்லோட கணவர் சவப்பெட்டி இருக்கற இடத்துக்குப் போய்.. சவப்பெட்டியை உடைச்சு.. அதுக்குள்ள இருந்து.. வெடிகுண்டுகளை வெளியே எடுக்கிறார்.. அந்த வெடிகுண்டுகளை ஒரு இடத்துல போய் பிக்ஸ் பண்றார்.. அங்கேதான்.. கைலோட பொண்ணும் மயக்கமாகிக் கிடக்கு.. இப்போ பொண்ணு காணாமப்போனது உண்மைதான்னு நமக்குத் தெரியவருது..

கார்சன் நேரா கேப்டன்கிட்ட போய்.. கைல் விமானத்தை ஹைஜாக் பண்ணிட்டதாகவும்.. குழந்தை காணாமப் போனதாக நாடகமாடி.. விமானத்துக்குள்ள வெடிகுண்டை செட் பண்ணிட்டான்னும்.. அவள் கேக்கற தொகையை அவ அக்கெளண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணீட்டா எல்லாரையும் விட்டிறதாக சொல்றான்னு சொல்ல.. கேப்டனும் அதை நம்பிடறார்..

பணம் டிரான்ஸ்ஃபர் பண்ணப்படுது.. விமானத்தை உண்மையாகக் கடத்தினது யாரு?.. கைல் தன்னோட மகளை எப்படி மீட்கிறார்னு மீதித் திரைக்கதையில ரொம்ப விறுவிறுப்பாக சொல்லியிருப்பாங்க..

உண்மையிலயே கைல்லோட மகள் தொலைஞ்சுதான் போச்சா.. இல்லையான்னு.. பாதிப்படம் நகர்ற வரைக்குமே நம்மால டிசைட் பண்ண முடியாது.. ஆனால் படம் தொடக்கத்துல இருந்து.. மகளைத் தேடறேன்னு அவர் செய்ற வேலைகள் எல்லாமே ரொம்ப பரபரப்பாக இருக்கும்..

கைலோட மகளைக் கடத்தி.. விமானத்தை கார்சன்தான் ஹைஜாக் பண்ணினார்னு நமக்குத் தெரிய வந்தாலும்.. கடைசி வரைக்குமே விறுவிறுப்பு குறையாம நகருது திரைக்கதை..

கைல்தான் விமானத்தைக் கடத்திட்டார்னு வெளியே எல்லாரும் நம்பிக்கிட்டிருக்க.. கார்சன்தான் கடத்தினதுன்னு கைல்லுக்கு மட்டுமே தெரிய.. தன் மகளையும் காப்பாற்றி.. தன்னை லூசுன்னு நினைச்சுட்டு இருக்கற மத்தவங்கிட்டயும்.. உண்மையைக் கடைசியில் விளங்க வைக்கிறார்..

தன் மகளைக் காப்பாற்றி.. விமானத்துக்கு வெளியே அவர் நடந்துவரும் போது.. எல்லாரும் கைல்லை ஆச்சரியமாகவும்.. ஒருவிதமான குற்ற உணர்ச்சியோடவும் பார்க்கற சீன் அற்புதம்..

ஒருத்தருமே தன்னை நம்பலைன்னாலும்.. இருக்கற குழந்தையை செத்ததாக சொல்லி.. அவரை நம்ப வைச்சதுக்கப்புறமும்.. விடாமப் போறாடி குழந்தையை மீட்கிறார் கைல்.. அற்புதம்.. அருமையான திரில்லர் மூவி..