.

Monday, March 14, 2011

தனிமைச் சிறகுகள் - பெங்களூர் பயணம்

"தனிமைச் சிறகுகள் - முதல் பயணம்" அப்படிங்கற தலைப்பில.. என்னுடைய சென்னை அனுபவங்களைப் பற்றி சுருக்கமாக எழுதியிருந்தேன்..

என்னுடைய அண்ணனுக்கு பெங்களூர்ல வேலை கெடைச்சதால.. நானும் அவர்கூடவே வந்துட்டேன்.. அப்படிங்கறதோட அந்தப் பதிவை முடிச்சிருந்தேன்.. முதல் பாகத்தைப் படிக்காதவங்களும் இந்தப் பதிவைத் தொடரலாம்.. உங்களுக்கு புரிதல் சிரமமாக இருக்காதுன்னு நினைக்கிறேன்..

பெங்களூர் வரும்போது மனசு முழுக்க ஏதோ எதிர்பார்ப்பு.. டூர் போறமாதிரி ஞாபகத்துலயே வந்துட்டேன்..

அண்ணன்.. இங்கே எலக்ட்ரானிக் சிட்டிங்கற ஏரியால தங்கியிருந்தார்.. வந்து ஒரு 2 நாள்.. என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியல.. சும்மா வீட்ல உட்கார்ந்து இருக்கறதுக்கு.. ஏதாவது பஸ்ல ஏறி.. எங்கேயாவது போயி சுத்திட்டு வாப்பான்னு சொன்னார் அண்ணன்.. இங்கே ஆட்டோ டிரைவர்ல இருந்து எல்லாரும் இங்கிலீஷ்தான் பேசுவாங்க.. அதனால யார்கிட்ட என்ன விசாரிச்சாலும் இங்கிலீஷ்லயே பேசு அப்படின்னார்.. பேசலாம்.. ஆனா எனக்கு இங்கிலீஷ் தெரியாதே.. :-)

"இந்த இடத்துக்கு எப்படிப் போறதுன்னு" இங்கிலீஷ்ல எப்படிக் கேக்கறதுன்னு மனப்பாடம் பண்ணிக்கிட்டேன்.. அன்னைக்கு முழுவதும் ஒரே ("இந்த இடத்துக்கு எப்படிப் போறது") இங்கிலீஷ்தான்.. :-)

நெக்ஸ்ட்.. வேலை தேடனும்ல.. சென்னையில் BPOல வேலை பார்த்ததால.. அதுல தேடலாம்னு முடிவு..

இங்கே இருக்கற கம்பெனிகளோட வெளித்தோற்றமே என்னை மிரட்டுச்சு.. உள்ளே இருக்கறவங்க கடிச்சு தின்னுடுவாங்களோன்னு பயம்.. எனக்குத் தெரிஞ்சு புதுசா வேலை தேடற பலருக்கு இந்த பயம் இருக்குன்னு நினைக்கிறேன்.. அதனால நியூஸ் பேப்பர்ல வர்ற பெரிய பெட்டி விளம்பரங்களை எல்லாம் பார்க்கவே மாட்டேன்.. சின்ன சின்னப் பெட்டிகள் எங்கேயிருக்குன்னு பார்த்து அங்கே போய் இன்ட்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டே இருந்தேன்.. எங்கே போனாலும் சரி.. அண்ணன் சொல்லிக்கொடுத்து மக்கப் பண்ணின.. செல்ஃப் இன்ட்ரோடக்சன் மறந்து போய்.. பாதில பே பேன்னு பார்ப்பேன்..

பெங்களூர்ல எனக்குக் கிடைச்ச முதல் வேலைப் பற்றிக் கண்டிப்பா சொல்லியாகனும்.. :-)

ஒரு நாள் எப்பவும் போல ஒரு கம்பெனிக்கு இன்ட்டர்வியூ போனா.. நான் சென்னையில் பார்த்திட்டு இருந்த அதே வேலையைத்தான் டெஸ்டா வைச்சாங்க.. புதுக் கம்பெனி.. அப்போதான் ஆள் எடுத்துட்டு இருந்தாங்க..

ஒரு 2 கேள்வி குடுத்து 30 நிமிசம் டைம் கொடுத்தாங்க.. அந்த ரெண்டையும் செய்ய மொத்தமே 5 நிமிசம்தான் ஆகும்.. செய்து முடிச்சுட்டு காமிச்சா.. என்னை நம்பாம திரும்பவும் செய்துகாட்டுன்னு சொல்ல.. நானும் இன்னும் வேகவேகமா செய்து காட்டிட்டேன்.. அப்புறம் ஒரு நாலு பேர் ஒன்னாக்கூடி நின்னு பேசிட்டு.. என்னை ஒரு ரூமுக்கு அழைச்சிட்டுப் போயிட்டு.. எதுவுமே என்னைப் பற்றிக்கேக்காம.. நாங்க உன்னை செலக்ட் பண்ணிட்டோம்.. உனக்கு டீம்லீட் பொசிசன் தர்றோம்.. அப்படின்னுட்டாங்க.. எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு..

ரியலி.. நோ.. ஹவ்.. அப்படின்னேன்.. அதாவது.. எனக்கு இங்கிலீஷ் சரியா பேசவராதே.. நான் எப்படி டீமை மெயின்டெயின் பண்றதுன்னு கேக்க வந்தேன்.. :-).. அவங்களும்.. நான் என்ன கேக்க வந்தேன்னு தெளிவா புரிஞ்சுக்கிட்டாங்க.. அப்போ நான் கரெக்டாதான் பேசியிருக்கேன்.. :-).. கவலைப்படாதே.. உனக்கு நாங்க அசைன் பண்ற 8 பொண்ணுங்களுக்கும் தமிழ் தெரியும்.. நீ இப்போவே ஜாயின் பண்ணீடுன்னு சொல்லிட்டாங்க.. ரைட்டு.. அப்படியே.. ஒரு டீம் லீடரா புளோருக்குள்ள வந்தேன்.. :-)

எனக்கு தெரிஞ்ச விசயங்களை எல்லாம் சொல்லிக்கொடுத்து.. அந்தப் பொண்ணுங்க எல்லாம் நல்லாவே ஒர்க் பண்ணினாங்க.. ஆனால் அந்தக் கம்பெனியோட பியூச்சர் பத்தி எனக்கு கொஞ்ச நாள்லயே தெரிஞ்சுடுச்சு.. இங்கே ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லனும்.. நான் சென்னையில் குவாலிட்டி கண்ட்ரோலராக ஒர்க் பண்ணிட்டிருந்த கம்பெனியில் என்னுடைய முக்கிய வேலை என்னன்னா.. எங்ககிட்ட இருந்து வேலை வாங்கிப் பண்ற கம்பெனிகள்.. அனுப்புற எல்லா பைல்லையும் 6 தப்பு கண்டுபிடிக்கனும்.. அப்படி கண்டுபிடிக்கற பைல்ஸ் எல்லாம் ரிஜெக்ட் ஆகி.. அந்தக் கம்பெனிகளுக்கு பணம் கிடைக்காது..

இங்கே பெங்களூர் கம்பெனியும் அங்கேதான் இந்த வேலையை வாங்கியிருக்கறது தெரிஞ்சதுமே.. அவங்ககிட்ட போய் எச்சரிச்சேன்.. என்னை அவங்க நம்பல.. ரைட்.. நான் சொன்ன மாதிரியே நடந்துச்சு.. என்னுடைய டீம் பொண்ணுங்க எல்லாம் ஒரு இடத்துல வேலை வாங்கிட்டோம் சார்.. நீங்களும் வந்து அட்டெண்ட் பண்ணுங்கன்னு போன் பண்ணுச்சுங்க.. என்னக் கொடுமை சார் இது.. அங்கே என்னை செலக்ட் பண்ணல.. :-)..

நெக்ஸ்ட் சில கம்பெனிகள்ல வேலை செய்ததுக்கு அப்புறம்.. "Indicomm Global Services" அப்படிங்கற கம்பெனியில் வேலை கிடைச்சது.. இந்தக் கம்பெனியோட பெருமை என்னன்னா.. தமிழ்நாட்டுல இருந்து புதுசா வர்றவங்க எல்லாரும் வேலை கொடுத்து.. வேலை பெண்டை நிமித்திடுவாங்க.. ஆனால் புதுசா வர்றவங்க.. தாராளமா இங்கே வரலாம்.. கண்டிப்பா வேலை உண்டு..

மீதிக்கதையை அடுத்த பாகத்தோட முடிச்சுக்கறேங்க.. வர்றேன்.. :-)