.

Monday, September 6, 2010

பிரியத்துடன் வாழ்த்த வாங்க..

உலகத்துல ரொம்ப மரியாதைக்குரிய வார்த்தை நட்பு..

எல்லாருக்கும் குறைஞ்சது ஒருத்தராவது நெருங்கின நண்பர்களா இருப்பாங்க.. ஒரே மாதிரி குணாதிசியங்கள் இருக்கறவங்கதான் கண்டிப்பா நெருங்கின நண்பர்களாக இருக்க முடியும்னு சொல்வாங்க..

எனக்கும் ஒரு பெஸ்ட் பிரண்ட் இருக்கார்.. கண்டிப்பா ரெண்டு பேரும் நண்பர்களாக இருக்கறதே உலக அதிசயந்தான்.. அவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருக்கும் எங்களுக்குள்ள.. ரெண்டு பேரும் எல்லா விசயங்களுக்கும் சண்டை போட்டுட்டேதான் இருப்போம்.. ரொம்பக் கடுமையாகக்கூட சண்டை போடுவோம்.. எவ்வளவு சண்டை போட்டாலும் என் நண்பன் அப்படிங்கற புரிதல் எங்களுக்குள்ள இருக்கும்..
ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒன்னாதான் சுத்துவோம்.. எங்க ரெண்டு பேரோட முக அமைப்புகள் ஒரே மாதிரியா இருக்கறதால நிறைய பேர் எங்களை அண்ணன், தம்பின்னு கூட நினைக்கறாங்க..
 ஆபிஸ்ல நிறைய பேருக்கு எங்க பேர்கள்லயே குழப்பம்.. எங்க பேரை மாத்தி மாத்திதான் கூப்பிடுவாங்க.. அப்படி கூப்பிடறவங்களையும் நாங்க திருத்தறதுல்ல..

அவருக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருக்குங்க.. கல்யாணத்துக்குப் பத்திரிக்கை அடிக்கறப்போ என் சார்பாக நீதாண்டா நம்ம நண்பர்களை அழைக்கனும்னு கேட்டார்.. எனக்கு ரொம்ப சந்தோசமாவும் கெளரவமாவும் இருந்தது..
யார் இப்படியெல்லாம் சொல்வாங்க.. என்மேல எவ்வளவு மரியாதையாவும் நட்பாகவும் இருக்கார் பாருங்க.. நண்பர்கள் எல்லாருக்கும் பத்திரிக்கை கொடுத்து நான் அழைச்சபோது.. "Abdul Invites" அப்படிங்கற வார்த்தைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டாங்க.. எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது..
நான், ரமேஷ்
கல்யாணத்துக்கு ரொம்ப குஷியா ஊருக்குப் போயிட்டார் நண்பர்.. எனக்குத்தான் சண்டை போடவும்.. திட்டவும் ஆள் இல்ல இப்போ.. ஹா ஹா ஹா..

சரிங்க மேட்டருக்கு வர்றேன்..

நம்ம நண்பர் பிரியமுடன் ரமேஷுக்கு செப்டம்பர் 12 ஆம் தேதி கல்யாணங்க.. அழைப்பிதழை இந்தப் பதிவுல அட்டாச் பண்ணியிருக்கேன்.. எல்லாரும் கண்டிப்பா வந்து மணமக்களை வாழ்த்தி கல்யாணத்தை சிறப்பா நடத்திக் கொடுக்கணும்னு கேட்டுக்கறேன்..

நட்புடன்

அப்துல்காதர் (எ) பாபு.


8 comments:

  1. நல்வாழ்த்துக்கள் ரமேஷூக்கு..

    ReplyDelete
  2. ரமேஷ்க்கு வாழ்த்துக்கள் உங்கள் நடப்பு மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ரமெஷுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ரமேஷ்க்கு வாழ்த்துக்கள் உங்கள் நடப்பு மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்! :-)

    ReplyDelete
  6. நண்பரை வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்..

    ReplyDelete