.

Thursday, September 2, 2010

BPO பதவியில் உயர்வும் சரிவும்..




இரண்டாம் பாகம்

BPO ஜாப் வாங்கி.. வேலை செஞ்சு.. அதுல நம்மள்ல ஒருத்தர டீம் லீடர் ஆக்கிட்டோம் ஞாபகம் இருக்கு இல்லையா..

இங்க ஒரு டீம் லீடரா என்னன்ன பொறுப்புகள் இருக்கு.. ஒவ்வொரு வாரமும் நம்ம டீம் மெம்பர்சைக் கூப்பிட்டு திட்டனும்.. அப்புறம் புகழனும்.. இது ரொம்ப முக்கியம்.. இதுவரைக்கும் நமக்குன்னு இருந்த டீம் லீடர்கிட்ட ரிப்போர்ட் பண்ணிட்டு இருந்தோம்.. இப்போ பிராஜெக்ட் மேனேஜர்கிட்ட ரிப்போர்டிங்..

அப்பாடா.. இனிமேல் எந்த டைமிங்க்கு வேணா வரலாம்.. போலாம்.. நமக்குன்னு ஒரு எடுபிடின்னு நாம நினைச்சிட்டு இருப்போம்.. ஆனா கதையே வேறமாதிரி நடக்கும்.. ஆபிஸ் டைமிங்க்கு அட்லீஸ்ட் ஒருமணி நேரத்துக்கு முன்னயே வரவேண்டியிருக்கும்.. அப்புறம் ஆபிஸ் முடிஞ்சு எல்லாரும் போனதுக்கு அப்புறமும் கண்டிப்பா ஏதாவது ஒரு வேலை இருக்கும் பிராஜெக்ட் மேனேஜர்கிட்ட கொடுக்கறதுக்கு.. என்னடா இது!! பெண்டு நிமிருது.. நம்ம டீம் லீடர் இவ்வளவு வேலை பார்த்தமாதிரி தெரியலையேன்னு நினைச்சிட்டு இருப்போம்.. ஆக்சுவலா நம்மளாலும் வேலை செய்யாம OP அடிக்க முடியும்.. நம்ம சின்சியாரிட்டி அதுக்கு விடாது.. கண்டிப்பா வேலை செஞ்சுட்டேதான் இருப்போம்..

இதுக்கு இடையில.. டீம் லீடர் பதவின்னா என்னன்னு உணர ஆரம்பிப்பிங்க.. என்னன்னா.. டீம் மெம்பர்ஸ் செய்ற செய்கைகளை மேனேஜ்மென்ட் கிட்ட போட்டுக் கொடுக்கறது.. ஆனா அந்த வேலையே நமக்குப் பிடிக்காது.. ஒருத்தர் தப்பு பண்ணியிருந்தாலும் அந்த பிரச்சனை நம்மோட பிராஜெக்ட் மேனேஜர்கிட்ட போகாம அவங்களைத் திருத்தத்தான் பார்ப்போம்.. ஆனா நம்ம மேனேஜர் என்ன நினைப்பார்.. என்னடா இவன் ஒரு கேஸ்கூட புடிக்க மாட்டேங்கறான்.. இவன் லாயக்கு இல்லன்னு முடிவு கட்டிட்டு.. நம்மளக் கூப்பிட்டு ஒழுக்கமா கேஸ் புடிச்சுட்டுவா இல்லைனா நல்லாயிருக்காதுன்னு எச்சரிக்கை செய்வார்.. நமக்கு அப்பவும் புத்தி வராது..
மாசம் ஒருமுறையாவது மேனேஜ்மென்ட்ல மீட்டிங் வைப்பாங்க.. மீட்டிங்கல இதை ஏன் சரியா செய்யலைன்னு ஏதாவது விசயத்தைப் பத்திக் கேட்டா.. இதுக்கெல்லாம் லீடர்தான் காரணம்னு கூசாம சொல்வாங்க நம்ம டீம் மெம்பர்ஸ்.. ஒவ்வொரு பிரச்சினைலயும் நாம காப்பாத்திட்டு வந்த டீம்.. இப்படி சொல்றாங்களேன்னு இருக்கும் நமக்கு..

திடீர்னு ஒரு திருப்பம் நடக்கும்.. நம்ம எடுபிடி இருக்கான் இல்லையா.. அவனையும் டீம் லீடர் ஆக்கிடுவாங்க.. நாம திருதிருன்னு முழிப்போம்.. இப்போ 2வது வருச அப்ரைசல் நடக்கும்.. நமக்கு இருக்கற ஆங்கிலப் புலமைக்கு இதுக்கு மேலயும் பதவி உயர்வு தரமாட்டாங்க.. ஆனா அதே பதவியில சம்பளம் உயர்வு மட்டும் கொடுத்தா.. அது நிர்வாகத்திற்கு நஷ்டம்னு அவங்க கணக்குப் பண்ணி.. நமக்கு தேவையில்லாம ஏதாவது பிரசர் தர ஆரம்பிப்பாங்க..

நமக்கு எப்படா இங்க இருந்து ஓடுவோம்னு வேற வேலை தேட ஆரம்பிப்போம்..

வேற கம்பெனிகள்ல போய் வேலை தேடினா.. இதே பதவியிலயே வேலை கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கும்.. அதுதான் BPO வேலை.. ஏன்னா இதுக்கு முன்னாடி இருந்த கம்பெனியில நம்ம ஆங்கில அறிவை பயன்படுத்தாம.. கடுமையா உழைச்சி இந்தப் பதவியை அடைஞ்சிருப்போம்.. அதனால அதுக்கு சமமான வேற வேலையில சேருவோம்..

ஒரு டீமை மெயின்டெயின் பண்ணனும்னா நிறைய பொறுப்புகள் இருக்கத்தான் செய்யும்.. BPO வேலையில குப்பை கொட்டனும்னா நண்டு கதை மாதிரிதாங்க.. POOR, AVERAGE இந்த ரெண்டு வகையில இருக்கறவங்களுக்கு ஒரு பிரச்சினையும் இருக்காது.. GOOD இந்த வகையில வேலை செய்றவங்களுக்குத்தான் இங்க பிரச்சினைகளே.. இங்க வேலை செய்றதுக்கு நமக்கு வேலைத் திறமை இருந்தா மட்டும் போதாது.. நம்மகூட திறமையா வேலை பார்க்கறவங்களைப் பத்தி நிர்வாகத்துகிட்ட இல்லாததும் பொல்லாததும் போட்டுக்குடுக்கணும்.. அதைத்தான் நிர்வாகமும் விரும்பும்.. ஏன்னா அவங்களுக்கு ஒரு உளவாளி தேவைப்படறாங்க.. அதனால நம் காலை பிடிச்சு எவனாவது இழுத்து விட்டு முன்னேறினாலும் அவன் காலை இன்னொருத்தன் கண்டிப்பா இழுத்து விடுவான்.. இப்படி நண்டு மாதிரி செயல்பட்டுக்கிட்டே இருக்கறதுதான் இந்த வேலை..

நான் சொன்ன இந்தத் தகவல்கள் புதுசா BPO வேலைக்கு சேரப் போறவங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்னு நினைக்கிறேன்..

நன்றி..

6 comments:

  1. ஹையா!!! நான்தான் நம்பர் ஒண்ணா!!! நண்டு கதை BPO-ல மட்டும் இல்லை... எல்லா பக்கமும் இருக்கு...

    ReplyDelete
  2. @சிவராம்குமார்..
    ///நண்டு கதை BPO-ல மட்டும் இல்லை... எல்லா பக்கமும் இருக்கு...///

    உண்மைதாங்க சிவராம்குமார்.. ஆனா மத்த பீல்டுகளை விட இங்க கொஞ்சம் ஓவர் டோஸா இருக்கும்..

    உங்களது கருத்துக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  3. ரொம்ப நகைச்சுவையா எழுதிருக்கீங்க!

    ReplyDelete
  4. நான் சொன்ன இந்தத் தகவல்கள் புதுசா BPO வேலைக்கு சேரப் போறவங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்னு நினைக்கிறேன்..


    .....இருக்கும்... இருக்கும்..... :-)

    ReplyDelete
  5. வேலை பற்றி ஒரு தெளிவு கிடைச்சுருக்குப்பா..துல்லியமான விபரங்களை சொல்லியிருப்பது நிறைய பேருக்கு பயனளிக்கும்.

    வாழ்த்துக்கள் தம்பி!

    ReplyDelete
  6. @அன்புடன் அருணா..
    ரொம்ப நன்றிங்க..

    @சித்ரா..
    வருகைக்கு நன்றிங்க..

    @தேவா..
    உங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க..

    ReplyDelete