.

Tuesday, September 7, 2010

லேப்டாப்பில் ஒலியைக் கூட்ட வேண்டுமா?

நமக்கு லேப்டாப்ல படம் பார்க்கற பழக்கம் இருக்கும்.. ஆனா படம் பார்க்கறப்போ சவுண்ட் ரொம்பக் கம்மியா கேக்கறதா ஃபீல் ஆவோம் இல்லைங்களா.. அதுவும் கொஞ்சம் இறைச்சலான இடங்கள்ல பார்தோம்னா படத்துல என்ன பேசறாங்கன்னே கேக்காது.. அதனால பெரும்பாலானவங்க ஹெட்போனோ அல்லது ஸ்பீக்கர்ஸோதான் கனைக்ட் பண்ணியிருப்போம்..

நான் "KMPlayer" அப்படிங்கற பிளேயர் யூஸ் பண்றேங்க.. இதுல படம் பார்த்தோம்னா அந்த பிரச்சினையே இல்ல.. நல்லா சவுண்ட் வருது.. நிறைய வசதிகள் கொடுத்துருக்காங்க.. பெரும்பாலானவங்களுக்கு சப்டைட்டில் யூஸ் பண்ணி படம் பார்க்கற பழக்கம் இருக்கும்.. இந்த பிளேயர்ல சப்டைட்டிலை நாமே எடிட் பண்ற மாதிரி வசதிகள் எல்லாம் கொடுத்திருக்காங்க.. 
 
உதாரணத்துக்கு சொல்லனும்னா சில படங்கள்ல டயலாக் டெலிவரிக்கும் சப்டைட்டில் டிஸ்பிளே ஆகறதுக்கும் வேரியேசன் இருக்கும் இல்லையா.. அந்த மாதிரி ஆகறப்போ நம்மளே அதை சரி செய்யமுடியும் இதுல இருக்கற ஆப்சன் வைச்சு.. இன்னொரு ஆப்சன்.. நாம ஒரு சப்டைட்டில் டவுன்லோட் பண்ணி இருப்போம்.. ஆனா பிளேயர்ல அந்த சப்டைட்டிலைக் காமிக்காது.. இந்தப் பிளேயர்ல நாம டவுன்லோட் பண்ணியிருக்கற சப்டைட்டிலை பிளேயர்ல இருந்தே புரெளஸ் ஆப்சன் மூலமா கண்டுபிடிச்சு ரன் பண்ண வைக்க முடியும்.. ஒரே நேரத்துல ஒன்னுக்கு மேற்பட்ட சப்டைட்டில் லோட் பண்ணி படம் பார்க்க முடியும்.. இந்த மாதிரி நிறைய ஆப்சன்ஸ் இருக்கு..

சப்டைட்டில் டிஸ்பிளே ஆகாத பட்சத்துல நான் இன்னொரு டிரிக்ஸ் யூஸ் பண்றேங்க.. நம்ம படத்தோட டைட்டில் "Flightplan[2005][Eng]" இப்படி இருக்கு சிஸ்டத்துல.. நாம டவுன்லோட் பண்ணியிருக்கற சப்டைட்டிலோட தலைப்பு "Flightplan[2005]" இப்படின்னு இருக்கு.. இப்போ படத்தை ரன் பண்ணினா சப்டைட்டிலைக் காமிக்காது.. ஆப்சன்ஸ் எல்லாம் கரெக்டா ஆன் ஆயிருக்கு.. ஆனா ஏன் காமிக்கலைன்னு நாம குழம்புவோம்.. இதுக்கு காரணம் படத்தோட டைட்டிலும்.. சப்டைட்டிலோட டைட்டிலும் வேற வேறயா இருக்கு.. இப்போ நாம சப்டைட்டிலையும் "Flightplan[2005][Eng]" அப்படின்னு ரீநேம் பண்ணீட்டோம்னா படம் சூப்பரா சப்டைட்டிலோட ரன் ஆகும்..
 
KMPlayer டவுன்லோட் பண்ண இங்கே கிளிக் பண்ணுங்க..
 

4 comments:

  1. களை கட்ட வச்சுட்டீங்க! சூப்பர்!

    ReplyDelete
  2. நல்ல விஷயம்... ஆனா அப்துல்.. ஒரு விஷயம்... லேப்டாப்பில் படம் பார்க்கும் போது இந்த மாதிரி பிளேயர்களைப் பயன்படுத்தினால்... கண்டிப்பாக external ஸ்பீக்கர்ல கேட்கறது நல்லது... ஏன்னா இந்த மாதிரி பிளேயர்கள் சவுண்ட் பூஸ்ட் பண்ணும் போது நமது லேப்டாப் ஸ்பீக்கர் பழுதாக வாய்ப்புகள் அதிகம்... மேலும் அதன் விலையும் அதிகம்.. ஹெட் போனோ அல்லது வேறு வெளிப்புற ஸ்பீக்கர் போனாலும் அவ்வளவு பாதிப்பு வராது இல்லையா????

    இதையும் கருத்தில் கொள்ளலாம் இல்லையா??

    ReplyDelete