சிறுவனா இருந்தப்போ பயணம் செய்றதுக்கு இருந்த குஷி கொஞ்சம் வளர்ந்துட்டோம்னா இருக்காது.. ஏன்னா சிறுவனா இருக்கறப்போ கிடைக்கற சீட்ல ஜாலியா உக்காந்துக்கலாம்.. படுத்துக்கலாம்.. ஆனா இப்போ வளர்ந்துட்டதால யோகா பண்ற மாதிரி ஸ்ட்ரைய்ட்டாவே உக்காந்துருக்கனும்.. பயணங்கள்ல ஏற்பட அசெளரியங்களால எப்படா போக வேண்டிய இடம் வரும்னு மனசுல புலம்பிக்கிட்டே.. ரோட்டோரமா வழிநெடுக நட்டு வைச்சிருக்கற கிலோமிட்டர் போர்டை பஸ் ஜன்னல் வழியா பார்த்துட்டே இருப்போம்.. அதுக்கு காரணம் மக்களுக்கு வசதியான இருக்கைகள் அரசாங்கப் பேருந்துகள்ல இருக்கறதில்லை..
அடுத்த கட்டமா பணி நிமித்தமா சென்னை, பெங்களூர் அப்படின்னு வேற ஊர்களுக்கு போயிடறோம்.. வேலை பார்க்கற இடங்கள்ல இருந்து லீவுக்கு ஊருக்கு போகணும்னா அரசாங்க பஸ்களை பிரிஃபர் பண்ண முடியாது.. ஏன்னா நம்ம ஊருக்கு போறதுக்கு 12, 15 மணிநேரங்கள் ஆகலாம்.. அரசாங்க பஸ்கள்ல போனா இடுப்பு கழண்டு போயிடும்.. அதனால பிரைவைட்டா ஓடற சொகுசு பஸ்களைத்தான் பார்க்க வேண்டியிருந்தது.. அந்தப் பயலுக என்னடான்னா.. நாம சாதாரணமாப் போற பஸ்ஃபேரை விட நாலு மடங்கு கட்டணம் சொல்லுவானுங்க.. விதியேன்னு போயிட்டுதான் இருப்போம்..
2007 ஆம் வருசத்துல தமிழ்நாடு அரசாங்கமே சொகுசு பேருந்துகள் விட்டாங்க.. ரொம்ப சந்தோசமா இருந்தது.. இனி அவ்லோ பஸ்ஃபேர் குடுக்க அவசியம் இல்லை பாருங்க..
புதுசா வந்திருக்கற அரசு சொகுசு பேருந்துகள்ல டிக்கெட் புக் பண்ணனும்னா சாதாரண விசயம் கிடையாதுங்க.. டிராவல் பண்றதுக்கு சீட் இருக்கான்னு செக் பண்ணனும் இல்லையா.. ஆனா இங்க இரயில்வே என்கொயரி மாதிரியோ, பிரைவேட் பஸ்கள்ல சீட் இருக்கான்னு செக் பண்றமாதிரியோ செக் பண்ணி சொல்லமாட்டாங்க.. நோ என்கெளயரின்னு போர்டே போட்டிருப்பாங்க..
முதல்ல புக்கிங் ஆபிஸ்ல போய் அவங்க கொடுக்கற ஃபாமை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கணும்.. சும்மா சாணித்தாள் குவாலிட்டில தாங்க இருக்கும் அந்த பேப்பர்.. அதுக்கு ஒரு ரூபாய்!!.. அரசாங்க பஸ் ஸ்டாண்டுலதான் ஆபிஸ் இருக்கும்கறதால ரொம்ப நேரம் கியூல நின்னுட்டே இருக்கணும்.. கியூ நகரவே நகராது.. ஒரு பத்து பேர் கியூல நின்னோம்னா நம்ம டர்ன் வர்றதுக்கு குறைஞ்சது ஒரு மணிநேரம் ஆயிடும்.. சரி அப்படி என்னதான் உள்ள வேலை பார்க்கறாங்கன்னுட்டு பார்த்தா.. கரெக்டா மூனு பட்டன்தாங்க அழுத்துவாங்க..
1. நாம ஃபாம்ல பில் பண்ணிக் குடுத்திருக்கற ரூட் நம்பர் ஒரு பட்டன்..
(பஸ்ல சீட் இருக்கான்னு அடுத்த விண்டோலயே தெரிஞ்சுடும்)
2. சீட் இருந்தா அதை செலக்ட் பண்ண ஒரு பட்டன்..
3. அப்புறம் டிக்கெட் பிரிண்ட் கொடுக்கற பட்டன்.. அவ்லோதாங்க..
(ஞாபகம் இருக்கட்டும் சீட் இல்லைன்னா ஒரே பட்டன் தாங்க..)
இதுக்குதான் இவ்லோ நேரம் பண்ணீங்களாடான்னு கடுப்பாயிடும்.. டிக்கெட் இல்லைனா இன்னும் எவ்வளவு கடுப்பாகும் பாருங்க..
அங்க கம்ப்யூட்டர் ஆபரேட் பண்றவங்களுக்கு கீபோர்டு பட்டனைத் தேடறதே பெரிய வேலையா இருந்தது.. அப்புறம் எப்படியும் பஸ் ஸ்டாண்டுக்குப் புதுசா வர்ற பஸ்கள்ல அவங்க ஜோஸ்துங்க வருவாங்க.. அவங்க கூட கொஞ்ச நேரம் குப்பை போடுவாங்க.. வெளியில நாம கால்கடுக்க நின்னுட்டே இருக்கணும்..
சரி பரவாயில்லை இப்போதான ஆரம்பிச்சிருக்காங்க.. எப்படியும் பொதுமக்கள் ஆன்லைன்ல அக்சஸ் பண்றமாதிரி பண்ணீடுவாங்கன்னு நினைச்சு மனசைத் தேத்திக்க வேண்டியதா இருந்தது..
இப்போ வருசம் என்னாச்சுங்க?.. இந்த டிரான்ஸ்போர்ட் ஆரம்பிச்சு 3 வருசம் ஆயிடுச்சுங்க.. இன்னும் பொதுமக்கள் ஆன்லைல அக்சஸ் பண்ற வசதி தரல.. அட்லீஸ்ட் டிக்கெட் இருக்கானு செக் பண்றதுக்காவது வசதி பண்ணிக்கொடுக்கலாம்.. அங்க வேலைப் பார்க்கறவங்களோட சோம்பேறிதனமான வேலையைத் தட்டிக்கேக்கலாம்னு எப்பவாவது பொங்கி எழுந்தோம்னா அன்னைக்கு உங்களுக்கு டிக்கெட் கிடைக்காது..
பணிநிமித்தமா ஒரு ஞாயிற்றுக்கிழமை சென்னை போயிருந்தேன்.. வேலை சாயங்காலம் 6 மணிக்கே முடிஞ்சது.. சரி ஒரு பத்து மணி பஸ்சுக்கு புக் பண்ணிட்டு.. கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணீட்டு வந்துடலாம்னு நினைச்சு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு போனேங்க.. அங்க என்ன சொல்றாங்கன்னா.. இப்போ பத்து மணி பஸ்சுக்கு புக்கிங் முடிஞ்சது.. ஒரு 9 மணி சுமாருக்கு ஆபிஸ் பேக் சைடு விண்டோல 10 ரூபாயிக்கு டோக்கன் தருவோம்.. அதை வேணா வாங்கிக்கங்கன்னு சொல்றாங்க.. இது என்ன அநியாயம்.. டிக்கெட் இருக்கப்போ அதைக் கொடுக்காம டோக்கன் கொடுக்கற மாதிரி ரூல்ஸ் இருக்கான்னு கேள்வி கேட்டேன்.. என்னை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துட்டு பஸ் புல்லாயிடுச்சுன்னு சொல்லீட்டாங்க.. சரி ஆபிஸ் பேக்சைடை ஒருமுறை பார்த்துட்டு போயிடலாம்னு நினைச்சு அந்த விண்டோ பக்கம் போனா.. அப்பவே ஒரு பத்துபேர் கியூல நிக்கறாங்க.. அவங்க எல்லாம் அப்படி 10, 11 மணிகளுக்கு கிளம்பறதுக்கு டோக்கன் வாங்க நிக்கறாங்களாம்.. அப்புறம் எங்க பர்சேஸ்!!.. நானும் ஜோதியில ஐக்கியமாயிட்டேன்.. கால் கடுக்க நின்னுக்கிட்டு இருந்தேங்க.. கரெக்டா பெல் அடிச்ச மாதிரி 9 மணிக்கு பேக் விண்டோல டோக்கன் கொடுக்க ஆரம்பிச்சாங்க.. நம்ம மக்கள் அதுக்குள்ள கியூவை கொலாப்ஸ் ஆக்கிட்டாங்க.. அடிச்சு பிடிச்சு.. டோக்கனை வாங்கி பஸ்சுக்கு போனேன்..
ஒருமணி நேரம் பஸ்லயே வெயிட் பண்ண வேண்டியதாயிடுச்சு.. டோக்கன் வாங்கிட்டமேன்னு கீழே இறங்கி எல்லாம் நிக்க முடியல.. சீட்டை வேற யாராவது பிடிச்சுப்பாங்க.. அப்புறம் நாம பின்சீட்லதான் உக்காரவேண்டிய சூழ்நிலை.. பஸ் முழுவதும் மக்கள் இடம்பிடிச்சிட்டதால எல்லாரோட மூச்சுக் காற்றாலையும்.. சென்னை பருவநிலையாலவும் அந்த ஒருமணி நேரம் நரகமாவே ஆயிடுச்சு.. எப்பவும் சென்னை பஸ்கள்ல இப்படிதான் பண்ணுவாங்களா?.. இல்லை ஞாயிற்றுக்கிழமை நிறைய பேர் பணிகளுக்கு திரும்புவாங்கன்னு அப்படி பண்ணினாங்களா?.. இல்லை என் நேரமான்னு தெரியல..
இந்தக் கொடுமைகளை எல்லாம் தாங்க முடியலைங்க.. பெரும்பாலும் இப்ப பிரைவேட் பஸ்லயே போயிடறது.. டிக்கெட் கிடைக்காத பட்சத்துல அரசாங்க விரைவுப் பேருந்தை புக் பண்ண பஸ் ஸ்டாண்டு போற வரைக்கும்.. இப்போ நான் உங்களுக்கு சொன்னது எல்லாம் என் கண்ணு முன்னாடி ஸ்லைடு போட்டாமாதிரி வந்து போயிட்டே இருக்கும்..
இவ்வளவு பெரிய பதிவு என்னுடைய பாதிப்புகளை சொல்ல மட்டுமல்ல.. ஒவ்வொருத்தர் மனசுல இருக்கறதும் இதுதாங்க..
மக்களின் எத்தனையோ கஷ்டங்களில், போக்குவரத்துக்கும் பெரும் பங்கு உண்டு. உங்கள் இடுகையை வாசிக்க வாசிக்க, காட்சிகள் கண் முன் விரிந்தன . இந்த அவதி மாற என்ன தான் வழி என்று யோசித்து ஆவன செய்பவர் யாரும் இல்லையா?
ReplyDeleteநல்லதொரு பதிவு..
ReplyDeleteஎல்லாரும் சந்திக்கிற ஒரு பிரச்சனை தான்...
நல்லதொரு பதிவு..
ReplyDeleteஎப்பா.... செம கொடுமை அந்த கியூ!!! நானும் அனுபவிச்சிருக்கேன்... அப்படியே பிரதிபலிச்சிருக்கீங்க பாபு!
ReplyDeleteநகரம் என்ற கடையில் சுஜாதா சொல்லி இருப்பார், ஒரு ஆஸ்பத்திரி ஃபார்மாலிட்டி அவஸ்தைகள் தாங்காமல், ஒரு கிராமத்துத் தாய் தன் குழந்தையை மந்திரித்தால் சரியாகப் போகும் என்று திருப்பிக கொண்டு வந்து விடுவாள். அதுபோல, நாமும் கடவுள், விதி இவைகளின் மேல் பாரத்தைப் போட வேண்டியதுதான். வேறு வழிபே இல்லை.
ReplyDeleteநான் தமிழக அரசு பேருந்து களில் பயினித்து பல வருடம் அயிடுச்சி. இதை புறகனிப்பது தவிர வேற வழி இல்லை. KSRTC online பூகிங் இருக்கிறது பயன்படுத்தி கொள்ளுங்கள்.. ksrtc.in
ReplyDelete@சித்ரா..
ReplyDelete///மக்களின் எத்தனையோ கஷ்டங்களில், போக்குவரத்துக்கும் பெரும் பங்கு உண்டு. உங்கள் இடுகையை வாசிக்க வாசிக்க, காட்சிகள் கண் முன் விரிந்தன . இந்த அவதி மாற என்ன தான் வழி என்று யோசித்து ஆவன செய்பவர் யாரும் இல்லையா?///
இதுமட்டும் இல்லங்க சித்ரா.. இன்னும் சொல்ல நிறைய இருக்கு.. பஸ் கண்டிசன், டிரைவர், கண்டக்டர், பஸ் சீட்டுகள், அவங்க பர்பசா கொண்டு போய் நிறுத்தர நெடுஞ்சாலை மோட்டல்கள் இப்படி நிறைய விசயங்கள் இருக்கு.. ஒவ்வொன்னையும் சொல்லனும்னா ஒரு பத்து தொடர் எழுதலாம்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
@அன்பரசன்..
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க..
@வெறும்பய..
நன்றிங்க..
@சிவராம்குமார்..
ReplyDelete///எப்பா.... செம கொடுமை அந்த கியூ!!! நானும் அனுபவிச்சிருக்கேன்... அப்படியே பிரதிபலிச்சிருக்கீங்க பாபு!///
நன்றி சிவராம்குமார்..
@ராமலிங்கம்..
ReplyDelete///அதுபோல, நாமும் கடவுள், விதி இவைகளின் மேல் பாரத்தைப் போட வேண்டியதுதான். வேறு வழிபே இல்லை.///
கரெக்டா சொன்னீங்க.. வருகைக்கு நன்றிங்க..
@டியர்பாலாஜி..
ReplyDelete///நான் தமிழக அரசு பேருந்து களில் பயினித்து பல வருடம் அயிடுச்சி. இதை புறகனிப்பது தவிர வேற வழி இல்லை. KSRTC online பூகிங் இருக்கிறது பயன்படுத்தி கொள்ளுங்கள்.. ksrtc.in///
நீங்க சொல்றமாதிரிதாங்க ஆச்சு.. கடைசி ஆப்சனாத்தான் நம்ம விரைவுப்பேருந்துகளை நாடறது இப்போல்லாம்.. உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றிங்க..
மனக் குறைகளை அப்படியே கொட்டித் தீர்த்துட்டீங்க பாஸ்! விடிவு காலம் விரைவில் வரும் என்று எதிர் பார்ப்போம்.
ReplyDelete@எம் அப்துல் காதர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
இது உங்கள் மனதில் இருப்பது மட்டும் இல்லை அனைவர் மனதிலும் இருக்கிறது
ReplyDelete