.

Wednesday, September 8, 2010

கிள்ளியூரின் அழகும்.. ஆபத்தும்..

கிள்ளியூர் ஃபால்ஸ்
நம்ம எல்லாரும் என்னதான் நகரத்துல வாழ்ந்து பழக்கப்பட்டிருந்தாலும்.. மலைப்பகுதிகளுக்குப் போனோம்னா அங்க நாம பார்க்கற இயற்கை காட்சிகளும்.. சுத்தமான காற்றும்.. எவ்வளவு கவலைகள்ல நாம இருந்தாலும் மறக்கடிக்கும்.. நாம அங்கயே தங்கிடக்கூடாதான்னு நினைக்க வைக்கும்..

நானும் அந்த வகைதாங்க.. அந்த மாதிரி இயற்கை சூழ்ந்த பகுதிகள்ல வாழனும்னு ஆசைப்படறவன்.. அந்த ஆசையை முழுசா நிறைவேத்திக்க முடியலைனாலும் அப்பப்ப ஏதாவது மலைத்தொடர்களுக்கு விசிட் அடிச்சிட்டே இருப்பேன்.. அதுவும் எங்க ஊர்ல இருந்து கொடைக்கானலுக்கு 69 கிலோமிட்டர்தான்.. ஊர்ல இருந்த வரைக்கும் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து குறைஞ்சது வாரத்துக்கு ஒருமுறை மலையடிவாரத்துக்காவது போய் பொழுதைக் கழிச்சுட்டு வருவோம்.. ஆனால் அந்த நினைவுகள் பத்தி நான் அப்புறம் சொல்றேங்க..

நானும் என்னுடைய சேலம் நண்பரும் ஏற்காடு போலாம்னு ரொம்ப காலமா திட்டமிட்டிருந்தோம்.. ஏற்காடுல சுத்திப் பார்க்கற இடங்கள் ரொம்ப கம்மிதான்.. அதனால ஊட்டி, கொடைக்கானல் மாதிரி மனிதர்கள் அதிகமா கண்ணு வைக்காத இடமா இருக்குது.. நம்முடைய மெக்கானிக்கல் லைஃப் இல்லாம ஒருநாள் அங்க போய் இருந்துட்டு வரலாம்.. என் நண்பருக்கு ஏற்காடுல இருக்கற எல்லா இடங்களுமே நல்லா தெரியும்..

ஏற்காடு லேக்ல இருந்து ஒரு 3 கிலோமிட்டர் தூரத்துல கிள்ளியூர் ஃபால்ஸ்னு ஒரு இடம் இருக்கு.. அங்க போலாம்ங்கறதுதான் எங்களோட மெயின் பிளான்.. அந்த ஃபால்ஸ் என்னடான்னா போனோமா.. பார்த்தோமா.. குளிச்சோமா.. அப்படின்னு எல்லாம் இல்ல.. காட்டுப்பாதை வழியா ஒரு 1600ft கிழே இறங்கனுமாம்.. எப்பவும் மேலிருந்து கீழ் நோக்கி இறங்கறப்போ சரசரன்னு எல்லாரும் இறங்கிடுவோம்.. கஷ்டமாக இருக்காது.. ஆனா இந்த ஃபால்ஸுக்கு போறதுக்கு நிறைய ஜாக்கிசான் வேலை எல்லாம் பண்ண வேண்டி இருந்தது..  ஆனா அருவியைப் பார்த்துட்டோம்னா அந்த கஷ்டங்கள் எல்லாம் மறைஞ்சே போயிடுங்க.. ஆஹா!.. எவ்வளவு அருமையான இடம் அது..
அந்தப் பனிமூட்டத்துக்குள்ள இறங்கிப் போகனும்..
நாங்க அருவிக்கு போன சமயம் ஒரு சுவாரஷ்யமான சம்பவம் நடந்தது.. அருவி இருக்கற இடத்துல எங்க வண்டியை நிப்பாட்டினப்போ ஒரு பெங்களூர் ரெஜிஸ்ட்ரேசன் கார் நின்னுட்டு இருந்தது.. ஆஹா! எங்க போனாலும் நம்மளை பெங்களூர் விடமாட்டேங்குதேன்னு நினைச்சிட்டு கீழே இறங்க ஆரம்பிச்சோம் நாங்க ரெண்டு பேரும்.. கொஞ்ச தூரத்துலயே அந்த வண்டிக்கு சொந்தக்காரங்களைப் பிடிச்சிட்டோம்.. அது ஒரு பையனும் பொண்ணும்.. உடனே தப்பா நினைச்சிடாதீங்க.. லவ்வர்ஸ் மாதிரிதான் தெரிஞ்சாங்க.. ரிச்சா தெரிஞ்சாங்க.. அதனால தப்பு செய்ய இவ்வளவு தூரம் வரத் தேவையில்ல.. ஃபால்ஸை ரசிக்கவே வந்திருக்காங்க..

நாங்க அவங்க ரெண்டு பேரையும் கிராஸ் பண்ணி இறங்க ஆரம்பிச்சிட்டோம்.. பொண்ணு ரொம்ப அழகாவே இருந்துச்சு.. இவ்வளவு அடர்த்தியான காட்டுப்பாதையில எந்த நம்பிக்கையில ஒரு பொண்ணை அழைச்சிட்டு வர்றான்னு திட்டிக்கிட்டே இறங்கிட்டு இருந்தோம்.. நாங்க மலை இறங்கற லாகவத்தைப் பார்த்து எங்களை ஃபாலோ பண்ணி வர ஆரம்பிச்சிட்டாங்க அவங்க.. கொஞ்ச தூரத்துல "குடி"மக்கள் 2 பேரு அருவியில குளிச்சுட்டு மேல ஏறிட்டு இருந்தாங்க.. ரெண்டு பயலுகளும் அந்த பொண்ணு மலை இறங்கறதை குரு குருன்னு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. நாங்க அவனுகளைக் கடக்கறப்போ.. மாப்ளை பயலுக சின்னப்பயலுகதான் என்ன சொல்றன்னு பேசிக்கறது எங்க காதுல விழுந்தது.. எவ்வளவு அபாயம் இது.. எங்களுக்கு பின்னால இறங்கிட்டு இருந்த அது ரெண்டுகளுக்கும் அது புரிஞ்சதான்னு தெரியல.. அந்தப் பொண்ணு.. அந்தப்பையன் இருக்கற நம்பிக்கையில வந்திருக்கு.. பாதுகாப்பு இல்லாம இப்படி கூட்டி வரலாமா ஒரு பொண்ணை அவன்.. கொஞ்சம் புத்தி வேண்டாமா.. ஆனா எதும் அசம்பாவிதமா நடக்கலை.. அவனுக ஓவர் மப்புல இருந்ததால மேல ஏறிப்போயிட்டானுக..

ஃபால்ஸ் வந்துட்டோம்.. அதுக மாத்தி மாத்தி போட்டோக்கு போஸ் குடுத்துட்டு இருந்ததுங்க.. நேரம் போனதே தெரியல.. ரெண்டு மணி நேரம் குளிச்சு என்ஜாய் பண்ணிட்டு கிளம்பிட்டோம்.. நாங்க கிளம்பறப்போ அதுகளும் வந்து ஒட்டிக்கிச்சுங்க..

இந்த இடத்துக்கு பொண்ணுக வர்றதே தப்புன்னு சொல்லலை.. ஆனா நிறைய செக்யூரிட்டி ஏற்பாடுகளோடதான் வரணும் இல்லையா.. அவன் ஹீரோன்னு அந்தப் பொண்ணு நினைச்சுட்டு இருக்கும்.. பிரச்சினையாச்சுனா?..

கண்ணு வெளிய வந்துடுச்சுன்னு சொல்வாங்களே.. மேல ஏறி ரோட்டைப் பிடிக்கறதுக்குள்ள அப்படிதான் ஆயிடுச்சு.. நல்லவேளை ஒரு சின்னக்கடை அங்க வைச்சிருக்காங்க..ஒரு ஜூஸ் குடிச்சிட்டு கிளம்பிட்டோம்..


12 comments:

  1. அவன் ஹீரோன்னு அந்தப் பொண்ணு நினைச்சுட்டு இருக்கும்////

    சரியா சொன்னிங்க படிக்கும் போது திகில இருக்கு

    ReplyDelete
  2. Beautiful photos!
    Nice write up!

    ////இந்த இடத்துக்கு பொண்ணுக வர்றதே தப்புன்னு சொல்லலை.. ஆனா நிறைய செக்யூரிட்டி ஏற்பாடுகளோடதான் வரணும் இல்லையா.. அவன் ஹீரோன்னு அந்தப் பொண்ணு நினைச்சுட்டு இருக்கும்.. பிரச்சினையாச்சுனா?..

    கண்ணு வெளிய வந்துடுச்சுன்னு சொல்வாங்களே.. மேல ஏறி ரோட்டைப் பிடிக்கறதுக்குள்ள அப்படிதான் ஆயிடுச்சு.. நல்லவேளை ஒரு சின்னக்கடை அங்க வைச்சிருக்காங்க..ஒரு ஜூஸ் குடிச்சிட்டு கிளம்பிட்டோம்..////

    ....useful tips. :-)

    ReplyDelete
  3. அழகு இருக்கிற இடத்திலே ஆபத்து இருக்கும்னு இதைத்தான் சொன்னாங்களோ!

    ReplyDelete
  4. ஏற்காடு லேக்ல இருந்து ஒரு 3 கிலோமிட்டர் தூரத்துல கிள்ளியூர் ஃபால்ஸ்னு ஒரு இடம் இருக்கு..//

    அப்டிய ஓகே ஓகே நெக்ஸ்ட் டைம் போய்டணும்..
    நன்றி பாபு...

    ReplyDelete
  5. @செளந்தர்..
    வருகைக்கு நன்றிங்க..

    @சித்ரா..
    ///Beautiful photos!
    Nice write up!///

    நன்றிங்க சித்ரா..

    @சிவராம்குமார்..
    ///அழகு இருக்கிற இடத்திலே ஆபத்து இருக்கும்னு இதைத்தான் சொன்னாங்களோ!///

    ஹா ஹா ஹா.. ஆமாங்க அழகுக்கும் ஆபத்து இருக்கு.. அழகாலையும் ஆபத்து இருக்கு..
    வருகைக்கு நன்றி..

    @பிங்கிரோஷ்..
    ///ஓகே ஓகே நெக்ஸ்ட் டைம் போய்டணும்..///

    பார்க்க வேண்டிய இடம்தான்.. கண்டிப்பா போயிட்டு வாங்க..
    உங்களுடைய முதல் வருகைக்கு எனது நன்றிகள்..

    ReplyDelete
  6. நாங்க போன வருஷம் போனோம்....அருமையான நினைவுகள்...
    வளைஞ்சு வளைஞ்சு போன அந்த ரோட்டில் பேசி கொண்டே போனது....
    கடைசியாக சின்னோண்டு இடத்தில் இறங்க சொன்னப்ப நானும்
    சில நண்பர்களும் அந்த கடையிலே இருந்து விட்டோம்...!!

    ReplyDelete
  7. கொஞ்சம் திகிலா தான் இருந்துச்சு.

    ReplyDelete
  8. // அந்த மாதிரி இயற்கை சூழ்ந்த பகுதிகள்ல வாழனும்னு ஆசைப்படறவன்.. //

    நானும் அப்படி தான். ம்ம்ம் பேர் ஒண்ணா இருந்தா ரசனையும் ஒண்ணா தானிருக்குமோ?

    ReplyDelete
  9. போடோக்கள் அருமை.

    ReplyDelete
  10. @ஜெட்லி..
    வருகைக்கு நன்றிங்க..

    @அன்பரசன்..
    ///கொஞ்சம் திகிலா தான் இருந்துச்சு.///

    எனக்குந்தாங்க.. வருகைக்கு நன்றி..

    @எம் அப்துல் காதர்..
    வருகைக்கு நன்றி..

    @காயலாங்கடை காதர்..
    நன்றிங்க..

    ReplyDelete
  11. அருவியின் அழகை அழகா சொல்லிட்டீங்க..
    உங்க அனுபவ பகிர்வும் சூப்பர்.. :-))
    நீங்க சொல்றது கரெக்ட் தான்.. இந்த மாதிரி இடங்கள்ள..தனியா பொண்ணை கூட்டிட்டு வரது பாதுகாப்பு இல்லை தான்..

    ReplyDelete
  12. @ஆனந்தி..
    ரொம்ப அழகான அருவிங்க ஆனந்தி..

    ///இந்த மாதிரி இடங்கள்ள..தனியா பொண்ணை கூட்டிட்டு வரது பாதுகாப்பு இல்லை தான்..///

    ரொம்ப உண்மைங்க.. பாதுகாப்பு ஏற்பாடுகளோட எல்லாரும் பார்க்க வேண்டிய இடம்..

    உங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க..

    ReplyDelete