.
Monday, August 30, 2010
BPO வேலையில் சேரலாம் வாங்க..
BPO வேலைகள் பத்தி நிறையப் பேருக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.. இந்த வேலையில் எனக்கு மூன்று ஆண்டு அனுபவம் இருக்குங்க.. அதனால புதுசா இந்த வேலைக்கு இண்டர்வியூக்கு வந்து.. வேலை வாங்கறவங்க படற கொடுமைகளைப் பத்தி எனக்கு தெரிஞ்சதை சொல்லலாம்னு வந்திருக்கேங்க..
இந்த வேலை எதைப்பத்தியதுன்னு தெரியாதவங்களுக்கு இந்த விளக்கம்.. தெரிஞ்சவங்க அடுத்த பத்திக்கு போயிடலாம்.. சுருக்கமா சொல்லனும்னா அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மாதிரி நாடுகள்ல இருக்கறவங்க தங்களோட வேலைகளை இந்தியாவுக்கு அனுப்பி குறைஞ்ச விலைகொடுத்து வேலை வாங்கிக்கறாங்க.. நம்ம ஆளுங்களும் மாங்கு மாங்குன்னு ஒர்க் பண்ணி அனுப்புவோம்.. அவ்லோதான்..
இந்த வேலைக்கு ஆள் எடுக்கறவங்க.. மூன்று தகுதிகளை நம்பகிட்ட எதிர்பார்ப்பாங்க..
1. எந்த நேரத்திலும் வேலை பார்க்கணும்
2. நல்ல பேச்சுத்திறமை அல்லது ஆங்கிலப் புலமை
3. நல்ல தட்டச்சுத் திறமை
இந்த அடிப்படைத் தகுதிகள் இருக்கறவங்க இண்டர்வியூக்கு வரலாம்னு சொல்வாங்க.. இப்படியெல்லாம் கேட்டா நாம பயந்துடுவோமா.. நாமளும் போவோம் என்ன சொல்றிங்க.. போற இடத்துல ஒரு அழகான HR இருப்பாங்க.. வர்றவங்க எல்லாத்தையும் ரிசீவ் பண்ணி ஒரு அறையில உக்கார வைச்சிட்டு போயிடுவாங்க.. கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் சேர்ந்துட்டே இருக்கும்.. அந்த HR திடீர் திடீர்னு உள்ள வந்து எட்டிப் பார்ப்பாங்க.. நம்ம பக்கத்துல வந்து அவங்களுக்கு வந்த ஏதாவது ஃபோன்காலை அட்டென் பண்ணி ஆங்கிலத்துல பேசு பேசுன்னு பேசுவாங்க.. நாலைஞ்சு பேரு ஒன்னா சேர்ந்து ஏதாவது சீரியஸ் டிஸ்கசன் பண்ணுவாங்க.. இதெல்லாம் பார்த்தா புதுசா இண்டர்வியூக்கு வந்திருக்கவங்களுக்கு பீதியைக் கிளப்பும்..
காலையில இண்டர்வியூ போனோம்னா ஒரு 12 மணி வரைக்கும் வெயிட் பண்ண வைக்கறதுதான் இவங்களோட முதல் சம்பிரதாயம்.. அதுக்குள்ள நாம டென்சன் ஆகி, ரிலாக்ஸ் ஆகி, அப்புறம் சலிப்பாயிடுப்போம்..
இப்போ நம்ம அழகான HR இதுவரைக்கும் வந்தவங்க ரெஸ்யூம் எல்லாத்தையும் மொத்தமா கையில வச்சிக்கிட்டு ஒரு அறிமுகம் குடுப்பாங்க.. ரொம்ப திமிரான ஆளா இருந்தாங்கன்னா அறிமுகம் எல்லாம் இல்லாம.. நேரடியா அவங்க வைச்சிருக்கிற ரெஸ்யூல இருக்கிற பேரை வாசிச்சு "டெல் மீ அபவுட் யூவர்செல்ஃப்"னு கேப்பாங்க..
இந்த ரவுண்டுல பெங்களூர் பசங்களும், வேற மாநிலத்து பசங்களும் பின்னியெடுப்பாங்க.. நம்ம பசங்க பெரும்பாலும் தமிழ் மீடியம் படிச்சுட்டு வந்திருப்போமா... ஆஆஆன்னு பார்த்துட்டு இருப்போம் அவங்க பேசறதை.. ஆனா இங்க என்ன டிவிஸ்டுனா அப்படி சூப்பரா பேசினவங்கள்ல ஒன்னு ரெண்டு பேரை மட்டுமே எடுத்திட்டு நம்மளை எல்லாம் செலக்ட் பண்ணிடுவாங்க.. என்னடா இது!! அப்படின்னு ஆச்சரியப்பட்டுட்டே நாமலும் நெக்ஸ் ரவுண்ட் போயிடுவோம்..
முதல் ரவுண்ட் முடியறதுக்கே 2.30, 3.00 மணி ஆயிடுமா.. நம்மள்ல நிறையப் பேரு இண்டர்வியூ ஆர்வத்துல காலையில கூட சாப்பிடாம நேரா வந்திருப்போம்.. இப்போ அடுத்த ரவுண்டுக்கு செலக்ட் ஆனவங்களுக்கு மதிய சாப்பாடும் கட்.. இருந்தாலும் பரவாயில்லை.. வேலை கிடைச்சா நல்லதுதானேன்னு நம்மளைத் தேத்திக்கிட்டு தெம்பா உக்காந்துடுவோம்..
அடுத்த ரவுண்டு ஆப்டிட்யூட் டெஸ்ட் அல்லது டைப்பிங் டெஸ்ட் வைப்பாங்க.. நம்மள்ல பெரும்பாலானவங்க இந்த ரவுண்டுலதான் ஆப்பு வாங்குவோம்.. ஆனாலும் சில நல்ல HR ஆளுங்க நம்மளை தேத்தி அடுத்த ரவுண்டுக்கு அனுப்பறதும் அபூர்வமா நடக்கும்.. அப்பவே இந்த வேலையை வாங்கிட்டா மாதிரி ஒரு ஃபீல் வரும் பாருங்க.. ஆனா இந்த மாதிரி எல்லாம் அபூர்வமாதான் நடக்கும்..
ரொம்ப அவசரமான தேவைகள்னா பெரும்பாலும் அடுத்த ரவுண்டு HR அல்லது பிராஜெக்ட் மேனேஜர் ரவுண்டா இருக்குங்க.. இந்த ரவுண்டுக்குப் போயிட்டா அவங்க கேக்கற கேள்விகளுக்கு சிரிச்சிட்டே பதில் சொல்லலாம்.. கேசுவலா இருக்கறது முதல்ல கஷ்டமாத்தான் இருக்கும்.. அப்புறம் பழகிடலாம்.. அவங்க அனுபவச் சான்றிதழ் எல்லாம் வச்சிருக்கியான்னு கேட்கும்போது.. நம்மகிட்ட இல்லைன்னாலும் கூட குடுக்கறேன்னு சொல்லிடனும்.. இல்லைனா இந்த வேலை கோவிந்தாதான்.. அதெல்லாம் அப்புறம் ரெடி பண்ணிக்கலாம்னு வைச்சிக்கங்க..
அப்புறம் என்ன ஆஃபர் லெட்டர் வாங்கியாச்சு.. வெளிய வரும்போது எப்படியும் குறைஞ்சது நைட் 8 மணி ஆயிருக்கும்.. வேலையோட வந்தா அன்னைக்கு முழுக்க பட்டினி கிடந்ததுக்கு யூஸ்புல்லா இருக்கும்.. இல்லைனா அதைப்பத்தியெல்லாம் நினைக்காம போயிட்டே இருக்க வேண்டியதுதான்..
ஹே ஹேய்.. நாம வேலை வாங்கிட்டோல..
நெக்ஸ்ட் ஜாய்னிங் டே.. ஹா ஹா ஹா.. நம்ம கெட்டகாலம் ஆரம்பமாயிடுச்சு.. அடுத்து என்ன நடக்கும்னு சீக்கிரம் வந்து சொல்றேன்..
நன்றி..
பாகம் 2 - இங்கே கிளிக் பண்ணுங்க..
பாகம் 3 - இங்கே கிளிக் பண்ணுங்க..
Subscribe to:
Post Comments (Atom)
// காலையில இண்டர்வியூ போனோம்னா ஒரு 12 மணி வரைக்கும் வெயிட் பண்ண வைக்கறதுதான் இவங்களோட முதல் சம்பிரதாயம்.. அதுக்குள்ள நாம டென்சன் ஆகி, ரிலாக்ஸ் ஆகி, அப்புறம் சலிப்பாயிடுப்போம்.. //
ReplyDeleteஹா.. ஹா.. first class, ரன்னிங் கமெண்டரி மாதிரி அழகா ஃப்லோவ் ல வருதே ம்ம்ம்..
//முதல் ரவுண்ட் முடியறதுக்கே 2.30 3.00 மணி ஆயிடுமா.. வெளிய வரும்போது நைட் 8 மணி ஆயிருக்கும்.. வேலையோட வந்தா அன்னைக்கு முழுக்க பட்டினி கிடந்ததுக்கு யூஸ்புல்லா இருக்கும்.. இல்லைனா அதைப்பத்தியெல்லாம் நினைக்காம போயிட்டே இருக்க வேண்டியதுதான்..//
good இதுல இவ்வளவு விஷயம் இருக்கா பாஸ்?? எல்லாம் அனுபவம். அமர்க்களமா இருக்கு!
// காலையில இண்டர்வியூ போனோம்னா ஒரு 12 மணி வரைக்கும் வெயிட் பண்ண வைக்கறதுதான் இவங்களோட முதல் சம்பிரதாயம்.. அதுக்குள்ள நாம டென்சன் ஆகி, ரிலாக்ஸ் ஆகி, அப்புறம் சலிப்பாயிடுப்போம்.. //
ReplyDeleteநமக்கு காலையில 7 மணிக்கு இண்டர்வியூ போய் 4 மணி வரைக்கும் காத்திருந்த அனுபவம் உண்டு..
ஹே ஹேய்.. நாம வேலை வாங்கிட்டோல..
ReplyDelete.....வாழ்த்துக்கள்!!!! சூப்பர்!
@வெறும்பய..
ReplyDelete///நமக்கு காலையில 7 மணிக்கு இண்டர்வியூ போய் 4 மணி வரைக்கும் காத்திருந்த அனுபவம் உண்டு..///
உண்மைதாங்க.. சில நேரங்கள்ல அவ்வளவு நேரம் உக்கார வைச்சிட்டு ரெஸ்யூமை வாங்கி உங்களை போன் பண்ணிக்கூப்பிடறோம்னு கூட சொல்வாங்க..
வருகைக்கு நன்றிங்க..
@சித்ரா..
ரொம்ப நன்றிங்க..
பயனுள்ள தகவல் தம்பி.....புதிதாக வேலை தேடும் நண்பர்களுக்கு நல்ல விளக்கங்கள் கோர்வையாக இருக்கின்றன.
ReplyDeleteவாழ்த்துக்கள்...பா!
@தேவா..
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க..
என்ன பாபு! ரொம்ப கஷ்ட பட்டீங்களா BPO வேலைக்கு போயி.. :-) நல்லா இருக்கு
ReplyDeleteஆங்கில புலமை....கவிதை எழுதச்சொல்லமாட்டேங்களே!!
ReplyDeletethank you, Mr. Khader,
ReplyDeletenow i am working as accountant in saudi arabia, i am 42 years old, i am planning to come back to india. i studied bcom only, is there any possibility to try in bpo.
@சிவராம்குமார்..
ReplyDelete///என்ன பாபு! ரொம்ப கஷ்ட பட்டீங்களா BPO வேலைக்கு போயி.. :-)///
BPO வேலைக்கு போற எல்லாருக்கும் வர்ற அனுபவங்கள்தான் இது சிவராம்குமார்..
தொடர்ந்து என்னுடைய பதிவுகளுக்கு ஊக்கமளிப்பதற்கு ரொம்ப நன்றிங்க..
@வடுவூர் குமார்..
ReplyDelete///ஆங்கில புலமை....கவிதை எழுதச்சொல்லமாட்டேங்களே!!///
:-).. வருகைக்கு நன்றிங்க..
@எம் அப்துல் காதர்..
ReplyDeleteஉங்களுடைய கருத்துக்கள் எனக்கு ரொம்ப உற்சாகத்தைக் கொடுக்குதுங்க..
வருகைக்கு நன்றி..
///நெக்ஸ்ட் ஜாய்னிங் டே.. ஹா ஹா ஹா.. நம்ம கெட்டகாலம் ஆரம்பமாயிடுச்சு///
ReplyDeletesooooper