A BEAUTIFUL MIND - திரை விமர்சனம்


 John Forbes Nash, Jr., அப்படின்னு நோபல் பரிசு வாங்கனவரோட வாழ்க்கையை ஆதாரமா வைச்சி இந்தப் படத்தை எடுத்துருக்காங்க..

1947 ஆம் ஆண்டுல இருந்து படம் ஆரம்பிக்குது..

ஹீரோ ஜான் நாஷ்.. பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டியில வந்து மாணவரா சேர்றார்.. கணிதத்துல பெரிய சாதனைகளைப் பண்ணனும்ங்கறது அவரோட எண்ணம்.. காலேஜ் ஹாஸ்டல்ல தனக்கு தனியறையே போதும்னு சொன்னாலும்.. அவரோட அறைத்தோழனா வந்து சேர்றார் சார்லஸ்.. அவர் ஆர்ட்ஸ் ஸ்டூடண்ட்..

கிளாஸ் அட்டெண் பண்றதுல எல்லாம் ஜானுக்கு நாட்டமேயில்ல.. தான் ஒரு பெரிய கணித மேதையாகறதுக்கு இந்த விசயங்கள் எல்லாம் தாமதமாக்குதுன்னு நினைக்கறார்.. அவரால யார்கூடவும் இயல்பா பழக முடியல.. தனிமைல ஏதாவது கணக்கு போட்டுட்டு இருக்கறதையே பெரிதும் விரும்பறார்.. அவரோட இந்த செய்கையைப் பார்த்து சகமாணவர்கள் அவரை ரொம்ப நக்கல் பண்றாங்க..

சார்லஸைத் தவிர யாரையுமே அங்கே அவருக்குப் பிடிக்கல..

ஜான் ரொம்ப காலமா கிளாஸ் எதுவுமே அட்டெண் பண்ணாததால.. ஜானோட துறைத்தலைவர் அவரைக் கூப்பிட்டு நீ உன்னோட பிராஜெக்டை சப்மிட் பண்ணாத்தான் அடுத்து வேலையை உன்னாலப் பார்க்க முடியும்னு ரொம்பக் கடுமையா சொல்லிடறார்.. ஜானும் இரவு பகலா உக்காந்து ஒரு பிராஜெக்டை வெற்றிகரமா முடிச்சிடறார்.. துறைத்தலைவரும் அவரோட பிராஜெக்டல ரொம்ப திருப்தியாகி MIT(Massachusetts Institute of Technology)-ல வேலை வாங்கித் தர்றார்..

ஜான் வேலை வாங்கிட்டாலும் அவருக்கு கிளாஸ் எடுக்கறதுல எல்லாம் இஷ்டமே இல்ல.. அது தன்னோட வேலை இல்ல.. தன்னோட இலட்சியத்தை இதன் மூலமா அடைய முடியாதுன்னு நினைக்கிறார்..

ஒருமுறை அரசாங்கத்துல இருந்து கூப்பிட்டு ஒரு சீக்ரெட் கோடை பிரேக் பண்ணித்தரச் சொல்றாங்க.. அவரும் அந்த வேலையை வெற்றிகரமா செய்துடறார்.. அப்புறம் காலேஜ்ல அவரோட ஸ்டூடண்ட் ஒரு பொண்ணை லவ் பண்ணிக் கல்யாணமும் பண்ணிக்கறார்..

ஜானும் அவரோட காலேஜ் ரூம்மேட் சார்லஸும் திரும்பவும் சந்திச்சுக்கறாங்க.. சார்லஸ்கூட அவரோட சொந்தக்காரப் பொண்ணு மெர்சியும் வந்திருக்கு.. அந்தப் பொண்ணையும் ஜானுக்கு ரொம்பப் பிடிச்சுப் போயிடுது..

ஒருநாள் ஜானை ஒரு இரகசிய ஏஜெண்ட் சந்திக்கறார்.. ரஷ்யப் பத்திரிக்கைகள்ல தீவிரவாதிகள் சங்கேதமுறையில பேசிக்கறதாகவும்.. அதனால இனி தினமும்.. ரஷ்ய பத்திரிக்கைகளைப் படிச்சு கோட் பிரேக் பண்ணித்தரணும்னு கேட்டுக்கறார்.. அதுல இருந்து ஜான் ஒரு இரகசிய உளவாளியா மாறி கோடு பிரேக் பண்ற வேலையை ஆரம்பிக்கறார்.. எப்பவுமே அவர் இந்த வேலைகள்லயே இருக்கறதால அவரோட மனைவி ரொம்ப இரிடேட் ஆயிடறாங்க..

படம் பார்க்கனும்னு நினைக்கறவங்க இந்த கோட்டுக்குள்ள இருக்கற பாகத்தைப் படிக்காதீங்க..
---------------------------------------------------------------------------------------------------------------
ஜான் ஒரு காலேஜ்ல கெஸ்ட் லெக்சர் எடுத்துட்டு இருக்கப்போ.. அவரை நாலைஞ்சு பேர் தூக்கிட்டுப் போயிடறாங்க.. ரஷ்ய உளவாளிகள்தான் தன்னை தூக்கிட்டு வந்துட்டதா நினைக்கறார் ஜான்.. ஆனால் அது ஒரு மெண்டல் ஹாஸ்பிடல்.. ஜானோட ஒய்ஃப்தான் அவரை அங்கே அட்மிட் பண்ணியிருக்கறது..

ஜானை ட்ரீட் பண்ற டாக்டர்.. அவரைப் பத்தின அதிர்ச்சியான சில உண்மைகளை சொல்றார்.. அதாவது ஜானோட பிரண்ட் சார்லஸ், மெர்சி, இரகசிய ஏஜெண்ட் எல்லாருமே ஜானோட கற்பனைகள்தான்.. அந்த உண்மையை ஜானுக்கு கஷ்டப்பட்டு புரிய வைக்கறாங்க..

ஜான் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு வீட்டுக்குப் போனவுடனே அவரோட மெடிகேசனை ஃபாலோ பண்ணாம விட்டுடறார்.. அதனால அவரோட கற்பனை பாத்திரங்கள் எல்லாம் திரும்பவும் வந்திடுது.. ஒருமுறை ஜானோட சைகைகள் எல்லை மீறிடவே.. அவரோட ஒய்ஃப் அவரைக் கோவிச்சுக்கிட்டு கிளம்பிடறாங்க.. அப்போதான் ஜான் ஒரு விசயத்தை ரியலைஸ் பண்றார்.. தன்னோட பிரண்ட்ஸ் யாருக்குமே வயசே ஆகலையே.. சின்னப் பொண்ணு இவ்வளவு வருசங்கள் ஆகியும் சின்னப் பொண்ணாவே இருக்கு.. மத்தவங்களும் அப்படியே இருக்காங்களேன்னு ரியலைஸ் பண்றார்.. இந்த விசயத்தை தன் மனைவிகிட்ட சொல்லி இனி ஒழுக்கமா இருக்கேன்னு மன்னிப்பு கேக்கறார்..

ஜானுக்கு இப்போ ரொம்ப வயசாயிடுது.. காலேஜ்ல பொறுப்பா வேலை பார்த்திட்டு இருக்கார்.. அவரோட சேர்ந்து படிச்ச ஒருத்தர்தான் அந்த காலேஜ் ஹெட்டா இருக்கார்.. இப்பவும் அவங்க மூனு பேரும் ஜானுக்கு முன்ன வந்து தொல்லை பண்ணிட்டேதான் இருப்பாங்க.. ஆனாலும் அவரோட கற்பனைப் பாத்திரங்களோட பேசாம இருக்கப் பழகிட்டார்..

கடைசியில ஜானோட உழைப்பைப் பாராட்டி.. அவர் உருவாக்கின கேம் தியரிங்கற ஒரு கான்செப்ட்டுக்கு நோபல் பரிசு கொடுக்கறாங்க..
---------------------------------------------------------------------------------------------------------------  கிளாடியேட்டர் படத்துல வந்து அதிரடிக் காட்சிகள்ல பட்டையக் கிளம்பின Russell Croweதான் இந்தப் படத்தோட ஹீரோ.. இந்தப் படத்துல அவரோட பாந்தமான நடிப்பு அற்புதம்.. அவரோட மென்மையான கேரக்டர்ல அருமையா செட்டாயிருப்பார்..

ஒரு மனிதனால தன்னோட இலட்சியத்தை அடைய முடியலைன்னா எவ்வளவு துடிச்சுப் போவான்னு தன்னோட அருமையான நடிப்புல காட்டியிருக்கார் ஹீரோ..

படத்துல நிறைய விசயங்கள் பிடிச்சிருந்தது.. அதுல ஒரு சீன்..
ஜானும் அவரோட துறைத்தலைவரும் பேசிட்டு இருப்பாங்க.. அங்கே ஒரு புரொபசர் ரிடையர்டாகி போறப்போ அவருக்கு எல்லாரும் தங்களோட பேனாவைக் குடுத்து மரியாதை செலுத்துவாங்க.. அந்த நிகழ்வைக் காமிச்சு ஜான்கிட்ட இதைப் பத்தி நீ என்ன நினைக்கறேன்னு கேப்பார் துறைத்தலைவர்..

 ஜான் அவரை உத்துப் பார்த்துட்டு அவருக்கு இப்போதான் அங்கீகாரம் கிடைச்சிருக்குன்னு சொல்வார்.. அது அங்கீகாரம் இல்ல.. அவரோட உழைப்புக்கு கிடைக்கற வெகுமதி இது.. வாழ்க்கையை அப்படிப் பார்த்துப் பழகுன்னு சொல்வார் துறைத்தலைவர்.. ரொம்ப நல்ல சீன்..

காலேஜ்ல பசங்க வாலிபால் விளையாடிட்டு இருப்பாங்க.. பசங்க விளையாடறப்போ அவங்களோட மூவ்மென்ட்ஸ்ல கூட கணக்கு இருக்கு.. அப்படின்னு அதுக்கு ஒரு கணக்கு போடுவார்.. ஒருத்தர் கழுத்துல கட்டியிருந்த டை டிசைனைப் பார்த்து இப்படித் திங்க் பண்ணி டிசைன் பண்ணினதுக்கும் ஒரு கணக்கு இருக்குன்னு சொல்வார்.. உண்மையிலயே அப்படியெல்லாம் இருக்கும் போல!!..

ஜானைப் பற்றின உண்மைகள் அவரோட மனைவிக்குத் தெரியவரும் போதும்.. நைட்ல ஜானோட சந்தோசமா இருக்க முடியாத போதும்.. மனைவியா நடிச்சிருக்கற ஜெனிஃபர் கானலி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பாங்க..

கடைசிக் காட்சியில ஜான் நோபல் பரிசு வாங்கும்போது அவருக்கு பெருமையா இருக்குதோ என்னவோ.. நமக்கு ரொம்ப பெருமையாவும்.. திருப்தியாகவும் இருக்கும்.. கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்..


29 Responses So Far: