எங்க ஊர் பழனியில இருந்து ஐந்து கிலோமிட்டர் தூரத்துல இருக்கற ஆயக்குடின்னு ஒரு கிராமத்துல மக்கள் மன்றம் அப்படின்னு ஒரு கோச்சிங் சென்டரை நடத்திட்டு வர்றாங்க.. அங்கே வி.ஏ.ஓ, போலீஸ், குரூப் 1, குரூப் 2 இப்படி பல அரசுப் பணிகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தறாங்க.. போன வருசம் மட்டும் இங்கே படிச்சவங்கள்ல இருந்து 782 பேர் அரசுப் பணிகளுக்கு செலக்ட் ஆயிருக்காங்க.. இந்தப் பயிற்சி வகுப்புகளுக்காக அவங்க எந்த கட்டணத்தையும் வசூலிக்கறதில்லை..
ஆரம்பத்துல ஆயக்குடியில இருக்கற ஒரு ஸ்கூல்ல அந்தக் கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன் அப்படிங்கறவர் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இலவசமா பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சார்.. அப்புறம் அங்க கோச்சிங் நல்லாயிருக்கறதா மாணவர்கள் சொல்றதைக் கேட்டு.. அவரோட நண்பர்களும் தங்களோட சுய ஆர்வத்துல அங்க வர்றவங்களுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சாங்க..
ஒருசமயத்துல போலீஸ் வேலைக்காக அங்கே பயிற்சி வகுப்புக்கு வந்த ஆயக்குடியை சேர்ந்த 24 பேர் ஒன்னா செலக்ட்டாகி ரெக்கார்டு பண்ணினாங்க.. அப்போ இருந்து மக்கள் மன்றம் பாப்புலராக ஆரம்பிச்சிடுச்சு.. இப்போ மக்கள் மன்றத்தை ஏழு நிர்வாகிகள் கொண்ட ஒரு குழு நடத்திட்டு இருக்கு.. இன்னொரு ஏழு வாத்தியார்களும் வந்து கிளாஸ் எடுத்துட்டு இருக்காங்க.. பழனியை சுத்தியிருக்கற ஊர்கள்ல இருந்தும்.. தேனி, கம்பம் ஏரியால இருந்தும் நிறையப் பேர் வந்து படிக்கறாங்க.. எனக்குத் தெரிஞ்சு ஒருத்தர்.. இந்தப் பயிற்சி வகுப்பை அட்டென் பண்றதுக்காக ஆயக்குடியில இருந்து 7 மணி நேர தூரத்துல இருக்கற கிரிஷ்ணகிரிங்கற ஊர்ல இருந்து வாராவாரம் வந்து படிக்கறார்..
இவ்வளவு பாப்புலர் ஆயிட்ட பிறகும் இன்னும் மக்கள் மன்றத்தை சேர்ந்தவங்க அங்க படிக்க வர்றவங்ககிட்ட ஒரு ரூபாய்கூட எதுக்கும் வாங்கறதில்ல.. முதல்ல அங்கே இருந்த ஒரு அரசாங்கப் பள்ளியில கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சாங்க.. இப்போ நிறையப்பேர் படிக்க வர்றதால நாலு பயிற்சி வகுப்புகளை கிட்டக்கிட்ட இருக்கற கிராமங்கள்லயும் அவங்க நடத்தறாங்க..
இந்தப் பயிற்சிகளை எப்போ ஆரம்பிக்கறாங்கன்னா.. ஒவ்வொரு முறையும் அரசாங்கம் தேர்வுகளைப் பற்றி அறிக்கையை வெளியிட்டவுடனே இவங்களும் நாளிதழ்கள்ல பயிற்சி வகுப்புகளைப் பத்தின விளம்பரங்களைக் கொடுத்திடறாங்க..
அவர் சொன்ன சில எடுத்துக்காட்டுகள்ல ஒன்னை இங்க சொல்றேன்:
1. முதல் உலக சமயமாநாட்டில் கலந்து கொண்ட இந்தியர் யார்? அப்படிங்கறது கேள்வி..
பதில்: விவேகானந்தர்.
இப்படி ஒத்தை வரியில சொன்னா கண்டிப்பா யாரா இருந்தாலும் கொஞ்ச காலத்துல மறந்துடுவாங்க.. இந்தக் கேள்விக்கு மக்கள் மன்றத்துல எப்படி பதில் சொல்றாங்கன்னா..
1893 ஆம் ஆண்டு நடந்த முதல் உலக சமய மாநாட்டுல விவேகானந்தர் கலந்துக்கிட்டாராம்.. அப்போ இருந்து இப்போ வரைக்கும் நடந்த மாநாடுகள்ல கலந்துக்கிட்ட ஒரே இந்தியரும் அவர்தானாம்.. அவருக்கப்புறம் வேற யாருமே கலந்துக்கிட்டதில்லையாம்.. அப்படிக் கலந்துக்கிட்டப்போ நம்ம இந்தியாவோட பாரம்பரியத்தை விளக்கற மாதிரி ஒரு புத்தகத்தை எடுத்துட்டுப் போயி அங்கே இருக்கற மேஜையில வைச்சிருக்கார்.. அவரையும் இந்தியாவையும் அவமானப்படுத்தறதுக்காக அங்கே வந்திருந்த மத்த நாட்டுக்காரங்க தங்களோட புத்தகங்களை அந்தப் புத்தகத்துக்கு மேல மேல அடுக்கி விவேகானந்தரோட புத்தகத்தை கடைசியில தள்ளிட்டாங்களாம்..
அப்போ நடந்த சொற்பொழிவுல பேசின ஒருத்தர் விவேகானந்தர் பக்கம் திரும்பி.. இந்தியா எப்பவுமே நீங்க கொண்டு வந்த உங்க புத்தகம் மாதிரிதான்.. எப்பவுமே எங்களுக்கு கீழேதான் அப்படின்னாராம்.. அதுக்கு விவேகானந்தர்.. அது அப்படியில்லங்க.. உலக பாரம்பரியம் அனைத்தையும் தாங்கி நிக்கறது எங்க இந்தியாதான்.. உங்களை எல்லாம் நாங்கதான் தாங்கிப்பிடிச்சிட்டு இருக்கோம்னாராம்.. அவர் பேசின இந்த சொற்பொழிவு மிகவும் பிரசித்தி பெற்றதாம்..
இப்படி அந்த ஒரு ஒன்வேர்ட் கேள்விக்கு இவ்வளவு பெரிய பதில் சொல்வாங்களாம்.. அவங்க சொல்ற இந்த மாதிரி பதில்களாலேயே இனி அந்தக் கேள்விகளை படிக்கவேண்டிய அவசியமே இல்லாமப் போயிடுதாம்..
அங்கே போய் சேர்றவங்களுக்கு எல்லாருக்கும் அவங்க கொடுக்கற முதல் ஆலோசனை என்னன்னா.. 500, 1000னு காசைப் போட்டு புத்தகங்களை வாங்காதீங்க.. 6 ஆம் வகுப்புல இருந்து 12 ஆம் வகுப்பு புத்தகங்கள்ல இருக்கற முக்கியமான விசயங்களைப் படிச்சாலே போதும்ங்கறாங்களாம்..
தேர்வுக்காக தமிழ், கணிதம், வரலாறு, பொது அறிவுன்னு அனைத்து பாடங்களையும் சூப்பரா எடுக்கறாங்களாம்.. எந்தப் பிரதிபலனையுமே எதிர்பார்க்காம மக்கள் மன்றத்தை நடத்திட்டு வர்ற அவங்க உண்மையிலயே கிரேட்தான்..
மிகவும் பயனுள்ள கட்டுரைத்தொகுப்பு நண்பரே..! நிச்சயம் பாராட்டுக்குரியது. ஆயக்குடியை சுற்றியுள்ள பல மாணவர்களை உங்கள் பதிவு மூலம் அரசு பணிக்கு செல்ல ஒரு உந்துகோலாய் இப்பதிவு. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
ReplyDelete@பிரவின்குமார்..
ReplyDeleteபாராட்டுக்கு நன்றிங்க பிரவின்.. கண்டிப்பாக இது போல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதுகிறேன்.. நன்றி..
எந்தப் பிரதிபலனையுமே எதிர்பார்க்காம மக்கள் மன்றத்தை நடத்திட்டு வர்ற அவங்க உண்மையிலயே கிரேட்தான்..
ReplyDelete...Thats a nice thing to do. May God bless them!
@சித்ரா..
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க...
நல்ல பகிர்வு..மக்கள் மன்றத்தின் பணி தொடர,சிறக்க வாழ்த்துக்கள்..
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு. விவேகானந்தர் அனுபவம் நன்றாக இருந்தது! மக்கள் மன்றத்திற்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete@ஹரிஸ்..
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க ஹரிஸ்..
@எஸ்.கே..
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க..
கண்டிப்பாய் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.... பகிர்ந்த உங்களுக்கும் பாராட்டுக்கள்
ReplyDelete@அருண் பிரசாத்..
ReplyDeleteநன்றிங்க அருண்..
//இவ்வளவு பாப்புலர் ஆயிட்ட பிறகும் இன்னும் மக்கள் மன்றத்தை சேர்ந்தவங்க அங்க படிக்க வர்றவங்ககிட்ட ஒரு ரூபாய்கூட எதுக்கும் வாங்கறதில்ல.. //
ReplyDeleteநம்பவே முடியலைங்க ., மக்கள் மன்றத்துக்கு என் சார்பா ஒரு பாராட்டு சொல்லிடுங்க ..! அதைப் பற்றி தெரியப்படுத்திய உங்களுக்கும் பாராட்டுக்கள் ..
//அதுக்கு விவேகானந்தர்.. அது அப்படியில்லங்க.. உலக பாரம்பரியம் அனைத்தையும் தாங்கி நிக்கறது எங்க இந்தியாதான்.. உங்களை எல்லாம் நாங்கதான் தாங்கிப்பிடிச்சிட்டு இருக்கோம்னாராம்..//
ReplyDeleteஉண்மைலேயே இதைப் படிக்கும்போது அருமையா இருக்குங்க ..!
@ப.செல்வக்குமார்..
ReplyDeleteநன்றி செல்வா..
பாராட்டப்பட வேண்டிய விஷயம்
ReplyDelete@வெறும்பய..
ReplyDeleteவருகைக்கு நன்றி ஜெயந்த்..
great job bro...
ReplyDeleteஉபயோகமான தகவல் ஒன்றினை எழுதியிருக்கிறீர்கள்... நன்றி...
ReplyDelete@FARHAN..
ReplyDeleteThanks Bro..
@philosophy prabhakaran..
ReplyDeleteநன்றி பிரபாகரன்..
அவங்க உண்மையியே கிரேட்தான்!!! பகிர்வுக்கு நன்றி பாபு!!!
ReplyDeleteநல்ல தகவல்.
ReplyDelete@சிவா, அன்பரசன்..
ReplyDeleteநன்றிங்க..
makkal mandram is great..............
ReplyDelete@Dhosai..
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க..
இன்றைய சூழலில் இந்த மாதிரியான தொன்று செய்வது சாதரணமான விஷயம் அல்ல .அவர்களுக்கு வாழ்த்துக்களும் உங்களுக்கு நன்றி
ReplyDelete@நா.மணிவண்ணன்..
ReplyDeleteநன்றிங்க..