Valkyrie - ஹிட்லரைக் கொல்ல சதி


ஹிட்லரைப் பற்றியும்.. இரண்டாம் உலகப்போரின் போது அவர் செய்த போர்ப் படுகொலைகளைப் பற்றியும் நிறையப் படங்கள்ல பார்த்துட்டோம்..

ஹிட்லரை அவரோட எதிரி நாடுகளுக்கு மட்டுமில்லாமல்.. அவருடைய இராணுவப் படைகளின் முக்கியப் பதவிகளில் இருந்த நிறையப் பேருக்கும் பிடிக்காமல்தான் இருந்தது.. அவர் தானாகவே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக.. 15 முறை அவரைக் கொலை செய்ய முயற்சி நடந்ததா அதிகாரப்பூர்வமான கணக்கு இருக்கு.. 1944 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி ஹிட்லரைக் கொல்ல கடைசியாக ஒரு முயற்சி நடந்தது.. Colonel Von Stauffenberg அப்படிங்கறவரும்.. அவரோட சேர்ந்த சில பெரிய அதிகாரிகளும் சேர்ந்து அந்த முயற்சியில ஈடுபட்டாங்க.. இதுதான் ஹிட்லரைக் கொலை செய்ய நடந்த கடைசி முயற்சியா ரெக்கார்டு ஆயிருக்கு..

டாம் குரூஸ் இந்தப் படத்தோட ஹீரோ.. உண்மையான Colonel Von Stauffenberg முகமும்.. டாம் குரூஸோட முகமும் ஒரே மாதிரியா இருந்ததால.. டாம் குரூஸ் அவரோட பாத்திரத்துல நடிச்சார்..

முதல் காட்சியில டாம் குரூஸ் ஆப்ரிக்காவுல ஒரு வார் பீல்டுல இருக்கார்.. திடீர்னு அங்கே நடந்த துப்பாக்கிச் சூடுல.. அவருக்கு ஒரு கையில இரண்டு விரல்களும்.. இன்னொரு கையில மணிக்கட்டுக்கு கீழேயும், ஒரு கண்ணும் அவுட்டாயிடுது.. அதே நேரம்.. ஹிட்லரைக் கொல்ல நடந்த ஒரு முயற்சி தோல்வியடையறதைக் காமிக்கறாங்க..


வார் ஃபீல்டுல அடிபட்ட டாம் குரூஸ் பெர்லினுக்குத் திரும்பறார்.. அங்கே ஹிட்லருக்கு எதிரா.. அவரைக் கொல்ல சதித்திட்டம் போட்டுட்டு இருக்கற அதிகாரிகளை சந்திக்கறார்.. அவங்களுக்கெல்லாம் ஹிட்லரைக் கொல்லனும்னு எண்ணம் இருந்ததே தவிர எப்படி செயல்படுத்தனும்னு தெரியல.. அவங்கோட சேர்ற டாம் குரூஸ் ஹிட்லரைக் கொல்ல ஒரு திட்டம் போடறார்..

நாட்டுல எமெர்ஜின்சி பிரியட் வந்தா யூஸ் பண்றதுக்காக.. ஆபரேசன் வல்கெய்ரி அப்படிங்கற ஒரு அதிரப்படையை ஹிட்லர் அமைச்சிருந்திருக்கார்.. ஹிட்லரைக் கொன்னுட்டு அந்தப் படையை பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கறதுதான் திட்டம்.. அந்தப் படையோட தலைவர் ஜெனரல் ஃப்ரம்.. டாம் குரூஸுக்கு நேரடியாக உதவி செய்ய மறுத்திடறார்.. அந்தப் படைக்கு ஏதாவது ஆர்டர் கொடுக்கனும்னா.. அடுத்து ஹிட்லரோட கையெழுத்துதான் தேவை.. அந்தக் கையெழுத்தையும் ஹிட்லரை ஏமாத்தி வாங்கிடறாங்க..

போர் நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்க ஒரு கூட்டம் நடக்குது.. அந்தக் கூட்டத்துல ஹிட்லரையும் ஹிம்லர் அப்படிங்கற படைத்தளபதி ஒருவரையும் போட்டுத்தள்றதுன்னு முடிவு பண்ணி அந்தக் கூட்டத்துல டாம் குரூஸ் கலந்துக்கறார்.. ஆனால் அவர் எதிர்பார்த்தபடி ஹிம்லர் வராமல் போகவே அன்னைக்கு பிளான் பெய்லியர் ஆயிடுது..

அடுத்து நடந்த கூட்டத்துல அதே பிளானை வெற்றிகரமா முடிக்கறார் டாம் குரூஸ்.. ஹிட்லர் இருந்த ரூம்ல பாம் வைச்சுட்டு.. அதை வெடிக்கறதைக் கண்ணால பார்த்துட்டு அங்கேயிருந்து தப்பிக்கறார்.. அப்புறம் அவங்க பிளான்படி நடக்காம அவரோட அதிகாரிகள் சொதப்பறாங்க.. டாம் குரூஸ் போய் அவங்களுக்கு தலைமை தாங்கி அவங்களோட பிளானை செயல்படுத்த ஆரம்பிக்கறார்..

ஆபரேசன் வல்க்ரேயைப் பயன்படுத்தி ஒவ்வொரு டிஸ்ட்ரிக்கையும் பிடிக்க ஆரம்பிக்கறார்.. போர்க்குற்றம் செய்த தலைமை அதிகாரிகள் அனைவரையும் கைது செய்றார்.. இப்படி விசயங்கள் நல்லபடியா போயிட்டு இருக்க.. ஹிட்லர் சாகலைன்னு தெரிய வருது..

Colonel Von Stauffenberg (டாம் குரூஸ்) யூஸ் பண்ண நினைச்ச அதே ரிசர்வ் ஆர்மி.. டாம் குரூஸோட சேர்ந்து.. அவருக்கு உதவியா இருந்த எல்லாரையும் கைது செய்து கொன்னுடறாங்க..
Colonel Von Stauffenberg மற்றும் Tom Cruise
ஹிட்லரைக் கொல்ல நடக்கற முயற்சிகள்ல அவங்களோட டென்சனை நமக்கும் கொண்டு வந்திருப்பாங்க.. அந்த முயற்சிகள்ல எல்லாம் ஹிட்லர் கொல்லப்படலன்னு நமக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தாலும்.. ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமா இருந்தது கதைக்களம்..

ஹிட்லரைக் கொல்ல டைம்பாம் வைச்சுட்டு.. டாம் குரூஸ் செக் போஸ்ட் தாண்டற வரைக்கும்.. விறுவிறுப்புல நாம இமைக்க மறந்திடுவோம்..

படம் முழுக்க திட்டம் போடறதாகவே.. வர்றதால நிறையப் பேசிட்டே இருப்பாங்க.. அதனால சப்டைட்டிலோட பார்த்தா ரொம்ப நல்லாயிருக்கும்..

இரண்டாம் உலகப்போர் காலத்துல நடக்கற கதையா இருந்தாலும்.. ஸ்கெண்ட்லர் லிஸ்ட், பியானிஷ்ட் மாதிரியான படங்கள் மாதிரி.. ஹிட்லரோட படைகள்.. அப்பாவி மக்களைக் கொல்றமாதிரி காட்சிகளை எல்லாம் வைக்கல..

நல்ல ஹிஸ்டாரிக்கல் திரில்லர் மூவி இது..28 Responses So Far: