சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..
இந்தப் பேரை உச்சரிக்கும் போதே மனசுக்குள்ள சொல்ல முடியாத சந்தோசம் வரும் நிறையப் பேருக்கு.. அந்த சந்தோசத்தை சின்ன வயசுல இருந்து நானும் உணர்ந்தவன்தான்..
பதிவுலகத்தில எல்லாரும் சூப்பர் ஸ்டாரோட படங்களைப் பற்றி எழுதியது எல்லாமே அருமையா இருந்தது..
சூப்பர் ஸ்டாரோட படங்களைப் பார்க்கறப்போ என் வீட்ல இருக்கறவங்க எல்லாரும் என் முகத்தைப் பார்த்து கிண்டல் பண்ணிட்டு இருப்பாங்க.. ஏன்னா படத்துல தலைவர் என்ன ஆக்சன் பண்றாரோ அதே ஆக்சனை நானும் செய்துட்டு இருப்பேன்.. அதெல்லாம் அவங்களுக்கு பார்க்க காமெடியா இருக்கும்.. நான் அதெல்லாம் கண்டுக்கறதில்ல.. ரொம்ப ரசிச்சுப் பார்ப்பேன்..
சின்னப் பையனா இருக்கப்போ தர்மத்தின் தலைவன் படம் ரிலீஸ் ஆயிருந்தது.. படத்துல கரெக்டா இடைவேளை விடறப்போ ரஜினியை நாசர் குத்திடுவார்.. அதுக்கப்புறம் படத்தைப் பார்க்க மாட்டேன் வீட்டுக்குப் போலாம்னு.. தியேட்டர்ல அடம் புடிச்சு தரையில உருண்டது இன்னும் ஞாபகம் இருக்கு.. :-)
தியேட்டர்ல மக்கள் எல்லாம் என்னைப் பார்த்து சிரிச்சுட்டு.. நிறையப் பேர் வந்து சமாதானப்படுத்தினாங்க.. அப்புறம் இடைவேளை முடிஞ்சவுடனே இன்னொரு ரஜினிகாந்த்.. மோட்டார் பைக்ல பறந்து வர்றதோட ஆரம்பிக்கும் படம்.. அப்போதான் அழுகையை நிறுத்திட்டு ஈஈன்னு சிரிச்சேன்.. இன்னும் வீட்ல சொல்லி சிரிப்பாங்க..
இதுவரைக்கும் தலைவரோட படத்துக்கு முதல் நாள் காட்சிக்கெல்லாம் போனதே இல்ல.. தளபதி ரிலீஸ் ஆன முதல் நாள்.. சும்மா ட்ரை பண்ணுவமேன்னு தியேட்டர் பக்கம் போயிருந்தேன்.. ரசிகர்கள் நெருக்கியடிச்சுக்கிட்டு நின்னுட்டு இருந்ததுல தியேட்டர் காம்பெளண்ட் சுவரே விழுந்துடுச்சு.. அவ்வளவு கூட்டம்.. அப்புறமென்ன போலீஸ்காரங்க எல்லாரையும் குச்சியைத் தூக்கிட்டு துரத்த எஸ்ஸாகி வீட்டுக்கு ஓடியாந்துட்டேன்..
இன்னும் எவ்வளவோ அழகான நினைவுகள்..
சூப்பர் ஸ்டாரோட படங்கள்ல பத்து படங்களை மட்டுமே செலக்ட் பண்ணனும்ங்கறது ரொம்ப கஷ்டமான விசயமா இருக்கு.. 100 படங்களை செலக்ட் பண்ணுன்னு சொன்னா இன்னும் ரொம்ப சந்தோசமா இருக்கும்.. இருந்தாலும் முயற்சி பண்றேன்..
நீங்க எல்லாருமே இந்தத் தொடர் பதிவுல சூப்பர் ஸ்டாரோட ஒவ்வொரு படங்களைப் பத்தியும் சூப்பரா எழுதிட்டீங்க.. அதனால படப் பெயரை மட்டும் குறிப்பிட்டுட்டேன்..
1. மனிதன்
2. தளபதி
3. பாட்ஷா
4. நல்லவனுக்கு நல்லவன்
5. தில்லு முல்லு
6. வேலைக்காரன்
7. தர்மத்தின் தலைவன்
8. தர்மதுரை
9. மிஸ்டர் பாரத்
10. பில்லா
அய்யய்யோ.. அதுக்குள்ள பத்து படங்கள் முடிஞ்சு போச்சே.. இந்தப் படங்கள்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச படங்கள்னு சொல்ல மனசு வரல..
ரஜினிகாந்தோட எல்லா படங்களுமே எனக்குப் பிடித்த படங்கள்தான்.. அவரது ஒவ்வொரு படத்தையும் மிகவும் ரசிக்கறேன்..
அடுத்த வருசம் பாட்ஷா இரண்டாம் பாகம் எடுக்கப்போறதாக நெட்ல படிச்சேன்.. கண்டிப்பா பட்டையக் கிளப்புவாரு ரஜினி..
இந்தப் பதிவைத் தொடர்வதற்கு நான் நானாக அன்பரசனை அன்புடன் அழைக்கிறேன்..
மனிதன், நல்லவனுக்கு நல்லவன், நல்லவனுக்கு நல்லவன் இவையெல்லாம் அதிகம்பேர் சொல்லாதது. நீங்க சொன்ன எல்லாப் படங்களும் எனக்கும் பிடிக்கும்.
ReplyDelete//அடுத்த வருசம் பாட்ஷா இரண்டாம் பாகம் எடுக்கப்போறதாக நெட்ல படிச்சேன்.. கண்டிப்பா பட்டையக் கிளப்புவாரு ரஜினி..//
இது எனக்கு புதிய தகவல். நன்றி பாபு.
@நாகராஜசோழன் MA..
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க...
நல்ல பதிவு நண்பரே
ReplyDelete@VELU.G..
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே...
நல்ல தேர்வு
ReplyDelete@LK..
ReplyDeleteநன்றிங்க..
அருமையான தொகுப்பு பாபு
ReplyDeleteஇவற்றில் பாட்ஷா எனக்கு றொம்பவே பிடிக்கும்.
///இந்தப் பேரை உச்சரிக்கும் போதே மனசுக்குள்ள சொல்ல முடியாத சந்தோசம் வரும் நிறையப் பேருக்கு///
உண்மைதான் பாபு
நீங்க அப்பவே ரஜினி Fan ..அருமை தொகுப்பு அணைத்து படங்களும் மீண்டும் மீண்டும் பார்க்கலாம்
ReplyDeleteதளபதி ரிலீஸ் ஆன முதல் நாள்.. சும்மா ட்ரை பண்ணுவமேன்னு தியேட்டர் பக்கம் போயிருந்தேன்//
ReplyDeleteபாஸ் நீங்க ரொம்ப பெரிய ஆளா..தளபதி ரிலீஸ் ஆனப்பலாம் நான் பொறக்கவே இல்ல..
//அடுத்த வருசம் பாட்ஷா இரண்டாம் பாகம் எடுக்கப்போறதாக நெட்ல படிச்சேன்.. //
ReplyDeleteமெய்யாலுமா பாஸ்..
@nis..
ReplyDeleteநன்றிங்க..
@புதிய மனிதா..
ReplyDeleteநன்றிங்க..
ஹரிஸ் said...
ReplyDeleteதளபதி ரிலீஸ் ஆன முதல் நாள்.. சும்மா ட்ரை பண்ணுவமேன்னு தியேட்டர் பக்கம் போயிருந்தேன்//
பாஸ் நீங்க ரொம்ப பெரிய ஆளா..தளபதி ரிலீஸ் ஆனப்பலாம் நான் பொறக்கவே இல்ல.. /////
பாஸ்.. தளபதி ரிலீஸ் ஆனப்போ எனக்கு 8 வயசுங்க.. பக்கத்து வீட்டுல இருந்த அண்ணன்கூட போனேன்..
ஹரிஸ் said...
ReplyDelete//அடுத்த வருசம் பாட்ஷா இரண்டாம் பாகம் எடுக்கப்போறதாக நெட்ல படிச்சேன்.. //
மெய்யாலுமா பாஸ்.. ////
மெய்யாலுமான்னு எனக்கும் தெரியாதுங்க.. நெட்ல பார்ததை சொன்னேன்.. ரஜினிகாந்த் பாட்ஷா இரண்டாம் பாகத்தில் நடிக்க அபிப்ராயப்பட்டதாக செய்தி வெளியாயிருந்தது..
அருமையான தொகுப்பு.
ReplyDeleteஅதிலும் அந்த படம் பிரமாதம்.
என்னை தொடர அழைத்தமைக்கு நன்றிங்க.
ரைட் பாஸ்..
ReplyDelete@அன்பரசன்..
ReplyDeleteநன்றிங்க..
உங்கல் தொகுப்பும் மிக நன்றாகவே உள்ளது!
ReplyDeleteGOOD POST
ReplyDeleteவசீகரமான ரஜினி படத்தை வெளியிட்டமைக்கு நன்றி
ReplyDelete//சூப்பர் ஸ்டாரோட படங்கள்ல பத்து படங்களை மட்டுமே செலக்ட் பண்ணனும்ங்கறது ரொம்ப கஷ்டமான விசயமா இருக்கு.. 100 படங்களை செலக்ட் பண்ணுன்னு சொன்னா இன்னும் ரொம்ப சந்தோசமா இருக்கும்.. இருந்தாலும் முயற்சி பண்றேன்..//
ReplyDeleteஹி ஹி ஹி ., அதுக்கு அவர் நடிச்ச எல்லா படங்களையுமே தேர்வு செய்ங்க அப்படின்னு சொல்லிடலாமா ..?
//ஏன்னா படத்துல தலைவர் என்ன ஆக்சன் பண்றாரோ அதே ஆக்சனை நானும் செய்துட்டு இருப்பேன்.. அதெல்லாம் அவங்களுக்கு பார்க்க காமெடியா இருக்கும்.. நான் அதெல்லாம் கண்டுக்கறதில்ல.. ரொம்ப ரசிச்சுப் பார்ப்பேன்..///
ReplyDeleteஇதுவல்லவா தீவிர ரசனை என்பது ..!!
@எஸ்.கே, ஆர்.கே.சதீஷ்குமார்..
ReplyDeleteநன்றிங்க..
@ப.செல்வக்குமார்..
ReplyDeleteவருகைக்கு நன்றி..
நல்ல மலரும் நினைவு பாபு....
ReplyDeleteதொடர்பதிவு எழுதியதற்கு நன்றி
@அருண் பிரசாத்..
ReplyDeleteநன்றிங்க..
Good List :)
ReplyDelete@Prasanna..
ReplyDeleteநன்றிங்க..
உங்கள் தொகுப்பும் அருமை
ReplyDelete@நா.மணிவண்ணன்..
ReplyDeleteநன்றிங்க..
நல்லாருக்கு செலக்சன்,
ReplyDeleteஎன்னது பாட்சா செகண்ட் பார்ட்டா.... இதுதான் மேட்டர்....!
@பன்னிக்குட்டி ராம்சாமி..
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க..
//சின்னப் பையனா இருக்கப்போ தர்மத்தின் தலைவன் படம் ரிலீஸ் ஆயிருந்தது.. படத்துல கரெக்டா இடைவேளை விடறப்போ ரஜினியை நாசர் குத்திடுவார்.. அதுக்கப்புறம் படத்தைப் பார்க்க மாட்டேன் வீட்டுக்குப் போலாம்னு.. தியேட்டர்ல அடம் புடிச்சு தரையில உருண்டது இன்னும் ஞாபகம் இருக்கு.. :-)//
ReplyDeleteme to yaa
//சூப்பர் ஸ்டாரோட படங்கள்ல பத்து படங்களை மட்டுமே செலக்ட் பண்ணனும்ங்கறது ரொம்ப கஷ்டமான விசயமா இருக்கு.. 100 படங்களை செலக்ட் பண்ணுன்னு சொன்னா இன்னும் ரொம்ப சந்தோசமா இருக்கும்.//
correct boss
@செந்திலின் பாதை..
ReplyDeleteநீங்களும் என்னை மாதிரிதானா.. :-)..
உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..