.

Thursday, November 11, 2010

THE BUTTERFLY EFFECT - திரை விமர்சனம்

The Butterfly Effect (2004)

ஈவன் கதையோட ஹீரோ.. சின்ன வயசில இருந்தே ஒரு நோயால அவதிப்பட்டுட்டு இருக்கார்.. என்ன பிரச்சினைன்னா திடீர்னு அவருக்கு எல்லாமே பிளான்காயிடும்.. என்ன நடந்ததுன்னே தெரியாது.. அவர் நிக்கற இடத்துக்கு எப்படி வந்தார்னே தெரியாது.. ஆனால் அங்கே ஏதாவது செய்திருப்பார்.. எல்லாரும் அவரைப் பார்த்து திட்டிட்டு இருப்பாங்க..

ஈவனோட ஸ்கூல் டீச்சர் அவரோட அம்மாகிட்ட கொஞ்சம் பேசனும் கூப்பிட்டு.. ஈவன் வரைஞ்ச ஒரு படத்தைக் காமிப்பாங்க.. பெரியவனானவுடனே நீங்க என்னவாக ஆசைப்படறீங்கன்னு கேட்டு எல்லார்கிட்டயும் படம் வரைய சொல்லியிருந்தேன்.. உங்க மகன் வரைஞ்ச படத்தைப் பாருங்கன்னு குடுப்பாங்க.. அதுல ரெண்டு மூனு பேரை ஒருத்தன் குத்திட்டு கத்தியில இரத்தம் ஒழுக நிக்கறமாதிரி இருக்கும் அந்தப்படம்.. அந்தப்படத்தை வரைஞ்சது ஈவனுக்கே தெரியலைன்னு அவரோட ஸ்கூல் டீச்சர் சொல்லுவாங்க.. அப்போதான் அவருக்கு அந்தப் பிரச்சினை இருக்கறதே அவங்கமாவுக்குத் தெரிய வரும்..

ஈவனோட அம்மா வெளியே எங்கேயோ போறதுக்காக.. அவரோட பிரண்ட் வீட்ல ஈவனை விட்டுட்டுப் போறாங்க.. அந்த ஆள் சின்னப் பையனா இருக்கற ஈவனையும்.. அவரோட சின்னப் பொண்ணையும் வைச்சி போர்ன் மூவி எடுக்க முயற்சி பண்ணுவார்.. ரெண்டும் சின்ன பசங்களா இருக்கறதால திருதிருன்னு முழிக்குங்க.. திடீர்னு ஈவனுக்கு நினைவு வர்றப்போ அந்த சின்னப் பொண்ணு ஈவனை சினேகமா பார்த்துட்டு இருக்கும்.. அந்தாள் ரொம்ப டென்சனா ஈவனைப் பார்த்து முறைச்சிட்டு இருப்பான்.. என்ன நடந்ததுன்னு தெரியாது..

ஈவனைக் கூட்டிட்டு டாக்டர்கிட்ட போறாங்க அவங்கம்மா.. டாக்டருக்கு ஒன்னுமே புரியல.. எல்லாம் நார்மலாத்தான் இருக்கு.. ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியலைன்னு சொல்றார்.. ஆனால் இப்போ இருந்து ஈவனை ஒவ்வொரு செகண்டும் டைரி எழுதச் சொல்றார்.. அப்போ இருந்து ஈவன் டைரி எழுதத் தொடங்கறார்..

ஈவனோட அப்பா ஜெயில்ல இருப்பார்.. அவரைப் பார்க்கனும்னு அவங்கம்மாகிட்ட அடம்பிடிச்சு அங்கே போவார் ஈவன்.. அப்பாவும் மகனும் பேசிட்டு இருக்கப்போ திடீர்னு ஈவனைக் கொல்லப் பார்ப்பார் அவர் அப்பா.. அங்கே என்ன நடந்தது? எதுக்கு அப்பா தன்னை கொல்ல முயற்சிக்கறார்னு ஈவனுக்கு சுத்தமா தெரியாது.. அவரைக் காப்பாத்தற முயற்சியில போலீஸ் ஈவனோட அப்பாவைக் கொன்னுடுவாங்க..

ஈவன் இப்போ கொஞ்சம் வளர்ந்திடறார்.. அவரோட கேர்ல் பிரண்டும்.. அந்தப் பொண்ணோட அண்ணனும் படம் பார்க்கப் போயிருப்பாங்க.. அப்போ படம் பிடிக்காம அண்ணனை விட்டுட்டு இவங்க ரெண்டு பேர் மட்டும் வெளியே வந்து ரொமாண்ஸ் பண்ணிட்டு இருக்குங்க.. அதை பார்த்த அந்தப் பொண்ணோட அண்ணனுக்கு ஈவனைப் பிடிக்காமப் போயிடுது.. அந்தப் பையன் ஒரு ரெளடி மாதிரி நடந்துக்கறான்..

மேல சொன்ன மூனு பேரும்.. இன்னொரு குண்டுப் பையனும் சேர்ந்து.. ஒரு வீட்ல இருக்கற தபால்பெட்டியில பட்டாசு கொளுத்திப் போடறதுக்கு போறாங்க.. திடீர்னு ஈவனுக்கு நினைவு திரும்பறப்போ எல்லாரும் ஓடிட்டு இருக்காங்க.. அந்தக் குண்டுப் பையன் நடுங்கிப் போயிருக்கான்.. என்ன நடந்ததுன்னு தெரியாது..

என்ன நடந்ததுன்னே தெரியாம பிரச்சினைகள் ஏற்பட்டுட்டே இருக்கறதால.. ஈவனோட அம்மா அவங்க வீட்டைக் காலி பண்ணீட்டு போயிடறாங்க.. ஈவனும்.. அவனோட கேர்ல் பிரண்டும் பிரிஞ்சிடறாங்க.. அப்போ ஈவன் உனக்காகத் திரும்பி வருவேன்னு ஒரு நோட்டுல எழுதி அந்தப் பொண்ணுகிட்ட காமிக்கறார்..

ஈவன் இப்போ காலேஜ்ல படிக்கறார்.. இப்போ அந்தமாதிரி ஏதும் பிளான்க் ஆகறதில்லை.. ஒருநாள் அவர் சின்ன வயசுல எழுதின டைரியைப் படிக்கறப்போ.. சின்ன வயசுல.. அவருக்கு நினைவு மறக்கறப்போ என்ன நடந்ததுன்னு உணர முடியுது..
ஈவனுக்கு இப்போ தன்னோட பழைய கேர்ல் பிரண்ட் ஞாபகம் வந்து.. அவளைப் பார்க்கப் போறார்.. அந்தப் பொண்ணு ஒரு ஹோட்டல்ல சர்வரா வேலைப் பார்த்துட்டு இருக்கு.. அந்தப் பொண்ணுட்டு பேசறப்போ நீ என்னை இந்த நரகத்துல தவிக்க விட்டுட்டு நீ பாட்டுக்குப் போயிட்ட.. இப்போ எதுக்கு என்னத் தேடி வந்தன்னு அழுதுட்டே ஓடிடுது.. அடுத்த நாள் அந்தப் பொண்ணு சூசைட் பண்ணிக்கிட்டதா தகவல் வருது.. அந்தப் பொண்ணோட இறுதி சடங்குல போய் அவர் சின்ன வயசுல எழுதிக் காமிச்சாரே "உனக்காகத் திரும்பி வருவேன்னு" அந்தப் பேப்பரை குழிக்குள்ள போட்டுட்டு.. உன்னை சாக விடமாட்டேன்னு சொல்றார்..

அவர் சொன்னமாதிரியே அவரோட கேர்ல் பிரண்ட் தற்கொலைப் பண்ணிக்காமக் காப்பாத்துவார் ஈவன்.. ஏற்கனவே இறந்து போனவளை எப்படிக் காப்பாத்தினான்னு சொன்னா அடுத்த பாதிப்படத்தைப் பார்க்கற ஆர்வம் போயிடும்.. அதனால நீங்க பார்த்து தெரிஞ்சுக்கங்க..

படம் ஆரம்பிக்கறதே ரொம்ப விறுவிறுப்பா இருக்கும்..

ஹீரோவோட நிலைக்கு காரணம் என்னங்கறது ஒரு திருப்புமுனைனா.. படத்துல அதை விட ஏகப்பட்ட டிவிஸ்டுகள் இருக்கு.. எல்லா டிவிஸ்டுகளையும் படம் பார்க்கறப்போ நீங்க தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா நல்ல சுவாரஸ்யமா இருக்கும்..

ஈவனுக்கு தன்னை மறந்து நினைவு வர்றப்போ.. ஈவனை விட நமக்குத்தான் பெரிய குழப்பா இருக்கும்.. என்னடா நடந்திருக்கும்னு ரொம்ப ஆர்வம் அதிகரிச்சிட்டே போகும்..

ஈவனோட நிலைக்கு என்ன காரணம்னு தெரியறப்போ சான்சே இல்ல.. செம திரில்லிங்.. அதுக்கப்புறம் வர்ற ஒவ்வொரு காட்சிகளும் அடுத்து என்ன நடக்குமோன்னுதான் நகரும்..

கொஞ்சம் கான்சன்ட்ரேசன் மிஸ் பண்ணிப் பார்த்தாலும் படம் புரியாது.. செமயான திரில்லர் மூவி..

இந்தப் படத்துக்கு தொடர்ச்சியா வெளியான இரண்டு படங்ககளோட கதைக் களங்கள் வேற வேறயா இருந்தாலும்.. படத்தோட மெயின் தீம் நமக்குத் தெரியும்ங்கறதால இந்தப் படத்துல உணர்ந்த திரில்லிங்கை ஃபீல் பண்ண முடியாது..


27 comments:

  1. விம்ர்சனம்னு சொல்லி பாதி கதைய சொல்லிட்டிங்க..அப்படியே மீதியயும் சொல்லீட்டீங்கனா நல்லா இருக்கும்..

    ReplyDelete
  2. எப்பவும் ஆங்கிலப்படம் தானா?

    ReplyDelete
  3. அட கதை நல்லாயிருக்கே ஆனா மீதியையும் தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கு!(மீதி கையும் சொல்லுங்களேன்:-))
    பார்க்க முயற்சிக்கிறேன்!

    ReplyDelete
  4. @ஹரிஸ்..
    ///வந்துட்டேன்.. ///

    வாங்க.. வாங்க..

    ReplyDelete
  5. @அன்பரசன்..
    ///எப்பவும் ஆங்கிலப்படம் தானா? ///

    அப்படி இல்ல.. ஆனால் பெரும்பாலும் ஆங்கிலப் படங்கள்தான்.. :-))

    ReplyDelete
  6. @எஸ்.கே..
    ///அட கதை நல்லாயிருக்கே ஆனா மீதியையும் தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கு!(மீதி கையும் சொல்லுங்களேன்:-))///

    கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. நண்பர் பிரியமுடன் ரமேஷும் இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதிட்டு இருக்கார்.. அதுல முழுக்கதையையும் நீங்க படிக்கலாம்..

    வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  7. ஆகா! இப்படி பாதில விட்டுட்டா எப்படி... இன்னைக்கு நைட் டவுன்லோட் பண்ணிடவேண்டியதுதான்

    ReplyDelete
  8. @அருண் பிரசாத்..
    முழுசா சொல்லிட்டா உங்களுக்கு பார்க்கறப்போ சுவாரஷ்யம் இருக்காதுங்களே.. அதான்..

    கண்டிப்பா பாருங்க நல்ல திரில்லர்..

    ReplyDelete
  9. உங்களோட விமர்சனம் படம் பார்க்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
  10. @நாகராஜசோழன் MA..
    நன்றிங்க..

    ReplyDelete
  11. //அவர் சொன்னமாதிரியே அவரோட கேர்ல் பிரண்ட் தற்கொலைப் பண்ணிக்காமக் காப்பாத்துவார் ஈவன்.//

    ஐயோ ., செத்தவங்கள கூட காப்பாத்துவாங்களா ..? நல்லா இருக்கும் போலேயே ..!! சரி நானும் பார்கரக்கு முயற்சிக்கிறேன் . அதவிட உங்களோட இந்த விமர்சனம் அருமையா இருக்கு ..!!

    ReplyDelete
  12. @ப.செல்வக்குமார்..
    ///ஐயோ ., செத்தவங்கள கூட காப்பாத்துவாங்களா ..?////

    ஆமாம் செல்வா.. கதையோட டிவிஸ்டே அதுதான்.. ரொம்ப நல்லாயிருக்கும் பாருங்க..

    உங்க பாராட்டுக்கு நன்றி..

    ReplyDelete
  13. ஈவனுக்கு தன்னை மறந்து நினைவு வர்றப்போ.. ஈவனை விட நமக்குத்தான் பெரிய குழப்பா இருக்கும்.. என்னடா நடந்திருக்கும்னு ரொம்ப ஆர்வம் அதிகரிச்சிட்டே போகும்..///

    இந்த விமர்சனம் படிக்கும் போதே ஆர்வமா இருக்கு படம் பார்த்தா இன்னும் ஆர்வமா இருக்கும் போல ....

    ReplyDelete
  14. அருமையான விமர்சனம்.. பார்க்கணும்க்கிற ஆர்வத்தை தூண்டுது

    ReplyDelete
  15. @செளந்தர்..

    ///இந்த விமர்சனம் படிக்கும் போதே ஆர்வமா இருக்கு படம் பார்த்தா இன்னும் ஆர்வமா இருக்கும் போல .... ///

    நீங்க எதிர்பார்க்கற மாதிரி ரொம்ப விறுவிறுப்பாகவே இருக்கும் செளந்தர்..

    பாராட்டுக்கு நன்றிங்க..

    ReplyDelete
  16. @கவிதைக் காதலன்..
    நன்றிங்க..

    ReplyDelete
  17. சான்ஸே இல்லை... மிகவும் விறுவிறுப்பாக இருந்தது... இந்தப் படம் இந்தியாவில் வெளியாகிவிட்டதா / வெளியாகுமா.... வெளியாகாது என்றால் டி.வி.டி கிடைக்குமா... எதுவுமே நடக்காதேன்றால் தயவுசெய்து பதிவிறக்க இணைப்புகளை கொடுக்கவும்...

    Butterfly Effect என்றால் தசாவதாரம் படத்தில் சொல்லப்படும் Chaos Theory தானே...

    ReplyDelete
  18. @philosophy prabhakaran..

    இந்தப் படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது.. அதனால இனிமேல் இந்தியாவுல ரிலீஸ் ஆகும்னு எல்லாம் எதிர்பார்க்க முடியாதுங்க.. இந்தப் படத்தை நிறைய டிவிடி கடைகள்லயும் பார்த்துருக்கேன்..

    kickasstorrents.com - இந்த முகவரியில இருந்துதான் படத்தை டவுன்லோட் டவுன்லோட் பண்ணினேன்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க..

    ///Butterfly Effect என்றால் தசாவதாரம் படத்தில் சொல்லப்படும் Chaos Theory தானே..///

    சூப்பர் பாயிண்டைப் பிடிச்சிட்டீங்க.. அதேதான்..

    ReplyDelete
  19. பாத்திட வேண்டியது தான்...

    ReplyDelete
  20. @வெறும்பய..
    வருகைக்கு நன்றிங்க ஜெயந்த்..

    ReplyDelete
  21. @ஜீ..
    நன்றிங்க..

    ReplyDelete
  22. வரிக்கு வரி ரசிச்சேன்...நல்ல விமர்சனம்

    ReplyDelete
  23. @ஆர்.கே.சதீஷ்குமார்..
    ரசிச்சு படிச்சதுக்கு நன்றிங்க சதீஷ்குமார்..

    ReplyDelete
  24. தலைவரே கொஞ்சம் மஜீத் மஜிதி யோட ஈரானிய படங்களும் பாருங்க... CHILDREN OF HEAVEN, THE SONG OF SPARROW, THW WILLOW TREE, BARAN இப்படி அடுக்கி கொண்டே போகலாம்...

    ReplyDelete
  25. ரசிக்கவைக்கும் எழுத்து வன்மை..வாழ்த்துகள்

    ReplyDelete