.

Tuesday, November 23, 2010

Eternal Sunshine of the Spotless Mind - காதலனின் துடிப்பு..!

Eternal Sunshine of the Spotless Mind (2004)

மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற திரைப்படங்கள்ல நாம பார்த்த காதல்.. தியேட்டரை விட்டு வெளியே வந்ததுக்கு அப்புறமும் நம்ம மனசுல கொஞ்சம் நேரமாவது இருந்துட்டே இருந்தது இல்லையா.. அது போலதான் இந்தப் படமும்.. ஒரு அருமையான காதல் கதை.. பார்வையாளர்களுக்கு தவிப்பையும் தாக்கத்தையும் உண்டாக்கூடிய திரைப்படம்..

படத்தோட நாயகன் ஜிம் கேரி.. இதுக்கு முன்னாடி மாஸ்க்குன்னு ஒரு திரைப்படத்துல நடிச்சு நகைச்சுவையில பிச்சு உதறினார்.. சில வருடங்களுக்கு முன்பு அவரோட ட்ரூமென் ஷோன்னு ஒரு படம் பார்த்து.. ஜிம் கேரி இவ்வளவு திறமையான நடிகரான்னு அசந்துட்டேன்.. அவர் நடிச்சு நான் பார்த்த மூன்றாவது திரைப்படம் இது.. கண்டிப்பாக அவரோட சிறந்த படங்கள்ல இதுதான் முதல்ல இருக்கும்..

படத்தோட நாயகி கேட் வின்ஸ்லெட்.. டைட்டானிக் படத்துல இளைஞர்கள் மனசுல புகுந்து நைட் தூக்கத்தைக் கெடுத்தவங்க.. அவர் நடிச்ச நிறைய படங்களைப் பார்த்திருக்கேன்.. அவரோட படங்கள் அனைத்துலயும்.. டைட்டானிக் மாதிரியே நம்ம எதிர்பார்ப்பை மோசம் பண்ணாம சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பாங்க (நடிப்பைத்தாங்க சொல்றேன்.. நீங்க வேறமாதிரி நினைச்சுக்கிட்டா நான் பொறுப்பில்லங்க.. :-)).. இந்தப் படத்துல நாயகன், நாயகியை சுத்தியேதான் கதை நகருதுங்கறதால இவங்க பெட்டர் சாய்ஸ்தான்..

ஜிம் கேரியும், கேட் வின்ஸ்லெட்டும் காதலர்கள்.. ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் ரொம்ப லவ் பண்றாங்க.. நாளாக ஆக ரெண்டு பேருக்கும் பிடிக்காமப் போகுது.. ஒரு நாள் சண்டை ரொம்ப முத்தி ரெண்டு பேரும் பிரிஞ்சிடறாங்க..

ஒருவரோட நினைவுகள்ல இருந்து ஒரு குறிப்பிட்ட சம்பவங்களை மட்டும் அழிக்கறதுக்கு ஒரு கம்பெனி செயல்பட்டிட்டு இருக்கு.. விரக்தியில அங்கே போய் ஜிம் கேரியோட நினைவுகளை எல்லாம் அழிச்சிடறார் கேட் வின்ஸ்லெட்.. இனி அவருக்கு ஜிம் கேரி யாருன்னே தெரியாது.. அவரோட லைஃப்ல ரெண்டு பேரும் இருந்த ஞாபங்கள் எல்லாம் அழிக்கப்பட்டிருச்சு.. இந்த விசயத்தை தெரிஞ்சுக்கறார் ஜிம் கேரி..

இந்த விசயத்தை கேள்விப்பட்ட ஜிம் கேரிக்கு பயங்கரமான அதிர்ச்சியாயிடுது.. அவரும் தன்னோட காதலி மேல இருக்கற கடுப்புல அந்தக் கம்பெனியை நாடறார்.. அவங்களும் அவரோட நினைவுகளை அழிப்பதற்கு டைம் பிக்ஸ் பண்ணிடறாங்க.. ஒருவரோட நினைவுகளை அழிக்கறதுக்கு அவங்க தூங்கிட்டு இருக்கறப்போ அவங்களோட சப் கான்சியஸ் மைண்ட்ல இருந்து அழிப்பாங்க.. இதுதான் பிராசஸ்..

அப்படி அழிக்கறப்போ நிகழ்காலத்துல இருந்து ஆரம்பிச்சு.. அவங்களோட ஆரம்பகால நினைவுகள் வரை அழிப்பாங்க.. ஜிம் கேரி தூங்கற சமயத்துல அந்த கம்பெனியை சேர்ந்த டீம் ஆட்கள் வந்து அவரோட நினைவுகள்ல இருந்து கேட் வின்ஸ்லெட்டோட நினைவுகளை அழிக்க ஆரம்பிக்கறாங்க.. முதல்ல சொன்னமாதிரி ரீசண்டா இருக்கற நினைவுகளை எல்லாம் அழிச்சிடறாங்க..

இப்போ ஜிம் கேரியும், கேட் வின்ஸ்லெட்டும் சந்தோசமா இருந்த காலங்களை அழிக்க ஆரம்பிக்கறாங்க.. ஜிம் கேரி தூக்கத்துல இருந்தாலும் தன்னோட நினைவுகள் அழிக்கப்படறதை உணர ஆரம்பிக்கறார்.. இப்போ அவரோட நினைவுகள்ல இருக்கறது அவருக்கு பிடிச்சமான காதலியோட நினைவுகள்.. அதை அழிக்கவிடாம தடுத்திடனும்னு நினைக்கறார்.. ஆனால் அவர் தூக்கத்துல இருக்கறதாலவும்.. அந்த பிராசஸ் நடந்துக்கிட்டு இருக்கறதாலவும்.. அவரால எழுந்திருக்க முடியல..

படத்தோட பெரும்பகுதி அவங்க ரெண்டு பேரோட சந்தோசமான பகுதிகளை ஜிம்கேரியோட மனசுல இருந்து நாமலும் தெரிஞ்சுக்கிறோம்.. நாம பார்க்கப் பார்க்க அவரோட நினைவுகள் அழிக்கப்பட்டுட்டே வரும்..தன்னோட காதலியோட ஏதாவது ஒரு நினைவை பாதுகாத்து வைச்சுக்கனும்னு.. மூளையில ஏதாவது ஒரு இடத்துல நாயகியோட ஞாபகத்தை ஒழிச்சு வைச்சுக்கனும்னு ரொம்ப கஷ்டப்படுவார் ஜிம் கேரி.. அவரோட தவிப்பு.. பார்வையாளர்களுக்கும் தவிப்பை ஏற்படுத்திடும்.. கடைசியில அவர் தோத்துத்தான் போவார்.. அவரோட ஞாபகங்கள்ல இருந்து கேட் வின்ஸ்லெட்டோட ஞாபகங்களை எல்லாத்தையும் வெற்றிகரமா அழிச்சுடுவாங்க..

ரெண்டு பேரோட வாழ்க்கையையும் ரிவர்ஸ்ல பார்த்தமாதிரி இருக்கும் பார்வையாளர்களுக்கு.. கொஞ்சம் கவனிக்காம விட்டால்.. ஒன்னுமே புரியாது படம்..

முதல்காட்சிகள்ல ரெண்டு பேரும் ஏதேச்சையா சந்திச்சு.. ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகம் செய்துக்குவாங்க.. ரெண்டு பேரும் புதுசா சந்திச்சு லவ் பண்ணப் போறாங்களாக்கும்னு நினைச்சிட்டு இருப்போம்.. ஆனால் ஜிம்கேரி தன்னோட நினைவுகளை அழிக்கறதுக்கு முடிவு பண்ற இடத்துல இருந்து சீனை ஆரம்பிச்சு.. திரும்பவும் முதல் காட்சியில கொண்டு வந்து நிறுத்துவாங்க..

நமக்கு அன்பானவங்க மேல சூழ்நிலைகளால கோபமும் வெறுப்பும் ஏற்பட்டாலும்.. அவங்க மேல நமக்கு எந்தளவுக்கு பாசமும் இருக்குன்னு இந்தப் படம் சொல்லும்.. அந்தக் கருப்புப் பகுதிகளை நீக்கிட்டா வாழ்க்கை ரொம்ப நல்லாயிருக்கும்னு சொல்லுது கதை..

இருவரது ஞாபகங்களும் சுத்தமாக அழிக்கப்பட்ட இந்த நிலையில.. ஒருத்தரை ஒருத்தர் மீண்டும் சந்திச்சுக்கறாங்க.. திரும்பவும் ரெண்டு பேரும் ஒன்னு சேர்வாங்களான்னு திரைக்கதையில இருந்து நாம தெரிஞ்சுக்கலாம்.. :-)

மின்னலே படத்துல "வெண்மதி வெண்மதியே நில்லு" பாட்டுலயும், விண்ணைத் தாண்டி வருவாயால "மன்னிப்பாயா" பாட்டுலயும் நமக்கு ஒரு ஃபீல் வருமே.. அதே ஃபீலை இந்தப் படத்தோட ஒவ்வொரு காட்சிகள்லயும் உணரலாம்..

காதலோட அழகை.. அதை இழந்திடக்கூடாதுன்னு ஜிம் கேரியோட தவிப்பை அழகாகக் காட்டியிருக்காங்க..

கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.. இதோ திரும்பவும் அந்தப் படத்தை பார்க்கப் போறேன்.. :-)


46 comments:

  1. வழக்கம் போல் அருமை..தொடருங்கள்...

    ReplyDelete
  2. //கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.. //

    இதுவரை பார்க்கலை.
    பார்த்துடறேன்.

    ReplyDelete
  3. நானும் இதுவரை பார்க்கவில்லை. பார்த்திடறேன். அப்படியே torrent link கொடுத்தால் இன்னும் நல்லாருக்கும்.

    ReplyDelete
  4. பார்க்கத்தான் வேணும். நல்ல தொகுப்பு

    ReplyDelete
  5. mask படத்தில் நானும் இவரை ரசித்திருக்கிறேன்... இந்த படமும் நல்லா இருக்கும் போல... நீங்கள் எழுதிய விதம் சிறப்பாக இருக்கிறது...

    ReplyDelete
  6. //கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.. //

    இதுவரை பார்க்கலை.
    பார்த்துடறேன்.

    ReplyDelete
  7. தல அப்டியே me, myself and Irene படம் பாருங்க....அவர்
    நடிப்ப பாத்து அசந்துட்டேன்

    ReplyDelete
  8. ஜிம் கெரி சூப்பர் நடிகர்!
    இது நல்ல படமாக இருக்கு! நல்லாவும் விமர்சனம் செஞ்சிருக்கீங்க்!
    பார்க்க முயற்சிக்கிறேன்!

    ReplyDelete
  9. விமர்சனத்தைகூட இவ்வளவு அழகா எழுத முடியுமா!... பிரமாதம் பாபு, அவசியம் படம் பார்க்கிறேன் ..

    ReplyDelete
  10. // இதுக்கு முன்னாடி மாஸ்க்குன்னு ஒரு திரைப்படத்துல நடிச்சு நகைச்சுவையில பிச்சு உதறினார்.//

    நகைச்சுவை படம் பத்தி எழுதுங்களேன் ..!!

    ReplyDelete
  11. // ஒருத்தரை ஒருத்தர் மீண்டும் சந்திச்சுக்கறாங்க.. திரும்பவும் ரெண்டு பேரும் ஒன்னு சேர்வாங்களான்னு திரைக்கதையில இருந்து நாம தெரிஞ்சுக்கலாம்.. :-)///

    அடடா ., சரி இரண்டாவது தடவ பார்த்துட்டு வந்து சொல்லுங்க.. !

    ReplyDelete
  12. @ஹரிஸ்..
    நன்றிங்க..

    ReplyDelete
  13. @இத்ரூஸ்..
    வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  14. @அன்பரசன்..
    வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  15. @நாகராஜசோழன் MA..
    kickasstorrents.com- இந்த முகவரியில டொரண்ட் கிடைக்கும் பாருங்க..
    வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  16. @சித்ரா..
    வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  17. @nis..
    நன்றிங்க..

    ReplyDelete
  18. @philosophy prabhakaran..
    நன்றிங்க..

    ReplyDelete
  19. @LK..
    வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  20. @வெறும்பய..
    வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  21. @Arun Prasath..
    கண்டிப்பாகப் பார்க்கறேங்க.. நன்றி..

    ReplyDelete
  22. @எஸ்.கே..
    நன்றிங்க..

    ReplyDelete
  23. @கே.ஆர்.பி.செந்தில் said...

    மர்சனத்தைகூட இவ்வளவு அழகா எழுத முடியுமா!... பிரமாதம் பாபு, அவசியம் படம் பார்க்கிறேன் .. ////

    நீங்க பாராட்டியதற்கு ரொம்ப சந்தோசங்க.. நன்றி..

    ReplyDelete
  24. @ப.செல்வக்குமார்..
    வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  25. நீங்க சொன்ன மாஸ்க் படமும் எனக்கு பிடிக்கும் இந்த படத்தையும் பார்த்து விடுறேன்

    ReplyDelete
  26. @செளந்தர்..
    வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  27. அருமையான விமர்சனம் பாபு..

    ReplyDelete
  28. @Riyas..
    நன்றிங்க..

    ReplyDelete
  29. ஆமா, பதிவு எழுதறதுக்காகவே படம் பாக்கறீங்களா இல்ல, பாக்கறதால் எழுதறீங்களா? எனக்கென்னவோ முதல் காரணமே சரியோன்னு தோனுது :))

    நடத்துங்க நடத்துங்க :)

    ReplyDelete
  30. @அன்னு..
    ஆமா, பதிவு எழுதறதுக்காகவே படம் பாக்கறீங்களா இல்ல, பாக்கறதால எழுதறீங்களா? எனக்கென்னவோ முதல் காரணமே சரியோன்னு தோனுது :))

    நடத்துங்க நடத்துங்க :) /////

    ஹா ஹா ஹா.. இல்லங்க.. நான் பார்த்த படங்களை உடனே பதிவா எழுதிட மாட்டேன்.. எந்தப் படம் என்னை பாதிச்சிருக்கோ அந்தப் படங்களை மட்டும்தான் கொஞ்சம் நாள் கழிச்சு எழுதுவேன்.. இந்தப் படம் பார்த்து ஒரு 3 மாசம் இருக்கும்.. :-)

    வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  31. @i love you athi..
    வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  32. ஹா.... நல்ல விமர்சனம்... அதைவிட மிகநல்ல அறிமுகம்... இன்னைக்கே பதிவிறக்கம் செய்யப்போறேன்...

    ReplyDelete
  33. @ஜெயசீலன்..
    நன்றிங்க..

    ReplyDelete
  34. நல்ல படங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு நன்றி.

    ReplyDelete
  35. @ஜெயந்தி..
    நன்றிங்க..

    ReplyDelete
  36. உங்கள் விமர்சனம் படம் பார்க்கத்தூண்டுது.ஆனால் நேரம் இதற்கெல்லாம் கிடைப்பது இல்லை.வித்தியாசமான கதை அமைப்பை பகிர்வதற்கு நன்றி.

    ReplyDelete
  37. @ஆசியா உமர்..
    நீங்க என் விமர்சனத்தை படிச்சதே ரொம்ப சந்தோசங்க.. வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  38. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_30.html

    நன்றி

    ReplyDelete
  39. @அருண் பிரசாத்..
    என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க அருண்..

    ReplyDelete