ஹேங்ஓவர் - மப்பு கலைஞ்சதுக்கு அப்புறம்..


ஹேங்ஓவர் 2009 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் திரைப்படம்..

பில், டக், ஸ்டூ, மாப்பிள்ளை டக்கோட மச்சினன் ஆலன்.. இந்த 4 பேரும்தான் படத்தோட ஹீரோ.. நாலு பேருன்னு சொல்றதை விட இதுல ஆலன்தான் ஹீரோன்னு சொல்லலாம்.. படத்துல நகைச்சுவையில கலக்கியெடுத்தவர் இவர் தான்.. பேச்சுலர் பார்டி கொண்டாடப் போன நாலு பேரும்.. தன்னியடிச்சுட்டு.. ஹேங்ஓவராகி மாப்பிள்ளையைத் தொலைச்சுட்டு.. அவரைத் தேடறதுதான் முழுக்கதையும்.. பஞ்சதந்திரம் மாதிரி சிரிச்சு சிரிச்சு.. வயிறு வலிக்க ஆரம்பிச்சுடும்.. படம் ஆரம்பத்துல இருந்து முடிவு வரைக்குமே ஒவ்வொரு சீனுக்கும் சிரிச்சுட்டேதான் இருப்போம்..

ஹீரோஸ் 4 பேரும் பேச்சுலர் பார்டி கொண்டாடறதுக்காக வேகாஸ் போறாங்க.. டக்கோட மாமனார் அவரோட காஸ்ட்லியான காரை அவங்களுக்கு கொடுத்து வழியனுப்பி வைக்கறார்.. டக்கோட மச்சினன் ஆலன் கொஞ்சம் மறை கலண்டவர் மாதிரி இருக்கார்.. ரொம்ப இன்னோசன்ட் கேரக்டர்.. அவரையும் அவங்க ட்ரிப்புல சேர்த்துட்டு கிளம்பறாங்க.. வேகாஸ்ல நான்கு பேரும் ஒரு பெரிய ஹோட்டல்ல ரூம் எடுத்து தங்கி தங்களோட தண்ணி பார்டியை ஆரம்பிக்கறாங்க.. அவ்வளவுதான்..

 
அடுத்தநாள் காலையில எல்லோரும் மெதுவா கண்ணு முழிச்சு பார்க்கறப்போ.. அந்த ஹோட்டல் ரூமே நாஸ்தியாகிக் கிடக்குது.. பில், ஸ்டூ, ஆலன் மட்டும்தான் ஹோட்டல் அறையில இருக்காங்க.. மாப்பிள்ளை டக்கைக் காணோம்.. மூன்று பேருக்கும் முன்னாடி நைட் என்ன நடந்ததுன்னு சுத்தமா ஞாபகம் இல்லை.. கண்ணாடில தன்னோட முகத்தைப் பார்க்கற ஸ்டூவுக்கு பயங்கரமான அதிர்ச்சி..

அவரோட பல் ஒன்னைக் காணோம்.. பில்லோட முகம், கையில ஆஸ்பத்திரிக்குப் போய் கட்டுப்போட்ட பிளாஸ்திரி இருக்கு.. ஆலனோட பாக்கெட்டுல ஸ்டூவோட பல் இருக்கு.. புலம்பிக்கிட்டே பாத்ரூமுக்கு போற ஸ்டூ அலறி அடிச்சுக்கிட்டு ஓடி வர்றார்.. என்னன்னு போய் பார்த்தா பாத்ரூம்ல ஒரு புலி இருக்கு.. என்னடா இதுன்னு 3 பேரும் குழம்பி நின்னுட்டு இருந்தா.. அங்கே இருக்கற கப்போர்டு ஒன்னுல இருந்து குழந்தை அழுகற சத்தம் கேக்குது.. திறந்து பார்த்தால் உள்ளே ஒரு குழந்தை.. எல்லாரும் பயங்கர அதிர்ச்சியாயிடறாங்க.. ஒருத்தருக்கும் முந்தைய இரவு என்ன நடந்ததுன்னு துளிகூட ஞாபகம் இல்லை..
முதல்ல மாப்பிள்ளை டக்கைத் தேடுவோம்னு.. அந்தக் குழந்தையைத் தூக்கிட்டு ஹோட்டலை விட்டு வெளியே வர்றாங்க.. அங்கே ஒரு கூட்டம் மேலே அன்னாந்து பார்த்துக்கிட்டு நின்னுட்டு இருக்கு.. என்னன்னு பார்த்தா.. அவங்களோட அறையில இருந்த ஒரு பெட்.. வெளியில இருந்த ஒரு பெரிய சிலை மேல தொங்கிட்டு இருக்கு.. ஹோட்டல் சர்வண்ட்.. உங்களோட காரை எடுத்து வர்றேன் சார்.. கார் சாவி குடுங்கன்னு கேட்டு வாங்கிட்டுப் போய்.. காரை எடுத்துட்டு வர்றார்.. அவங்களுக்கு மேலும் அதிர்ச்சி.. அது ஒரு போலீஸ் கார்.. அதோட கார் சாவியைத்தான் இவங்க வைச்சிருந்தாங்க.. அப்போ அவங்களோட கார் என்னாச்சு..

காரைக் காணோம்.. ஒருத்தரோட பல்லைக் காணோம்.. பாத்ரூம்ல புலி இருக்கு.. ஒரு குழந்தை இருக்கு.. அவங்க அறையிலிருந்து பெட்.. ஹோட்டல் வெளியே உயரத்துல இருக்கற ஒரு சிலை மேல தொங்கிட்டு இருக்கு.. இதெல்லாம் எப்படி நடந்தது.. அவங்களுக்கு ஒரு குளுவுமே இல்ல.. இதுக்கு மேல அடுத்த நாள் கல்யாணம் பண்ணிக்கப்போற மாப்பிள்ளையையே காணோம்.. கல்யாணத்துக்கு முன்னாடி அவரையும் கண்டுபிடிக்கனும்.. மண்டையைப் பிச்சிக்கிட்டு நின்னுட்டு இருப்பாங்க.. மூன்று பேரும்..

குழம்பிக்கிட்டே காரை ஓட்டிட்டு போயிட்டு இருக்கப்போ.. கார் டிக்கியில இருந்து சத்தம் கேக்கும்.. திறந்து பார்த்தால்.. ஒரு ஆள் உள்ளே இருந்து வந்து பில்லை செமத்தியா அடிச்சுட்டு ஓடிப் போயிடுவான்.. அவன் எப்படி காருக்குள்ள வந்தான்.. அட்டகாசமான நகைச்சுவைக் காட்சிகள் மூலமா அவங்க மூன்று பேருக்கும்.. நமக்கும் மர்மங்களை அவிழ்த்திருப்பாங்க..

இதுல ஆலனோட நடிப்புதான் டாப்.. ரொம்ப சீரியஸா இருக்கமாதிரியே நடிச்சு.. நம்மளை பயங்கரமாக சிரிக்க வைச்சிருக்கார்.. அந்தக் குழந்தையைப் பற்றிய மர்மமும்.. புலி எப்படி வந்ததுன்னு தெரிய வர்றப்பவும் சான்ஸே இல்ல.. நகைச்சுவையில பின்னியிருப்பாங்க எல்லாரும்.. நகைச்சுவையில இவங்களுக்கு உதவிய மைக் டைசனும் வந்து சீரியஸா நடிச்சுட்டுப் போயிருக்கார்.. இதுல மாப்பிள்ளையா வர்ற டக்தான் பாவம்.. கடைசியில எல்லாம் மர்மங்களும் அவிழ்ந்து கரெக்டாக கல்யாணத்தை அட்டென் பண்ணப் போயிடுவாங்க..

கடைசி சீன்ல அவங்ககிட்ட இருக்கற கேமராவுல.. அன்னைக்கு நைட் என்ன நடந்ததுன்னு போட்டோக்கள் பதிவாகியிருக்கும்.. அட்டகாசம்..

வயிறு குலங்க சிரிச்சுப் பார்க்க ஏற்ற படம்..


29 Responses So Far: