.

Monday, October 4, 2010

BACK TO THE FUTURE - திரைவிமர்சனம்

மனிதர்கள் ஒவ்வொருத்தருக்கும் நிகழ்காலத்தைப் பத்தி தெரிஞ்சுக்கனும்னு ஆசை கண்டிப்பா இருக்கும்.. அந்த எண்ணங்களின் வெளிப்பாடுகளால.. வருங்காலத்தை அறிஞ்சுக்கறதுக்கு.. ஜோசியம் அது இதுன்னு நிறைய விசயங்களை செய்றோம்..

திரைப்படங்களை எடுத்துக்கிட்டோம்னா ஒருபடி மேல போயி.. நாம இருக்கற காலத்தில் இருந்து வேறொரு காலத்துக்கு டைம் ட்ராவல் பண்றோம்னு.. டைம் மெஷின் பத்தி நிறைய படங்கள் எடுத்திருக்காங்க.. நானும் ரீசண்டா டைம் ட்ராவல் பண்ற ஒரு படத்தொடரைப் பார்த்தேன்.. "Back to the Future".. 1985 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாயிருக்கு.. அதுக்கப்பறம் இந்தப் படத்தோட தொடர்ச்சியா 1989, 1990 ஆம் ஆண்டுகள்ல இரண்டு படங்கள் வந்தது..

Back to the Future (1985)


படத்தோட கதை 1985 ஆம் வருசத்துல இருந்து ஆரம்பிக்குது.. இந்த கதையோட ஹீரோ மார்டி மெக்ஃபிளேயும், அவரோட சைண்டிஸ்ட் நண்பர் எம்மெட் "டாக்" பிரவுனும் சேர்ந்து.. எம்மெட் புதுசா கண்டுபிடிச்சிருக்கற டைம் மெஷினை சோதிக்கறாங்க.. அப்போ திடீர்னு வந்த தீவிரவாதிகள் எம்மெட்டை சுட்டுடறாங்க.. அந்த தீவிரவாதிகள்கிட்ட இருந்து தப்பிக்கறதுக்காக மார்டி அந்த டைம் மெஷினை யூஸ் பண்ணி தப்பிக்கறார்.. அது அப்படியே அவரை 1955 ஆம் ஆண்டுக்கு கூட்டிட்டு போயிடுது.. அந்த டைம் மெஷினை ரன் பண்றதுக்கு 1.21 கிகாவாட்ஸ் பவர் தேவைப்படறதால அவரால பியூச்சருக்கு திரும்பமுடியாம அங்கயே ஸ்ட்ரக் ஆயிடறாரு.. அங்கே அவருக்கு நிறைய அதிர்ச்சிகள் காத்துட்டிருக்கு..

1985 ஆம் ஆண்டுக்கு திரும்பப் போகணும்னா அதுக்கு ஒரே வழி சயண்டிஸ்ட் எம்மெட்டைக் கண்டுபிடிக்கறதுதான்.. எம்மெட்டைக் கண்டுபிடிச்சு தன்னோட நிலைமையை மார்டி விளக்கறார்..

அடுத்ததா 1955 ஆம் ஆண்டுல காலேஜ் படிச்சுட்டு இருக்கிற தன்னோட அப்பாவையும் அம்மாவையும் மார்டி சந்திக்கறார்.. மார்டியோட அம்மாவுக்கு தன்னோட வருங்கால கணவர் மேல காதல் வர்றதுக்குப் பதிலா.. தன்னோட வருங்கால மகனைப் பார்த்தே ஆசைப்படறார்.. இப்படி ஆசைப்படற தன்னோட அம்மாவுக்கு.. அப்பா மேல காதல் வர வைக்க மார்டி நிறைய கஷ்டப்படறார்..

தன்னோட அம்மாவையும்.. அப்பாவையும் மார்டி சேர்த்து வைச்சாரா.. 1985 ஆம் வருஷத்துக்குத் திரும்பிப் போனாரான்னு நல்ல நகைச்சுவையோட சொல்லியிருக்காங்க..

Back to the Future Part II (1989)


இந்தப் படமும் 1985 ஆம் ஆண்டுல இருந்தேதான் தொடங்குது..

மார்டியோட குடும்பம் 2015 ஆம் ஆண்டுல சில பிரச்சினைகளால அழியப்போறதை சயண்டிஸ்ட் எம்மெட் தன்னோட டைம் மெஷின் மூலமா தெரிஞ்சுக்கறார்.. அதனால வருங்காலத்தை திருத்தி அமைக்கறதுக்காக.. மார்டி, அவரோட லவ்வர், எம்மெட் 3 பேரும் 2015 ஆம் ஆண்டுக்குப் போயி நிலைமையை சரி பண்ணிடறாங்க.. ஆனா அங்க அவங்க இருந்த சமயங்கள்ல அவங்களுக்கே தெரியாம சில விசயங்கள் நடந்துடுது..

முதல் பாகத்துலயே "ஃபிப்" அப்படிங்கற கேரக்டர் பத்திக் காமிச்சுருப்பாங்க.. இவர்தான் கதையோட வில்லன்.. ஃபிப்பை வைச்சு நிறைய காமெடி இருக்கு முதல் பாகத்துல.. இப்போ 2015 ஆம் ஆண்டுல ஃபிப் கிழவனா இருப்பார்.. மார்டி டைம் மெஷின் மூலமா வந்திருக்கறத ஃபிப் தெரிஞ்சுக்கிட்டு.. மார்டி ஏமாந்த சமயத்துல ஃபிப் டைம் மெஷினை எடுத்துக்கிட்டு.. தன்னோட இறந்தகாலத்துக்குப் போயி.. சில விசயங்களை செய்துட்டு வந்திடறார்.. அதெல்லாம் தெரியாம வேலை முடிஞ்சவுடன் 1985 ஆம் ஆண்டுக்குப் போறாங்க மார்டி குரூப்.. அங்க போனா அவங்களுக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி..

சிட்டியே வன்முறைகளால நாசமாயிருக்கு.. மார்டி ஃபேமிலி அவரோட வீட்லயே இல்ல.. ஃபிப் அந்த சிட்டியிலயே பெரிய பணக்காரர் ஆயிருப்பார்.. மார்டியோட அம்மா ஃபிப்பைக் கல்யாணம் பண்ணியிருப்பார்.. டோட்டலா எல்லாமே மாறியிருக்கும்..

மார்டி குரூப் வருங்காலத்துக்குப் போனப்போ டைம் மெஷினை ஃபிப் திருடிட்டுப் போயி ஏதோ தில்லுமுல்லு பண்ணியிருக்கார்னு மார்டி குரூப் தெரிஞ்சுக்கறாங்க.. அதனால ஃபிப் என்ன பண்ணினார்னு கண்டுபிடிச்சாதான் நிலைமையை சீராக்க முடியும்னு திரும்பவும் 1955 ஆம் ஆண்டுக்குப் போறாங்க மார்டி குரூப்.. அதுக்கப்புறம் ஃபிப் பண்ணின தில்லுமுல்லைக் கண்டுபிடிச்சு நிலைமையை சீராக்கினாங்களானு மீதி கதை நகரும்..

மார்டியும் எம்மெட்டும் அவங்களோட வேலைகளை வெற்றிகரமா முடிச்சுட்டு.. 1985 ஆம் ஆண்டுக்குத் திரும்ப முயற்சிக்கறப்போ ஏற்பட்ட விபத்துல எம்மெட் 1885 ஆம் ஆண்டுக்குப் போயிடறார்.. இதோட படம் முடிஞ்சுடுது..

Back to the Future Part III (1990)


1885 ஆம் ஆண்டுக்குப் போன சயிண்டிஸ்ட் எம்மெட்டைக் காப்பாத்திக் கூட்டி வர்றதுக்காக.. 1955 ஆம் ஆண்டுல வாழ்ந்திட்டிருக்கற சயிண்டிஸ்ட் எம்மெட்கிட்ட போய் திரும்பவும் ஹெல்ப் கேக்கறார் மார்டி.. ரெண்டு பேரும் சேர்ந்து சில வரலாற்று குறிப்புகளைக் கண்டுபிடிக்கறாங்க.. அந்தக் குறிப்புகள்ல எம்மெட் 1885 ஆம் ஆண்டுலயே செத்துப் போயிட்டதா இருக்கு.. அதனால இறந்த காலத்தை மாத்தி அமைக்க 1885 ஆம் ஆண்டுக்கு மார்டி போறார்.. அங்க எம்மெட்டைக் கண்டுபிடிக்கறார்..

எம்மெட்டுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது.. அந்த பிரச்சினைகளை முறியடிச்சு அவரை மார்டி காப்பாத்தினாராங்கறதுதான் மீதிக் கதை..

இந்த மூன்று பாகங்களுமே நல்ல பொழுதுபோக்குத் திரைப்படங்கள்.. முதல் பாகமும், இரண்டாம் பாகமும் நம்மளை கண்டிப்பா சிரிக்க வைக்கும்.. மூன்றாம் பாகம் கொஞ்சம் போரடிச்சது..

நல்லவங்க கையிலோ, கெட்டவங்க கையிலோ.. ஒரு டைம் மெஷின் இருந்தா எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படும்னு நல்ல நகைச்சுவையோட சொல்லியிருக்காங்க..


18 comments:

  1. அப்படியே டவுன்லோட் லிங்க் கொடுத்து இருந்தா நல்லா இருந்து இருக்கும்

    ReplyDelete
  2. இந்த படத்தின் மூன்று பாகங்களையும் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். சொன்னதுபோல் முதல் இரண்டு பாகங்களில் இருந்த சுவாரசியம் மூன்றாவதில் இல்லை. இருந்தாலும் மூன்றும் நல்ல டைம்பாஸ் படங்கள்தான்! நல்ல விமர்சனம்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. ரொம்ப பழைய படம்.. சிறு வயதில் மொழி தெரியாவிட்டாலும் மிகவும் ரசித்து பார்த்த ஒரு படமும் கூட...

    ReplyDelete
  4. @எம் அப்துல் காதர், அருண்பிரசாத், @எஸ்.கே, ஈரோடு தங்கதுரை, வெறும்பய..

    வருகைக்குக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..

    ReplyDelete
  5. நல்ல விமர்சனம்..

    ReplyDelete
  6. நல்ல விமர்சனம் பாபு! டவுன்லோட் செய்து பார்த்தீர்களா? அப்படியானால் வெப்சைட் முகவரி குறிப்பிடவும்!

    ReplyDelete
  7. பரிந்துரைக்கு ஏற்ற படம்தான். சிறுவயதில் இப்படத்தை பார்த்துவிட்டு நாட்கணக்கில் பாதிப்பிலிருந்தேன். இப்படத்தின் 3 பாகங்களும் மிகவும் பிடித்த படங்கள்! நல்ல விமர்சனம்.

    -
    DREAMER

    ReplyDelete
  8. ///தன்னோட வருங்கால மகனைப் பார்த்தே ஆசைப்படறார்.. இப்படி ஆசைப்படற தன்னோட அம்மாவுக்கு.. அப்பா மேல காதல் வர வைக்க மார்டி நிறைய கஷ்டப்படறார்.. //

    உண்மைலேயே வித்யாசமான சிந்தனை ..!

    ReplyDelete
  9. //மார்டி டைம் மெஷின் மூலமா வந்திருக்கறத ஃபிப் தெரிஞ்சுக்கிட்டு.. மார்டி ஏமாந்த சமயத்துல ஃபிப் டைம் மெஷினை எடுத்துக்கிட்டு.. தன்னோட இறந்தகாலத்துக்குப் போயி.. சில விசயங்களை செய்துட்டு வந்திடறார்.. /

    அட அட ,படம் செம கதையா இருக்கும் போல .. கண்டிப்பா பார்த்தே தீரனும் ..!!

    ReplyDelete
  10. ///மார்டியும் எம்மெட்டும் அவங்களோட வேலைகளை வெற்றிகரமா முடிச்சுட்டு.. 1985 ஆம் ஆண்டுக்குத் திரும்ப முயற்சிக்கறப்போ ஏற்பட்ட விபத்துல எம்மெட் 1885 ஆம் ஆண்டுக்குப் போயிடறார்.. இதோட படம் முடிஞ்சுடுது.. //

    படிக்கும் போதே விறுவிறுப்பா இருக்குங்க . உண்மைலேயே நல்ல எழுதிருக்கீங்க ..

    ReplyDelete
  11. @அன்பரசன்..
    நன்றி அன்பரசன்..

    ReplyDelete
  12. @சிவா..

    நன்றி சிவா..

    http://www.kickasstorrents.com/back-to-the-future-trilogy-box-set-2007-dvdrip-axxo-t489468.html

    இந்த லிங்கில் இருந்து மூன்று படங்களையுமே நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்..

    ReplyDelete
  13. @டிரீமர்..

    உங்கள் வருகைக்கு நன்றிங்க ஹரிஷ்..

    உண்மைய சொல்லனும்னா.. உங்களோட கேணிவனம் தொடரோட பாதிப்புல தான்.. டைம் மெஷின் பத்தின படங்களை தேடிப்பார்த்தேன்..

    ReplyDelete
  14. @ப.செல்வக்குமார்..

    ///படிக்கும் போதே விறுவிறுப்பா இருக்குங்க. உண்மைலேயே நல்ல எழுதிருக்கீங்க ..////

    நல்ல விறுவிறுப்பான படங்கள்தான் இது.. உங்களுடைய பாராட்டுகளுக்கு நன்றிங்க..

    ReplyDelete
  15. @புதிய மனிதா..

    வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  16. It is a Classical Hit series! :-)

    ReplyDelete