.

Thursday, October 28, 2010

Shutter Island - திரைவிமர்சனம்


இந்தப் படத்தோட ஹீரோ டைட்டானிக் பட ஹீரோ "லியனார்டோ டிகேப்ரியோ".. டைட்டானிக்குப் பிறகு நான் பார்த்த இவரோட படங்கள் எல்லாத்துலயுமே ரொம்ப சீரியஸான கேரக்டர்லதான் வர்றார்.. சட்டர் ஐலேண்ட் படத்துலயும் நடிப்புல பட்டையக் கிளப்புறார்..

சட்டர் ஜலேண்ட் அப்படிங்கறது கடலுக்கு நடுவுல இருக்கற தீவு.. மனநிலை பாதிக்கப்பட்டு கொலைகள் மற்றும் வேற ஏதாவது குற்றம் செய்தவங்களுக்கு அங்கே இருக்கற ஒரு பெரிய ஹாஸ்பிட்டல்ல சிகிச்சை அளிக்கறாங்க..

யூ.எஸ் மார்சல் எட்வர்ட் டெட்டி டேனியல்ஸ் (லியனார்டோ டிகேப்ரியோ) அந்த ஹாஸ்பிடல்ல இருந்து தப்பிச்ச ஒரு நோயாளியைப் (குற்றவாளி ரேச்சல் சொலான்டோ) பற்றி விசாரணை செய்யறதுக்காக அந்தத் தீவுல இருக்கற ஹாஸ்பிடலுக்கு வர்றார்.. அவருக்கு உதவியா சக் அப்படிங்கறவரும் வர்றார்.. தப்பிச்சுப்போன ரேச்சல் தன்னோட குழந்தைகளை தண்ணியில மூழ்கடிச்சுக் கொன்ன குற்றத்துக்காக அங்கே இருந்துட்டிருந்திருக்கார்..

ஹாஸ்பிடலோட தலைமை மருத்துவர்.. டாக்டர் ஜான் கேவ்லி அங்கே விசாரணை பண்றதுக்கு டெட்டிக்கு உதவறார்.. விசாரணையின் போது அங்கே நடக்கற ஒவ்வொரு சம்பவங்களுமே டெட்டிக்கு சந்தேகத்தை ஏற்படுத்துது.. ரேச்சல் தப்பிச்சுப் போகறதுக்கு அந்த ஹாஸ்பிடல்ல நிறையப்பேர் உதவி பண்ணியிருக்கனும்னு சந்தேகப்படறார்..

டெட்டியோட மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்ன நடந்த தீ விபத்துல இறந்து போயிட்டார்.. அன்னைக்கு நைட் டெட்டியோட மனைவி கனவுல வந்து ரேச்சல் இதே தீவுலதான் இருக்கா.. அதே போல தான் இறந்ததுக்கு காரணமான ஆண்ட்ரிவ் லேட்டீஸும் இதே தீவுலதான் இருக்கான்.. அவனைக் கண்டுபிடிச்சு நீங்க கொலை பண்ணனும்னு சொல்றார்.. அடுத்த நாள் அந்தத்தீவை விட்டு கிளம்பற ஐடியால இருந்த டெட்டி அங்கேயே இருந்து திரும்பவும் விசாரணைகளை ஆரம்பிச்சிடறார்.. அதேபோல தன்னோட மனைவியோட மரணத்துக்கு காரணமான ஆண்டிரிவ்வையும் அங்கே நோயாளிகளை அடைச்சி வைச்சிருக்கற கட்டிடத்துல தேடறார்..

அந்த தேடல்ல நமக்கும் டெட்டிக்கும் அதிர்ச்சி தரக்கூடிய சில விசயங்களை அங்கே இருக்கற ஒரு நோயாளிகிட்ட இருந்து டெட்டி தெரிஞ்சுக்கறார்.. இதுக்கிடையில காணமப்போன ரேச்சல் திரும்பவும் கிடைச்சிட்டதா தலைமை மருத்துவர் சொல்றார்..

அந்தத்தீவுல இருக்கற லைட்ஹவுஸ்ல போய் தன்னோட மனைவியைக் கொன்னவனைத் தேடலாம்னு அங்கே போறப்போ டெட்டியோட பார்ட்னர் சக் தொலைஞ்சு போயிடறார்.. அவரைத் தேடிட்டி இருக்கப்போ.. தப்பிச்சுப்போன உண்மையான ரேச்சல் ஒரு குகைல ஒளிஞ்சுருக்கறதை டெட்டி கண்டுபிடிக்கறார்.. அப்போ ரேச்சல்கிட்ட டெட்டி விசாரணை செய்றப்போ ஹாஸ்பிடல்ல நடக்கற மர்மங்களைப் பற்றி தெரிஞ்சுக்கறார்.. இந்தத்தீவை விட்டு உன்னால் வெளியே போகமுடியாது.. உன்னையும் மனநிலை சரியில்லாதவன்னு சொல்லி இங்கேயே தங்க வைச்சிடுவாங்க.. கண்டிப்பா அதுக்குண்டான சூழ்ச்சிகளை தலைமை மருத்துவர் செய்வார்ன்னு ரேச்சல் சொல்றதைக் கேட்டு டெட்டி ரொம்ப அதிர்ச்சியடையறார்..

தொலைஞ்சி போன அவரோட பார்ட்னரை டெட்டி கண்டுபிடிச்சாரா?.. அந்த ஹாஸ்பிடல்ல நடக்கற மர்மங்கள் என்ன?.. டெட்டி வர இருக்கற ஆபத்துகள் என்ன?.. தன்னோட மனைவியைக் கொன்ன ஆண்டிரிவ்வை டெட்டி கண்டுபிடிச்சாரா?.. அட உண்மையிலயே அங்கே என்னதாம்பா நடக்குதுன்னு அடுத்துவர்ற காட்சிகள்ல நாம தெரிஞ்சுக்குவோம்..

படம் ஆரம்பிச்ச முதல் சீன்ல இருந்தே செம வேகம்.. கடலுக்கு நடுவுல இருக்கற அந்தத்தீவைக் காட்டறப்பவே நம்ம ஹீரோ அங்கே நிறைய கஷ்டப்படுவார் போலவேன்னு நமக்குத் தோனும்.. டெட்டிக்குப் பார்ட்னரா வர்றவர் எப்போப்பார்த்தாலும் டெட்டி பேசறதவே கேட்டுட்டு நின்னுட்டிருப்பார்.. இவர் எதுக்குத் தேவையில்லாத கேரக்டர் நீங்க நினைச்சா அது தப்பு..

இப்ப வர்ற படங்கள்ல எல்லாம் யாரு ஹீரோ, வில்லன்னே தெரியமாட்டேங்குது.. ஆனா இதுல தலைமை மருத்துவரா வர்றவரைப் பார்த்தா அப்படியே நம்பியாரைப் பார்த்தாப்ல இருக்கு.. பளிச்சுன்னு முகம்.. ஆனா முகத்தைப் பார்த்தாலே பயங்கர வில்லத்தனம் தெரியுது.. ஆஹா!! இவர்தான் கண்டிப்பா வில்லன்னு மனசு முதல்லயே முடிவு பண்ணீடும்.. ஹீரோ விசாரணை நடத்தறப்போ அங்கே நடக்கற சம்பவங்களை நம்மாளேயே நம்ப முடியாது.. அப்புறம் எப்படி ஹீரோ நம்புவார்..

முதல்ல இருந்து கடைசி வரைக்குமே  மர்மமாவே இருக்கும்.. ஒரு சூழ்நிலையில ஹீரோவோட விசாரணைகளை எல்லாம் மறந்துட்டு.. இவர் எப்படி இந்தத்தீவுல இருந்து தப்பிப்பார்னு ஒரு மனநிலையை நமக்கு உருவாக்கிடுவாங்க.. நான் இதுவரை சொன்ன விசயங்கள்ல எந்த மர்மங்களையுமே அவிழ்க்கல.. நீங்களும் யார்கிட்டயும் கதை கேக்காம படம் பாருங்க.. செம திரில்லரான படம்..


24 comments:

  1. விமர்சனம் அருமை பார்த்திடுவோம் தல ..

    ReplyDelete
  2. //இப்ப வர்ற படங்கள்ல எல்லாம் யாரு ஹீரோ, வில்லன்னே தெரியமாட்டேங்குது.. ஆனா இதுல தலைமை மருத்துவரா வர்றவரைப் பார்த்தா அப்படியே நம்பியாரைப் பார்த்தாப்ல இருக்கு.. ப/

    கையை தேசு தேசு பேசுவாருங்களா ..?

    ReplyDelete
  3. //நீங்களும் யார்கிட்டயும் கதை கேக்காம படம் பாருங்க.. செம திரில்லரான படம்../

    எனக்கு தமிழ்ப்படம் தான் பிடிக்கும் , இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க ..?

    ReplyDelete
  4. @புதிய மனிதா..
    நன்றிங்க

    ReplyDelete
  5. @ப.செல்வக்குமார்..
    ///கையை தேசு தேசு பேசுவாருங்களா ..?///

    என்னா வில்லத்தனம்.. முதல்ல உங்களைக் கொண்டு போயி அந்தத்தீவுல அடைக்கனும்..

    ReplyDelete
  6. முதல்ல இருந்து கடைசி வரைக்குமே மர்மமாவே இருக்கும்.. ஒரு சூழ்நிலையில ஹீரோவோட விசாரணைகளை எல்லாம் மறந்துட்டு.. இவர் எப்படி இந்தத்தீவுல இருந்து தப்பிப்பார்னு ஒரு மனநிலையை நமக்கு உருவாக்கிடுவாங்க.. நான் இதுவரை சொன்ன விசயங்கள்ல எந்த மர்மங்களையுமே அவிழ்க்கல.. நீங்களும் யார்கிட்டயும் கதை கேக்காம படம் பாருங்க.. செம திரில்லரான படம்..


    ....நீங்களும் நல்லா விமர்சனம் எழுதி இருக்கீங்க...

    ReplyDelete
  7. @சித்ரா..
    ///....நீங்களும் நல்லா விமர்சனம் எழுதி இருக்கீங்க...////

    நன்றிங்க சித்ரா.. :-)))

    ReplyDelete
  8. //இதுல தலைமை மருத்துவரா வர்றவரைப் பார்த்தா அப்படியே நம்பியாரைப் பார்த்தாப்ல இருக்கு.. பளிச்சுன்னு முகம்.. ஆனா முகத்தைப் பார்த்தாலே பயங்கர வில்லத்தனம் தெரியுது.. //
    avar gandhi ya nadichavarungo!!!

    ReplyDelete
  9. //அங்கே இருக்கற ஒரு பெரிய ஹாஸ்பிட்டல்ல சிகிச்சை அழிக்கறாங்க.. //
    இந்த வரிலயே ஹாஸ்பிடல்ல என்ன நடக்குதுன்னு புரியுதே ...ஹி ஹி...'அளிக்கறாங்க'தானே சரி? :))

    //ஹீரோ விசாரணை நடத்தறப்போ அங்கே நடக்கற சம்பவங்களை நம்மாளேயே நம்ப முடியாது.. அப்புறம் எப்படி ஹீரோ நம்புவார்..//
    இதை நக்கலா சொல்றீங்களா இல்ல உண்மையிலேயே நம்மால கண்டுபிடிக்க முடியாதான்னு தெரியல :)

    நல்ல இன்ட்ரஸ்டிங்கா எழுதியிருக்கீங்க அண்ணா. கண்டிப்பா பாத்துற வேண்டியதுதான்.

    ReplyDelete
  10. விமர்சனம் நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  11. உண்மையிலே நான் பார்த்து பிரமிச்ச படங்களில் இதுவும் ஒன்னு! ரொம்ப நல்லா விமர்சனம் பண்ணி இருக்கீங்க பாபு!

    ReplyDelete
  12. @பிரகாஷ்..
    ///avar gandhi ya nadichavarungo!!!///

    இது எனக்குப் புதிய தகவல்ங்க.. வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  13. @அன்னு..
    ////
    //அங்கே இருக்கற ஒரு பெரிய ஹாஸ்பிட்டல்ல சிகிச்சை அழிக்கறாங்க.. //
    இந்த வரிலயே ஹாஸ்பிடல்ல என்ன நடக்குதுன்னு புரியுதே ...ஹி ஹி...'அளிக்கறாங்க'தானே சரி? :))////

    அட ஆமா!! உடனே மாத்தீடறேங்க.. :-))

    ////
    //ஹீரோ விசாரணை நடத்தறப்போ அங்கே நடக்கற சம்பவங்களை நம்மாளேயே நம்ப முடியாது.. அப்புறம் எப்படி ஹீரோ நம்புவார்..//
    இதை நக்கலா சொல்றீங்களா இல்ல உண்மையிலேயே நம்மால கண்டுபிடிக்க முடியாதான்னு தெரியல :)////

    விசாரணை நடத்தறப்போ காட்சியமைப்புகள் அங்கே இருக்கறவங்க எல்லாரும் பொய்யானவங்கன்ற மாதிரி ஒரு கற்பனையை நம்ம மனசுல உருவாக்குவாங்க.. அதைத்தான் அப்படி சொன்னேன்.. :-))

    ////நல்ல இன்ட்ரஸ்டிங்கா எழுதியிருக்கீங்க அண்ணா. கண்டிப்பா பாத்துற வேண்டியதுதான்.////
    உங்க பாராட்டுக்கு நன்றிங்க அன்னு.. கண்டிப்பா பாருங்க..

    ReplyDelete
  14. @அன்பரசன்..
    நன்றிங்க..

    ReplyDelete
  15. @சிவா..
    ////உண்மையிலே நான் பார்த்து பிரமிச்ச படங்களில் இதுவும் ஒன்னு! ரொம்ப நல்லா விமர்சனம் பண்ணி இருக்கீங்க பாபு!////

    நானும் சிவா.. உங்க பாரட்டுக்கு நன்றிங்க..

    ReplyDelete
  16. ரைட்டு! பார்த்துடுவோம்

    ReplyDelete
  17. @அருண் பிரசாத்..
    வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  18. நல்ல விமர்சனம் பாபு..

    ReplyDelete
  19. @ரியாஸ்..
    நன்றிங்க..

    ReplyDelete
  20. ண்ணா...

    உங்களை நம்பி ஒரியாக்காரரையும் உக்கார வச்சு படத்த பாத்தா.... கடசில முடிவு இப்படி ஆயிடுச்சே... ஹீரோக்களே ஜெயிச்சு ஜெயிச்சு பாத்த கதைகள்ல தோல்விய ஒத்துகிட்டு போகற கடசி சீன் பாக்கவே முடியல. ஹ்ம்ம்...இப்படியுமா ஒரு படம் முடியணும்?

    ReplyDelete
  21. @அன்னு..
    ///
    ண்ணா...

    உங்களை நம்பி ஒரியாக்காரரையும் உக்கார வச்சு படத்த பாத்தா.... கடசில முடிவு இப்படி ஆயிடுச்சே... ஹீரோக்களே ஜெயிச்சு ஜெயிச்சு பாத்த கதைகள்ல தோல்விய ஒத்துகிட்டு போகற கடசி சீன் பாக்கவே முடியல. ஹ்ம்ம்...இப்படியுமா ஒரு படம் முடியணும்? ///

    ஹா ஹா ஹா!!.. எனக்கும் அப்படித்தாங்க அன்னு இருந்தது.. என்னடா இப்படி பண்ணீட்டானுங்களேன்னு சகிச்சுக்கவே முடியல.. விட்டா நீங்களும் இங்க 2 வருசமா ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கீங்கன்னு நம்மகிட்ட சொன்னாலும் சொல்லிடுவானுங்க.. :-))

    ReplyDelete
  22. நல்ல தெளிவான எழுத்து நடை..அழகா விவரிச்சி எழுதி இருக்கீங்க....படங்களும் நல்லா இருக்கு

    ReplyDelete
  23. ஓட்டு போட்டுட்டேன்

    ReplyDelete
  24. @ஆர்.கே.சதீஷ்குமார்..
    ////நல்ல தெளிவான எழுத்து நடை..அழகா விவரிச்சி எழுதி இருக்கீங்க....படங்களும் நல்லா இருக்கு///

    பாராட்டுக்கு நன்றிங்க.. முதல்முறையா கமெண்ட் போட்டிருக்கீங்கன்னு நினைக்கறேன்.. அதுக்கும் நன்றிங்க சதீஷ்குமார்..

    ReplyDelete