Frequency (2000) - டைம் டிராவல் மூவி இது..
இந்தப்படம் 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாசத்துல ஆரம்பிக்குது.. படத்தோட ஹீரோ ஜான் ஒரு போலீஷ்காரர்.. முப்பது வருசத்துக்கு முன்ன செத்துப்போன அவரோட அப்பாவைப் பத்தியே எப்பவும் நினைச்சிட்டிருக்கார்.. அப்படியே அவங்கப்பா ஃப்ரான்க்கைக் காமிக்கறாங்க..
ஃப்ரான்க் ஒரு தீயணைப்புப் படை வீரர்.. ரொம்ப நல்லவர்.. பொறுப்பா தன்னோட மனைவியையும் மகனையும் கவனிச்சுக்கறார்.. தன்னோட ஓய்வு நேரத்துல ஒரு ரேடியோவை வைச்சி எப்பவும் யார் கூடவோ பேசிட்டிருக்கார்..
நம்ம ஹீரோ ஜானுக்கு அவரோட அப்பாவோட ரேடியோ ஒன்னு கிடைக்குது.. அந்த ரேடியோவை பார்த்துட்டிருக்கப்போ யாரோ ஒருத்தர் அந்த ரேடியோல ஜானை தொடர்புகொள்றார்.. தங்களைப் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கற ரெண்டு பேருக்குமே ரொம்ப ஷாக்.. அதாவது ஜான் 30 வருசத்துக்கு முன்னால செத்துப்போன அவரோட அப்பாகூட பேசிட்டிருக்கார்.. ஆனா ஜானோட அப்பா ஃப்ரான்க்கால இந்த விசயத்தை நம்பமுடியல.. ரேடியோ டிஸ்கனைக்ட் ஆகறதுக்கு முன்னாடி ஜான் அவங்கப்பாகிட்ட நாளைக்கு நடக்கப்போற ஒரு பயர் ஆக்சிடென்ட்ல மாற்று வழியை யூஸ் பண்ணிங்கன்னா செத்துப்போயிடுவீங்கன்னு சொல்றார்.. ஜான் சொன்னமாதிரியே ஒரு பயர் ஆக்சிடென்ட் நடக்குது.. அதேபோல மாற்று வழியை யூஸ் பண்ணப்போறப்போ ஜான் சொன்னது ஞாபகம் வந்து வேற ஒருவழியா கட்டிடத்தை விட்டு வெளியே வந்திடறார் ஃப்ரான்க்.. அந்த நேரத்துல ஃப்ரான்க் இறந்து போகாததால இதுவரையும் இருந்த டைம் லைன் மாறிடுது.. அடுத்த நாள் ஆபிஸுக்கு போற ஜானுக்கு ஒரு அதிர்ச்சி காத்திட்டிருக்கு..
மூன்று பேரைக் கொலை பண்ணின ஒரு கேசை ஜான் ஹேண்டில் பண்ணீட்டு இருக்கார்.. அந்தக் கொலைகளைப் பண்ணினது யாருன்னு 30 வருசமா போலீஸால கண்டுபிடிக்க முடியல.. ஆபிஸுக்குப் போய் கேஸ்கட்டைப் பார்த்தா கொலைகள் பத்தா மாறியிருக்கு.. ஜானோட அப்பா ஃபயர் ஆக்சிடென்ட்ல இருந்து தப்பிச்சதுக்கு அடுத்த வாரம் அவங்கம்மா கொலை செய்யப்பட்டதா அந்த கேஸ்ல புதுசா ரெக்கார்ட் ஆயிருக்கு.. அதை தன்னோட அப்பாவுக்கு சொல்றார் ஜான்.. இந்த பத்து கொலைகளும் நடக்கக்கூடாது.. அப்போதான் அம்மாவையும் நாம காப்பாத்த முடியும்.. கொலை நடந்த நேரங்கள் என்கிட்ட பைல் ஆகியிருக்கு.. அந்த நேரங்கள்ல போய் கொலை நடக்கப்போறதைத் தடுங்கன்னு ஜான் அவரோட அப்பாகிட்ட சொல்றார்.. அதேபோல முதல் கொலை நடக்கவிடாம தடுத்துடறார் ஃப்ரான்க்..
ரெண்டாவதா கொலை நடக்கப்போற இடத்துக்கும் கரெக்டா ஃப்ரான்க் போயிடறார்.. அதனால கொலைகாரன் கடுப்பாகி ஃப்ரான்க்கைத் தாக்கிட்டு அவரோட டிரைவிங் லைசன்சை எடுத்துட்டு போயிடறான்.. அங்கே ரெண்டாவது கொலையைப் பண்ணீட்டு ஃப்ரான்க்கோட டிரைவிங் லைசன்ஸை பொணத்துக்கிட்ட போயிட்டு போயிடறான் கொலைகாரன்.. வீட்டுக்கு வர்ற ஃப்ரான்க் தன்னை கொலைகாரன் தாக்கீட்டு தன்னோட டிரைவிங் லைசன்ஸை எடுத்துப்போயிட்டதா ஜான்கிட்ட சொல்றார்.. அந்த டிரைவிங் லைசன்ஸை எடுக்கறப்போ கொலைகாரனோட கைரேகை ஃப்ரான்கோட பர்ஸ்ல பதிஞ்சிருக்கும்னு ஜானுக்குத் தோனுது.. அதனால ஃப்ரான்க்கோட பர்ஸை 30 வருசம் யாருக்கும் கிடைக்காதபடி ஒரு இடத்துல வைங்கன்னு ஜான் சொல்றார்.. அதேமாதிரியே ஃப்ரான்க் செய்றார்.. அதே நேரத்துல அதாவது 30 வருசம் கழிச்சு அந்த பர்ஸை கரெக்டா ஜான் எடுக்கறார்..
பர்ஸுல இருக்கற கைரேகையை வைச்சி ஒரு ரிட்டயர்டு போலீஷ் ஆபிஸர்தான் இவ்வளவு கொலைகளையும் செய்ததுன்னு ஜான் கண்டுபிடிக்கறார்.. அந்தக் கொலைகாரனோட பேரையும் தன்னோட அப்பாகிட்ட சொல்றார் ஜான்..
ஃப்ரான்க்தான் அந்தக் கொலையைப் பண்ணினதுனு போலீஷ் சந்தேகப்பட்டு அவரை அரெஸ்ட் பண்ணீடுது.. ஃப்ரான்க் தன்னை எப்படி நிரபாராதின்னு நிரூபிச்சார், ஜானோட அம்மா கொலை செய்யப்பட்டாங்களா.. ரேடியோ மூலமா 30 வருசத்துக்கு முன்னாடி வாழ்ந்திட்டு இருந்த தன்னோட அப்பாகிட்ட ஜான் திரும்பவும் பேசினாரான்னு அடுத்து வர்ற காட்சிகள்ல தெரியும்..
டைம் டிராவல் மூவின்ன உடனே ஏதாவது மெஷின் மூலமா டிராவல் பண்ணுவாங்கன்னு நினைச்சி பார்த்துட்டு இருந்தேன்.. ஆனால் ரேடியோ மூலமா 30 வருசத்துக்கும் முன்னாடியும் பின்னாடியும் இருக்கவங்க பேசிக்கிட்டப்போ "அடங்கொக்கா மக்கான்னு" ஆயிடுச்சு.. அப்ப இருந்தே படம் நல்ல விறுவிறுப்பா போக ஆரம்பிச்சிடும்..
ஃப்ரான்க்கோட பர்ஸை ஜான் முப்பது வருசம் கழிச்சு எடுக்கறப்போ எப்படியெல்லாம் யோசிக்கறானுங்கன்னு இருந்தது..
ஜானோட அப்பா மூலமா இறந்தகாலத்தை மாற்றியமைக்கறப்போ டைம்லைன் மாறி அதோட பாதிப்புகள் ஜானுக்கு வர்றதை விறுவிறுப்பா காட்டியிருப்பாங்க.. கொலைகாரனோட பாத்திரத்துக்குத்தான் சீரியஸ்னெஸ் பத்தல.. இன்னும் கொஞ்சம் நல்லா அமைச்சிருக்கலாம்.. கொஞ்சம் நல்ல டைம் டிராவல், திரில்லர் வகை மூவி இது..
அருமை விமர்சனம் நண்பா ..
ReplyDeleteஅருமையான விமர்சனம்! பார்க்கலாம்! நன்றி!
ReplyDeleteஆகா! நல்ல படம் போல இருக்கே.... பார்த்துடறேன்
ReplyDeleteநண்பர் ஒருவர் பரிசளிப்பதற்கு எனக்கு ஒரு பத்து பதினைந்து சிறந்த உலகப்படங்களின் பெயர்கள் தேவைப்படுகிறது... உதவ முடியுமா... படங்கள் சென்னை பர்மா பஜாரில் கிடைக்கக்கூடிய படங்களாக இருக்க வேண்டும்...
ReplyDelete@philosophy prabhakaran...
ReplyDeleteஎனக்குத் தெரிந்த சில சிறந்த உலகத்திரைப்படங்களை உங்களுக்கு இன்று மின்னஞ்சலிடுகிறேன்.. பர்மா பஜாரில் கிடைக்குமா தெரியாது.. நமக்கு எப்பவுமே டொரண்ட் டவுன்லோட்தான்.. :-))
வருகைக்கு நன்றி நண்பரே..
பிறந்தநாளுக்கு மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் டோரன்ட் டவுன்லோட் சிரமம் ஆயிற்றே...
ReplyDelete@philosophy prabhakaran..
ReplyDeleteநண்பரே!! நான் உங்களுக்கு பரிந்துரைக்கப்போகும் திரைப்படங்கள் மிகவும் புகழ்பெற்றவை.. கண்டிப்பா கடைகளில் இருக்க வாய்ப்புள்ளது.. இன்று இரவு உங்களுக்கு திரைப்படங்களின் பட்டியல்களைத் தருகிறேன்.. முயற்சி செய்து பாருங்கள்..
அட்வான்ஸ் நன்றிகள்... My mail ID: nrflyingtaurus@gmail.com
ReplyDelete@philosophy prabhakaran..
ReplyDeleteஹா ஹா ஹா.. ஓகேங்க நோட் பண்ணிட்டேன்..
அருமை விமர்சனம் நண்பா ..
ReplyDeleteவிமர்சனத்தைப் படித்தவுடன் படம் பார்க்கத் தோன்றுகிறது.
ReplyDeleteநல்ல விமர்சனம்.
ReplyDelete+
அந்த கர்சர் மேட்டர் சூப்பர்.
படிக்கும் போதே விறுவிருப்பா இருக்கே பார்த்தா இன்னும் சூப்பரா இருக்கும் போல...
ReplyDeleteஇந்தப்படத்தை இன்னும் பார்க்கலை .. உங்கள் விமர்சனம் அதனை உடனே செய்ய சொல்கிறது ...
ReplyDeleteரொம்ப விறுவிறுப்பான விமர்சனம் பாபு! இணையத்தில தேடுறேன்!
ReplyDelete@புதிய மனிதா..
ReplyDeleteநன்றிங்க..
@எஸ்.கே..
நன்றிங்க..
@அருண் பிரசாத்..
கண்டிப்பாக பாருங்கள்.. வருகைக்கு நன்றிங்க..
@வெறும்பய..
நன்றிங்க ஜெயந்த்..
@ஜெயந்தி..
நன்றிங்க..
@அன்பரசன்..
நன்றிங்க..
@செளந்தர்..
படம் நல்லாவே இருக்கும் செளந்தர்.. வருகைக்கு நன்றிங்க..
@கே.ஆர்.பி. செந்தில்..
நன்றிங்க..
@சிவா..
நன்றிங்க சிவா..
///படத்தோட ஹீரோ ஜான் ஒரு போலீஷ்காரர்.. //
ReplyDeleteசிரிப்புபோலீசு மாதிரியா ..?
//அதை தன்னோட அப்பாவுக்கு சொல்றார் ஜான்.. இந்த பத்து கொலைகளும் நடக்கக்கூடாது.. அப்போதான் அம்மாவையும் நாம காப்பாத்த முடியும்.. கொலை நடந்த நேரங்கள் என்கிட்ட பைல் ஆகியிருக்கு.//
ReplyDeleteபடம் பட்டைய கிளப்பும் போலேயே ., அதவிட உங்க விமர்சனம் படத்தோட விறுவிறுப்பா கூட்டுதுங்க ..!!
பட்டர்ஃபிளை எஃபெக்ட் மூன்றாம் பாகம் ரேஞ்சுல இருக்குமோ? :))
ReplyDeleteடவுன்லோடிப் பார்த்துடறேன்..
Very good review. :-)
ReplyDelete//எனக்குத் தெரிந்த சில சிறந்த உலகத்திரைப்படங்களை உங்களுக்கு இன்று மின்னஞ்சலிடுகிறேன்.//
ReplyDeleteபதிவாக எழுதினால் நாங்களும் தெரிந்துக்கொள்ளுவோமே...
விமர்சனம் நல்ல இருக்குங்க. நீங்க ஹாலிவுட் பட விமர்சன ஸ்பெஷலிஸ்டா?. ரொம்ப நல்லாவே வார்த்தைகள் விழுகிறது..
பாரத்... பாரதி... said...
ReplyDelete//எனக்குத் தெரிந்த சில சிறந்த உலகத்திரைப்படங்களை உங்களுக்கு இன்று மின்னஞ்சலிடுகிறேன்.//
பதிவாக எழுதினால் நாங்களும் தெரிந்துக்கொள்ளுவோமே...
விமர்சனம் நல்ல இருக்குங்க. நீங்க ஹாலிவுட் பட விமர்சன ஸ்பெஷலிஸ்டா?. ரொம்ப நல்லாவே வார்த்தைகள் விழுகிறது.. /////
பாராட்டுக்கு நன்றிங்க பாரத்... பாரதி... அடிக்கடி வாங்க..