எட்கர் ரீஸ்னு ஒருத்தன் மர்மமான முறையில தொடர்கொலைகளை செய்ததுக்காக ஜான் ஹோப்ஸ் அவரைக் கைது பண்றார்.. ரீஸுக்கு மரண தண்டனை கொடுக்கறதா முடிவு பண்றாங்க.. கடைசியா எட்கர் ரீஸைப் பார்க்கப்போற ஜான் ஹோப்ஸ்கிட்ட ரீஸ் ஏதோ புரியாத மொழியில ஏதேதோ பேசறார்.. அப்புறம் அவருக்கு மரண தண்டனை நிறைவேத்திடறாங்க..
எட்கர் ரீஸ் செத்தவுடனே அப்பாடா!! தொல்லை ஒளிஞ்சதுன்னு ஜான் ஹோப்ஸ் நினைச்சிட்டிருக்கார்.. ஆனா அதுக்கு சந்தர்ப்பமே கொடுக்காம வேற யாரோ ஒருத்தர் ரீஸ் மாதிரியே மர்மக் கொலைகளைப் பண்ண ஆரம்பிச்சடறாங்க.. திரும்பவும் அந்தக் கேஸைக் ஹேண்டில் பண்ற ஜான் ஹோப்ஸுக்கு பயங்கரமான அதிர்ச்சி..
உண்மையில மர்மக்கொலைகளை செய்றது Azazelங்கற "சாத்தான்" அப்படிங்கற உண்மையை ஜான் ஹோப்ஸ் கண்டுபிடிக்கறார்.. அந்த சாத்தான் ஜான் ஹோப்ஸ் கண்ணுக்கெதிரா தன்னோட சக்திகளை காட்டுது.. அந்த சாத்தான் ஏதாவது ஒரு மனித உடம்புக்குள்ள போய்ட்டாலும்.. வேற உடம்புக்குள்ள போகனும்னு நினைச்சா அவங்களைப் போய் தொட்டாலே அந்த உடம்புக்குள்ள போயிடற மாதிரி சக்திகளை வைச்சிருக்கு.. அதால விலங்குகளோட உடம்புக்குள்ளவும் போயிடவும் முடியும்..
10 ஆண்டுக்கு முன்னே இதே மாதிரியே ஒரு தொடர்கொலைகளைப் பத்தி விசாரணை செய்திட்டிருந்த ஒரு போலீஸ் ஆபீசர் தற்கொலை செய்திகிட்டதை ஜான் தெரிஞ்சிக்கறார்.. செத்துப்போன அந்த போலீஸ்காரர் வீட்டுக்குப் போய் ஆராயறப்போ அவர் அந்த சாத்தான் பத்தி நிறைய விசயங்களை ரிசர்ச் பண்ணிக் கண்டுபிடிச்சி வைச்சிருந்திருக்கறதை ஜான் தெரிஞ்சிக்கறார்.. அவரோட குறிப்புகளை வைச்சி ஜானும் சாத்தானைப் பற்றி நிறைய விசயங்களைத் தெரிஞ்சிக்கறார்.. அதோட அவருக்கு ஒரு மகள் இருக்கறதையும் தெரிஞ்சிக்கிட்டு அவரைத் தேடிப்போறார் ஜான்..
ஜானுக்கு அந்தப் பொண்ணு எந்த ஹெல்ப்பும் பண்ணமாட்டேன்னு சொல்லிடுது.. அதோட நீயும் உன்னோட குடும்பமும் நல்லாயிருக்கனும்னா இந்தக்கேசை இதோட விட்டுட்டு வேற வேலையைப் பாருன்னு சொல்றாங்க அந்த பொண்ணு..
ஜான் ரொம்பக் குழப்பத்தோட வீட்டுக்குப் போறப்போ திடீர்னு ஒருத்தர் துப்பாக்கியை வைச்சிக்கிட்டு ஜானைக் கொலை பண்ண முயற்சிக்கறார்.. ஆனா அவருக்குள்ள சாத்தான் இருக்கறது ஜானுக்கு நல்லாவே தெரியும்.. வேற வழியில்லாம அவரை ஜான் கொன்னுடறார்.. அந்த இடத்துல இருந்த ஒரு பொண்ணு உடம்புக்குள்ள போயிட்டு அந்த சாத்தான் ஜானைப் பார்த்து சிரிக்குது.. ஜான் அநியாயமா ஒருத்தரைக் கொன்னுட்டார் இப்போ.. அதனால கொலைக்கேசுல மாட்டிக்கறார்..
தொடர்கொலைகளைப் பத்தி ஜான் ஹோப்ஸ் விசாரணை பண்ணீட்டு இருந்ததாலையும் நிறைய உண்மைகளைத் தெரிஞ்சுக்கிட்டதாலையும் ஜானைப் பழிவாங்க அவரோட சகோதரரையும் போட்டுத் தள்ளீடுது சாத்தான்.. இப்போ ஜானுக்கு என்ன செய்றதுன்னே தெரியல.. மனுசன்னா ஏதாவது செய்லாம்.. ஆனா ஜானோட கண்ணுக்கெதிராவே பலரோட உடம்புக்குள்ள போய் அந்த சாத்தான் பூந்துக்குது.. அதனால என்ன செய்றதுன்னு தெரியாம ஜான் குழம்பிடறார்..
சாத்தானோட திட்டம் என்னன்னா கொஞ்சம் கொஞ்சமா மனிதகுலத்தை அழிக்கறதுதான்.. இந்த விசயத்தை தெரிஞ்சிகிட்ட ஜான்.. அந்த சாத்தானை தடுத்து நிறுத்தினாரா.. முன்ன இந்தக் கேசை டீல் பண்ணீட்டு இருந்த போலீஸ்காரர் ஏன் தற்கொலை செய்து செத்துப்போனார்.. எல்லா விசயமும் அடுத்த வர்ற காட்சிகள்ல நமக்குத் தெரியும்..
படம் ஆரம்பிச்சப்போ ஏதோ குற்றவாளிகளைப் பிடிக்கற படம்னு நினைச்சிட்டுதான் பார்த்துட்டு இருந்தேன்.. ஆனால் கொஞ்ச காட்சிகள்லயே இது வேறமாதிரியான படம்னு தெரிஞ்சிடுச்சு..
ஜான் ஹோப்ஸை மிரட்டறதுக்கு அந்த சாத்தான் தெருவுல நடந்துபோற எல்லார் உடம்புலயும் புகுந்து காட்டுற காட்சி செம திரில்..
ஜானைப் பழிவாங்கறதுக்காக அவரோட சகோதரரை சாத்தான் போட்டுத் தள்றப்போ.. ஜானோட ரியாக்சன்ஸ் நல்லா இருக்கும்.. நமக்குப் பாவமேன்னு ஆயிடும்..
என்னையும் என் குடும்பத்தையும் விட்டுடுன்னு ஜான் கேக்கறப்போ.. நீ என்னைத் தொடர்ந்து வந்த!! அதனால நானும் உன்னைத் தொடர்ந்து வர்றேன்னு சாத்தான் சொல்ற சீன் நல்லா இருக்கும்..
திரைக்காட்சிகள் நகர்ந்த விதத்தில இருந்த கணம் கிளைமாக்ஸ்ல இல்லாதமாதிரி ஃபீல் ஆச்சு.. படத்தோட ஒருகாட்சி போலவே கிளைமாக்ஸும் அமைஞ்சிடுச்சு.. இன்னும் கொஞ்சம் திரில்லா ஏதாவது செய்திருக்கலாம்.. ஆனால் நல்ல விறுவிறுப்பான திரைக்கதை..
நல்ல திரில்லர் மூவி..
என்னங்க தினமும் ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதறீங்க ..,
ReplyDeleteஉங்களுக்கு படம் பாக்குறதுதான் வேலையா ..?
//வேற உடம்புக்குள்ள போகனும்னு நினைச்சா அவங்களைப் போய் தொட்டாலே அந்த உடம்புக்குள்ள போயிடற மாதிரி சக்திகளை வைச்சிருக்கு.. அதால விலங்குகளோட உடம்புக்குள்ளவும் போயிடவும் முடியும்.. //
ReplyDeleteஅட பேய்க்கதையா ..?
//சாத்தானோட திட்டம் என்னன்னா கொஞ்சம் கொஞ்சமா மனிதகுலத்தை அழிக்கறதுதான்.. இந்த விசயத்தை தெரிஞ்சிகிட்ட ஜான்.. அந்த சாத்தானை தடுத்து நிறுத்தினாரா///
ReplyDeleteநல்லாவே எழுதறீங்க ..
@செல்வா..
ReplyDelete////என்னங்க தினமும் ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதறீங்க ..,
உங்களுக்கு படம் பாக்குறதுதான் வேலையா ..? /////
காலேஜ் படிக்கறப்போ அப்புறம் என்ன வேலை செல்வா.. :-)))
பெரும்பாலான படங்கள் அப்போ பார்த்ததுதான்..
ReplyDelete@செல்வா...
ReplyDelete///அட பேய்க்கதையா ..? ///
நீங்க பேய்கெல்லாம் பயப்படவே தேவையில்ல செல்வா.. ஒரு மொக்கை போட்டீங்கன்னாலே ஒடிப்போயிடுங்க.. :-))
ரொம்ப முன்னாடியே பார்த்த படம் இது பாபு!!! ஒரே விமர்சனமா கலக்கறீங்க!!!
ReplyDelete@சிவா..
ReplyDelete///ரொம்ப முன்னாடியே பார்த்த படம் இது பாபு!!!///
நானும் சிவா.. 2002-ல பார்த்தேன்னு நினைக்கறேன்..
///ஒரே விமர்சனமா கலக்கறீங்க!!!///
:-)))...
நன்றி சிவா..
இன்னும் படம் பாக்கல.. இதோ இப்ப தான் டவுன்லோட் போட்டிருக்கேன்...
ReplyDeleteநல்ல விமர்சனம் நண்பா...
@வெறும்பய..
ReplyDelete///இன்னும் படம் பாக்கல.. இதோ இப்ப தான் டவுன்லோட் போட்டிருக்கேன்...
நல்ல விமர்சனம் நண்பா... ///
நன்றிங்க ஜெயந்த்..
நல்ல விமர்சனம்
ReplyDelete@சிநேகிதி..
ReplyDeleteநன்றிங்க..
It is a good movie. - Good review for that. :-)
ReplyDelete@சித்ரா..
ReplyDeleteநன்றிங்க சித்ரா..
//என்னங்க தினமும் ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதறீங்க ..,
ReplyDeleteஉங்களுக்கு படம் பாக்குறதுதான் வேலையா ..? //
எனக்கும் அதே டவுட்தான்.
புது டெம்ப்லேட் சூப்பர்.
@அன்பரசன்..
ReplyDelete////
//என்னங்க தினமும் ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதறீங்க ..,
உங்களுக்கு படம் பாக்குறதுதான் வேலையா ..? //
எனக்கும் அதே டவுட்தான்.////
ஹா ஹா ஹா.. நான் விமர்சனம் எழுதற படங்கள் பெரும்பாலும் ஏற்கனவே பார்த்த படங்கள் அன்பரசன்.. :-)))
////புது டெம்ப்லேட் சூப்பர். ////
நன்றிங்க..
நல்ல விமர்சனம் கலக்கல் தல ....
ReplyDeleteஎப்பவோ அரைகுறையா பார்த்தத ஞாபகம்.... முழுசா பார்க்கறேன்...நன்றி பாபு
ReplyDelete//விலங்குகளோட உடம்புக்குள்ளவும் போயிடவும் முடியும்
ReplyDeleteclimax !!