.

Tuesday, October 19, 2010

MY LITTLE BRIDE - திரை விமர்சனம்

My Little Bride (2004)

இது ஒரு கொரியன் மூவி.. படத்தோட ஹீரோயின் போயனுக்கு 16 வயசுதான் ஆகுது.. ஸ்கூல் படிச்சுட்டு.. அவர் ஸ்கூல்ல சீனியர் பையன் ஒருத்தனை சைட் அடிச்சிட்டு ஜாலியா திரிஞ்சிட்டு இருக்காங்க.. அவரோட தாத்தாவுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போயிடுது.. அதை சாதகமா பயன்படுத்திட்டு ஹீரோயினை.. ஹீரோ சங்மினுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும் இதுதான் என் கடைசி ஆசைன்னு தாத்தா சொல்லிடறார்.. வேற வழியில்லாம கல்யாணம் நடக்குது.. ஆனா நம்ம ஹீரோயினுக்கு கல்யாணத்துல துளியும் இஷ்டமில்ல..

கல்யாணம் முடிஞ்சதும் ரெண்டு பேரையும் ஒரு டிரிப்புக்கு அனுப்பி வைக்கறாங்க வீட்ல இருக்கறவங்க.. ஏர்போர்ட்ல ஃபிளைட் ஏறாம ஹீரோவை ஏமாத்திட்டு போயன் ஓடிவந்திடறார்.. ஆனா வீட்டுக்கும் போகாம அவரோட ஸ்கூல் சீனியர் பையனோட சுத்தறார்.. சீனியர் பையனுக்கும் போயனை பிடிச்சுப் போய் புரொபோஸ் பண்றார்.. அந்தப் பையன் மேல போயன்க்கும் ஆசை இருக்கறதால அவரும் ஒத்துக்கறார்..

போயனுக்கு கல்யாணமாயிட்டாலும் ஸ்கூல்ல யாருக்கும் அந்த விசயம் தெரியாது.. ஒருநாள் அவரோட ஸ்கூலுக்கே நம்ம ஹீரோ டீச்சரா வந்திடறார்.. அங்கே அவரோட வேலை பார்க்கற லேடி டீச்சர் ஹீரோ மேல ஆசைப்படறாங்க.. ஆனால் ஒருசமயத்துல போயனுக்கும் சங்மினுக்கும் கல்யாணம் ஆயிடுச்சுன்னு அந்த டீச்சருக்கு தெரிஞ்சு போயிடுது.. அதனால போயனை பழிவாங்கறதுக்காக.. நடக்கப் போற ஸ்கூல் பெஸ்டிவலுக்கு தனி ஆளா ஸ்டேஜ்ல டிராயிங் வரைஞ்சு ரெடி பண்ண சொல்லி போயனுக்கு அந்த டீச்சர் ஆர்டர் போட்டுடறாங்க.. அது கண்டிப்பா போயனால முடியாது.. அதனால ஹீரோ போயனுக்கே தெரியாம அந்த டிராயிங்கை வரைஞ்சிடறார்..

சின்ன வயசுல இருந்தே ஹீரோ சங்மினுக்கு போயன் மேல ரொம்ப லவ்வு.. அதை போயன்தான் எப்பவும் புரிஞ்சுக்கவே இல்ல.. 16 வயசுல விளையாட்டுத்தனமா இருக்கற போயன் எப்படி ஹீரோவோட லவ்வைப் புரிஞ்சுக்கறாங்கன்னு.. அடுத்து வர்ற காட்சிகள் நகரும்..

ஹீரோயினா நடிச்சிருக்கற சின்ன பொண்ணு ரொம்ப நல்லாவே நடிச்சிருக்கு..

அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனவுடனே தனியா வீடு எடுத்து தங்க வைச்சிடுவாங்க.. அப்போ போயனை.. சங்மின் கலாட்டா பண்ற காட்சிகள் ரசிக்கற விதமா இருக்கும்..

கிளாஸ் ரூம்ல ஹீரோவுக்கு இருமல் வர்றப்போ பாக்கெட்ல இருந்து கர்ஷீப்பை எடுப்பார்.. ஆனா அது கர்ஷீப் கிடையாது.. ரொம்ப நகைச்சுவையான காட்சி.. அப்புறம் அது என்னன்னு நீங்க பார்த்து தெரிஞ்சுக்கங்க..

நல்ல நகைச்சுவைத் திரைப்படம்.. படம் பார்க்கும்போது நமக்கும் ஒரு ஜாலியான மூடு கிரியேட் ஆயிடும்..


18 comments:

  1. படத்தை பார்க்கத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்..

    ReplyDelete
  2. மிக நல்ல விமர்சனம்! அருமை!
    பதிவர் இலுமினாட்டியும் இதுபற்றி எழுதியுள்ளார்
    http://illuminati8.blogspot.com/2010/03/my-little-bride-review.html

    ReplyDelete
  3. பாத்துடலாம் தல அருமையா எழுதி இருக்கீங்க ..

    ReplyDelete
  4. அது எப்படிங்க கொரியன் படமெல்லாம் பாக்குறீங்க ..!
    உங்களுக்கு விமர்சனம் நல்லா வருது ..

    ReplyDelete
  5. / ஆனா அது கர்ஷீப் கிடையாது.. ரொம்ப நகைச்சுவையான காட்சி.. அப்புறம் அது என்னன்னு நீங்க பார்த்து தெரிஞ்சுக்கங்க..//

    இதென்ன நீங்க கூட சஸ்பென்ஸ் வைக்குறீங்க.., அந்த படத்தோட ஓனர் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க ..? ஹி ஹி ஹி ..

    ReplyDelete
  6. படம் பார்த்தே ஆகனும் போல இருக்கே!

    ReplyDelete
  7. இன்னொரு படம் லிஸ்ட்ல சேர்ந்துடுச்சு. :)
    நன்றிங்க .

    ReplyDelete
  8. சந்தர்ப்பம் கிடைத்தால் பார்ப்போம்.

    ReplyDelete
  9. ரொமாண்டிக் காமடி படங்கள் பாக்கிறதே ரொம்ப ஜாலியான விஷயம்... பாத்திட வேண்டியதுதான்...

    ReplyDelete
  10. கடைசில யார் யாரோட சேர்றாங்க பாபு... பாலச்சந்தர் படம் போல இருக்குமோ...

    ReplyDelete
  11. உங்கள் விமர்சனம்... இன்ட்ரஸ்டிங்-காக, படம் பார்க்க தூண்டும் விதம் இருக்குங்க..
    தேங்க்ஸ்..

    ReplyDelete
  12. @கே.ஆர்.பி.செந்தில்..
    நன்றிங்க..

    @எஸ்.கே..
    நன்றிங்க.. நீங்கள் கொடுத்த லிங்க் மூலம் பதிவர் இலுமினாட்டியின் விமர்சனத்தையும் படித்தேன்.. அருமையாக இருந்தது.. நன்றிங்க..

    @புதிய மனிதா..
    நன்றிங்க..

    @ப.செல்வக்குமார்..
    ///அது எப்படிங்க கொரியன் படமெல்லாம் பாக்குறீங்க ..!///

    சப்டைட்டில் யூஸ் பண்ணித்தான் செல்வா..

    ///இதென்ன நீங்க கூட சஸ்பென்ஸ் வைக்குறீங்க.., அந்த படத்தோட ஓனர் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க ..? ஹி ஹி ஹி ..///

    ஹா ஹா ஹா!!

    @அருண் பிரசாத்..
    வருகைக்கு நன்றிங்க..

    @சித்ரா..
    ஆமாங்க சித்ரா.. ரொம்ப ஜாலியான படம்.. வருகைக்கு நன்றிங்க..

    @இளங்கோ..
    நன்றி இளங்கோ..

    @markkandan unga oorkaran..
    அடடா.. இந்தப் படம் எனது நண்பரோட டிவிடியில இருந்து பார்த்தேங்க.. கூகுள்ல சர்ச் பண்ணிப் பாருங்க.. நிறைய லிங்க் கிடைக்கும்..
    வருகைக்கு நன்றிங்க..

    @asiya omar
    வருகைக்கு நன்றிங்க..

    @சிவா..
    கண்டிப்பா பாருங்க சிவா.. இதுவும் ரொம்ப ஜாலியான படம்தான்..

    @மகேஷ் : ரசிகன்..
    வருகைக்கு நன்றிங்க..

    @அன்பரசன்..
    வருகைக்கு நன்றிங்க..

    @philosophy prabhakaran..
    ///கடைசில யார் யாரோட சேர்றாங்க பாபு... பாலச்சந்தர் படம் போல இருக்குமோ...///

    ஹா ஹா ஹா.. அப்படியெல்லாம் இருக்காதுங்க பிரபாகரன்.. இது சும்மா ஜாலியான படம்..

    @ஆனந்தி..
    நன்றிங்க ஆனந்தி..

    ReplyDelete
  13. @பிரியமுடன் பிரபு..

    வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete