ஆரம்பகாலங்கள்ல கம்ப்யூட்டரை யூஸ் பண்ணனும்னா ஏதாவது கம்ப்யூட்டர் சென்டர்லதான் ஜாயின் பண்ணனும்ங்கற நிலைமை மாறி.. டிவி மாதிரியே இப்போ வீட்டுக்கு ஒரு கம்யூட்டர்னு வந்துடுச்சு.. இனி அடுத்த ஆட்சியில வீட்டுக்கு ஒரு கம்யூட்டர் கொடுக்கப்படும்னு தேர்தல் வாக்குறுதி வெளிவந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு ஒன்னுமில்லைன்னு நினைக்கிறேன்..
வீடுகள்ல கேபிள் கனைக்சன் இருக்கறமாதிரியே.. கொஞ்சம் கொஞ்சமா நெட்கனெக்சனும் கொடுக்க ஆரம்பிச்சுட்டோம்.. எப்படியும் ஒன்னு ரெண்டு வருசங்கள்ல நெட்கனெக்சன் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணிடலாம்.. நெட்கனைக்சன் வந்துடுச்சா.. அப்புறம் என்ன.. உலக விசயங்களை தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுடுவோம்.. கொஞ்ச நாள்ல இந்த நெட்கனைக்சனை வைச்சி ஏதாவது உருப்படியா செய்யமுடியுமான்னு யோசிக்க ஆரம்பிப்போம்.. இந்த மாதிரி வீடுகள்ல இருந்து நெட் யூஸ் பண்றவங்களை ஈர்த்து ஏமாத்தற விதமா நிறைய விசயங்கள் இருக்கு.. அதுல நாமே போய் வலையில விழற கதையா நம்ம மைண்டல தோன்ற முதல் விசயம் "ஹோம் ஜாப்".. அடுத்து என்ன? உடனே கூகுளை ஓப்பன் பண்ணி ஹோம் ஜாப்ஸ் தர்ற சைட்களை ப்ரெளஸ் பண்ண ஆரம்பிப்போம்..
அந்த மாதிரி சைட்கள்ல எண்ண பண்ணியிருப்பாங்க.. வீட்ல இருந்தே மாதம் 35000 சம்பாதிக்கணுமா.. தினமும் 2000 முதல் 5000 சம்பாதிக்கனுமா.. உடனே சந்தாதாரர் ஆகுங்க.. உங்களுக்கு நாங்க பிராஜெக்ட் தரனும்னா ஒரு குறிப்பிட்ட தொகை டெப்பாசிட்டா கட்டுங்க அப்படின்னு விளம்பரம் தந்துருப்பாங்க.. நாமளும் அதை நம்பி டெப்பாசிட் கட்டிட்டோம்னா அடுத்து நிலைமை என்னன்னு நமக்கு நல்லாவே தெரியும்..
சிலபேர் ரொம்ப புத்திசாலித்தனமா.. இந்த மாதிரி டெப்பாசிட் கேக்கற தளங்களை தவிர்த்திடுவாங்க.. அந்த மாதிரி யோசிக்கறங்களுக்காகவும் நிறைய தளங்களை ஓப்பன் பண்ணி வைச்சிருக்காங்க.. அவங்களோட விளம்பரம் எப்படி இருக்கும்னா.. நீங்க டெப்பாசிட் எல்லாம் தரவேண்டாம்.. உங்களுக்கு தினமும் இவ்வளவு ஃபாம்களை நெட்ல ஃபில் பண்ணித்தரனும்.. அந்த மாதிரி ஃபில் பண்ணப் பண்ண உங்களோட பணம் அக்கவுண்ட்ல சேர்ந்துட்டே இருக்கும்.. கரெக்டா 45 நாட்கள்ல உங்களுக்கு பணத்தை அனுப்புவோம்.. அப்படின்னு இருக்கும்.. அதையும் நம்பி அந்த மாதிரியும் செய்றவங்களுக்கு பணம் வருமான்னு அந்தமாதிரி வேலை செய்தவங்களைக் கேட்டால் தெரியும்..
ஹோம் ஜாப்ஸ் பண்ணனும்னு நினைக்கறவங்க.. நெட்கனெக்சன் யூஸ் பண்ணி வேற என்ன வழிகள்ல எல்லாம் பணம் சம்பாதிக்கனும்னு நினைக்கறாங்களோ.. அவ்வளவு வழிகள்லயும் அவங்களை ஏமாத்தறதுக்கு நிறைய தளங்கள் இருக்கு.. இந்தமாதிரி விசயங்கள்ல இறங்கினவங்க எவ்வளவுதான் உஷாரா இருந்தாலும்.. கண்டிப்பா ஏமாந்துதான் போறாங்க..
இந்த மாதிரி வேலைகளைத் தர்றதுக்கும் நிறைய கம்பெனிகள் பெரும்பாலான நகரங்கள்ல முழைச்சிடுச்சு.. அந்தமாதிரி கம்பெனிகள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கற விசயம் டேட்டா என்ட்ரி, டேட்டா கன்வெர்சன் இந்த மாதிரி பிராஜெக்டுகளைத்தான்.. அந்தக் கம்பெனிகளை அப்ரோச் பண்றவங்ககிட்ட அவங்களோட டெர்ம்ஸ்&கண்டிசன்ல நிறைய விசயங்களை எழுதியிருப்பாங்க.. அதுல சில விசயங்கள் என்னன்னா?
1. ஒரு பக்கத்திற்கு 6 எழுத்துப் பிழைகளுக்கு மேல இருக்கக்கூடாது (ஒரு தோராயமா சொல்லியிருக்கேன்).
2. 6 பிழைகள் இருக்கும் பட்சத்துல உங்களுடைய வேலை நிராகரிக்கப்படும். (அதனால திரும்பவும் அந்த வேலையை செய்யனும்.. ஆனால் திரும்பவும் சப்மிட் பண்றப்போ ரெண்டாவது தடவையா தரத்தை செக் பண்றதுக்காக ஒரு குறிப்பிட்ட அமெளண்ட்டை பிடிச்சிடுவாங்க.. அதுவும் ரெண்டாவது முறை உங்க உழைப்பை ஏத்துக்கறமாதிரி இருந்தாத்தான்)
3. குறிப்பிட்ட தேதிக்குள்ள சப்மிட் பண்ணனும்.. தேதிக்கு ஒரு நாள் மிஸ் ஆனாலும் ஏத்துக்கப்படாது.
4. மொத்தமா தரம் 95% இருக்கனும்.
5. இரண்டு முறை தரத்தை இழக்கும் பட்சத்துல அக்ரிமெண்ட் கேன்சல் ஆகும்.
இப்படி நிறைய எழுதியிருப்பாங்க.. ஆனால் நமக்கு சம்பாதிக்கனும்.. முன்னேறனும்.. அப்படிங்கற வெறிமட்டுமே இருக்கும்.. அந்த அக்ரிமெண்ட்ல இருக்கற ஓட்டைகள் எல்லாம் தெரியாது.. அவங்க கேக்கற டெப்பாசிட்டைக் கட்டிட்டு அக்ரிமெண்ட் போட்டுடுவோம்.. நீங்க கண்ணே.. மணியேன்னு பார்த்து பார்த்து டைப் பண்ணினாலும் உங்க பைல்ஸ் ரிஜெக்ட் ஆகும்.. அப்படி ஏதும் நடக்கலைன்னா.. உங்க பணத்தை டெலிவர் பண்ற டைமுக்கு ஒரு லெட்டர் அனுப்புவாங்க.. அதுல இப்போ பிராஜெக்ட் கொஞ்ச நாளைக்கு வராது.. வர்றப்போ உங்களுக்கு இன்ஃபாம் பண்றோம்.. அதேபோல பணமும் அப்பத்தான் கிடைக்கும்ங்கற மாதிரி எதையாவது எழுதியிருப்பாங்க.. பட்டை நாமம்.. உங்க உழைப்புகளையும் முழுமையா உறிஞ்சிக்கிட்டு அதுக்கேத்த ஊதியத்தைக் கொடுக்க மாட்டாங்க.. ஆனால் சில அறிதான நேரங்கள்ல எல்லாமே கரெக்டா நடக்கும்.. அப்போ நமக்கு என்ன தோனும்.. இதே மாதிரி இன்னும் 4 சிஸ்டம் வாங்கிப்போட்டு நாலு பேரை வைச்சி வேலை வாங்கினா இன்னும் சம்பாதிக்கலாம்னு நினைப்போம்.. அப்படி விரிவு பண்றவங்களுக்கு பெரிய ஆப்புதான்..
இந்தமாதிரி வேலைகள் செய்றவங்க நிறைய பேரை அடிக்கடி நான் சந்திக்க நேர்ந்ததால.. அவங்களுக்கு கடைசியா என்ன நிலை ஆகும்னு நல்லாவே தெரியும்.. ஆனா என்ன சொன்னாலும் அப்போ அவங்களுக்கு இருக்கற மனதைரியம், சம்பாதிக்கனும்ங்கற வெறி.. அவங்களை யோசிக்க விடாது.. இந்தமாதிரி வேலை செய்றவங்க எல்லாத்தையும் நான் குறை சொல்லல.. ஆனா இந்த வேலைகள்ல நிறைய ரிஸ்க் இருக்கு.. ஏமாத்திடறதுக்கு நிறைய சான்சஸ் இருக்கு.. உங்களோட கிளையண்ட் நேரடியா உங்க பிராஜெக்டை ரன் பண்றவரா இருந்தா ஒரு பிரச்சினையும் இருக்காது.. இடையில ஒரு ஆள் இருந்து வாங்கித்தர்ற பிசினசா இருந்தா கண்டிப்பா கொஞ்சம் யோசிச்சு செயல்படலாம்னு நினைக்கறேன்..
உண்மைங்க. ஆரம்பத்தில் விவரம் தெரியாம இந்த டேடா எண்ட்ரி வேலைக்கு சேரலாம்னு, ரூ 2000 போச்சு எனக்கு. ஏமாத்திட்டாங்க! அப்புறம் விசயம் புரிஞ்சது!
ReplyDeleteஎன்னோட நண்பர்கள் நெறைய பேர் இந்த மாதிரி பணத்தை இழந்திருக்காங்க! நல்ல பதிவு பாபு!
ReplyDeleteஇப்படியெல்லாம் திருட்டுத்தனம் பண்ணுறாங்களா ..?
ReplyDeleteஎன்னோட நண்பர்கள் சிலர் கூட இப்படி ஏமாந்ததா கேள்விப்பட்டேன் ..
பாவம் பணத்தையும் வாங்கிட்டு , கண்ணு வலிக்க வேலையும் பார்த்துட்டு ஏமாத்துறாங்க ..? என்ன பண்ணுறது .. நாம கொஞ்சம் உசாரா இருக்கணும் ..!!
அட இப்படிலாம் நடக்குதா... பகிர்வுக்கு நன்றி பாஸ்
ReplyDeleteநல்ல பதிவு விழிப்புணர்வுடன் இருக்க. நன்றி.
ReplyDeleteஎப்படியெலாம் யோசிக்கிறாங்க ..
ReplyDeleteஅனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் ,நன்றி தல ,,
ReplyDeleteநல்ல விவரங்களை அழகாக தந்திருக்கிறீர்கள். அருமை பாஸ்!!
ReplyDeleteஅவசியமான பதிவுங்க..... சில பேர் விவரம் தெரியாமலே ஏமாந்து விடுகிறார்கள்.
ReplyDeleteபயனுள்ள் பதிவுக்கு நன்றி
ReplyDeleteமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. தேவையான பதிவு.
ReplyDeleteYes, I heard about these a lot... nice informative post
ReplyDeleteநல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
ReplyDeleteமறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. நன்றி
ReplyDeleteசரியா சொன்னீங்க...
ReplyDeleteஎனது நண்பர் ஒருவர் நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம இந்த விஷயத்துல முதலீடு செஞ்சி கைசுட்டுக்கிட்டாரு. இந்த மாதிரி வேலைகள் வாங்கும்போது முக்கியமான விஷயம் நாம கொடுக்கிற அவுட்புட்-ஐ அவங்க என்ன விதத்துல யூஸ் பண்றாங்கன்னு கேட்டு விசாரிச்சோம்னா அவங்க ஃப்ராடு கம்பெனியா இல்ல நல்ல கம்பெனியான்னு தெரியும். ஏன்னா, என் நண்பர் வாங்குன டேட்டா எண்ட்ரி பக்கங்கள் எல்லாமே ஏதோ ஸ்கூல் ரைம்ஸ் புக் பக்கங்களா இருந்தது. அந்த ரைம்ஸ் பக்கங்களை டேட்டா எண்ட்ரி பண்ணி அவங்க என்ன செய்யப்போறாங்கன்னு சந்தேகமாவே இருந்தது. எவ்வளவோ சொன்னேன். ஆனா, நண்பர் கேக்கலை. இப்போ புலம்புறாரு... சரியான விஷயத்தைதான் பகிர்ந்திருக்கீங்க...
-
DREAMER
oho
ReplyDelete@எஸ்.கே..
ReplyDeleteகாலம் கடந்துதான் இந்தமாதிரி ஆளுங்களைப் பத்தி தெரியவருது.. நாம ஜாக்கிரதையா இருந்துக்கிறது நல்லது..
உங்களுடைய அனுபவத்தையும் பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி எஸ்.கே..
@சிவா..
என்னுடைய நண்பர்களும் தான் சிவா.. :(
@ப.செல்வக்குமார்..
ஆமாம் செல்வா.. நாமதான் கொஞ்சம் உசாரா இருக்கணும்..
@அருண் பிரசாத்..
வருகைக்கு நன்றிங்க..
@இளங்கோ..
நன்றி இளங்கோ..
@கே.ஆர்.பி. செந்தில்..
வருகைக்கு நன்றிங்க..
@புதிய மனிதா..
நன்றிங்க..
@எம் அப்துல் காதர்..
நன்றிங்க..
@சித்ரா..
வருகைக்கு நன்றி சித்ரா..
@நிலாமதி..
நன்றிங்க..
@ஜெயந்தி..
நன்றி ஜெயந்தி..
@அப்பாவி தங்கமணி..
நன்றிங்க..
@சுவேதா..
நன்றிங்க..
@prabhadamu..
நன்றிங்க..
@டிரீமர்..
///எனது நண்பர் ஒருவர் நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம இந்த விஷயத்துல முதலீடு செஞ்சி கைசுட்டுக்கிட்டாரு. இந்த மாதிரி வேலைகள் வாங்கும்போது முக்கியமான விஷயம் நாம கொடுக்கிற அவுட்புட்-ஐ அவங்க என்ன விதத்துல யூஸ் பண்றாங்கன்னு கேட்டு விசாரிச்சோம்னா அவங்க ஃப்ராடு கம்பெனியா இல்ல நல்ல கம்பெனியான்னு தெரியும். ஏன்னா, என் நண்பர் வாங்குன டேட்டா எண்ட்ரி பக்கங்கள் எல்லாமே ஏதோ ஸ்கூல் ரைம்ஸ் புக் பக்கங்களா இருந்தது. அந்த ரைம்ஸ் பக்கங்களை டேட்டா எண்ட்ரி பண்ணி அவங்க என்ன செய்யப்போறாங்கன்னு சந்தேகமாவே இருந்தது. எவ்வளவோ சொன்னேன். ஆனா, நண்பர் கேக்கலை. இப்போ புலம்புறாரு... சரியான விஷயத்தைதான் பகிர்ந்திருக்கீங்க...///
ஏனோ இந்த வேலையில முதலீடு செய்றவங்க நிறையப் பேர் முழுக்க ஆராய்ந்து இறங்கறதில்லை.. விளம்பரங்களைப் பார்த்து மயங்கிடறாங்க.. அப்புறம் நீங்க சொன்னமாதிரி கைசுட்டுகிட்டு நிக்கறாங்க..
உங்களுடைய அனுபவத்தையும் பகிர்ந்துகிட்டதுக்கு நன்றிங்க ஹரீஷ்..
@ராம்ஜி_யாஹூ..
வருகைக்கு நன்றிங்க..
நான் ஒரு சி.டி ஆர்டர் பன்னேன். அது DATA JOBS. அது எனக்கு பெங்களுர்ல இருந்து அனுப்பி வச்சாங்க. ரூபாய்.300+v.p.i-15=315.
ReplyDeleteவாங்கிகிட்டேன். அதுல பார்த்தா நிறைய home job address sites
so many all world. all sites is fraud. Money waste. time waste. Everything waste.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ஏமாற்றுவதற்கு ஒரு கூட்டமே இருக்கிறார்கள்
ReplyDelete