புதிருக்கு பதில் சொல்லுங்க?


வணக்கம் நண்பர்களே..

இந்தப் பதிவுல 3 கேள்விகள் கேட்டிருக்கேன்.. உங்களோட விடையை பின்னூட்டமா போடுங்க.. ஆர்வம் குறையாம இருக்கனும்ங்கறதுக்காக உங்களோட பதில்களை கடைசியா வெளியிடறேன்..

1. ஒரு கூடையில 6 முட்டைகள் இருக்கு.. 6 பேர் 6 முட்டைகளை எடுத்துக்கறாங்க.. ஆனால் ஒரு முட்டை மட்டும் கூடையிலயே இருக்கு அது எப்படி?2. ஒரு கொலைகாரன் இருக்கற இடம் தெரிஞ்சு போலீஸ் அவனைப் பிடிக்கறதுக்காக ஒரு வீட்டுக்குப் போறாங்க.. அந்தக் கொலைகாரன் எப்படி இருப்பான்னு போலீஸுக்குத் தெரியாது.. ஆனால் அவன் பேர் ஜான் அப்படிங்கறது மட்டும் தெரியும்.. அந்த வீட்ல 5 பேர் சேர்ந்து சீட்டு விளையாட்டிட்டு இருக்காங்க.. வீட்டுக்குள்ள போன போலீஸ் அந்தக் கூட்டத்துல யார் பேரு ஜான்னு கேக்காம கொலைகாரனை சரியா அரெஸ்ட் பண்ணீடறாங்க.. அது எப்படி?3. ஆறு கிளாஸ் வரிசையா அடுக்கி வைக்கப்பட்டிருக்கு.. அதுல வரிசையா 3 கிளாஸ்ல ஆரஞ்சு ஜூஸ் இருக்கு.. அடுத்த 3 கிளாஸ் காலியா இருக்கு.. அதுல ஒரே ஒரு கிளாஸை மாற்றி வைக்கறது மூலமா ஆரஞ்சு கிளாஸையும், காலி கிளாஸையும் ஒன்ன விட்டு ஒன்னு வைக்க முடியுமா?

26 Responses So Far: