.

Friday, October 29, 2010

பெங்களூரும்.. பகல் வாழ்க்கையும்..

போன பதிவுல பெங்களூரோட இரவு வாழ்க்கையைப் பற்றி சொல்லியிருந்தேன்.. இந்தப் பதிவுல கொஞ்சம் விடிஞ்ச பிறகு நடக்கற விசயங்களை பற்றிப் பேசுவோம்..

இரண்டு வருடங்களுக்கு முன்னே எலக்ட்ரானிக் சிட்டியில ஒரு கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தேன்.. நைட் ஷிஃப்ட் விடிகாலை 4.30க்கு முடியும்.. என்னோட கம்பெனிக்கும் ஆபிஸூக்கும் 20 நிமிட நடை அவ்லோதான்.. இவ்லோ பக்கத்துல இருக்கறவங்களுக்கு ஆபிஸ்ல வண்டி குடுக்கறதில்லைன்னு ரூல்.. அதனால எப்பவும் ஆபிஸ்ல இருந்து வெளியே வந்தவுடனே ராஜ மரியாதையோட பத்து இருபது பாடிகார்டோடவேதான் (நாய்கள்) என்னோட ரூமுக்கு வருவேன்.. ஆபிஸ்ல இருந்து என்னோட ரூமுக்கு போக ஒரு பெரிய கிரெளண்டை கடந்து போகனும்.. ஒருமுறை இப்படி நடந்து போயிட்டு இருந்தப்போ ஆபிஸ்ல இருந்து என்னோட நண்பர் ஒருத்தர்கிட்ட இருந்து போன் வந்தது.. பேசிட்டு சிரிச்சிட்டே வந்துட்டு இருந்தேன்.. ஏதேச்சையா சத்தமா சிரிச்சுட்டேன்.. அப்போ நான் பார்த்த காட்சியில அப்படியே ஷாக்காகி அந்த இடத்துலயே நின்னுட்டேன்.. ஜுராசிக் பார்க் படம் பார்த்திருப்பீங்க இல்லையா.. அதுல திபுதிபுன்னு நிறைய டைனோசர்ஸ் ஓடிவருங்க பார்த்திருக்கோம்ல.. அந்தமாதிரி ஐம்பதுக்கும் மேற்பட்ட நாய்கள் இருக்கும்.. பாய்ஞ்சு ஓடிவந்து என்னை சுத்தி ரெளண்ட் கட்டீடுச்சுங்க.. ஒரு ஐந்து நிமிசம் என்னைப் பார்த்து குலைச்சுட்டு அப்புறம் அதுங்க குழுவுல முடிவு பண்ணீட்டு என்னை ரிலீஷ் பண்ணீட்டு போயிடுச்சுங்க.. இருந்தும் அதுல நாலைஞ்சு பேர் என்னை வீட்டுல விட்டுட்டுத்தான் போனாங்க.. :((

அப்புறம் வேற கம்பெனி மாறியதால வேற வேற இடங்களுக்கு மாறிட்டு இருந்தேன்.. ஒரு ஆண்டுக்கு முன்னாடி மடிவாலான்னு ஒரு ஏரியால இருந்தேன்.. அதுவும் காஸ்ட்லியான ஏரியாதான்.. அங்கே என்னோட ரூமுக்கு பக்கத்துல அதுவும் அந்த ஏரியா போலீஷ் ஸ்டேசனுக்கு முன்னாடி ஒரு வழிப்பறி பண்ணியிருக்காங்க.. ஒருத்தர் நைட் வேலை முடிச்சுட்டு பைக்ல வந்திட்டிருந்திருக்கார்.. கரெக்டா ஒரு டர்னிங்ல ஒரு நாளு பேர் அவரை மடக்கியிருக்காங்க.. அவரும் நம்மளை மாதிரி பைசா எதுவும் எடுத்துப்போகாம உஷாரா ஆபீஸ் போயிட்டு வந்திருக்கார்.. ஆனா விவேக்கை ஒரு படத்துல மடக்கறமாதிரி.. பைக்கை விட்டு இறங்கு தம்பின்னு ரொம்ப மரியாதையா கன்னடத்துல திட்டி நாலு அறை விட்டு கதற கதற அவரோட பைக்கை புடிங்கிட்டு போயிட்டாங்க..

மடிவாலாதான் தமிழ்நாட்ல இருந்து வர்றவங்களும் கேரளாவுல இருந்து வர்றவங்களும் தங்கற ஏரியா.. அதனால ஒவ்வொரு வீக்எண்ட் முடிஞ்சு திங்கட்கிழமை இந்த ஸ்டாப்பிங்ல நிறைய பேர் இறங்குவாங்க.. அப்படி வர்றவங்க சிலரும் இந்த மாதிரி வழிப்பறிகளுக்கு ஆளாகியிருக்காங்க.. ரீசண்டா இந்தமாதிரி விடுமுறைக்கு போயிட்டு வந்த ஒருத்தர்கிட்ட இருந்து ஆறுமாதத்திற்கு முன்ன 20000 ரூபாய் அடிச்சிட்டதா கேள்விப்பட்டேன்.. பாவம்..

இப்படியெல்லாம் போயிட்டிருக்குன்னா இன்னொரு விசயம் பஸ்ல நடக்கற திருட்டுகள்.. பெங்களூர்ல பகல்நேரங்களும் மாலையில இருந்து இரவு நேரங்களும் ரொம்ப டிராஃபிக்கான டைமா இருக்கு.. அதனால பேருந்துகள்ல கூட்டம் நிரம்பி வழியும்.. பெங்களூரோட முக்கியமான பேருந்து நிலையமான மெஜெஸ்டிக்ல இருந்து பஸ் ஏர்றதுனா ஒரு பெரிய டிரையினிங்கே எடுக்கனும்.. ஆனா நாளாக ஆக அதெல்லாம் கத்துக்குவோம்.. அப்படி கூட்டத்துல ஏர்றப்போ பர்ஸையும், மொபைலையும் ஜாக்கிரதையா பார்த்துக்கனும்.. இல்லைனா ரெண்டுமே அம்பேல்தான்.. நாம் மொபைலைக் கையிலயே வைச்சிருந்தாக்கூட நமக்கே தெரியாம அடிச்சிடுவாங்க.. இந்தமாதிரி மொபைல் திருட்டுக்கள் எல்லா இடங்களையுமே நடக்குதுன்னாலும் இங்கே ரொம்ப அதிகம்தான்..

"லாஸ்ட் பட் லீஸ்ட்"டா பெங்களூர்ல இருக்கற பெரிய வழிப்பறிக் கொள்ளைக்காரங்க.. இங்கே இருக்கற டிராபிக் போலீஸ்தான்.. என்னதான் அவங்களை பத்தி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருந்தாலும் இங்கேயும் அவங்களைப் பத்தி எழுதாம இருக்கமுடியல.. பெரும்பாலும் போக்குவரத்து விதிகள் எங்கே மீறப்படுது.. சிக்னல் இருக்கற இடங்கள்லதான் இல்லையா.. சிக்னல் போட்டிருந்தாலும் மதிக்காமப் போறது, யூ டர்ன் போடக்கூடாத இடங்கள்ல வண்டியை வளைக்கறது இந்தமாதிரி தப்புகள்தான் அதிகம் நடக்கும்..

பெங்களூர்ல கரெக்டா ஒவ்வொரு சிக்னலுக்கு அடுத்தும் ஒரு பெரிய மரம் இருக்கு.. சிக்னல்ல பொறுப்பா டிராஃபிக்கை கன்ட்ரோல் பண்ற வேலையை விட்டுட்டு.. கடைமையை செய்ய வேண்டிய இடத்துல இல்லாம மரங்களுக்கு பின்னாடி ஒளிஞ்சு நின்னுகிட்டு விதிகளை மீர்றவங்களை மறைஞ்சிருந்து பிடிப்பாங்க இவங்க.. அதுவே போலீஸ் சிக்னல்ல இருந்தால் பொறுப்பா வண்டி ஓட்டனும்னு நினைப்பு வரும் இல்லையா.. மக்களுக்கு ஒருமுறை விதிகளை மீறி மாட்டிக்காம இருந்துட்டாங்கன்னா திரும்பவும் தப்பு பண்ணனும்னு தோனிடும்.. இதுவே டிராபிக் போலீஷ் கரெக்டா அவங்களோட டியூட்டியைப் பார்த்துட்டு இருந்தாங்கன்னா கண்டிப்பா கொஞ்சம் கொஞ்சமா இந்த விதிமீறல்கள் குறைஞ்சிடும்.. ஏன்னா 3 முறை ஃபைன் கட்டினதுக்கே இப்பவரைக்கும் விதிகளை மீறாம ஓட்டிட்டு இருக்கேன்.. ஹி ஹி ஹி..

அவங்க தன்னோட கடமையைத்தான செய்றாங்கன்னு நீங்க கேக்கலாம்.. கரெக்டுதான்.. ஆனால் அவங்கெல்லாம் தகுந்த நேரத்துல தங்களோட கடமையை செய்தாங்கன்னா இங்க ஏற்படற டிராபிக்ல கால்வாசியை கன்ட்ரோல் பண்ணிடலாம்.. ஆனால் மக்கள்கிட்ட காசு வாங்கறப்ப மட்டும் கடமை தவறாம இருப்பாங்க.. போனவருசம் ஆசியாவிலேயே போக்குவரத்து விதிகளை மீறியதுக்காக அதிகமா வசூலான சிட்டினு பெங்களூரை ரேட் பண்ணியிருந்தாங்களாம்..

நான் பெங்களூர் வந்து நாலரை வருசத்துல 3 முறை டிராபிக்ல ஃபைன் கட்டியிருக்கேன்.. ஆனால் எதுக்குமே ரிஷிஃப்ட் எல்லாம் கொடுத்ததில்லை.. இந்தமாதிரி எவ்வளவு பேர்கிட்ட தினமும் பிடுங்குவாங்க.. அப்போ கரெக்டான கணக்கைக் காட்டினா உலகத்துலயே முதலிடம் கிடைச்சாலும் கிடைக்கும்.. :-)))
அவங்களை ஏன் இந்த பேர் சொல்லிக்கூப்பிட்டேன்னா அவங்க மறைஞ்சிருந்து ஓடிவந்து மடக்கற அழகைப் பார்க்கனுமே.. கண்டிப்பா "அந்த" புரொபெசன்ல இருக்கவங்க தோத்தே போயிடுவாங்க.. அப்படி இருக்கும்.. :-)))

இந்தமாதிரி பலவழிகள்ல வெளிமாநிலங்கள்ல இருந்து வர்றவங்க கிட்டேயிருந்து இங்கே திருட்டுகள் நடக்குது.. அதனால முடிஞ்சவரைக்கும் நம்ம சேஃப்டியை நாமதான் பார்த்துக்கனும்..

முந்தையப் பதிவை படிக்க இங்கே கிளிக் பண்ணுங்க..
பெங்களூரும்.. இரவு வாழ்க்கையும்.

16 comments:

  1. நைட்டுதான் பிரச்சினைன்னா பகல்லையுமா! அட தேவுடா!!! அந்த பகவான்தான் பெங்களூருவாசிகளைக் காப்பாத்தணும்!!!!

    ReplyDelete
  2. நான் புக் பண்ணியிருந்த பெங்களூர் டிக்கெட் கான்செல்!

    ReplyDelete
  3. @சிவா..
    ////நைட்டுதான் பிரச்சினைன்னா பகல்லையுமா! அட தேவுடா!!! அந்த பகவான்தான் பெங்களூருவாசிகளைக் காப்பாத்தணும்!!!! ////

    கரெக்டுங்க சிவா.. இங்க இருக்கற பிரச்சினைகளை சமாளிக்கறதுக்குள்ள நாங்க படற கஷ்டம் இருக்கே!! அய்யய்யய்யோ...

    ஆனால் சிவா!! பெங்களூர்ல நிறைய நல்ல விசயங்களும் இருக்கு.. கண்டிப்பா அதையும் எழுதறேன்..

    ReplyDelete
  4. @சித்ரா..
    ///நான் புக் பண்ணியிருந்த பெங்களூர் டிக்கெட் கான்செல்! ///

    அவசரப்பட்டு முடிவு பண்ணீடாதீங்க சித்ரா.. இங்கே நல்ல விசயங்கள் நிறைய இருக்கு.. அதைப்பற்றியும் பின்னாடி பேசுவோம்.. :-))))

    ReplyDelete
  5. இவ்வளவு பிரச்சனை இருக்கா...

    ReplyDelete
  6. //அந்தமாதிரி ஐம்பதுக்கும் மேற்பட்ட நாய்கள் இருக்கும்.. பாய்ஞ்சு ஓடிவந்து என்னை சுத்தி ரெளண்ட் கட்டீடுச்சுங்க.. //

    ஐ ., ஜாலி..!!

    ReplyDelete
  7. //அப்படி கூட்டத்துல ஏர்றப்போ பர்ஸையும், மொபைலையும் ஜாக்கிரதையா பார்த்துக்கனும்..//

    வீட்டுலையே வச்சிட்டு போய்ட வேண்டியதுதானே ..!!

    ReplyDelete
  8. இவ்ளோ கஷ்டம் இருக்கா ..? உண்மைலேயே படிக்கிரக்கே கஷ்டமா இருக்குங்க . எல்லோரும் அவன் பெங்களூர்ல இருக்கான் , பயங்கரமா சம்பாதிக்கிறான் அப்படின்னு சொல்லுறாங்க .. ஆனா இவ்ளோ கஷ்டம் இருக்குது அப்படிங்கறது இப்பதான் தெரியுது ..!!

    ReplyDelete
  9. இது பெங்களூரு வர நினைக்கும் என்னைப் போன்றோருக்கு ஒரு முன்னெச்சரிக்கை. நன்றி பாபு.

    ReplyDelete
  10. தல ரொம்ப கஷ்டபட்டுருக்கீங்க போல ..அருமையான பதிவு

    ReplyDelete
  11. //அதுல நாலைஞ்சு பேர் என்னை வீட்டுல விட்டுட்டுத்தான் போனாங்க.. :((//

    ஹ்ம்ம்...பொறுப்பா வேலை பாத்தாலும் 'டைனோசர்' ரேஞ்சுக்குதானே கம்பேர் பண்றீங்க என்ன சொல்ல, நல்ல பிள்ளையா இருந்தாலும் நாட்டுல ஒத்துக்க மாட்டேங்கறாங்கப்பா... :))

    ReplyDelete
  12. @வெறும்பய..
    ///இவ்வளவு பிரச்சனை இருக்கா... ///

    ஆமாங்க.. :-((

    ReplyDelete
  13. @ப.செல்வக்குமார்..
    ////
    //அந்தமாதிரி ஐம்பதுக்கும் மேற்பட்ட நாய்கள் இருக்கும்.. பாய்ஞ்சு ஓடிவந்து என்னை சுத்தி ரெளண்ட் கட்டீடுச்சுங்க.. //

    ஐ ., ஜாலி..!! ////

    செல்வா!! ஐ.. ஜாலியா.. இருங்க ஒருமுறை உங்களை அதுங்ககிட்ட புடிச்சுக்குடுக்கறேன்.. இப்பவே இந்தக்கடி கடிக்கறீங்க.. யோசிச்சுக்கங்க.. :-))

    ReplyDelete
  14. @நாகராஜசோழன் MA..

    ///இது பெங்களூரு வர நினைக்கும் என்னைப் போன்றோருக்கு ஒரு முன்னெச்சரிக்கை. நன்றி பாபு. ///

    நன்றிங்க..

    ReplyDelete
  15. @புதிய மனிதா..
    நன்றிங்க..

    ReplyDelete
  16. @அன்னு..
    ////
    //அதுல நாலைஞ்சு பேர் என்னை வீட்டுல விட்டுட்டுத்தான் போனாங்க.. :((//

    ஹ்ம்ம்...பொறுப்பா வேலை பாத்தாலும் 'டைனோசர்' ரேஞ்சுக்குதானே கம்பேர் பண்றீங்க என்ன சொல்ல, நல்ல பிள்ளையா இருந்தாலும் நாட்டுல ஒத்துக்க மாட்டேங்கறாங்கப்பா... :)) ////

    :-)))

    ReplyDelete