.

Saturday, October 9, 2010

THE EYE - திரை விமர்சனம்

The Eye (2008)
ஜெசிகா ஆல்பா இந்தப் படத்தோட ஹீரோயின்.. படத்துல இவருக்குப் பேர் சிட்னி..

படத்தோட முதல் காட்சியிலயே ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கறதைக் காட்டறாங்க..

சிட்னிக்கு 5 வயசுல இருந்தே கண்பார்வையில்ல.. அவங்களுக்கு கண் ஆபரேசன் பண்ணி பார்வை வரவழைச்சிடறாங்க.. கண் பார்வை கிடைச்சதுல கண்ணு மட்டும் தெரியாம.. மத்தவங்களால பார்க்க முடியாத மத்த விசயங்களும் அவங்க கண்ணுக்குத் தெரியுது.. கண் கட்டு அவுத்து விட்ட முதல் நாள் இரவே சிட்னியோட பக்கத்து பெட்ல படுத்து இருந்த ஒரு பாட்டியை.. யாரோ கூட்டிப் போறமாதிரி காட்சியைப் பார்க்கறாங்க.. ஆனா அவங்களுக்கு இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா பார்வை வந்துட்டு இருக்கறதால என்ன நடந்ததுன்னு தெளிவா தெரியல.. அடுத்தநாள் நர்ஸ்கிட்ட பக்கத்து பெட்டு பாட்டியைப் பத்தி விசாரிச்சா.. நடுராத்திரியிலயே அந்தமா செத்துப்போச்சுன்னு சொல்றாங்க.. இல்லையே நான் அவங்க எழுந்து போறதைப் பார்த்தேனேன்னு சிட்னி குழம்பினாலும்.. என்ன நடந்ததுன்னு நமக்குப் புரிஞ்சுடுது..

இதுநாள் வரைக்கும் குரலை மட்டுமே கேட்டுட்டு இருந்த சிட்னிகிட்ட.. எல்லாரும் முகத்தைக் காட்டி அறிமுகமாயிக்கறாங்க.. சிட்னி முதன் முதலா தன்முகத்தைக் கண்ணாடியில பார்க்கறாங்க.. இப்போ அவங்களுக்கு பார்வை தெளிவாயிடுச்சு..

முன்னப் பார்த்த மாதிரி காட்சிகள் இப்போ அவங்களுக்கு தெளிவாவே தெரிய ஆரம்பிக்குது.. ஒரு முறை ரோட்ல போயிட்டு இருக்காங்க.. அப்போ ஒரு விபத்து நடந்து.. ஒரு பொண்ணு செத்துப் போயிடுது.. அந்தப் பொண்ணோட ஆவியை ஒரு கருப்பு உருவம் வந்து கூட்டிப் போறது சிட்னிக்குத் தெளிவா தெரியுது.. இந்த மாதிரி காட்சிகள் மட்டுமில்லாம.. சிட்னி இதுவரைக்கும் பார்க்காத இடங்களும்.. ஏதோ ஒரு இடத்துல தீ எரியற மாதிரி காட்சிகளும் அடிக்கடி வந்து அவங்களை பயமுறுத்துது..

ஒரு முறை சிட்னி தன்னோட போட்டோவைப் பார்த்துட்டு இது யாருன்னு கேக்கறாங்க.. என்ன லூசுமாதிரி உளர்ற.. நீதான் இதுன்னு அவரோட சகோதரி சொல்றதைக் கேட்டு பயங்கரமா அதிர்ச்சியாயிடறாங்க.. தன்னோட போட்டோவைப் எடுத்துட்டுப் போயி கண்ணாடி முன் நின்னு பார்க்கறாங்க.. அப்போ நடக்கற சீன்ல.. அவங்களை விட நாமதான் கொஞ்சம் பயந்துடுவோம்.. இப்படி இவங்களுக்கு நடக்கற சம்பவங்களைப் பார்த்து.. பேசாம குருடியாவே இருந்திருக்கலாம் போலன்னு நமக்குத் தோனும்..

இந்த புதிர்களுக்கு எல்லாம் விடை தெரிஞ்சுக்க.. தனக்குக் கண் கொடுத்த பெண்ணைப் பத்தி தெரிஞ்சுக்க.. அந்த பெண்ணோட ஊருக்கு சிட்னி  போறாங்க.. முதல் சீன்ல ஒரு பொண்ணு தூக்கு போட்டுக்குமே.. அந்தப் பொண்ணோட கண்ணைத்தான் சிட்னிக்கு வச்சிருக்காங்க.. அந்தப் பொண்ணு செத்துப் போனதுக்கு காரணத்தையும் சிட்னி தெரிஞ்சுக்கறாங்க.. செத்துப் போன பொண்ணு தன்கிட்ட எதையோ சொல்ல நினைக்குதுன்னு சிட்னிக்குப் புரிஞ்சுடுது.. அது என்ன விசயம்.. சிட்னியோட நிலைமை என்ன?.. அப்படிங்கறது மீதி படம்..

அமைதியான அழகு ஜெசிகா ஆல்பாவுக்கு.. எமனை நேர்ல பார்த்தா எப்படி பயம் வரும்னு ஜெசிகா ஆல்பா ரொம்ப அழகா காட்டியிருப்பாங்க.. சிட்னிக்கு பார்வை தெரிஞ்சவுடன் அவங்க பார்க்கற காட்சிகள்ல நம்மளையும் பயமுறுத்த ட்ரை பண்ணியிருக்காங்க..
 படம் ரொம்ப பயப்படற மாதிரியெல்லாம் இருக்காது.. நைட் நேரத்துலயும் பயப்படாம பார்க்கக்கூடிய ஹாரர் மூவி இது..


7 comments:

  1. அருமையான விமர்சனம் பாத்துடலாம் ....தொடர்ந்து எழுதுங்கள்;

    ReplyDelete
  2. ஆர்வத்தை தூண்டும் திரை பார்வை நல்ல இருக்கிறது நண்பரே . பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் மீண்டும் வருவேன்

    ReplyDelete
  3. Good review. I liked the movie too.... :-)

    ReplyDelete
  4. சிறப்பாக விமர்சனம் செய்துள்ளீர்கள். ஹாரர், திரில்லர் எனக்கு பிடித்த genre. பார்க்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  5. //இல்லையே நான் அவங்க எழுந்து போறதைப் பார்த்தேனேன்னு சிட்னி குழம்பினாலும்.. என்ன நடந்ததுன்னு நமக்குப் புரிஞ்சுடுது..//

    ஓ, படிக்கும் போதே என்னமோ பெய பார்த்த மாதிரி இருக்கு ..,
    இது நமக்கு சரிப்படாது .. பயன்திடுவேன் .. ஹி ஹி ஹி .

    ReplyDelete
  6. @புதிய மனிதா..
    கண்டிப்பாக எழுதுகிறேன்.. வருகைக்கு நன்றி..

    @பனித்துளி சங்கர்..
    நன்றி நண்பரே.. கட்டாயம் வாருங்கள்..

    @சித்ரா..
    நன்றி சித்ரா..

    @எஸ்.கே..
    நன்றி எஸ்.கே..

    @ப.செல்வக்குமார்..
    ///ஓ, படிக்கும் போதே என்னமோ பெய பார்த்த மாதிரி இருக்கு ..,
    இது நமக்கு சரிப்படாது .. பயன்திடுவேன் .. ஹி ஹி ஹி .///

    ஹா ஹா ஹா.. நீங்க நினைக்கற மாதிரி ரொம்ப பயமா எல்லாம் இருக்காது செல்வா..
    வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  7. நான் ஏற்கனவே பார்த்த படம் என்றாலும், மீண்டும் பார்க்க தூண்டும் விமர்சனம்..! நல்லா எழுதியிருக்கீங்க நண்பா..!

    -
    DREAMER

    ReplyDelete