இன்செப்சன் - 2007 (இது விமர்சனமல்ல)


நான் ஒரு பெரிய மலை மேல நின்னுட்டு இருக்கேன்.. மேகம் முழுக்க பயங்கர கருப்பா இருந்தது.. திடீர்னு வானத்துல இருந்து ஒரு பெரிய கருப்பு சூறாவளி உருவாச்சு.. ஆங்கிலப் படங்கள்ல வருமே வானத்துல இருந்து சுழன்றுகிட்டே கீழே இருக்கறதை எல்லாம் சுழற்றி தூக்கிட்டுப் போய்டுமே அந்தமாதிரி பெரிய சூறாவளி.. அப்புறம் என்ன சுத்தி நிறைய அந்த மாதிரி உருவாச்சு.. என்னடா இதுன்னு திகிலா நான் பார்க்கறேன்.. அதுல ஒரு சூறாவளி என் பக்கத்துல வந்து கிராஸ் பண்ணிப் போச்சு.. எனக்கு அதைப் பார்த்தவுடனே பக்குன்னு ஆயிடுச்சு.. அந்த சூறாவளியில கருப்பா தெரிஞ்சது பூறா கருப்பு கலர் நாய்ங்க.. அவ்வளவும் நாய்ங்க.. அய்யய்யோன்னு நினைச்சுட்டு நான் நிக்கற இடத்துல இருந்து ஓடிடலாம்னு கீழே பார்க்கறேன்.. இன்னும் பயங்கரமான ஷாக்..

நான் நின்னுட்டு இருக்கறதே அந்த மாதிரி ஒரு சூறாவளியோட டாப்லதான்.. என் காலடியில பூறா நாய்கள் சுழன்றுகிட்டு இருக்கு.. அவ்ளோதான்.. என்னைக் கடிக்க வந்த எல்லா நாய்களையும் கத்திக்கிட்டே சுத்தி சுத்தி உதைச்சேன்.. என்ன ஒரு திரில்லிங்.. திடீர்னு டேய்ய்ய்ய்ன்னு ஒரு பெரிய சத்தம்.. கட்..

எனக்கு படம் பார்க்கறதுன்னா ரொம்ப பிடிக்கும்.. அதுலயும் பேய் படம், மாயாஜாலப்படம், ஆக்சன் படம்னா ரொம்ப இஷ்டம்.. ஆனா நைட்ல உக்காந்து பேய் படம் பார்த்துட்டு நைட் முழுக்க பேய் கனவு கண்டுட்டு கனவுலையும் பயந்துட்டு இருப்பேன்.. ஹி..ஹி..ஹி.. அதேமாதிரி ஆக்சன் படம் பார்த்தன்னா அன்னைக்கு கனவு முழுக்க ஒரே சண்டைதான்.. பின்னியெடுத்துடுவேன்..

ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை வேற வேலை எதுவுமே இல்லாததால.. காலைல "Lord of the rings" படம் பார்க்க ஆரம்பிச்சேன்.. எனக்கு பேண்டசி படங்கள்னாதான் ரொம்ப இஷ்டம்.. படம் ரொம்ப புடிச்சுப் போக.. அன்னைக்கு நைட்டு தூங்கறதுக்குள்ள அதோட மூனு படத்தையும் பார்த்துட்டேன்..

படம் சூப்பர்.. படம் முழுக்க ஒரே மாயாஜாலம்.. ஆவி.. அது இதுன்னு வந்துட்டே இருந்தது.. ஆனா பயப்படறமாதிரி படமெல்லாம் கிடையாது அது.. நிறைய புதுமாதிரியான உயிரினங்களைக் காமிச்சிருப்பாங்க.. நைட் ஆயிடுச்சு... தூங்கிட்டேன்.. கட்..

டேய்ய்ய்ய்ய்ய்ன்னு ஒரு பெரிய சத்தம் கேட்டது.. ஆஹா!! யாரோ உதவி பண்ண வர்றாங்கன்னு தெம்போட உதைக்க ஆரம்பிச்சேன்.. திடீர்னு கண்ணு முன்னாடியே எல்லாமே மறைஞ்சுடுச்சு.. கட்..

முழிப்பு வந்துடுச்சு.. இல்ல முழிக்க வைக்கப்பட்டேன்.. என்னோட நண்பர்கள்தான் கத்தியிருக்காங்க.. அவங்களுக்கெல்லாம் செம உதை போல..

ஹி.. ஹி.. ஹி.. கனவா..


15 Responses So Far: