பதிவுலக நண்பர்களுக்கு நன்றிபதிவு எழுத ஆரம்பிச்சு இன்னையோட 14 நாள் ஆகுதுங்க.. நம்ம வலைப்பதிவ பார்த்தவங்க எண்ணிக்கை இன்று ஆயிரத்தக் கடந்துடுச்சுங்க.. அதுலயும் 990 முதல் 1000 வர்ற வரைக்கும் இமைக்காம பார்த்துட்டே இருந்தேன் நான்.. ஆயிரமாவது நபர் பார்க்கறப்போ அவ்வளவு சந்தோசம் எனக்கு..

எனக்கு ஆதரவளிச்ச உங்க எல்லாத்துக்கும் முதல்ல என்னோட நன்றிங்க..

நான் முதல்ல பதிவு எழுதற ஐடியால எல்லாம் இல்லங்க.. ஆக்சுவலா பயம்.. என்னோட நண்பர் பதிவர் பிரியமுடன் ரமேஷ்தான் கண்டிப்பா நீ நல்லா பதிவுகள் எழுதுவ.. ஒரு வலைப்பதிவ ஆரம்பின்னு எனக்கு தைரியம் கொடுத்தார்.. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த வலைப்பதிவு.. நானும் இப்போ கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டுதான் வர்றேன்.. கண்டிப்பா நம்ம எல்லாத்துக்கும் பயனுள்ளதாக நல்ல பதிவுகளைக் கொடுக்க முயற்சி பண்றேங்க..

உங்க எல்லாத்துக்கும் என்னோட நன்றியை மறுபடியும் தெரிவிச்சுக்கிறேன்..
16 Responses So Far: