.
Friday, August 6, 2010
நீங்களே நியாயம் சொல்லுங்க..
இது எங்க மாமா பையன் படிக்கற ஸ்கூல்ல அண்மையில நடந்த சம்பவம்..
ஸ்கூல்ல எல்லாம் மாதாந்திர தேர்வுகள் நடக்கும் இல்லையா.. போன மாசமும் அவன் ஸ்கூல்ல டெஸ்ட் நடந்துக்கிட்டு இருந்தது.. அவனும் டெஸ்ட் இருந்ததுங்கறதால எப்பவும் போறதவிட ஸ்கூல்லுக்கு சீக்கிரமாகவே போயி ஆபிஸ் ரூம்கிட்ட உக்காந்து டெஸ்ட்டுக்கு பிரிப்பேர் ஆயிட்டு இருந்திருக்கான்.. அப்புறம் டைம் ஆகவே கிளாஸ் ரூமுக்கும் போயிட்டான்.. அவன் பக்கத்துல உக்காந்திருக்கிற இன்னொரு பையன் ரொம்ப நேரம் வரைக்கும் வராம இருந்திருக்கான்.. அந்த பையன் கிளாஸுக்கு வர்றப்ப அன்னைக்கு நடக்கப்போற டெஸ்ட் கொஸ்டின் பேப்பர்ஸ் எல்லாத்தையும் ஆபிஸ் ரூம்ல இருந்து திருடிட்டு வந்து அவன் பேக்குல வைக்கிறத என் மாமா பையன் பார்த்திருக்கான்..
கொஸ்டின் பேப்பர திருடின அந்த பையன், அவனுக்கு தெரிஞ்ச பசங்ககிட்ட எல்லாம் அதைக் கொடுத்திருக்கான்.. ஒரு பையன் கையில இருக்கற கொஸ்டின் பேப்பரப் பார்த்த ஒரு டீச்சர்.. என்னடா இது இன்னைக்கு டெஸ்ட்டுக்கு குடுக்க வேண்டியதாச்சே.. எப்படி உனக்கு கிடைச்சுதுன்னு கேட்டிருக்காங்க.. அவன் திருதிருன்னு முழிச்சுருக்கான்.. அவன ஆபிஸ் ரூம் கூட்டிட்டு போய் பார்த்தா ரூமே பயங்கரமா கலைஞ்சு கிடந்துருக்கு.. அப்புறம் அவன மிரட்ட அந்த கிளாஸ் பையன்தான் குடுத்தானு சொல்லிருக்கான்.. என் மாமா பையன்தான் ஆபிஸ் ரூம்கிட்ட உக்காந்து படிச்சுட்டிருந்தான்கிறதால அவன்தான் திருடிட்டான்னு நினைச்சு அவன கூப்பிட்டு பயங்கரமா மிரட்டியிருக்காங்க.. அவனும் திருடின பையனையும் போட்டுக் குடுத்திருக்கான்.. அப்புறம் திருடின பையனக்கூப்பிட்டு அவனோட பேரண்ட்ச வரச்சொல்லி உடனே ஸ்கூல விட்டு நீக்கிட்டாங்க..
இப்போ என் மாமா பையன்மேல எந்த தப்பும் இல்லன்னு புரியுது இல்லையா..
ஆனா.. அவன்கிட்ட ஒரு பேப்பர குடுத்து இப்படி எல்லாம் இனி நடந்துக்க மாட்டேன்னு எழுத சொல்லியிருக்காங்க.. அவனும் சின்ன பையன்தான எழுதிக் குடுத்துட்டான்.. உடனே எங்க மாமாவ ஸ்கூலுக்கு வரச்சொல்லி உங்க பையனும் இந்த சம்பவத்துக்கு உடந்தைன்னு ஒப்புக்கிட்டு பேப்பர்ல எழுதிக் குடுத்திருக்கான்.. இனி புது கொஸ்டின் பேப்பர் அடிக்க நீங்கதான் பணம் குடுக்கணும்.. அப்படின்னு இவன்மேல பழியத் தூக்கிப்போட்டுட்டாங்க.. உண்மையிலயே திருடின பையன்கிட்ட டி.சி. குடுத்து அனுப்பிடதால அவன்கிட்ட பணம் வாங்க முடியாதுல்லயா.. அதனால இப்படி பிளான் பண்ணிட்டாங்க..
என் மாமாவும் வேறவழியில்லாம பணத்தக் கட்டியிருக்கார்..
இதுக்குள்ள விசயம் ஸ்கூல் முழுக்க பரவினதால இவனுக்கும் ரொம்ப அவமானம்.. இப்படி பணத்துக்காக வேணும்னே அவனையும் பிரச்சனையில கோர்த்து விட்டுட்டாங்க அந்த ஸ்கூல் ஆளுங்க.. இதனால அவனோட மனசு எவ்வளவு பாதிக்கும்.. இத எல்லாம் யோசிக்கமாட்டாங்களா ஸ்கூல் நடத்தறவங்க.. இது என்ன நியாயங்க.. கிடைக்கிற சாக்குல எல்லாம் பணம் புடுங்கறதே வேலையாப் போச்சு ஸ்கூல் நடத்தறவங்களுக்கு.. ஆனா இதுல தப்பே செய்யாத ஒரு பையனும் பாதிக்கப்படுவானேன்னு யோசிக்க வேண்டாம்..
நீங்களே நியாயம் சொல்லுங்க..
Subscribe to:
Post Comments (Atom)
நண்பரே பதிவு கலக்கல், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பரே தங்களுக்கு ஏதேனும் பிளாக்கர் டிப்ஸ் தேவை பட்டால் www.vandhemadharam.blogspot.com வந்து பார்க்கவும்.
ReplyDeleteதங்களது வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சசிகுமார்.. உங்களது பின்னூட்டம் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது..
ReplyDeleteஉங்க பிளாக்கையும் போய் பார்த்தேன்.. மிகவும் பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது உங்களது பதிவுகள்.. என்னைப் போன்று பதிவுலகத்திற்கு புதியவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் உங்களது பதிவுகள்.. நன்றி..
உண்மை தான் தோழா, இந்த மாதிரி நிறையா அநியாயங்கள் நடக்கிறது , அவற்றை வெளி கொண்டுவர நம் எழுத்துக்கள் ஒரு பாலமாய் அமையும்...இந்த மாதிரி தப்பு பண்றவங்கள சுட்டுக்கொல்லனும். அடிச்சா தான் பயம் வரும் தப்பு பண்றவனக்கு...பார்ப்போம், விடிய செய்வோம் நம் எழுத்து மூலம்...அவசியமான பதிவு,,
ReplyDeleteநிச்சயமாய் செய்வோம் விஜய்..
ReplyDeleteஉங்களது கருத்துக்களுக்கு நன்றி..
கேள்வித்தாள் இருந்த இடத்தினை நன்றாக பாதுகாக்காத அவர்களுக்குத்தான் தண்டனை தரவேண்டும்.
ReplyDeleteஅவர்கள் சிந்திக்கும் புத்தி இல்லாதவர்கள்..
@மாதவன்..
ReplyDeleteஅருமையா சொன்னீங்க மாதவன்.. இந்தக் கேள்விதான் நியாயமா எல்லாருக்கும் தோனியிருக்கணும் இல்லையா.. அதை விட்டுட்டு இப்படி ஒன்றுமறியாதவர்களுக்கு தண்டனை கொடுக்கறாங்க..
உங்களது முதல் வருகைக்கும் கருத்துக்கும் எனது நன்றி..