.

Wednesday, August 4, 2010

நான் புதுசுங்க..



ம்ம்ம்.. என்னப்பத்தி சொல்லனும்னா என் பேரு அப்துல்காதர்.. எங்க ஊர்லயும் வீட்லயும் என்ன பாபுன்னுதான் கூப்பிடுவாங்க.. என்னன்னு தெரியல என்ன பாபுன்னு கூப்பிடறவங்களோட நான் ரொம்ப அன்னியோன்யமா ஃபீல் பண்ணுவேன்..

என்னோட ஊர் பழனிங்க.. அங்கதான் என்னோட ஸ்கூல், காலேஜ் எல்லாம் முடிச்சேன்.. இப்போ பெங்களூர்ல ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்..

என்னைப்பத்தி சொல்லனும்னா, 10th முடிக்கற வரைக்கும் நான் ரொம்ப அமைதியான பையன்.. அப்புறம் ப்ளஸ் ஒன்ல நம்ம அறிவுக்கு தகுந்த மாதிரி அக்கவுண்ட்ஸ் எடுக்கலாம்னு இருந்தேன்.. அதுக்காக அக்கவுண்ட்ஸ் குரூப்ப பத்தி தப்பா சொல்ல வரல.. எனக்கு இந்த தவளை அருத்து டெஸ்ட் பண்றதும், குடுவை எடுத்து ஆராய்ச்சி பண்றதும் பிடிக்கல அவ்லோதான் (உண்மையில நான் கணக்குல வீக்).. ஆனா அங்க இருந்த ஒரு வாத்தியார் அங்கே அதிகமா யாருமே சேர்ந்திருக்காத EMRனு ஒரு குரூப்புல புடிச்சு போட்டுட்டார்.. அப்புறம் தான் தெரிஞ்சது அதுல சப்ஜெக்டே கணக்கும், தொழிற்கல்வியும்தான்னு.. எங்க வகுப்புல மொத்தம் 14 பேர்.. ஒருத்தர் இன்னொருத்தர விட்டுக்குடுக்க மாட்டோம்.. படிப்புல சொல்ல வரல, சேட்டைல.. ரொம்ப ஜாலியா போனது என்னோட ஸ்கூல் லைஃப்.. ஏதோ சராசரியா மார்க் வாங்கி 12வது பாஸாயிட்டேன்..

அப்புறம் காலேஜ்.. கண்டிப்பா கம்ப்யூட்டர் படிப்புதான் வேணும் எனக்குன்னு வீட்ல அடம்பண்ணினேன்.. ஆனா நாம வாங்குன மார்க்குக்கு காலேஜுல சீட்டு குடுக்கல.. அதனால சீட்டை நானே வாங்கிட்டேன்.. அங்க பார்த்தா சேட்டை எல்லாம் பண்ண முடியலைங்க.. கம்ப்யூட்டர்னா பிராக்டிகல் மார்க் இருக்காம்ல.. என்னோட கனவெல்லாம் வீணாப் போச்சு.. ஆனா ஒரே ஆறுதல் என்னன்னா எங்க காலேஜ்ல ஸ்ட்ரைக் அடிக்கறதெல்லாம் ரொம்ப சாதாரணமா நடக்கும்.. ஊர்ல ஏதாவது புதுப்படம் ரிலீஸாச்சுன்னா போதும்.. நம்ம சீனியருங்க ஒரு டெய்லிப் பேப்பர வாங்கி ஹெட்லைனப் படிப்பாங்க.. அப்படியே அதை ஒரு பேப்பர்ல எழுதி நம்ம காலேஜ் கேட்ல ஒட்டிடுவாங்க.. காலேஜ் லைஃப் ரொம்ப நல்லா போச்சுன்னு சொல்ல முடியலைன்னாலும் ஓரளவு பரவாயில்ல..

இப்போ நான் பெங்களூர்ல ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்..

நானும் ரொம்ப காலமா பிளாக் படிச்சுட்டு தாங்க இருக்கேன்.. எனக்கும் ஏதாவது எழுதணும்னு ஆசை.. ஆனா என்ன எழுதறது?.. இப்பவும் அது தெரியல.. இருந்தாலும் கடவுள் மேல பாரத்தப்போட்டுட்டு ஒரு பிளாக் கிரியேட் பண்ணிட்டேன்..

15 comments:

  1. பதிவுலகுக்கு நீ வந்தது ரொம்ப சந்தோசம் அப்துல்....நல்லா இருக்கு உன்னோட முதல் பதிவு....

    ReplyDelete
  2. ஹி.. ஹி.. ஹி.. நன்றி ரமேஷ்..

    ReplyDelete
  3. பதிவுலகத்திற்கு வரவேற்கிறேன்...

    உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்...

    வாழ்த்துக்கள்...
    htttp://www.jerin.co.in

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. எந்த பதிவும் போடறதுக்கு முன்னயே என்ன உற்சாகப்படுத்தறதுக்கு ரொம்ப நன்றிங்க..

    பின்னூட்டத்திற்கு நன்றி காபிக் கடை, ஜெரின், செந்தில்

    ReplyDelete
  6. அட நண்பா , ப்ளாக் ஆரம்பிச்சுடீங்க தானே அது போதும், மற்றவை தானாய் நடக்கும், எவ்வளவு விசயம் இருக்கு,எழுதுங்க ....வாழ்த்துக்கள் நண்பா..புதுப்பதிவு போடும்பொழுது எனக்கு தெரியபடுத்துங்கள்..எனது வாக்கையும்,,கருத்தையும் நிச்சயம் தெரிவிப்பேன் ..
    rajes.vijay@gmail.com

    ReplyDelete
  7. நண்பரே அருமை, உங்களை இந்த பதிவுலக சார்பில் நான் வரவேற்கிறேன் . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் நண்பா !!!

    ReplyDelete
  9. நன்றி விஜய்.. கண்டிப்பாய் தெரியப்படுதுகிறேன்..

    உங்களது வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  10. உங்களது வருகைக்கு நன்றி சசிக்குமார்..

    உங்களைப் போல் பதிவுலக நண்பர்கள் கிடைத்ததற்கு மிக்க மிகழ்ச்சி..

    ReplyDelete
  11. நன்றி ரேணு..

    ReplyDelete
  12. நன்றிங்க அன்பரசன்..

    ReplyDelete
  13. மேலும் பல பதிவுகள் இட வாழ்த்துக்கள். வாசிப்பு மனிதனை பூரணபடுத்தும்.

    ReplyDelete
  14. நன்றிங்க நிலாமதி..

    ReplyDelete