பெங்களூருக்கே ஸ்வாகதா..


ஒரு மழை நாளில் பெங்களூர் சாலை

பெங்களூருக்கு வாங்க.. இதுதாங்க தலைப்போட அர்த்தம்..

வணக்கங்க.. நானும் பெங்களூர்ல ஒரு 4 வருசமா இருக்கறதால இங்க என்ன என்ன ஸ்பெசல்னு உங்களுக்கெல்லாம் சொல்லலாம்னு ஆசைப்படறேங்க..

பெங்களூருன்னாலே எல்லாருக்கும் ஞாபகம் வர்றது இங்க இருக்கற கிளைமேட் தாங்க.. பெங்களூர் கடல் மட்டத்துல இருந்து 949 மீட்டர் உயரத்துல இருக்கறதால இந்த கிளைமேட் இருக்கு.. பெரும்பாலும் இங்க எல்லா ரோடுகளுமே ஏத்த இறக்கமாத்தான் இருக்கும்.. இங்க மழை வர்றதுக்கு காலம் எல்லாம் இல்லைங்க.. திடீர் திடீர்னு வரும்.. ஒரு செப்டம்பர் மாசத்துலதான் நான் பெங்களூருக்கு புதுசா வந்தனா.. வெளியில போறப்ப எல்லாம் நனைஞ்சு போயிடுவேன்.. அப்புறம் நானும் இங்க இருக்கறவங்க மாதிரி ஜெர்கின் வாங்கிட்டேன்.. 

நம்ம பெங்களூருக்குப் பேரே தோட்ட நகரம் தான்.. பேருக்கேத்த மாதிரி எங்கப் பார்த்தாலும் கார்டனா இருக்கும் இங்க.. ஒவ்வொரு ஏரியாவிலும் குறைஞ்சது ரெண்டு பார்க்காவது இருக்கும்.. மார்னிங்கும், ஈவ்னிங்கும் பெரிசுங்க வாக்கிங் போகவும், சிறிசுங்க சைட் அடிக்கறதுக்கும் இந்த பார்க்கெல்லாம் ரொம்ப வசதியா இருக்கு..


நெக்ஸ்ட் கண்டிப்பா பொண்ணுங்க தாங்க.. இங்க இருக்கற பொண்ணுங்க எங்க இருந்து வர்றாங்கன்னே தெரியலங்க.. மேக்சிமம் பொண்ணுங்க உண்மையிலயே அழகா இருக்காங்க.. அதுவும் M.G. ரோடு பக்கம் போயிட்டம்னா வெவ்வேற மாநிலத்த சேர்ந்த பொண்ணுங்கள ஒட்டுக்கா பார்க்கலாம்.. இங்க நிறைய மாநிலங்கள சேர்ந்தவங்க வசிக்கறதால மல்டி கல்சரா இருக்கு.. அதனாலயோ என்னமோ இருக்கற பொண்ணுங்க ரொம்ப ஜோவியலா இருக்காங்க..

அப்புறம் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்.. பெங்களூர சுத்தி சுத்தி நிறைய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இருக்குங்க.. இங்க நிறைய மால் இருந்தாலும் மடிவாலான்னு ஒரு ஏரியால இருக்கற "ஃபோரமும்", பிரிக்கேட் ரோட்ல இருக்கற "கருடா மாலும்" இங்க ரொம்ப பேமஸ்.. இந்த ரெண்டு சாப்பிங் மால்கள்லையும் நிறைய தியேட்டர்ஸ் இருக்கறதால நிறைய லவ்வர்ஸ், அப்புறம் என்ன மாதிரி நல்ல பசங்கன்னு நிறைய பேரு வருவாங்க.. இந்த மால்கள்ல விக்கற ஒவ்வொரு பொருளும் யானை விலை, குதிரை விலை சொல்வாங்க.. நான் எதுவும் வாங்க மாட்டேங்கறது வேற விசயம்.. நிஜமா இங்க சுத்தறவங்க எல்லாம் ஏதாவது வாங்குவாங்களான்னே தெரியல.. எப்பப் பார்த்தாலும் அங்கிட்டும் இங்கிட்டும் நடந்துட்டே இருப்பாங்க.. எப்படி இங்க கடை வைச்சிருக்கறவங்களுக்கும் கட்டுப்பிடியாகுதுன்னே தெரியல..
மடிவாலா 'ஃபோரம்" மாலின் முன்பு
அடுத்து M.G. ரோடு.. இங்க பெங்களூருக்கு புதுசா வர்றவங்ககிட்ட எல்லாம் M.G. ரோடு போனா சூப்பரா இருக்கும்.. அப்படி இப்படின்னு இங்க இருக்கறவங்க எல்லாரும் கதை விடுவாங்க.. ஆக்சுவலா நானும் இப்ப வர்றவங்ககிட்ட அதைத்தான் செய்றேன்... பழக்கமாயிடுச்சுள்ள.. நான் புதுசா வந்தப்பையும் இப்படியே சொன்னாங்களா.. அங்க போய் அங்கிட்டும் இங்கிட்டும் பார்க்கறேன்.. ஒரு நீளமான ரோடுதான் இருக்கு.. அப்புறம் உள்ள நுழையறதுக்கே பயப்படற மாதிரி ரொம்ப காஸ்ட்லியான ஷோரூம்கள் இருந்தது.. அப்புறம் புரிஞ்சது நான் முன்ன சொன்னாமாதிரி பொண்ணுங்கள நினைச்சுதான் அப்படி எல்லாரும் சொல்லியிருக்காங்கன்னு.. மத்தபடி M.G. ரோடுங்கறது ஒரு ரோடுதான்.. வேற ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..

ம்ம்ம்.. அப்புறம்... ம்ம்..ம்ம்.. வேற என்னெல்லாம் இருக்குன்னு யோசிச்சு சொல்றேங்க..9 Responses So Far: