பெங்களூரில் ஒரு ஃபிளை "ஓவர்"பெங்களூர்ல ஒரு ஆறு மாசத்துக்கு முன்பு ஒரு மேம்பாலம் திறந்தாங்க.. அந்த மேம்பாலத்தோட நீளம் கரெக்டா 11 கிலோமீட்டர் வருதுங்க.. Pay & Use டைப்தான்.. பைக்குக்கு 10 ரூபாய் வாங்கறாங்க.. ஆக்சுவலா அந்த மேம்பாலம் கட்டியிருக்கற ஒசூர் ரோடு எப்பவுமே ரொம்ப ட்ராஃபிக் இருந்துட்டே இருக்கற ஏரியா.. ஏன்னா அந்த ரோட்ல இருக்கற எலக்ட்ரானிக் சிட்டிங்கற ஸ்டாப்பிங்ல நிறைய சாஃப்ட்வேர் கம்பெனிகள் இருக்கு.. பீக் அவர்ஸ்ல ஆபிஸ் போற எல்லோருமே அந்த ரோட்ல ட்ராவல் பண்ணினோம்னா வெறுத்தே போயிடுவோம்.. இந்த மேம்பாலம் கட்டினதுக்கு அப்புறம் நேரத்த ரொம்ப மிச்சம் பண்ண முடியுது.. ட்ராஃபிக்குக்கு பயந்துட்டே பணம் போனாலும் பரவாயில்லைன்னு அந்த மேம்பாலத்தை நிறைய பேர் யூஸ் பண்றாங்க..

பாலமெல்லாம் ரொம்ப பெர்ஃபெக்டாதான் போட்ருக்காங்க.. அதுமேல வண்டியோட்டும்போது குறைஞ்சது 80 கிலோமீட்டர் வேகத்துல போகனும்.. ஆக்சுவலா பாலத்து மேல ஏறினவுடனே நாமலே ஸ்பீட் எடுக்க ஆரம்பிச்சிடுவோம்.. ஒரே நேரத்துல அந்த பாலத்துல ரெண்டு கார் போகலாம்.. அவ்வளவு குறுகலான இடைவெளிதான் இருக்கு.. அதுக்கப்பறம் நீங்க பாலத்துல ஏறிட்டீங்கன்னா அடுத்த எண்டுல போய்தான் இறங்கமுடியும்.. வேறவழின்னா கீழேதான் குதிக்கனும்.. தரைக்கும் பாலத்துக்கும் சுமார் 30 அடி இருக்கலாம்னு நினைக்கிறேன்..

எதிர்பாராதவிதமா வண்டியில பெட்ரோல் தீர்ந்தாலோ அல்லது வேற ஏதாவது கோளாறுன்னால நின்னுட்டாலோ 11 கிலோமீட்டர் தள்ளிட்டே போக வேண்டியதுதான்.. இல்லைனா யாராவது நம்ம நண்பர்கள் உதவிய நாடலாம்.. வண்டி நின்னுட்டா அதே இடத்துல அப்படியே விட்டுட்டும் போகமுடியாது.. ஏன்னா அவ்வளவு பெரிய பாலத்துல விட்டுட்டு வந்தோம்னா சேஃப்டி இருக்காது இல்லையா.. 


இன்னொரு விசயம் என்னன்னா அந்த பாலத்தோட பக்க சுவர்கள் நம்ம இடுப்பு உயரத்துக்குத்தான் வருது.. அவ்வளவு கம்மியான இடைவெளியில ரொம்ப ஸ்பீடா போறப்போ சிறுதவறு நடந்துட்டாலும்.. பாலத்துல இருந்து அப்படியே பறக்க வேண்டியது தான்..

நானும் அந்தப் பாலத்த அடிக்கடி யூஸ் பண்றவன்தான்.. அப்படி ட்ராவல் பண்றப்போ குறைஞ்சது 5 பேராவது வண்டியத் தள்ளிட்டுப் போயிட்டு இருப்பாங்க.. ரெண்டுல இருந்து மூன்று கார்கள் வரைக்கும் நின்னு போயிருக்கும்.. நான் என்ன சொல்ல வர்றேன்னா.. அந்த பாலம் போற ரோட்ல மொத்தம் ஆறு ஸ்டாப்பிங் இருக்கு.. அந்த ஸ்டாப்பிங் வர்ற இடங்கள்ல ஒருநபர் இறங்கற மாதிரி எமர்ஜென்ஸி ஸ்டெப்ஸாவது வைச்சிருக்கலாம்.. ஒருவேளை வண்டி இடையில நின்னு போயிட்டா உடனே நாம அந்த ஸ்டெப்ஸ யூஸ் பண்ணி கீழே போய் சரிபண்ண யாரையாவது கூட்டி வரலாம் பாருங்க..

ரெண்டாவது அவ்ளோ கம்மியான உயரத்துல சுவர்கள் கட்டியிருந்தாலும்.. அட்லீஸ்ட் ஆள் உயர கம்பி வேலி அமைச்சிருக்கலாம் பாலம் முழுக்க.. ஏதாவது தவறுகள் நடந்தாலும் பெரிசா பாதிப்பு வராமையாவது இருக்கும் இல்லையா..

இவ்வளவு வேக்கானம் பேசற நீ.. பாலத்த யூஸ் பண்றதுக்கு முன்னயே வண்டியில பெட்ரோல் இருக்கா.. வண்டி கண்டிசனா இருக்கான்னு செக் பண்ணனும்.. வண்டிய நீதான் பார்த்து ஓட்டனும் அப்படின்னு நீங்க கேக்கலாம்.. ஆனா இந்தமாதிரி நமக்கே தெரியாம நடக்கறதுதான.. நாமளும் பாலத்துல காசு குடுத்துதான ட்ராவல் பண்றோம் இல்லையா..

இந்த பிராஜெக்ட நான் குறை சொல்ல வரல.. ஆனால் இது முழுக்க முழுக்க மக்களுக்கு பாதுகாப்பானதா இல்ல.. ஒவ்வொரு முறையும் நான் அந்த பாலத்த யூஸ் பண்றப்பவும் இது எனக்கு தோணிட்டே இருக்கும்.. அத உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கனும்னு தோணுச்சு.. அவ்லோதான்..


18 Responses So Far: