.
Monday, August 9, 2010
தி கிளாசிக் - திரைவிமர்சனம் (Classic (2003))
தி கிளாசிக்.. இது ஒரு கொரியத் திரைப்படங்க..
இது நான் பார்த்த முதல் உலகத்திரைப்படங்க.. இது என்ன மொழிப்படம்னே தெரியாமதான் முதல்ல பார்த்தேன்.. படத்துல கேரக்டர்களோட முகங்கள் ஒரு அரைமணி நேரத்துக்கு மனசுல ஒட்டவே இல்ல.. ஆனா கொஞ்ச நேரத்துல படத்தோடவே ஒன்றிப்போயிட்டேன்.. அதுவும் படத்துல வர்ற நம்ம ஹீரோயினோட அழகு படம் பார்க்க பார்க்க கூடிட்டே போறமாதிரி ஃபீல் ஆகும்.. கடைசி காட்சிகள்ல ரொம்ப அழகா தெரிவாங்க.. ரொம்ப நல்ல லவ் ஸ்டோரிங்க..
Joo-Hee படிச்சுட்டு இருக்கப்ப ஒரு சம்மருக்கு அவங்களோட கிராமத்துக்குப் போறாங்க.. அங்க Joon-Ha அப்படின்னு ஒருத்தர சந்திக்கறாங்க.. கிராமத்துல இருக்கும் போது Joo-Hee அங்க ஏரியைத்தாண்டி இருக்கற ஒரு பழைய வீட்டைப் பார்க்க ஆசைப்படறாங்க.. நம்ம Joon-Ha அவங்களோட ஆசைய நிறைவேத்தரார்.. அதுக்கு பரிசா அவங்க போட்டிருந்த செயினப் பரிசாக் குடுக்கறாங்க Joo-Hee.. அப்ப நடக்கற நிகழ்வுகள் அவங்களுக்குள்ள ஒரு நெருக்கத்த உண்டாக்கியிருக்கும்..
Joon-Haக்கு ஒரு குளோஷ் பிரண்ட் இருக்கார்.. ரொம்ப நல்லவர்.. அவருக்குத்தான் முதல்லயே Joo-Heeய நிச்சயம் பண்ணியிருப்பாங்க.. ஆனா தன்னோட பிரண்டுக்கும் Joo-Heeக்கும் ஏற்கனவே காதல் இருக்கறத் தெரிஞ்சுக்கற அவர் பொண்ணோட வீட்ல அவரோட பேர யூஸ் பண்ணி ரெண்டு பேரும் மீட் பண்றதுக்கு ஏற்பாடு செய்வார்.. அப்புறம் நாம இருந்தா அவங்க ரெண்டு பேரும் சேரமுடியாதுன்னு தற்கொலைக்கும் முயற்சி பண்றார்.. ஆனா அவர Joon-Ha காப்பாத்திடறார்..
இந்தக் குழப்பங்களால Joon-Ha அப்போ நடக்கற வியட்நாம் போருக்குப் போயிடறார்.. கொஞ்ச வருசங்கள் கழிச்சு திரும்பி வந்து Joo-Heeயப் பார்க்கறவர் தனக்கு கல்யாணம் ஆயிட்டதா பொய் சொல்றார்..
அப்புறம் Joon-Haவோட பிரண்ட் இருக்கார் இல்லையா.. அவரையே Joo-Hee கல்யாணம் பண்ணிக்கறாங்க.. அவங்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறக்குது..
அந்த பொண்ணு வளர்ந்து தன்னோட ஸ்கூல்ல ஸ்டேஜ் ஆர்டிஸ்டா இருக்கற Sang-Minன்னு ஒருத்தர ஒருதலையா லவ் பண்றாங்க.. அவரும் ரொம்ப கியூட்டா இருக்கார்.. ஆனா பின்னாடி அவரும் தன்னைக் காதலிக்கறத தெரிஞ்சுக்கிறார்.. அப்புறம் ஹீரோகிட்ட நம்ம ஹீரோயின் தன்னோட அம்மா வாழ்க்கையில நடந்த கதையெல்லாம் சொல்றாங்க..
பொறுமையா கதை கேட்ட அவரு..திடீர்னு நம்ம ஹீரோயினுக்கு அதிர்ச்சியான ஒரு விசயத்தைச் சொல்றதோட படம் முடியும். அவர் ஹீரோயின்கிட்ட என்ன சொல்றார்ங்கறதை படம் பாத்து தெரிஞ்சுக்குங்க...
இந்தப் படத்துல ஹீரோயின் Ji-Hae, அவரோட அம்மா Joo-Hee ரெண்டு பேரோட காதல் கதையையும் சொல்லியிருப்பாங்க.. அதனால இந்த படத்தோட காட்சிகள் இரண்டு பருவங்களா நகரும்..
ரெண்டு பருவமும் நம்ம ஹீரோயின் Ji-Hae உடைய கண்ணோடத்துல இருந்து பார்க்கற மாதிரியே நடக்கும்.. அதனால கொஞ்சம் கேர்லெஸ்ஸா பார்த்தீங்கன்னா எது நிகழ்காலம் எது கடந்தகாலம்னே உங்களுக்கு குழப்பம் வந்துடும்.. ஏன்னா அம்மா, பொண்ணு ரெண்டு கேரக்டர்லயும் ஒரே ஆள்தான் நடிச்சிருப்பாங்க..
இந்தப் படத்துல பெரும்பகுதி மழையிலயே போகுங்க.. அதனால படம் பார்க்கறப்போ நமக்கே குளிர்ற மாதிரி ஃபீல் ஆகும்.. அவ்லோ பசுமையா இருக்கும் ஒவ்வொரு காட்சிகளும்.. ஃபிளாஸ்பேக்ல வர்ற காதல் காட்சிகளும் சரி, நிகழ்காலத்துல வர்ற காதல் காட்சிகளும் சரி ஒன்னை ஒன்னு போட்டி போட்டுக்குட்டு சூப்பரா இருக்கும்..
பிளாஸ்பேக்ல அந்த பழைய வீட்டுக்குப் போயி திரும்பறப்பவும், மழையில நம்ம ஹீரோயின நனையவிடாம ஹீரோ கொண்டுபோய் விடறதும் ஒரு கவிதையா நடக்கும்.. இதுல எல்லா நடிகர்களும் நல்லா நடிச்சிருந்தாலும் ஓட்டு நான் ஹீரோயினுக்குத்தான் போடுவேன்..
இந்தப் படம் முடியறப்போ ஒரு இதமான அனுபவமாவும், கொஞ்சம் கஷ்டமாவும் இருக்கும்..
Subscribe to:
Post Comments (Atom)
நீங்க கதை சொல்லிய விதம், படம் பார்க்க ஆவலை தூண்டுதுங்க...வாழ்த்துக்கள் தோழா , மீதி நன்றியை படம் முடிச்சுட்டு வந்து சொல்றேன் ....
ReplyDeleteஉங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி கழுகு..
ReplyDeleteNice review!!! Keep up the good work!!
ReplyDeleteநன்றி சிவராம்குமார்..
ReplyDeleteஎனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்று .. அருமயான திரை படம் .
ReplyDeletemathan said...
ReplyDeleteஎனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்று .. அருமயான திரை படம் . ////
எனக்கும் மதன்.. அற்புதமான காதல் திரைப்படம்..