.

Friday, August 27, 2010

திகில் திருமணப் பயணம்

போனமாசம் நானும் என்னோட நண்பர்களும்.. எங்களோட இன்னொரு நண்பனோட கல்யாணத்தை அட்டென் பண்றதுக்காக வால்பாறைல இருக்கற ஒரு கிராமத்துக்குப் போயிருந்தோம்.. கிராமம்னா சும்மா இல்ல.. ஆல்மோஸ்ட் ஒரு காட்டுப் பிரதேசம் அது.. உண்மையிலயே எப்பவுமே மனசுல நிக்கற கல்யாணம் அது..

வால்பாறைங்கறது ஒரு ஹில்ஸ் ஸ்டேசன்ங்க.. இது பொள்ளாச்சியில இருந்து 64 கிலோமிட்டர் தூரத்துல இருக்கு.. மலைப்பாதை ஆரம்பிச்சதில இருந்து மொத்தம் 42 ஹேர்பின் பெண்டுகள் இருக்கு.. அதனால இங்க அரசாங்க பஸ்ல வந்தோம்னா பெண்டு கழண்டு போயிடும்ங்கறது நிச்சயம்.. அதனால நண்பர்கள் எல்லாரும் எங்க ஊர் பழனியில இருந்து பைக்லயே போனோம்.. ஏற்கனவே நாங்க அடிக்கடி கொடைக்கானலுக்கு பைக்ல போகற பழக்கம் இருக்கறதால எங்களுக்கு அந்த ட்ராவல் பெரிசா இல்ல..

மலைப்பாதை ஆரம்பம்னு போர்டு பார்த்தாச்சு.. எல்லாரும் உற்சாகமா வளைச்சு வளைச்சு பைக் ஓட்டிட்டு போயிட்டு இருந்தோம்.. எங்களுக்கு மலைப்பாதைகள்ல பைக் ஓட்டறதுல ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ்.. அதனால உற்சாகமா போயிட்டே இருந்தோம்.. ஒரு பத்து பெண்டு தாண்டினதுக்கு அப்புறம் ஒரு போர்டு போட்டிருந்தாங்க.. "இங்கே பாறைகள் உருளலாம்" அப்படின்னு எழுதியிருந்தது.. என்னடா சொல்றாங்கன்னு!! மேல அன்னாந்து பார்த்தா ஒரு மாதிரி வளைஞ்சு எந்நேரமும் நம்ம மேல விழுந்தடறமாதிரி தான் இருந்தது அந்த இடத்துல இருந்த மலை..

ஹெ ஹேய்.. இதெல்லாம் நமக்கு ஜுஜுப்பி அப்படின்னு எல்லாரும் பேசிட்டே திரும்பவும் வண்டியை ஸ்டார்ட் பண்ணிட்டோம்.. வழி முழுவதும் நிறைய டீ எஸ்டேட் இருந்தது.. ரொம்ப அழகான இயற்கைக் காட்சிகள்.. சொல்லும் போதே கண்ணு முன்னால வந்து நிக்குது.. இங்க யானை நடமாட்டம் இருக்கு.. சிறுத்தை நடமாட்டம் இருக்குன்னு நிறைய பலகைகள் வச்சிருந்தாங்க.. வேற பொழைப்புல்ல.. ரோட்டோரத்துல எதையாவது நட்டு வைக்கனும் இவங்களுக்கு.. யாரைப் பயப்படுத்தறானுங்க அப்படின்னு பேசிட்டே என்னோட நண்பன் கல்யாணம் நடக்கற கிராமத்துக்குப் போயிட்டோம்..

நாங்க போய்சேர்ந்த நேரம் மாலை ஆறு மணி.. அடுத்த பத்து நிமிசத்துலயே வானம் இருட்டிடுச்சு.. அந்த இடத்தில் இருந்த 6 வீடுகளைத் தவிர எதுவும் கண்ணுக்குத் தெரியல.. அன்னைக்கு நைட் 7 மணிக்குதான் நண்பனுக்கு நிச்சயம் பண்றதா இருந்தாங்க.. எங்களுக்கு அங்க தங்க ஒதுக்கியிருந்த வீட்ல போய் குளிக்கலாம்னு தண்ணியைத் தொட்டா.. சும்மா சாக் அடிச்சா மாதிரியாயிடுச்சு... அவ்லோ ஜில்லுன்னு இருக்கு.. அன்னைக்கு அதுதான் கடைசி தடவை நான் அந்த பூதத்தைத் (தண்ணிதான்) தொட்டது..

7 மணி ஆயிடுச்சு.. எல்லாரும் கூடியிருந்தாங்க.. அந்த கிராமத்து நாட்டாமை வந்தாரு.. நம்ம ஊர் பொண்ணை பழனியை சேர்ந்த இவரு கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறாரு.. உங்களுக்கெல்லாம் சம்மதமா.. அப்படின்னு அங்க உக்காந்து இருந்தவங்களைப் பார்த்து மூன்று முறை உரக்கக் கேட்டாரு.. எல்லாரும் மூன்று முறையும் சம்மதம்னு சத்தமா சொன்னாங்க.. எங்களுக்கெல்லாம் ஒரே கேலியா இருந்தது அந்த செய்கைகள்.. அந்த நாட்டாமையையும் அங்க நடக்கற நிகழ்ச்சிகளையும் குரூப்பா கிண்டல் பண்ணிட்டு உக்காந்திருந்தோம்..

திடீர்னு அங்க வீடுகள்ல கட்டியிருந்த நாய்கள் எல்லாம் குலைச்சதுங்க.. உடனே கிராமத்து ஜனங்க எல்லாம் பாரு பாரு வருதான்னு பேசிக்கிட்டாங்க.. என்னடா நாய்க்குப் போய் இந்த ஃபிலிம் காட்டறாங்களேன்னு நாங்க சிரிச்சா.. தம்பி சிறுத்தை வருதுப்பா.. எல்லாரும் ரூமுக்கு போங்கன்னு சொல்றாரு நாட்டாமை.. எப்படி இருந்திருக்கும்.. கப்சிப்னு ஆயிட்டோம்.. அப்போதான் அந்த கிராதகன் என்னோட மாப்பிள்ளை நண்பன் பக்கத்துல வந்து ஆமாண்டா அவங்க சொல்றது உண்மைதான்.. நேத்து அதோ அந்த மூனாவது வீட்ல இருந்த ரெண்டு நாய்களை சிறுத்தை தூக்கிட்டு போயிடுச்சாம்.. அப்படிங்கறான்.. எல்லாரும் கதிகலங்கி திருதிருன்னு முழுச்சுக்கிட்டே பார்த்துட்டு இருந்தோம்..

சிறுத்தை எல்லாம் வரல.. சும்மா நாய் குலைச்சிருக்குப்பா வந்து உக்காருங்கன்னு நாட்டாமை கூப்பிட்டார்.. நண்பர்கள் எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு வந்து உக்காந்தோம்.. அதுக்கு அப்புறம் வாய் பெவிக்கால் ஒட்டினமாதிரி ஆயிடுச்சு எங்க எல்லாருக்கும்.. ஆனா அங்க இருந்த ஜனங்க தொடர்ந்து கிண்டலும் கேலியுமா பேசிட்டு இருந்தாங்க.. இப்பதான் சிறுத்தை வருதுன்னு எல்லாரும் ஓடினாங்க.. அடுத்த நிமிசமே ரிலாக்ஸ் ஆயிட்டாங்களேன்னு இருந்தது எங்களுக்கு..

பங்சன் முடிஞ்சது.. எங்களுக்கு ஒதுக்கியிருந்த வீட்டுக்குப் போயிட்டோம்.. இப்ப எல்லாரும் சகஜ நிலைக்கு வந்துட்டோம்.. கல்யாணத்துக்கு வந்திருந்த இன்னொரு கோஷ்டிகளோட சேர்ந்துக்கிட்டு சீட்டு விளையாட்டிட்டு தூங்கிப்போயிட்டோம்.. நைட் 3 மணி இருக்கும் கதவு தட்டின சத்தம் கேட்டுச்சு.. என் நண்பன் ஒருத்தன் போய் கதவைத் திறந்தான்.. ஏப்பா இப்போ காட்டுப்பன்னிங்க கூட்டம் கூட்டமா சுத்துது.. ஒன்னுக்குப் போகனும்னுட்டு எல்லாம் வெளிய வந்துடாதீங்க.. அப்படின்னார் ஒருத்தர்.. நாங்க பாட்டுக்கு தூங்கிட்டு இருந்தோம்.. எழுப்பி இந்தாளு இப்படி சொல்லிட்டு போறாரேன்னு பேசிக்கிட்டு இருக்கப்போ.. கதவை என்னமோ சுரண்டர மாதிரி ஒரு சத்தம்.. எல்லாரும் திரும்பவும் கப்சிப்னு ஆயிட்டோம்.. ரொம்ப நேரம் என்னமோ கதவை சுரண்டிட்டே இருந்தது.. அது நிஜமா என்னன்னே எங்களுக்குத் தெரியல..


அடுத்த நாள் கல்யாணத்துக்காக சீக்கிரமாவே எல்லாரும் ரெடியாயிட்டோம்.. வீட்டுக்கு வெளிய வந்து பார்த்தா.. எவ்ளோ அருமையான இடம் அது.. முந்தின நாள் அங்க வந்து ரீச் ஆகறப்போ பகல் மங்கியிருந்ததால சரியா அந்த இடம் கண்ணுக்குத் தெரியல.. அந்த இடத்தை சுத்தி சுத்தி பெரிய பெரிய பச்சைப் பூவால அலங்காரம் பண்ணினா மாதிரி டீ எஸ்டேட்டுகள்.. அவ்வளவு அருமையான இடம்.. ரொம்ப நெருக்கமா அப்போதான் டீ எஸ்டேட்களைப் பார்க்கறேன்.. அதுக்குள்ள நடந்து பார்த்தா நம்ம நாட்டாமை வந்துட்டார்.. தம்பி இதுக்குள்ள நிறைய அட்டைகள் இருக்கும்பா.. உடம்புல ஒட்டிகிட்டா நிறைய இரத்தத்தை எடுத்திடும் வெளிய வந்திடுங்க அப்படிங்கறார்.. இவருக்கு வேற வேலையே இல்லைன்னுட்டு வந்துட்டோம்..

அங்க பக்கத்து எஸ்டேட்டுல இருந்த சின்ன கோயில்ல கல்யாணம் நடந்தது.. எவ்வளவு அழகா கல்யாணம் பண்றாங்க.. இப்போல்லாம் சிட்டியில கல்யாணம் முடிக்கனும்னா பணம் அது இதுன்னு எவ்வளவோ தொந்தரவுகள் இருக்கு.. எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணி கல்யாணத்தை நடத்தினா.. கல்யாணத்துக்கு வந்த யாராவது கோவிச்சுட்டு மூஞ்சியைத் தூக்கி வைச்சிட்டு இருப்பாங்க.. அவங்களை சமாதானப்படுத்தனும்.. ஆனா இங்க எல்லாரோட முகத்துலயும் அவ்வளவு சந்தோசம்.. அந்த இளம் ஜோடிகளை எல்லாரும் மனசார வாழ்த்தினாங்க.. உண்மையில அப்படி எல்லாருக்கும் வாழ்த்துக்கள் கிடைக்கறதில்லை..

ரொம்ப எளிமையான கல்யாணம்.. இப்போ மதியமும் சாப்பிட்டாச்சு.. சாயந்திரம் மணி நாலாயிடுச்சு.. கிளம்ப வேண்டியதுதான்..

நாங்க எல்லாரும் அங்க மொத்தமாவே 22 மணிநேரம்தான் இருந்தோம்.. ஆனா ரொம்ப பழகிடுச்சு அந்த இடம்.. சுத்தமான காற்று.. கபடமற்ற மக்கள்.. அந்த இடத்தை விட்டு வர மனசே இல்லை..

சிறுத்தை, காட்டுப்பன்னி, யானைன்னு அங்க வாழ்ற மக்களுக்கு பல தொந்தரவுகள்.. சாயந்திரம் ஆறு மணிக்கு மேல வெளிய போறது ரொம்ப ரிஸ்க்.. ஏதாவது காரணத்தால கரண்ட் கட்டாயிடுச்சுன்னா சரிசெய்ய ஒரு வாரம் ஆகுமாம்.. அங்க இருக்கற சூழ்நிலைகளால பெரும்பாலான மக்களால படிக்க முடியல.. ஆனா எஸ்டேட் முதலாளிங்க அவங்களுக்கு தேவையானதைப் பார்த்துக்கறாங்களாம்.. அவங்களுக்கு வழிவழியா வர்ற சந்ததிகளுக்கும் எஸ்டேட்தான் உலகமாயிருக்கு.. இருந்தாலும் அந்த வாழ்க்கையோட நாமளும் இணைஞ்சிடலாமான்னு ஒரு எண்ணம் எல்லாத்துக்கும் வந்துச்சு.. கிளம்பிட்டோம்..

நாட்டாமைகிட்ட ஒரு வார்த்தை போயிட்டு வர்றோம்னு சொல்லலாம்னு போனோம்.. தம்பி ஆறு மணிக்குள்ள மலையை விட்டு இறங்கிடுங்க.. இல்லைனா ரோட்ல யானை வந்து குறுக்க நின்னுக்கும்.. அப்புறம் அது எப்ப போகுதோ அப்பதான் நீங்க போகமுடியும்.. தப்பித்தவறி அது கண்ணுல பட்டீங்கன்னா தீர்ந்தீங்கன்னு சொன்னார்.. இப்போ நாங்க எல்லாரும் ரொம்ப மரியாதையா சரிங்க அப்படின்னுட்டு வந்துட்டோம்.. கண்டிப்பா இங்க திரும்ப வரணும்டா அப்படின்னு எல்லாரும் பேசிக்கிட்டோம்..

மலைப்பாதையில கீழே இறங்கிட்டு இருக்கோம்.. அதே பலகைகள்.. ஆனா இப்போ அந்த இடங்களைக் கிராஸ் பண்றப்போ எல்லாம்.. ஒவ்வொருத்தரும் ஆட்டோமேட்டிக்கா சுத்திமுத்தி கவனமா பார்த்துட்டே வண்டி ஓட்டினோம்.. பாறைகள் உருளும் இடம் வந்ததுமே.. கவனமா வண்டியை நிப்பாட்டிப் பார்த்துட்டு அப்புறம் கிளம்பினோம்.. ஊருக்கு வந்துட்டோம்..

பைக்ல வந்ததால 4.30 மணி நேரம் ஆச்சுன்னு நினைக்கிறேன் ஊருக்கு வர.. மணி இப்போ நைட் 8.30.. நம்ம ஊர் ஜனங்க எல்லாரும் எந்த பயமும் இல்லாம.. ஹாயா ரோட்ல நடந்துட்டு இருந்தாங்க.. ஆமாம் இங்க சிறுத்தை வராதுல அப்படின்னு தோணுச்சு லூசுமாதிரி..

சாயந்திரம் 6 மணி ஆனா வெளிய வரக்கூடாதா.. நம்மளால எல்லாம் அங்க இருக்க முடியாதுப்பா இதுதான் நமக்கு சரின்னு தோணுச்சு ஊரைப் பார்த்தவுடனே..



12 comments:

  1. திகில் பயணம் உண்மையிலேயே திகில் தான்.

    "எவ்வளவு அழகா கல்யாணம் பண்றாங்க.. இப்போல்லாம் சிட்டியில கல்யாணம் முடிக்கனும்னா பணம் அது இதுன்னு எவ்வளவோ தொந்தரவுகள் இருக்கு.." என்று கிராமத்து மக்கள், அவர்களின் சந்தோஷத்தை நடுவே உலாவ விட்ட விதம் அருமை.

    ReplyDelete
  2. அடுத்த மாசம் நாங்க நாலு பேரு கார்ல வால்பாரை தாண்டி முடீஸ் போகலாமுன்னு இருக்கிறோம். நாந்தான் கார் ஓட்டலாமி்ன்னு இருக்கிறேன். ஏன்னா போற நாலு பேர்ல நான்தான் யங்கு (76). ஏதாச்சும் டிப்ஸ் கொடுங்க தம்பி.

    போய்ட்டு வந்து பதிவு போடறப்போ உங்களுக்கு ஸ்பெஷலா தேங்க்ஸ் போடறேன்.

    ReplyDelete
  3. வித்தியாசமான அனுபவம் பற்றி வாசிக்க நல்லா இருந்தது. நன்றி.

    ReplyDelete
  4. @மதுரை சரவணன்..
    வருகைக்கு நன்றிங்க..

    @எம் அப்துல் காதர்..
    ஆமாங்க.. அந்த கிராமத்து ஜனங்களோட வாழ்க்கை முறையைப் பத்தியே ஒரு பதிவு போடலாம்.. ரொம்ப அழகான எளிமையான வாழ்க்கை..

    ReplyDelete
  5. @DrPKandaswamyPhD..
    வருகைக்கு நன்றிங்க..

    ஒன்னும் பெரிய டிப்ஸ் எல்லாம் தேவையில்லைங்க.. ரொம்ப வளைஞ்சு வளைஞ்சு போற பாதை.. அதனால எப்பவுமே ரோட்டு மேலதான் கண்ணா இருக்கனும்..

    அப்புறம் நைட்ல மலைப்பாதையில டிராவல் பண்றதத் தவிர்க்கலாம்.. ஏன்னா பனி நிறைய முடியிருக்கும்.. அப்புறம் யானை வந்து ரோட்ல நின்னுக்குமாம்.. அவ்லோதாங்க எனக்குத் தெரிஞ்சது.. நன்றி..

    ReplyDelete
  6. @சித்ரா..
    வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  7. இந்த மாதிரி சில இடங்களில் மாலையில் வெளியே செல்லக்கூடாது என்கிறார்கள். காடுகள், மலைகள் நிறைந்த பகுதிகளில் அழகுடன் இதுபோன்ற ஆபத்துகளும் இருக்கும்.

    ReplyDelete
  8. நல்ல ரசிச்சு எழுதி இருக்கீங்க பாபு! புகைப்படங்களை பார்த்த உடனே போகணும் போல இருக்கு...

    ReplyDelete
  9. திகில் கதை நிஜமாவே திக் திக் திக்!

    ReplyDelete
  10. @எஸ்.கே..
    ///காடுகள், மலைகள் நிறைந்த பகுதிகளில் அழகுடன் இதுபோன்ற ஆபத்துகளும் இருக்கும்.///

    கரெக்டா சொன்னீங்க எஸ்.கே.. அழகு நிறைந்த இடங்கள்ல ஆபத்துக்கள் நிறையவே இருக்கு.. வருகைக்கு நன்றி..

    @சிவராம்குமார்..
    வருகைக்கு நன்றிங்க.. கண்டிப்பா பார்க்க வேண்டிய இடம்தான்.. இந்த மாதிரி இடங்கள்லதான் உண்மையான காற்றையும்.. இயற்கையையும் உணரலாம்..

    ReplyDelete
  11. @dheva..
    உங்களது வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.. நன்றி..

    ReplyDelete