.

Thursday, August 5, 2010

கேம் பிளான் - சூப்பர்..



இது என்னோட ரெண்டாவது பதிவுங்க.. நானும் பிளாக் கிரியேட் பண்ணிட்டு என்னப் பத்தி அறிமுகமெல்லாம் வேற குடுத்திட்டேன்.. அப்புறம் ஏதாவது பதிவு போடலாம்னு யோசிக்கறேன் யோசிக்கறேன்.. யோசிச்சுட்டே இருக்கேன்.. அதனால இப்போதைக்கு நான் பார்த்த ஒரு படத்தப் பத்தி என்னோட கருத்துக்களை சேர் பண்ணிக்கலாம்னு தோனுச்சு.. சரி இப்போ அந்தப் படத்தப் பத்தி பார்ப்போம்..

The Game Plan (2007) இது ஒரு ஃபீல் குட் மூவிங்க.. படம் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் நம்மலை அறியாம சிரிச்சுட்டேதான் இருப்போம்.. படத்துக்கு எந்த சஸ்பென்ஸும் தேவையில்லை, அதனால கிளைமேக்ஸ் முன்னாடி வர ட்விஸ்ட் தவிர முழுக்கதையும்தான் சொல்லப்போறேன்.. நான் என்னதான் சொன்னாலும் நீங்க படம் பார்க்கறப்போ கண்டிப்பா ரொம்ப ஃப்ரெஸ்ஸா உணருவீங்க..

உங்களுக்கு WWF பிளேயர் ராக் பத்தி நல்லாவே தெரியும்னு நினைக்கிறேன்.. அவர்தான் இந்தப் படத்தோட ஹீரோ.. படத்துல அவர் அமெரிக்கன் புட்பால் சாம்பியனா இருக்கார், பேரு ஜோ கிங்மேன்.. நம்ம ஹீரோவாலதான் அவரோட டீம் நிறைய போட்டிகள்ல ஜெயிக்குது.. அதுமட்டும் இல்லாம விளையாடிட்டு இருக்கறப்ப வேற ஒருத்தருக்கு கோல் போட சான்ஸ் கிடைச்சாலும் பந்தை சர்வ் பண்ணாம தானே போய்தான் கோல் போடுவார்.. அதனால மீடியால அவர் தனக்காக மட்டுமே விளையாடறார்ங்கற மாதிரி குறை சொல்வாங்க.. இருந்தாலும் அவர் தன்னை படம் முழுக்க கிங்குன்னு சொல்லிக்கறார்.. அவரோட லைஃப்ல ஒவ்வொரு நாளும் விளையாட்டும் அதற்கு அப்புறமா பார்ட்டியுமா போகுது.. எத்தனை மணியானாலும் சரி யாரையும் அவர் வீட்ல தங்க விடறதில்லை எல்லாத்தையும் அனுப்பிடுவார்.. ஆனா எல்லாரும் போனபிறகு ஒரு தனிமையப் ஃபீல் பண்றார்.. அப்போதான் நமக்கும் தெரியுது அவர் கூட யாருமே இல்ல.. நம்ம ராக் தனி ஆளுன்னு..

அன்னைக்கும் அப்படிதான் பார்ட்டி எல்லாம் முடிஞ்சு எல்லாத்தையும் துரத்திடறார்.. அப்போ அவர ஒரு அழகான பொண்ணு பார்க்க வந்திருக்கறதா ரிசப்சன்ல இருந்து ஒரு கால் வருது.. அவரும் ரொமான்ஸ் மூடுல கதவத் தொறந்து பார்த்து பொக்குன்னு போயிடறார்.. அது 8 வயசு குட்டிப்பொண்ணு.. பார்த்து கடுப்பாயி ஆட்டோகிராஃப் வேணுமான்னு கோவமா கேக்கறார்.. ஆனா அந்த பொண்ணு ஒரு குண்டைத் தூக்கிப் போடுது.. அது ராக்கோட மகளாம்.. ஆனா ஹீரோவுக்கு 9 வருசத்துக்கு முன்னமே டைவர்ஸ் ஆயிடுச்சு.. ஆனாலும் அந்த பொண்ணு ராக்கோட மகள்கிறதுக்கு எல்லா எவிடன்சையும் வைச்சிருக்கு.. அதோட மட்டுமில்லாம பொண்ணோட அம்மா வெளிநாடு போயிருக்கறதாகவும் அதுவரைக்கும் அவர் கூடதான் ஸ்டே பண்ணுவேன்னும் சொல்லுது..

ஹீரோவுக்கும் அவரோட டீம் மேட்ஸுக்கும் இது பயங்கர சாக்கா இருக்கு.. அந்த வருச சாம்பியன்ஷிப் நெருங்கிகிட்டு இருக்குங்கறதால ராக்குக்கு பொண்ணு இருக்கறது பியூச்சர பாதிக்கும்னு அவரோட ஏஜென்ட் ஃபீல் பண்றாங்க.. பொண்ணு ரொம்ப சுட்டி.. அவரும் தன்னோட பொண்ண எல்லா இடத்துலயும் கூட்டிக்கிட்டே சுத்த வேண்டிய நிலைமை.. அன்னைக்கு நைட் ரெஸ்டாரண்ட் போற ராக் அங்கயே மகள மறந்து விட்டுட்டு வந்துடறார்.. அது பெரிய இஸ்யூ ஆயிடுது.. ஆனா ரிப்போர்ட்டர்ஸ் கிட்ட அந்த பொண்ணு உலகத்துலயே இவரு தான் பெஸ்ட் அப்பான்னு பேட்டி குடுத்துடுது.. அதனால ரெண்டு பேரும் அந்நியோன்யம் ஆயிடறாங்க..

பொண்ணு அப்பப்ப ராக்குக்குத் தெரியாம அவங்கம்மாகிட்டவும் போன்ல பேசிக்குது.. அப்புறம் தன்னைய பாலே டான்ஸ் ஸ்கூல்ல சேர்த்து விடவும் சொல்லுது.. அங்க போய் சேர்த்து விடற அவரு புட்பாலுக்கு சமமா அத்லெட்ட சொல்ல முடியாதுன்னு சொல்லி நல்லா அங்க இருக்கற லேடி ட்ரைனர்கிட்ட வாங்கிக் கட்டிக்கறாரு.. அவங்க தன்னோட ஸ்டைல்ல ராக்குக்கு கோச்சிங் குடுத்து பெண்ட நிமித்திடறாங்க.. ஆனாலும் அது அவரோட புட்பால் ஸ்கில்ல வளர்த்திக்கறதுக்கு யூஸ்புல்லா இருக்கு.. ராக்கும் பாலே டான்ஸ் ட்ரைனிங் எடுத்துக்கிட்டு ஒரு ஸ்டேஜ் புரோகிராமும் அட்டென் பண்றார்.. உண்மையிலயே ரொம்ப டச்சிங்கா இருந்ததுங்க அந்த புரோகிராம்.. நீங்க அதப் பார்த்து ஃபீல் பண்ணினாதான் நல்லா இருக்கும்..

அந்த பொண்ணு தன்னோட அம்மாவுக்கு தெரியாம இங்க ஓடி வந்துட்டதா தெரிஞ்சுக்கறார் ராக்.. அப்போ அவங்க ரெஸ்டாரென்ட்ல உக்காந்து சாப்பிட்டு இருக்காங்க.. அப்போ அந்த பொண்ணுக்கு அலர்ஜி இருக்கற உணவை சாப்பிடறதால மயக்கமாயிடுது.. பொண்ணத் தூக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு ஓடறார் ராக்.. இந்த விசயம் பேப்பர்லயும் வந்துடுது.. விசயத்தை பொண்ணோட அம்மாவும் பேப்பர்ல பார்த்துட்டு அங்க வந்திடறாங்க..

ராக்குக்கு அப்போதான் ஒரு உண்மை தெரிய வருது.. அது என்ன உண்மைன்னு சொல்லீட்டா இவ்ளோ நேரம் பார்த்த மாதிரி படத்தை ஜாலியா பார்க்கமுடியாது.. பொண்ணு குணமாகி அவங்கம்மா கூடயே போயிடுது...

இப்போ நம்ம ஹீரோவுக்கு பொண்ண விட்டு பிரிஞ்சு இருக்க முடியல.. துக்கத்துல பயங்கரமா தவிக்கறாரு.. அந்த சமயத்துல அவர் எதிர்பார்த்துட்டு இருந்த சாம்பியன்ஷிப்பும் வந்துடுது.. அந்த கேம் நடந்துட்டு இருக்கப்போ அவருக்கு காயம் ஆயிடுது.. நம்ம ஹீரோ அடிபட்டத டிவில பார்த்த குட்டிப்பொண்ணு நேரா ஸ்டேடியத்துக்குப் போயி, நீ கிங்மேன் இல்லையா.. இப்படியெல்லாம் அடிபட்டு படுத்திருக்கலாமா.. இந்த கோப்பைதான உன் லட்சியம்னு கேள்வி கேட்டு உற்சாகப்படுத்துது.. அப்புறம் நம்ம ராக்கும் திரும்பவும் களம் இறங்கி சாம்பியன்ஷிப்ப ஜெயிச்சுடுவார்.. பொண்ணும் அப்பாவும் சேர்ந்துடுவாங்க.. ஹேப்பி எண்டிங்..

படத்துல அப்போப்போ அந்த குட்டிப் பொண்ணு உங்க லைஃப்ல கிடைச்ச உயர்வான பொருள் எதுன்னு ராக்குகிட்ட கேக்கும்.. ஆனா அந்த கேள்வி கேக்கறப்போ எல்லாம் ராக் ஏதாவது பிசியா இருப்பார்.. அதனால பதில் சொல்ல மாட்டார்..

கிளைமாக்ஸ்ல ராக் அடிபட்டு இருக்கப்ப குட்டிப்பொண்ணு வந்து பேசுமே.. அப்போ நம்ம ராக் சொல்வார்.. இந்த போட்டியில நான் ஜெயிக்கறனோ தோக்கறனோ என்னோட மகள்தான் என்வாழ்க்கையில எனக்கு கிடைச்ச உயர்வான பொருள்னு.. ரொம்ப டச்சிங்க இருக்கும்ங்க.. நானும் ரொம்ப செண்டிமெண்டான ஆளா.. அந்த சீனைப் பார்க்கறப்போ எல்லாம் எனக்கும் கண் கலங்கிடும்..

கேம் பிளான் - சூப்பர்..


5 comments:

  1. விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு அப்துல்...இந்தப்படம் நான் இன்னும் பாக்கலை...டிவில போடும்போது பாக்கவும் தோனலை..ஆனா..இப்ப உங்க விமர்சனத்தைப் படிச்சிட்டு பாக்கனும்னு தோனுது....வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. இந்தப் பதிவைப் பார்த்த ஆவலில் உடனடியாக தேடி முழுப் படத்தையும் பார்த்து விட்டேன். உண்மையிலேயே ரொம்ப டச்சிங்... உங்கள் பதிவு அருமை. தொடருங்கள்... இதனைப் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்ட உங்களுக்கு என் நன்றிகள்...

    ReplyDelete
  3. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி sara..

    என்னுடைய பதிவு உங்களை இப்படத்தை பார்க்க தூண்டியதை எண்ணி மகிழ்ச்சி..

    ReplyDelete
  4. நீங்க எழுதி இருக்குற விதம், பார்க்க சொல்லி தூண்டுகிறது...படம் பார்த்துவிடுகிறேன் விரைவில்...அருமை இன்னும் நிறையா எழுதுங்கள், வாசிக்க, உற்சாகம் கொடுக்க நாங்கள் இருக்கிறோம்...

    ReplyDelete
  5. உங்களைப் போன்ற நண்பர்கள் இப்பதிவுலகில் என்னை ஊக்குவிப்பது எனக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கிறது..

    உங்களது கருத்துக்களுக்கு நன்றி விஜய்..

    ReplyDelete