.

Saturday, December 11, 2010

"தினமலரும் ஒரு பதிவரும்" திருடிய என் பதிவு..!

நேற்று இரவு.. கிரெடிட் கார்டும்.. கஸ்டமர் கேரும்.. என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதி வெளியிட்டிருந்தேன்..

இன்று அப்பதிவுக்கு மறுமொழியிட்டிருந்த "ராஜா" என்ற நண்பர்.. என்னோட பதிவு தினமலர் பத்திரிக்கையில வெளியாகி இருப்பதாக பின்னூட்டம் இட்டிருந்தார்.. அவர் கொடுத்திருந்த லிங்கிற்கு போய் பார்த்த எனக்கு பயங்கர அதிர்ச்சி.. அப்படியே என்னுடைய பதிவு ஒரு வரிகூட மாறாமல்.. நான் வெளியிட்டிருந்த போட்டோஸ் உட்பட அப்படியே பதிவாகியிருந்தது.. என்னுடைய பெயர் அதில் இல்லை..

என்னுடைய பதிவும் பெரும்பாலான மக்கள் படிக்கும் பத்திரிக்கையில் வெளியாகி இருப்பது எனக்கு சந்தோசமாத்தான் இருக்கு.. ஆனால் இதைப் பார்த்து சந்தோசம் மட்டும் பட்டுட்டு விட்டுட்டன்னா.. பிறகு ஒருநாள் என்னுடைய பதிவைப் படிக்கும் யாராவது நான் அந்தப் பத்திரிக்கையில் இருந்து முழு பதிவையும் திருடியதாகத் தானே நினைப்பாங்க.. சமுதாயத்தில் மிகப்பெரிய பெயரில் இருந்து கொண்டு.. இப்படி என்னுடைய அனுமதி இல்லாமல் தினமலர் பத்திரிக்கை என்னுடைய பதிவை எப்படி வெளியிடலாம்..

இன்று மாலை (11 டிசம்பர் 2010) மாலை 4.57க்கு என்னுடைய பதிவை அவர்கள் வெளியிட்டிருக்காங்க..

என்னுடைய பதிவு வெளியான அவர்களது லிங்கையும்.. அவங்களோட வலைப்பக்கத்தை நான் எடுத்த ஸ்க்ரீன் சாட்டையும் கீழே கொடுத்திருக்கேன்.. நீங்களே பாருங்க..

http://www.dinamalar.com/business/



இப்பதிவின் பின்னூட்டத்தில் இன்னொரு பிளாக்லயும் என்னுடைய பதிவை திருடியிருப்பதாக நா.மணிவண்ணன் லிங்க் கொடுத்திருக்கார்.. அங்கே போய் பார்த்தா அதுலயும் அப்படியே ஃபோட்டோ உட்பட காப்பி பண்ணிப் பேஸ்ட் பண்ணியிருக்காங்க.. என்னங்க இது!!..

இதையும் அப்படியே பார்த்திடுங்க.. என்ன கொடுமை இது!!
சொந்தமா எழுதத் தெரியலைன்னா என்னத்துக்கு பதிவு ஆரம்பிச்சு.. காப்பி பேஸ்டுல என்னத்த கண்டுடறாங்கன்னு தெரியல

-------------------------------------------------------------------
குறிப்பு: தினமலருக்கு நான் அனுப்பிய மெயில் இது..
மதிப்புக்குரிய தினமலருக்கு

நான் ஒரு வலைப்பதிவர்.. நேற்று கிரெடிட் கார்டும்... கஸ்டமர் கேரும்... என்ற தலைப்பில் எனது வலைப்பதிவில் ஒரு பதிவிட்டிருந்தேன். இன்று உங்கள் தினமலர் வர்த்தகப் பகுதியைப் பார்த்த எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் நேற்று எழுதிய பதிவு.. அப்படியே வார்த்தை மாறாமல்.. ஏன் நான் வெளியிட்டிருந்த இரண்டு புகைப்படம் கூட மாறாமல்... உங்களது தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது... என்னுடைய பெயரோ எனது வலைத்தள முகவரியோ அதில் இடம்பெறவில்லை... எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு சரியான விளக்கத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்...

எனது பதிவு வெளியான முகவரியை கீழே அளித்துள்ளேன்..


http://abdulkadher.blogspot.com/2010/12/blog-post_10.html


நன்றி

அப்துல்காதர்
(எனது தளம்: பதிவுலகில் பாபு)

----------------------------------------------------------------------------------------

80 comments:

  1. அட கொடுமையே ..!! உங்க பேர கண்டிப்பா போட்டிருக்கணும் ..!!
    இல்லனா உங்க ப்ளாக் முகவரியாவது போட்டிருக்கணும் ..௧!

    ReplyDelete
  2. கோமாளி செல்வா said...

    அட கொடுமையே ..!! உங்க பேர கண்டிப்பா போட்டிருக்கணும் ..!!
    இல்லனா உங்க ப்ளாக் முகவரியாவது போட்டிருக்கணும் ..௧! ///

    ஆமாம் செல்வா.. என் பெயரைக் கண்டிப்பாக அவர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்..

    ReplyDelete
  3. அட ஆமா ., அப்படியே போட்டிருக்காங்க .!! என்ன கொடுமை இது ..?!

    ReplyDelete
  4. கோமாளி செல்வா said...

    அட ஆமா ., அப்படியே போட்டிருக்காங்க .!! என்ன கொடுமை இது ..?! ////

    ஆமாம் செல்வா.. அதான் அப்படியே ஸ்க்ரீன் சாட் எடுத்துட்டேன்..

    ReplyDelete
  5. தினமலருக்கு !
    எதுக்கும் ஒரு மெயில் போட்டு வைங்க...

    ReplyDelete
  6. நண்பா இதுவும் உங்கள் தளமா .
    http://therinjikko.blogspot.com/2010/12/blog-post_11. html
    உங்களுடைய கிரெடிட் கார்டும் கஸ்டமர் கேரும் இந்த தளத்திலும் வந்துள்ளதே
    தினமலர் வேறு திருடி விட்டார்கள் என்கிறீர்களே

    ReplyDelete
  7. நா.மணிவண்ணன் said...

    நண்பா இதுவும் உங்கள் தளமா .
    http://therinjikko.blogspot.com/2010/12/blog-post_11. html
    உங்களுடைய கிரெடிட் கார்டும் கஸ்டமர் கேரும் இந்த தளத்திலும் வந்துள்ளதே
    தினமலர் வேறு திருடி விட்டார்கள் என்கிறீர்களே ////

    நண்பா.. என்ன சொல்றீங்க.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சியா இருக்கே..

    ReplyDelete
  8. ஆகாயமனிதன்.. said...

    தினமலருக்கு !
    எதுக்கும் ஒரு மெயில் போட்டு வைங்க... ////

    ஆமாங்க.. மெயில் பண்றேன்..

    ReplyDelete
  9. என்னங்க இது அப்படியே ஒரு எழுத்துகூட மாறாம போட்டுருக்காங்க.
    உடனே தினமலருக்கு ஒரு மெயில் போடுங்க...

    ReplyDelete
  10. அன்பரசன் said...

    என்னங்க இது அப்படியே ஒரு எழுத்துகூட மாறாம போட்டுருக்காங்க.
    உடனே தினமலருக்கு ஒரு மெயில் போடுங்க... ////

    தினமலருக்கு தாங்க மெயில் டைப் பண்ணிட்டு இருக்கேன்.. இதோ அனுப்பிடறேன்..

    ReplyDelete
  11. இப்படி கூட ஒரு திருட்டா!! அதிர்ச்சியான விஷயம்

    ReplyDelete
  12. தினமலரும் திருடுதா? இத்தனை நாளா அவங்க நல்லா எழுதறாங்கன்னு நினைச்சது தப்பா போச்சே? இன்னும் எத்தனை பேர்கிட்ட இந்த மாதிரி பண்ணி இருக்காங்களோ? உடனே கம்ப்ளைண்ட் பண்ணுங்க

    ReplyDelete
  13. வைகை said...

    இப்படி கூட ஒரு திருட்டா!! அதிர்ச்சியான விஷயம் ////

    ஆமாங்க பாருங்க.. எனக்கும் ரொம்ப அதிர்ச்சியாக இருக்குங்க..

    ReplyDelete
  14. இரவு வானம் said...

    தினமலரும் திருடுதா? இத்தனை நாளா அவங்க நல்லா எழுதறாங்கன்னு நினைச்சது தப்பா போச்சே? இன்னும் எத்தனை பேர்கிட்ட இந்த மாதிரி பண்ணி இருக்காங்களோ? உடனே கம்ப்ளைண்ட் பண்ணுங்க ///

    மெயில் பண்ணியிருகேங்க..

    ReplyDelete
  15. பிரபலமான தளத்தில் உங்கள் பதிவு வந்தமைக்கு வாழ்த்துகள் .
    ஆனால் உங்களின் Link ஐ கொடுக்காதது மிகவும் மோசமான விடயம் தான் :(

    //பிறகு ஒருநாள் என்னுடைய பதிவைப் படிக்கும் யாராவது நான் அந்தப் பத்திரிக்கையில் இருந்து முழு பதிவையும் திருடியதாகத் தானே நினைப்பாங்க//
    உண்மை தான் பாபு :(

    ReplyDelete
  16. அடப்பாவிகளா இவனுங்க திருந்தவே மாட்டாங்க....

    ReplyDelete
  17. இந்த மாதிரி நடக்கிறப்போ எழுதுறவங்க மனசு பயங்கரமா கஷ்டப்படும் நண்பரே!

    ReplyDelete
  18. என்னாமா திருடறாங்க ......கொஞ்சம் கவனமா தான் இருக்கணும்

    ReplyDelete
  19. உங்கள் பதிவுக்கு லிங்க் கொடுத்து அங்கீகாரம் கொடுத்து இருக்க வேண்டும்.

    ReplyDelete
  20. கொஞ்சகாலமா வலைத் திருட்டு அதிகமாகிக்கிட்டே போகுது:(

    நோகாம நுங்கு தின்னக் கத்துக்கிட்டாங்க 'சிலர்'

    ReplyDelete
  21. தினமலர் போன்ற பத்திரிகைகள் ஒருவரின் பதிவை போடும்போது அந்த பதிவரிடம் தெரிவித்து போட்டால் என்ன கேடு. ஒரு வெகுஜன பத்திரிகைகள் உங்கள் பதிவை திருடுகிறது என்றால் நீங்கள் பிரபல பதிவராகிட்டேங்க என்று அர்த்தம். அதேநேரம் தினமலருக்கு தவறை சுட்டிக்காட்டி ஒரு பதில் அனுப்புங்கள்

    ReplyDelete
  22. நண்பா இத விடாதீங்க. இதே பழக்கமா போய்டும் இவங்களுக்கு. தினமலரையும் சேத்துதான். தினமலருக்கு இதுபற்றி மெயில் பண்ணுங்க

    ReplyDelete
  23. உங்க பேரை போடறதுக்கு முன்னாடி உங்ககிட்ட இந்த பதிவ என்னோட தளத்தில் போடலாமா அப்டின்னு கேட்கனும். அதுதான் நாகரீகம்.

    ReplyDelete
  24. karthikkumar said...

    உங்க பேரை போடறதுக்கு முன்னாடி உங்ககிட்ட இந்த பதிவ என்னோட தளத்தில் போடலாமா அப்டின்னு கேட்கனும். அதுதான் நாகரீகம். ////

    இப்போ அனுப்பியிருக்கற மெயிலுக்காவது கரெக்டா பதில் வருதா பார்ப்போம்.. நன்றிங்க நண்பரே..

    ReplyDelete
  25. // உங்கள் பதிவுக்கு லிங்க் கொடுத்து அங்கீகாரம் கொடுத்து இருக்க வேண்டும். //

    நிச்சயமா..!!

    ReplyDelete
  26. இதுக்கு பேர் தான் பத்திரிகை சுதந்திரம் போல

    ReplyDelete
  27. நா.மணிவண்ணன் said...

    இதுக்கு பேர் தான் பத்திரிகை சுதந்திரம் போல ///

    மற்றொரு பதிவரும் என்னுடையப் பதிவைத் திருடியதைப் பற்றி நீங்க அலர்ட் பண்ணி விட்டதுக்கு நன்றிங்க மணிவண்ணன்.. சொந்தமாக எழுதத் தெரியாம காப்பி பேஸ்ட் மட்டும் பண்ணிட்டு இருக்கறதுக்கு அவங்கெல்லாம் சும்மாவே இருக்கலாமே!!

    ReplyDelete
  28. பிரபல பதிவர் பாபு வாழ்க ..!!

    அடக்கொடுமையே....இது பிச்சகாரன்கிட்ட பிச்சை எடுப்பதுக்கு சமம் ..!!

    ReplyDelete
  29. அடக்கொடுமையே......
    இப்படி வேற நடக்குதா? கேக்கவே கஷ்ட்டமா இருக்கு....

    ReplyDelete
  30. ஜெய்லானி said...

    பிரபல பதிவர் பாபு வாழ்க ..!!

    அடக்கொடுமையே....இது பிச்சகாரன்கிட்ட பிச்சை எடுப்பதுக்கு சமம் ..!! ////

    ஆ!! என்னைப் பிரபலப் பதிவர் ஆக்கிட்டீங்களே..

    என்னங்க அவங்களைத் திட்டப்போய் என்னையும் சேர்த்து திட்டனமாதிரியில இருக்கு..

    ReplyDelete
  31. பதிவு திருட்டு என்பது பதிவர்களுக்கிடையே நடப்பது வழக்கம்தான் ஆனால் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் இவ்வாறு செயல்படுவது மிகவும் கண்டனத்துக்குரியது அவர்கள் உங்கள் பெயரை நன்றிக்காகவது போட்டிருக்க வேண்டும்....

    பதிவு திருட்டுக்கு என்னதான் தீர்வு என்று தெரியவில்லை...........

    ReplyDelete
  32. வலைத்திருட்டு அதிகமாக இருக்கிறது... எழுத்துக்கான அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும். பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்க்கள்.

    ReplyDelete
  33. நிச்சயம் தினமலரின் இந்தச் செயல் அதிர்ச்சி தருகிறது, தினமலர் வர்த்தகப் பிரிவில் செய்தி ஆசிரியராக இருப்பவர் யார் என்று தெரிந்துக் கொணடு முறையிடலாம், அவர் நோகாமல்நோன்பு கும்பிட பார்க்கிறார். ஒருபதிவை மீள்பதிவு செய்வது தவறில்லை ஆனால் அதை எழுதியவர் பெயரையும், லிங்க்-ஐயும் கொடுக்க வேண்டும், இது அறிவுச் சொத்துரிமை மீறல் ஆகும், வெளிநாடுகளில் படிக்கவரும் இந்திய மாணாவர்கள் பலர் சரியான மதிப்பெண்கள் எடுக்கத் தவறியதுக்கும் இப்படியான காப்பியடிப்பு வேலைகளால் தான். மற்றவர் எழுத்தை திருடுகிறோமே என்ற உணர்வு நம்மவர்க்கு வர வேண்டும்.

    ReplyDelete
  34. அராஜகம்.. பெயர் போட்டிருக்கலாம், லிங்க் குடுத்து இருக்கலாம் என்று எப்படி சொல்லலாம். பெயர், லிங்க் போட்டால் மட்டும் போட்டால் சரியாகி விடுமா? பாபுவின் அனுமதி இன்றி எடுத்ததே சட்டப்படி தவறு. தினமலர் மீது சற்று நம்பிக்கை வைத்ததும் இன்று போய் விட்டது. பதிவர்கள் அனைவரும் நம் படைப்புகளுக்கு காப்புரிமை வாங்க இது ஒரு துவக்கமாக இருக்க வேண்டும். சில பதிவுகளை திருடி திரைப்படத்தில் கூட இணைப்பதாக செய்திகள் வந்துள்ளன. பாபுவிற்கு உதவ சட்டம் தெரிந்த நண்பர்கள் உடனே துணைபுரியுமாறு கேட்டுக்கொள்கிறேன். பாபு நீங்கள் மடல் மட்டும் போட்டது பத்தாது. தகுந்த நஷ்ட ஈடு கேட்டும், பகிரங்க மன்னிப்பு கேட்க சொல்லியும் வற்புறுத்துங்கள்.

    ReplyDelete
  35. வன்மையாக கண்டிக்கத்தக்கது!!!

    ReplyDelete
  36. தயவு செய்து தினமலர் மூலம் பாபு பிரபல பதிவர் ஆகி விட்டார் என்று சொல்லாதீர்கள். அவர் ஏற்கனவே நல்ல பதிவர்தான். இப்படி ஒரு விளம்பரம் அவருக்கு தேவை இல்லை. பெற்ற குழந்தையை அனுமதி இன்றி எடுத்து சென்றால் சும்மா இருக்க முடியுமா?

    ReplyDelete
  37. என்ன கொடுமை சார் இது?
    தினமலரும் திருட்டில் இறங்கியாச்சா?தினகரன் தான் பலரின் சமையல் குறிப்பை திருடி போட்டிருந்துச்சு.(நான் அறுசுவையில் கொடுத்த சில குறிப்புக்கள்)அங்கே போய் எத்தனை பின்னூட்டம்,மெயில் எதற்கும் எந்த பலனும் இல்லை,எல்லா மக்களும் தானே படிக்கிறாங்க,அவங்களுக்கு என் குறிப்பை தர்மம் செய்ததாக நினைத்து மனதை தேற்றிக்கொண்டேன்.இவர்களிடம் எப்படி மோதினாலும் பலன் இல்லை.

    ReplyDelete
  38. திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அத சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தூங்கிக்கொண்டே இருக்குது !!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  39. 1. http://blogsearch.google.com/blogsearch?hl=en
    2. http://www.copyscape.com/

    ஆகியவற்றில் சென்று உங்களில் பதிவின் தலைப்பு அல்லது இடுகை லிங்கை கொடுத்து தேடிப் பார்த்தால் யார் உங்களின் பதிவை திருடுகிறார்கள் என்றுப் பார்க்கலாம்,அவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரியப்படுத்துங்கள்.

    உங்களின் சைட்பாரில் காப்புரிமை செய்த பதிவு என்பதை தெளிவாக குறிப்பிடுங்கள், நீங்கள் எந்த தளாத்தில் இருந்து செய்திகளை எழுதுகிறீரகள் என்பதை குறிப்பிட்டு பதிவு எழுதுவதால் உங்களுக்கு அந்தப் பிரச்சனை வராது. உங்களிடம் இரந்து காப்பி செய்பவர்களும் அஞ்சுவார்கள். இல்லை என்றால் நீங்களே எங்கிருந்தோ எடுத்துள்ளார் அவற்றை நாமும் திருடினால் என்று நினைப்பர்.

    இந்திய காப்புரிமை சட்டத்தைப் பற்றி நன்கு விளங்கிக் கொள்ளுங்கள்.... http://advertising.indiabizclub.com/info/copyright

    மேலும் காப்பியடிப்பதை தவிர்க்க ஆலோசனை வேண்டுமானால் என்னை தொடர்புக் கொள்ளுங்கள்

    ReplyDelete
  40. சிவகுமார் said...

    தயவு செய்து தினமலர் மூலம் பாபு பிரபல பதிவர் ஆகி விட்டார் என்று சொல்லாதீர்கள். அவர் ஏற்கனவே நல்ல பதிவர்தான். இப்படி ஒரு விளம்பரம் அவருக்கு தேவை இல்லை. பெற்ற குழந்தையை அனுமதி இன்றி எடுத்து சென்றால் சும்மா இருக்க முடியுமா? ///

    ரொம்ப சந்தோசமா இருக்குங்க சிவக்குமார்.. நானும் தினமலருக்கு மெயில் பண்ணியிருக்கேன் என்ன ரிப்ளை வருதுன்னு பார்ப்போம்.. பிறகு அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கனும்.. நன்றிங்க..

    ReplyDelete
  41. @ANKITHA VARMA..

    நீங்க விளக்கியிருக்கிற விவரங்கள் எனக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்குங்க.. தேவைப்பட்டால் கண்டிப்பாக தங்களது ஆலோசனைகளைப் பெற தொடர்பு கொள்கிறேன்.. ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  42. asiya omar said...

    என்ன கொடுமை சார் இது?
    தினமலரும் திருட்டில் இறங்கியாச்சா?தினகரன் தான் பலரின் சமையல் குறிப்பை திருடி போட்டிருந்துச்சு.(நான் அறுசுவையில் கொடுத்த சில குறிப்புக்கள்)அங்கே போய் எத்தனை பின்னூட்டம்,மெயில் எதற்கும் எந்த பலனும் இல்லை,எல்லா மக்களும் தானே படிக்கிறாங்க,அவங்களுக்கு என் குறிப்பை தர்மம் செய்ததாக நினைத்து மனதை தேற்றிக்கொண்டேன்.இவர்களிடம் எப்படி மோதினாலும் பலன் இல்லை. /////

    உங்களுக்கும் இதே நிலை ஏற்பட்டிருப்பது ரொம்ப வருத்தமாக இருக்குங்க.. சமுதாயத்துல பலரால் படிக்கப் படும் பத்திரிக்கைகளை இப்படி அநியாயம் செய்றாங்களே.. கண்டிப்பாக இதற்கு ஏதாவது பண்ணியே ஆகனும்..

    ReplyDelete
  43. தினமலர் செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ReplyDelete
  44. பாபு,

    கிரடிட் கார்டு பற்றிய பதிவில் நீங்கள் பயன்படுத்திய படங்கள், நீங்கள் எடுத்த புகைப் படங்களில்லை. கூகிளில் 'credit card', 'customer care' என்று தேடினால் முதல் பக்கத்தில் வரும் படங்கள் தான் அவை. அவைகளை நீங்கள் வாங்கினீர்களா? அல்லது ஏதாவது கலர் கரெக்ஷன், எடிட்டிங் செய்தீர்களா? இல்லை, எடுத்த வலைத் தளத்தின் பெயரையாவது குறிப்பிட்டீர்களா?

    இதற்கு உங்கள் பதிலென்ன?

    ReplyDelete
  45. ஏன் டென்ஷன் ஆகறீங்க.பிரபல பதிவர் ஆகீட்டீங்க .அவ்வளவுதான்.எல்லாம் நன்மைக்கே

    ReplyDelete
  46. கண்டிக்கப்படவேண்டிய விசயம்.........

    ReplyDelete
  47. விளக்கம் கொடுத்ததும் அதைப்பற்றி ஒரு பதிவை நிச்சயம் எழுதுங்கள்...

    அங்கிதா வர்மா கொடுத்த தகவல் பயனுள்ளதாக அமைந்தது...

    ReplyDelete
  48. அவங்களுக்கு இதுதாங்க வேலையே. வேற யாரோ அனுப்பிச்சாரும்பாங்க. லிங்க் கொடுத்தப்புறம் ஒரு அம்மணி பேசி, அட்ரஸ் சொல்லுங்க பணம் அனுப்பறோம்னு சொல்லுமே ஒழிய, உங்க பதிவு முகவரியோ, இல்லை நீங்க எழுதினிங்கன்னோ போடமாட்டாங்க. இப்படியும் ஒரு பிழைப்பு. இதுல இவரு ஊழல் பத்தி வாய் கிழிய எழுதுவாரு.

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. அய்யயோ எனக்கு நாகரீகமா திட்ட தெரியலே

    ReplyDelete
  51. என்ன கொடுமை இது?
    நியாயமா தினமலர் உங்ககிட்ட அனுமதி பெற்று, உங்கள் ப்ளாக் முகவரி போட்டிருக்கணும்!

    சொந்தமா எழுத தெரியாவிட்டால் எதுக்கு வலைப்பூ ஆரம்பிக்கணும்?
    முடியலடா சாமி!!

    ReplyDelete
  52. Potemkin said...
    பாபு,
    கிரடிட் கார்டு பற்றிய பதிவில் நீங்கள் பயன்படுத்திய படங்கள், நீங்கள் எடுத்த புகைப் படங்களில்லை. கூகிளில் 'credit card', 'customer care' என்று தேடினால் முதல் பக்கத்தில் வரும் படங்கள் தான் அவை. அவைகளை நீங்கள் வாங்கினீர்களா? அல்லது ஏதாவது கலர் கரெக்ஷன், எடிட்டிங் செய்தீர்களா? இல்லை, எடுத்த வலைத் தளத்தின் பெயரையாவது குறிப்பிட்டீர்களா?

    இதற்கு உங்கள் பதிலென்ன? ////

    பதிவில் நான் பயன்படுத்தியிருக்கும் படங்கள் கூகிள்லில் இருந்து தரவிரக்கியதே.. இப்போ மேட்டர் என்ன?.. என்னுடைய பதிவு.. திருடப்பட்டிருக்கிறது.. அந்த விசயத்தை ஏன் திசை மாற்றிக் கொண்டுபோறீங்க.. அதுக்கு நீங்க என்ன பதில் சொல்றீங்க?.. உங்களுக்கு ஏன் தேள் கொட்டியிருக்கிறது?..

    ReplyDelete
  53. இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 4-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  54. நிச்சயமாக கண்டிக்க வேண்டிய நிகழ்வு.. பெரிய ஆளுங்க திருடினா அது தப்பாகதோ..?

    ReplyDelete
  55. தமிழ்மணத்துல நாலாவது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்டா... சீக்கிரம் முதல் இடத்தப் பிடிச்சிரு.......

    ReplyDelete
  56. ரஹீம் கஸாலி said...

    இந்த வாரம் தமிழ்மணம் சிறந்த இருபது வலைப்பூக்கள் பட்டியலில் 4-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள். ////

    விசயத்தை சொன்னதுக்கு நன்றிங்க.. உங்கள் பெயரும் இடம் பெற்று இருப்பதைப் பார்த்தேன்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  57. பிரியமுடன் ரமேஷ் said...

    தமிழ்மணத்துல நாலாவது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்டா... சீக்கிரம் முதல் இடத்தப் பிடிச்சிரு....... ////

    அனைத்து புகழும் உங்களுக்கே ரமேஷ்.. :-)

    ReplyDelete
  58. தினமலரில் வேலை செய்யும் யாரோ ஒருத்தர்தான் இந்தப் பதிவுத்திருட்டு செய்யறார்.

    ஆசிரியர் நினைச்சுருப்பார் அந்த நபருக்கு அறிவு அதிகம் அருமையா எழுதறார்ன்னு:(

    இதேதான் பல பிரபல பத்திரிக்கைகளும் வலையில் எழுதி இருப்பதைப்போட்டு அவுங்க பக்கங்களை நிரப்பிக்கிறாங்க. ஆனால் அட்லீஸ் யாரோட பதிவுன்னும் போட்டுடறதால் பாவமன்னிப்பு கிடைச்சுருது.

    ட்விட்டரைக்கூட விட்டு வைக்கலை:(

    இது புரியாம நாமெல்லாம் பிரபல பத்திரிகையில் வந்துருக்கேன்னு புளகாங்கிதம் அடைகிறோம்.


    ஆனால் உண்மையில் படைப்பாளிக்குத் தரும் சன்மானம் அனுப்பறாங்களா???????

    ReplyDelete
  59. @துளசி கோபால்...
    ஆனால் உண்மையில் படைப்பாளிக்குத் தரும் சன்மானம் அனுப்பறாங்களா??????? ////

    நமக்கு நமது பெயர் அங்கீகாரம் கிடைத்தாலே அதுவே போதுமானதுங்க..

    நான் நேற்று அனுப்பிய மெயிலுக்கு இன்னும் எனக்கு ரிப்ளை வரவே இல்ல..

    இதெல்லாம் அவங்களுக்கு பழக்கப்பட்ட விசயம் போல.. தினமலர் இந்தமாதிரி செய்வது எனக்கு ரொம்ப அதிர்ச்சியைத் தருது..

    ReplyDelete
  60. கண்டிக்கப் பட வேண்டிய விஷயம். இன்னும் என்னென்ன பத்திரிகைகளில் என்னென்ன திருட்டுகள் இது போல நடந்து கொண்டிருக்கிறதோ?

    ReplyDelete
  61. Potemkin said...
    ////பாபு,
    கிரடிட் கார்டு பற்றிய பதிவில் நீங்கள் பயன்படுத்திய படங்கள், நீங்கள் எடுத்த புகைப் படங்களில்லை. கூகிளில் 'credit card', 'customer care' என்று தேடினால் முதல் பக்கத்தில் வரும் படங்கள் தான் அவை. அவைகளை நீங்கள் வாங்கினீர்களா? அல்லது ஏதாவது கலர் கரெக்ஷன், எடிட்டிங் செய்தீர்களா? இல்லை, எடுத்த வலைத் தளத்தின் பெயரையாவது குறிப்பிட்டீர்களா//// >>>>>> நண்பரே, தவறாக என்ன வேண்டாம். கூகிளில் பாபு மட்டுமல்ல, உலகில் பலரும் படத்தை எடுக்கிறார்கள். அந்த படத்தை வைத்து பாபு பணம் சம்பாதிக்கவில்லையே?? ஆனால் தினமலர் என்ன தர்ம பத்திரிக்கையா??? பாபு, அதே சமயத்தில் நாமும் இனி Potemkin சொல்வதுபோல "நன்றி கூகிள்" என்று நம் பதிவில் போடுவது முறையாக இருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  62. >>>> பாபு, நீங்கள் நேற்றே சென்னை தினமலர் அலுவலகத்திற்கு வந்திருக்க வேண்டும். நேருக்கு நேர்தான் சரி. சிரமம் பாரமால் உடனே கிளம்புங்கள். சட்டம் தெரிந்த ஒருவர் துணையோடு. வலையக நண்பர்கள் யாரேனும் பாபுவிற்கு ஒரு சட்ட நிபுணர் அல்லது விவரம் தெரிந்த வல்லுனரை பரிந்துரை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இது அவருக்கு மட்டுமல்ல.. நம் பதிவுலக சமூகத்திற்கே செய்யும் பேருதவியாக இருக்கும்.

    ReplyDelete
  63. கண்டிக்கவேண்டிய விஷயம்...

    துளசியம்மா சொன்னமாதிரி,பத்திரிகைகளுக்குச் செய்திசேகரிப்பவர்களின் கைங்கர்யம்ன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  64. //என்னங்க அவங்களைத் திட்டப்போய் என்னையும் சேர்த்து திட்டனமாதிரியில இருக்கு..//

    தப்பா நினைக்காதீங்க பிரதர் .இந்த திட்டு அவங்களுக்குதான் .இதை விட கேவலமா என்னால திட்ட முடியாது ..!!!

    ReplyDelete
  65. அடக்கொடுமையே இப்படி எல்லாம் கூட நடக்குதா... கொடுமைடா சாமி... ஒரு பதிவு எழுத எத்தனை நேரம் செலவிடறோம்னு எழுதறவங்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும்... காபி பேஸ்ட் பண்றவங்களுக்கு அந்த அருமை தெரியாது...

    ReplyDelete
  66. அட நீங்க வேற நான் பதிவு எழுத ஆரம்பித்ததிலிருந்து இந்த கதை தான் நடக்குது.
    உஙக்ள் பதிவு தினமலரில், என் பதிவுகளை எந்த நாதாரின்னு தெரியல, அபப்டியே தினகரனுகும், என் சொந்த அனுபவ பதிவு.
    அப்படியே அனுப்பி இருக்காங்க .

    பதிவு மட்டும் போட்டு தான் மனதை ஆற்றி கொள்ள முடிந்தது,

    ஆனால் அப்பட்டமா எடுத்து மற்றவர்கள் இன்னொரு பிலாக்கும் ஆரம்பித்து விட்டார்கள், ஒருவர் புக்கே போட்டுவிட்டார்,
    போஸ்ட் கமெண்ட் வழியா திட்டியும் புரோயஜனம் இல்லை

    ( ஆனால் உஙக்ள் பதிவ பார்த்தும் மிக அதிர்ச்சியாக இருக்கு) அவரை நன்கு தெரிந்தவர்கள் அங்கு செல்லாமல் இருப்பது நல்லது.

    ReplyDelete
  67. //தினமலரில் வேலை செய்யும் யாரோ ஒருத்தர்தான் இந்தப் பதிவுத்திருட்டு
    செய்யறார்.////
    ippadiyum irukakalaam

    ReplyDelete
  68. தினமல்ர் போஸ்ட் கமெண்ட் ஆப்ஷன் அலல்து மெயில் ஐடி இருந்தால் அது மூலமாக தெரியபடுத்துங்கள்

    ReplyDelete
  69. ஒகே ஒகே மெயில் அனுப்பிட்டீங்களா?

    ReplyDelete
  70. பதிவுலகில் ஒரு வழக்கறிஞர் இலவச சட்ட ஆலோசனைகள் வழங்குகிறார். என்னிடம் அவர் விபரங்கள் இல்லை. அவரை அணுகி, தின மலத்தின் திருட்டுக்கு சட்டம் வழி தீர்வு காணுங்கள்.
    --------------------------
    தறுதலை
    (தெனாவெட்டு குறிப்புகள் -டிச - 2010 )

    ReplyDelete
  71. ஏய் களவாணி களவாணி,

    களவு செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்...

    ReplyDelete
  72. பேசாம உடனே தினமலர் மேல் வழக்கு போடுங்க. கட்டாயம் உங்களுக்கு மான நஷ்ட இழப்பீடு கட்டாயம் கிடைக்கும்.

    ReplyDelete
  73. என்ன இருந்தாலும் இப்படி செய்ய கூடாது வருத்தம் தான் நண்பரே

    ReplyDelete
  74. சிவகுமார் said...

    Potemkin said...
    ////பாபு,
    கிரடிட் கார்டு பற்றிய பதிவில் நீங்கள் பயன்படுத்திய படங்கள், நீங்கள் எடுத்த புகைப் படங்களில்லை. கூகிளில் 'credit card', 'customer care' என்று தேடினால் முதல் பக்கத்தில் வரும் படங்கள் தான் அவை. அவைகளை நீங்கள் வாங்கினீர்களா? அல்லது ஏதாவது கலர் கரெக்ஷன், எடிட்டிங் செய்தீர்களா? இல்லை, எடுத்த வலைத் தளத்தின் பெயரையாவது குறிப்பிட்டீர்களா//// >>>>>> நண்பரே, தவறாக என்ன வேண்டாம். கூகிளில் பாபு மட்டுமல்ல, உலகில் பலரும் படத்தை எடுக்கிறார்கள். அந்த படத்தை வைத்து பாபு பணம் சம்பாதிக்கவில்லையே?? ஆனால் தினமலர் என்ன தர்ம பத்திரிக்கையா??? பாபு, அதே சமயத்தில் நாமும் இனி Potemkin சொல்வதுபோல "நன்றி கூகிள்" என்று நம் பதிவில் போடுவது முறையாக இருக்கும் என நினைக்கிறேன். /////

    சிவக்குமார்,
    கூகுளில் இருந்து எடுக்கும் படங்களுக்கு உரிமம் பெற வேண்டுமென.. எந்த விதிமுறைகளையும் கூகுள் விதிக்கவில்லை.. அப்படியிருக்க Potemkin இன் கருத்து விதண்டாவாதமாகவே இருக்கிறது..

    நீங்க சிரமம் எடுத்துக்கிட்டு எனக்கு யோசனைகள் சொல்லிட்டு வர்றீங்க.. ரொம்ப நன்றிங்க சிவகுமார்..

    ReplyDelete
  75. பாபு, கூகுளில் நாம் படத்தை தேர்வு செய்கையில் அந்த பக்கத்தின் வலது மேற்பகுதியில் "This image may be subject to copyright." என்ற சொற்கள் இருக்கும். பொதுவாக இதில் பிரச்னை ஏற்பட்டதில்லை. எனினும், நாம் அப்படங்களை நம் பதிவில் இடும்போது: நன்றி கூகுல் என போடலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

    ReplyDelete
  76. சிவகுமார் said...

    பாபு, கூகுளில் நாம் படத்தை தேர்வு செய்கையில் அந்த பக்கத்தின் வலது மேற்பகுதியில் "This image may be subject to copyright." என்ற சொற்கள் இருக்கும். பொதுவாக இதில் பிரச்னை ஏற்பட்டதில்லை. எனினும், நாம் அப்படங்களை நம் பதிவில் இடும்போது: நன்றி கூகுல் என போடலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். ////

    நல்ல யோசனைதாங்க.. அப்படியே செய்திடலாங்க..

    நன்றிங்க சிவகுமார்..

    ReplyDelete
  77. ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வந்தேன். கஷ்டமா இருக்கு பாபுண்ணா, பதிவர்களுக்கென்று தனி ஒரு சங்கம் வந்தால் தேவலை போல. அந்த அளவு இவர்களின் அராஜகங்கள். சமையல் குறிப்புகளைத்தான் திருடிட்டு இருந்தாங்க. இப்போ எல்லாத்துலயும் கை வக்க ஆரம்பிச்சுட்டாங்க.

    ஏதும் பதில் வந்ததா? இல்லை, வேறெதுவும் சட்ட பூர்வமா அணுக யோசிச்சிருக்கீங்களா?

    ReplyDelete
  78. அன்னு said...

    ஏதும் பதில் வந்ததா? இல்லை, வேறெதுவும் சட்ட பூர்வமா அணுக யோசிச்சிருக்கீங்களா? ////

    பதில் ஏதும் இல்லங்க.. சட்டபூர்வமாக அணுக டைம் இல்ல.. நம்ம வேலையே சரியா இருக்கு.. மனசுக் கஷ்டத்தோட அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.. திருட்டுப் பசங்க..

    நன்றிங்க அன்னு..

    ReplyDelete
  79. இதே கதை எனக்கும் நடந்து இருக்கு...என்னுடைய கதை "எத்தனுக்கு எத்தன்" சென்ற வருடம் தினமணியில் வெளி ஆகியிருந்தது...என்னிடம் ஒரு சிறு விளக்கம் கூட தராமல்

    ReplyDelete
  80. டக்கால்டி said...

    இதே கதை எனக்கும் நடந்து இருக்கு...என்னுடைய கதை "எத்தனுக்கு எத்தன்" சென்ற வருடம் தினமணியில் வெளி ஆகியிருந்தது...என்னிடம் ஒரு சிறு விளக்கம் கூட தராமல்////

    ம்ம்ம்.. இவங்ககிட்ட கத்தி ஒன்னுத்துக்கும் ஆகலை நண்பா.. முன்பெல்லாம் திருட்டு வெளியே தெரியாது.. இப்போது இணையத்தின் மூலமா உடனே தெரிஞ்சுக்குறோம்..

    ReplyDelete