பொண்ணுங்க மனசுல என்ன ஓடிட்டு இருக்கு.. அவங்க எதை விரும்பறாங்க அப்படிங்கறதை தெரிஞ்சிக்கிட்டால் எல்லாமே சுலபமாயிடும்.. கண்டிப்பாக பொண்ணுங்களுக்கு பொண்ணுங்க.. என்ன நினைக்கறாங்கன்னு சொல்ல மாட்டாங்க.. அப்படியிருக்க ஒரு ஆணால் அவங்க மனசைப் படிக்க முடிந்தால்.. பொண்ணுங்க மனசுக்குள்ள திங்க் பண்ற எல்லா விசயங்களையும் கேட்க முடிந்தால்.. எல்லா பிரச்சினைகளும் சால்வ்டு இல்லையா..
அப்படி ஒருத்தர்தான் நம்ம ஹீரோ.. சரி அவரைப் பற்றி ஒரு இன்ட்ரோடக்சன்..
நிக் மார்சல் (மெல் ஜிப்சன்).. ஒரு விளம்பரக் கம்பெனியில வேலை பார்க்கறவர்.. அவருக்கு கல்யாணமாகி டைவர்சும் ஆயிடுச்சு.. ரெண்டு பேருக்கும் 15 வயசுல ஒரு பொண்ணும் இருக்கு..
பொண்ணுங்களைக் கவுக்கறதுலயும்.. கம்பெனியில் ஆண்களுக்கான விளம்பரங்களை உருவாக்குவதிலும் வல்லவராக இருக்கார் நம்ம ஹீரோ.. நிறையப் பொண்ணுங்களுக்கு அவரைப் பிடிச்சிருந்தாலும்.. மனசுக்குள்ள நிறையப் பேர் அவரைத் திட்டிக்கிட்டும் இருக்காங்க..
கம்பெனிக்கு அடுத்த மேனேஜராகப் போறோம்னு நிக் மார்சல் நினைச்சுட்டு இருக்கப்போ.. அவரோட பாஸ்.. ஒரு பொண்ணை அவரோட டிவிசனுக்கு மேனேஜாராக நியமிக்கறார்.. அவங்க கம்பெனி அடுத்து தயாரிக்கப்போற அடுத்த பிராடெக்ட் பொண்ணுங்களுக்கானது.. அப்புறம் புதுசா வந்திருக்கற பொண்ணு ரொம்ப திறமைசாலி.. அதனாலதான் உனக்கு அவரை மேனேஜராக்கினேன்னு சொல்றார் அவரோட பாஸ்..
இந்த சமயத்துல ஹீரோவோட எக்ஸ்-ஒய்ஃப்க்கு மேரேஜாகுது.. அவங்க ஹனிமூன் போகனுங்கறதால.. நிக் மார்சல் அவரோட பொண்ணை கொஞ்ச நாள் பார்த்துக்க வேண்டியிருக்கு.. அந்தப் பொண்ணுக்கு அவரைக் கண்டாலே பிடிக்கல.. சின்ன வயசுலயே ஒரு பாய் பிரண்ட் வைச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கு.. அட்வைஸ் பண்ணப் போற நிக் மார்சலையும் நீ யார் என்னக் கேக்கறதுன்னு திட்டிடுடுது..
தனக்குப் பதிலாக ஒரு பொண்ணை மேனேஜராக நியமிச்சிட்டதாலவும்.. தன் பொண்ணு இன்சல்ட் பண்றதாலவும் கடுப்பா உட்காந்திருக்கார் நிக் மார்சல்.. அன்னைக்கு நைட் ஆக்சிடெண்டா எலக்ட்ரிக் ஷாக் அடிச்சி மயக்கமாகிடறார்..
அடுத்த நாள் ஆபிஸ் போறவருக்கு பெரிய அதிர்ச்சி.. அவரை சுற்றி இருக்கற பொண்ணுங்க எல்லாம் மனசுல என்ன நினைக்கறாங்கன்னு தெளிவாக அவருக்கு கேக்குது.. முதல்ல இந்த மாதிரி கேக்கறது அவருக்கு பெரிய தலைவலியாக இருந்தாலும்.. தனக்கு சாதகமாக இந்த பிரச்சினையைப் பயன்படுத்திக்கனும்னு முடிவெடுக்கறார்..
அப்ப இருந்து.. அவர் மேனேஜரோட தாட்ஸை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு.. அவரோட ஐடியாக்களைத் திருடி.. கம்பெனியில் நல்ல பெயர் வாங்கறார்.. கூட வேலை பார்க்கற பொண்ணுங்களோட எண்ணங்களைப் புரிஞ்சுக்கிட்டு எல்லாருக்கும் நல்ல பிள்ளையாயிடறார்.. தன்னோட பொண்ணுகூட ராசியாகிறார்.. மேனேஜராக வந்திருக்கற பொண்ணும் அவர் மேல இம்ப்ரஸ் ஆகி லவ் பண்ண ஆரம்பிச்சிடறாங்க.. அவரோட முழு ஐடியாக்களையும் திருடி.. பொண்ணுங்களுக்கான ஒரு விளம்பரப் படத்தை சக்சஸ்புல்லாக எடுத்து.. அவரோட பாஸ்கிட்ட நல்ல பெயர் வாங்கறார் ஹீரோ..
தன்னோட மேனேஜரோட ஐடியாக்களைத் திருடினாலும்.. அந்தப் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணா இருக்கறதால.. நிக் மார்சலோட கேரக்டரும் கொஞ்சம் கொஞ்சம் சேஞ்ச் ஆகி ரொம்ப நல்லவராயிடறார்.. முதல்ல இருந்தே.. இவர் செய்த தில்லு முல்லுகளால அந்த மேனேஜர் பொண்ணுக்கு வேலை போக.. அந்தப் பிரச்சினையையும்.. அவரைச் சுற்றியிருந்த வேறு சில பிரச்சினைகளையும் எப்படி சால்வ் பண்றார்னு ரொம்ப காமெடியாக சொல்லியிருப்பாங்க படத்துல..
முழுக்க முழுக்க காமெடியான படம்..
பிரேவ் ஹார்ட், தி பேசன் ஆஃப் தி கிரிஸ்ட், அபோகாலிப்டோ போன்ற செம ஹிட்டான சீரியசான படங்களை இயக்கியவர் மெல் ஜிப்சன்.. இந்தப் படத்துல காமெடியிலும் படம் முழுக்க கலக்கியிருக்கார்..
விவேக்கூட இந்தப் படத்தை வைச்சித்தான் ஒரு படத்துல காமெடி டிராக் அமைச்சிருந்தார்..
"எந்தக் காரணமும் இல்லைனாலும் பொண்ணுங்க எப்பவுமே கவலைப்பட்டுட்டே இருக்கீங்க" அப்படின்னு சொல்வார் ஹீரோ..
அவருடைய பொண்ணு.. மனசுல நினைக்கிற விசயங்களை கேக்க நேர்றப்போ அவரோட அவஸ்தை நமக்கு ரொம்பக் காமெடியாக இருக்கும்..
மேனேஜராக வர்ற பொண்ணு.. மெல் ஜிப்சன் மேல இம்ப்ரஸ் ஆகற சீனைப் பற்றியெல்லாம் நான் சொன்னா நல்லா இருக்காது.. பாருங்க.. ரொம்ப ரசித்துப் பார்க்க முடிந்தது..
இன்னும் நிறையக் காட்சிகளை சொல்ல முடியும்.. ஆனால் எல்லாம் அடல்ஸ் ஒன்லி ஜோக்ஸா (ஒன்லி ஜோக்ஸ் மட்டும்தான் :-)) இருக்கறதால நீங்களே பார்த்து எஞ்ஜாய் பண்ணுங்க..
ஆஹா சுவராஸ்யமா இருக்கு.... விவேக்கு சுட்டது இதத்தானா?
ReplyDeleteஆகா! நான் பாக்கலையே! கேள்விப்பட்டது மட்டும்தான்...பாக்கணும்! :-)
ReplyDeleteஓகே ரைட்டு பார்த்துடலாம்..
ReplyDeleteகேக்கவே நல்லாயிருக்கு! நமக்கும் இருந்தால்?!!
ReplyDeleteஆமா....விவேக் எதைத்தான் சுடல?!!
நகைச்சுவை கூடவா?
ReplyDeleteVery funny movie.... :-)
ReplyDeleteபடம் நல்லாயிருக்கும்போல! பார்க்கலாம்!
ReplyDeleteஆஹா உடனே பாக்கணுமே,
ReplyDeleteம்ம்ம்ம் விவேக் கில்லாடிதான் போங்க...
நல்ல விமர்சனம்...வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த படம் ஏற்கனவே பாத்துட்டேங்க.. நீங்க சொல்ற மாதிரி.. நல்ல காமெடி படம்..
ReplyDeleteபெண் மனதில் இருப்பதை தெரியும் இடங்களில் உள்ள தர்மசங்கடங்கள்...நல்ல எடுத்திருப்பாங்க..
பகிர்வுக்கு தேங்க்ஸ்.. :-))
//பெண்ணுக்கு என்ன வேண்டும்?//
ReplyDeleteமிகப்பெரிய ????
Vivek vivaramathan vela pathurukkar...
ReplyDeleteரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.... நண்பர்கள் சொன்னதுபோல விவேக் இங்கிருந்து தான் ஆட்டையை போட்டிருக்காரா...
ReplyDelete//"எந்தக் காரணமும் இல்லைனாலும் பொண்ணுங்க எப்பவுமே கவலைப்பட்டுட்டே இருக்கீங்க" அப்படின்னு சொல்வார் ஹீரோ..//
ReplyDeleteகவலை இல்லைங்கறதே கவலையோ என்னமோ...பழைய படமோ...? (ஹி..ஹி..ஆங்கிலப் படம் பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது..!)
யாரப்பா அது மிட்நைட்ல பதிவு போடரது? ஓ பாபுவா?
ReplyDelete>>>>
ReplyDeleteஇன்னும் நிறையக் காட்சிகளை சொல்ல முடியும்.. ஆனால் எல்லாம் அடல்ஸ் ஒன்லி ஜோக்ஸா (ஒன்லி ஜோக்ஸ் மட்டும்தான் :-))
அடடா வட போச்சே.. சரி தனி பதிவா அந்த ஜோக்ஸை போடுங்க
விமர்சனம் நல்லா ருக்கு பாபு. ஸ்டில்ஸ் இன்னும் போட்டிருக்கலாம்
ReplyDeleteநல்லா விமரிச்சுருகீங்க
ReplyDeletegood review babu.
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஆஹா சுவராஸ்யமா இருக்கு.... விவேக்கு சுட்டது இதத்தானா?////
ஆமாங்க.. அப்படியே சுட்டுட்டார்.. :-)
ஜீ... said...
ReplyDeleteஆகா! நான் பாக்கலையே! கேள்விப்பட்டது மட்டும்தான்...பாக்கணும்! :-)
பாருங்க ஜீ.. :-)
மாணவன் said...
ReplyDeleteஓகே ரைட்டு பார்த்துடலாம்..///
:-).. டைம் இருந்தால் பாருங்க.. நல்ல நகைச்சுவைத் திரைப்படம்..
வைகை said...
ReplyDeleteகேக்கவே நல்லாயிருக்கு! நமக்கும் இருந்தால்?!!
ஆமா....விவேக் எதைத்தான் சுடல?!!///
நமக்கும் இருந்தால்.. நன்றாகவே இருக்கும் இல்லையா.. ஆனால் நிறைய சங்கடங்களும் வரும்..
THOPPITHOPPI said...
ReplyDeleteநகைச்சுவை கூடவா?
அதான் பாருங்க.. எல்லாமே இப்படித்தான் இருக்கு..
Chitra said...
ReplyDeleteVery funny movie.... :-)///
ஆமாங்க சித்ரா.. மிகவும் ரசித்துப் பார்க்கலாம்..
எஸ்.கே said...
ReplyDeleteபடம் நல்லாயிருக்கும்போல! பார்க்கலாம்!///
ஆமாங்க எஸ்.கே.. நல்ல படம்..
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஆஹா உடனே பாக்கணுமே,
ம்ம்ம்ம் விவேக் கில்லாடிதான் போங்க...////
வாங்க மனோ..
அந்த ஜோக்ஸ் கொஞ்சம் சொல்லிருக்கலாம் . படம் பாத்து கிட்டே விமர்சனம் எழுதுவீங்களோ ?
ReplyDeleteநான் இந்தப்படம் பார்த்திருக்கேன். சில நகைச்சுவைகள் படம் முடிஞ்ச அப்புறமும் தனியா நம்மளை நினைச்சி சிரிக்க வைக்கும்.. விவேக் இந்த கான்செப்டை சுட்டுத்தான் விசில் படத்துல காமெடி பண்ணி இருப்பார். அருமையான விமர்சனம் நண்பரே
ReplyDeleteமதுரை சரவணன் said...
ReplyDeleteநல்ல விமர்சனம்...வாழ்த்துக்கள்..///
நன்றிங்க சரவணன்..
Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
ReplyDeleteஇந்த படம் ஏற்கனவே பாத்துட்டேங்க.. நீங்க சொல்ற மாதிரி.. நல்ல காமெடி படம்..
பெண் மனதில் இருப்பதை தெரியும் இடங்களில் உள்ள தர்மசங்கடங்கள்...நல்ல எடுத்திருப்பாங்க..
பகிர்வுக்கு தேங்க்ஸ்.. :-))////
பாராட்டுக்கு நன்றிங்க ஆனந்தி..
அன்பரசன் said...
ReplyDelete//பெண்ணுக்கு என்ன வேண்டும்?//
மிகப்பெரிய ????///
ஹா ஹா ஹா...
வழிப்போக்கன் - யோகேஷ் said...
ReplyDeleteVivek vivaramathan vela pathurukkar...///
ஆமாம் யோகேஷ்... :-)
Philosophy Prabhakaran said...
ReplyDeleteரொம்ப சுவாரஸ்யமா இருக்கு.... நண்பர்கள் சொன்னதுபோல விவேக் இங்கிருந்து தான் ஆட்டையை போட்டிருக்காரா...///
ம்ம்ம்.. :-)
ஸ்ரீராம். said...
ReplyDelete//"எந்தக் காரணமும் இல்லைனாலும் பொண்ணுங்க எப்பவுமே கவலைப்பட்டுட்டே இருக்கீங்க" அப்படின்னு சொல்வார் ஹீரோ..//
கவலை இல்லைங்கறதே கவலையோ என்னமோ...பழைய படமோ...? (ஹி..ஹி..ஆங்கிலப் படம் பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது..!)////
ஹா ஹா ஹா.. கரெக்டாக சொன்னீங்க.. எதையாவது நினைச்சுட்டேதான் இருப்பாங்க மனசுல.. :-)..
பழைய படம்தாங்க.. 2000 ஆம் ஆண்டுல வந்தது..
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteயாரப்பா அது மிட்நைட்ல பதிவு போடரது? ஓ பாபுவா?///
ஹா ஹா ஹா.. ஆமாங்க..
சி.பி.செந்தில்குமார் said...
>>>>
இன்னும் நிறையக் காட்சிகளை சொல்ல முடியும்.. ஆனால் எல்லாம் அடல்ஸ் ஒன்லி ஜோக்ஸா (ஒன்லி ஜோக்ஸ் மட்டும்தான் :-))
அடடா வட போச்சே.. சரி தனி பதிவா அந்த ஜோக்ஸை போடுங்க////
:-)..
சி.பி.செந்தில்குமார் said...
விமர்சனம் நல்லா ருக்கு பாபு. ஸ்டில்ஸ் இன்னும் போட்டிருக்கலாம்///
நன்றிங்க செந்தில்குமார்..
Meena said...
ReplyDeleteநல்லா விமரிச்சுருகீங்க ///
நன்றிங்க மீனா..
ஆனந்தி.. said...
ReplyDeletegood review babu. ////
நன்றிங்க ஆனந்தி..
அபோகாலிப்டோல அவர் நடிசிருந்தாரா என்ன?
ReplyDeleteஹி ஹி இந்த மாறி விஷயம் எல்லாம் எனாகு தான் தோணுமாக்கும்
இரண்டு வருடத்திற்கு முன்பு இந்த படம் பார்த்தேன். காப்பினாலும் விவேக் காமெடியும் நல்லாயிருக்கும்.
ReplyDeleteSpeed Master said...
ReplyDeleteஅருமை////
நன்றி..
நா.மணிவண்ணன் said...
ReplyDeleteஅந்த ஜோக்ஸ் கொஞ்சம் சொல்லிருக்கலாம் . படம் பாத்து கிட்டே விமர்சனம் எழுதுவீங்களோ ?////
அப்படி எல்லாம் இல்லங்க மணிவண்ணன்.. இந்தப் படம் பார்த்து 5,6 மாசம் இருக்கும்.. ஆங்கிலப் படங்கள் எல்லாம் உடனே எழுதிட மாட்டேன்.. மனசுலயே இருக்கற படங்களை மட்டும்தான் எழுதுவேன்.. :-)..
கவிதை காதலன் said...
ReplyDeleteநான் இந்தப்படம் பார்த்திருக்கேன். சில நகைச்சுவைகள் படம் முடிஞ்ச அப்புறமும் தனியா நம்மளை நினைச்சி சிரிக்க வைக்கும்.. விவேக் இந்த கான்செப்டை சுட்டுத்தான் விசில் படத்துல காமெடி பண்ணி இருப்பார். அருமையான விமர்சனம் நண்பரே////
நன்றிங்க நண்பா..
Arun Prasath said...
ReplyDeleteஅபோகாலிப்டோல அவர் நடிசிருந்தாரா என்ன?
ஹி ஹி இந்த மாறி விஷயம் எல்லாம் எனாகு தான் தோணுமாக்கும் ////
சரியான கேள்வி கேட்டீங்க அருண்.. :-) அபோகாலிப்டோ படத்துல மெல் ஜிப்சன் நடிக்கல.. மாத்திடறேன்.. தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றிங்க :-)..
அமுதா கிருஷ்ணா said...
ReplyDeleteஇரண்டு வருடத்திற்கு முன்பு இந்த படம் பார்த்தேன். காப்பினாலும் விவேக் காமெடியும் நல்லாயிருக்கும். ////
விவேக் காமெடியை நானும் ரசித்து சிரித்திருக்கிறேன்.. நன்றாகவே இருக்கும்.. ஏத்துக்கறேங்க..
மறுபடியும் ஒரு pshsycology பதிவுன்னு நினைச்சு வந்தேன்... விமர்சன பதிவு நு படிச்சதுக்கு அப்புறம் தெரிஞ்சுது... காமெடி படம் போல!! பார்க்கலாம்!!
ReplyDeleteபாபு...to be frank...ஏதோ குறையுது விமர்சனத்துல....அது படத்தாலையா இல்லை எழுத்தாலையானு தெரியல
ReplyDeleteமதுரை பாண்டி said...
ReplyDeleteமறுபடியும் ஒரு pshsycology பதிவுன்னு நினைச்சு வந்தேன்... விமர்சன பதிவு நு படிச்சதுக்கு அப்புறம் தெரிஞ்சுது... காமெடி படம் போல!! பார்க்கலாம்!!///
உங்களுக்கு ஏமாற்றத்தை அளித்ததற்கு வருந்தறேங்க நண்பா.. அதுக்கென்ன திரும்பவும் எழுதிடலாம் விடுங்க.. :-)
அருண் பிரசாத் said...
ReplyDeleteபாபு...to be frank...ஏதோ குறையுது விமர்சனத்துல....அது படத்தாலையா இல்லை எழுத்தாலையானு தெரியல ////
உங்களது எண்ணத்தை வெளிப்படையாகத் தெரிவித்ததற்கு நன்றிங்க அருண்.. என்ன குறை இருக்கலாம்னு கவனிக்கறேங்க..
நன்றி...
சாரி நண்பா ரொம்ப லேட்டாயிடுச்சு, வீட்டுல கம்ப்யூட்டர் இல்லை, ஆபீஸ் கம்பியூட்டர்தான், நான் நீங்கதான் கதை எழுதிருக்கீங்களோன்னு நினைச்சேன், அப்புரம் தான் தெரிஞ்சது சினிமான்னு ரொம்ப ந்ல்லா இருக்குங்க பாபு.
ReplyDeleteஇரவு வானம் said...
ReplyDeleteசாரி நண்பா ரொம்ப லேட்டாயிடுச்சு, வீட்டுல கம்ப்யூட்டர் இல்லை, ஆபீஸ் கம்பியூட்டர்தான், நான் நீங்கதான் கதை எழுதிருக்கீங்களோன்னு நினைச்சேன், அப்புரம் தான் தெரிஞ்சது சினிமான்னு ரொம்ப ந்ல்லா இருக்குங்க பாபு. ////
பரவாயில்லைங்க நண்பா.. நீங்க வருகை தந்தது ரொம்ப சந்தோசங்க...
ஓ.. நான் கதை எழுதிட்டேன்னு நினைச்சீங்களா.. :-)..
பாராட்டுக்கு நன்றிங்க...
பதிவு நல்லா இருக்குங்க ..
ReplyDelete"எந்தக் காரணமும் இல்லைனாலும் பொண்ணுங்க எப்பவுமே கவலைப்பட்டுட்டே இருக்கீங்க" அப்படின்னு சொல்வார் ஹீரோ.//
ReplyDeleteசூப்பர் வசனம்
paartthiruvom...
ReplyDelete//"எந்தக் காரணமும் இல்லைனாலும் பொண்ணுங்க எப்பவுமே கவலைப்பட்டுட்டே இருக்கீங்க" அப்படின்னு சொல்வார் ஹீரோ.//
ReplyDeleteSuper♥♥♥
நான் தமிழ்ப் படமே பார்க்கறதில்லை. ஆங்கிலத்துக்கு எங்கே போறது? அந்த அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்சை எனக்கு மட்டும் சொல்லுங்க. ( எல்லோரும் காதப் பொத்திக்கங்கப்பா)
ReplyDeleteசொன்ன விதத்துக்காகவே போய் பாக்கலாம்!!!
ReplyDeleteநல்லா எழுதியிருக்கீங்க!!!!!!!!!!
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
ReplyDeletehttp://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html
விமர்சனம் பண்ணியே படத்த பாக்கனும்னு முடிவுபண்ணிட்டன் நண்பா
ReplyDelete/// பொண்ணுங்க மனசுக்குள்ள திங்க் பண்ற எல்லா விசயங்களையும் கேட்க முடிந்தால்.. எல்லா பிரச்சினைகளும் சால்வ்டு இல்லையா..///
ReplyDeleteசால்வ் ஆகிரும்னு சொல்லுறீங்களா ?
//தனக்குப் பதிலாக ஒரு பொண்ணை மேனேஜராக நியமிச்சிட்டதாலவும்.. தன் பொண்ணு இன்சல்ட் பண்றதாலவும் கடுப்பா உட்காந்திருக்கார் நிக் மார்சல்.. அன்னைக்கு நைட் ஆக்சிடெண்டா எலக்ட்ரிக் ஷாக் அடிச்சி மயக்கமாகிடறார்../
ReplyDeleteஏதோ ஒரு தமிழ்ப்படத்திளையும் இப்படி ஆகுமே , ஆமா நம்ம சத்தியராஜ் நடிச்ச படம்னு நினைக்கிறேன் !
நம்ம உள்ளூர் வாசிகள் எங்க இருந்து தான் சுடாம இருக்காங்க!?
ReplyDeleteஇரண்டு நாட்களாக புத்தக சந்தைக்கு சென்று வந்த களைப்பில் இருந்ததால் நெட்பக்கம் வர முடியவில்லை...
ReplyDeleteநூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html