.

Monday, December 6, 2010

பெங்களூரில் ஒரு ஃபிளை "ஓவர்" - மறுபக்கம்

பெங்களூரில் ஒரு ஆண்டுக்கு முன்பு 11 கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்ட ஒரு ஃபிளை ஓவரைப் பற்றி.. "பெங்களூரில் ஒரு ஃபிளை "ஓவர்"" என்ற பதிவில் முன்பு விவரித்திருந்தேன்.. பெங்களூரில் இருந்து ஒசூர் செல்லும் சாலையில் இந்தப் பாலம் அமைஞ்சிருக்கு..

இந்தப் பாலம் கட்டப்பட்டதோட நோக்கம் இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதே.. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.. ஓசூர் சாலையில் உள்ள பொம்மனஹல்லி மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி மாதிரியான பகுதிகளினுள் அதிகமாக வாகனங்கள் சென்று வருவதே..

சரி இந்தப் பாலம் கட்டியாகி விட்டது.. இப்போது இங்கு போக்குவரத்து நெரிசல்கள் குறைந்துள்ளதா என்றால் அது இல்லைன்னுதான் சொல்லனும்.. காரணம் என்னன்னா.. இந்த பாலம் ஆரம்பிக்கறதே நான் முன்பு குறிப்பிட்ட பொம்மனஹல்லிங்கற பகுதிக்கு முன்னாடி இருக்கற ஸ்டாப்பிங்லதான்.. அதனால அந்தப் பகுதிகளுக்குள்ள போகவேண்டிய வாகனங்கள் நேராக ஓசூர் சாலையில போகவேண்டிய வாகனங்களை மறிச்சு போயிக்கிட்டுதான் இருக்கு.. அதுபோலவே.. இந்த பாலம் முடிவடையறதும்.. எலக்ட்ரானிக் சிட்டி தாண்டிதான்..

இந்தப் பாலத்துக்கு நடுவுல மொத்தம் ஏழு ஸ்டாப்பிங் இருக்கு.. அதுல ஒரே ஒரு ஸ்டாப்பிங் தவிர மற்ற இடங்கள் எல்லாவற்றிலுமே.. மக்கள் அதிகமாக ஸ்டே பண்ணியிருக்கிற ஏரியாதான்.. அதனால இந்தப் பாலத்தை இவங்களால பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுட்டுச்சு..

இங்கே எலக்ட்ரானிக் சிட்டியில இருக்கற பெரும்பாலான சாஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு அவங்களோட வாகனங்கள் வர்றது எப்படியும் ஆயிரத்தை மீறும்.. அதனால அந்த நிறுவனங்கள் எல்லாம் இந்தப் பாலத்தை பயன்படுத்தறாங்களான்னா அதுவும் இல்லை.. குறிப்பிட்ட ஒரே ஒரு நிறுவனத்தைத் தவிர..

காரணம் இந்தப் பாலம் பே அண்ட் யூஸ் டைப்.. காரணம் இதுதானான்னு சரியாகத் தெரியல.. ஆனால் எப்போதும் போல அந்த கம்பெனி வண்டிகள் எல்லாம்.. சாலையைத்தான் பயன்படுத்தறாங்க..

சரி ஊருக்குப் போறதுக்காகவாவது இந்தப் பாலம் யூஸ் ஆகுதான்னா அதுவும் இல்ல.. அரசாங்க பேருந்துகள் யூஸ் பண்ணாததுக்கு காரணம் நான் மேல சொன்ன மாதிரி பாலத்தை யூஸ் பண்ணினா பணம் கொடுக்கனும்னுதான்.. ஓசூர் சாலையில ஒவ்வொரு பிரைவேட் பஸ்களுக்கும் பிரான்ச் இருக்கறதால.. அங்கே நிக்கறவங்களை பிக்கப் பண்ணிக்கனும்னு அவங்களும் யூஸ் பண்றதில்லை..

எப்பவும் போல மக்கள் அவதிப்பட்டுட்டேதான் இருக்காங்க.. என்னைப் போன்று இந்தப் பாலம் முடிவடையற இடத்துல இருக்கறவங்களும் இந்தப் பாலத்தை யூஸ் பண்றதில்லை.. காரணம் ஒரு நாளைக்கு அப் அண்ட் டவுன் இந்தப் பாலத்தை யூஸ் பண்ணினா 20 ரூபாயும், ஒரு வழிப் போக்குவரத்துக்கு யூஸ் பண்ணினா 15 ரூபாயும் செலவாகுது.. ஒரு மாசத்துக்கு யூஸ் பண்ணனும்னா.. இதுக்காகவே தனி பட்ஜெட் ஒதுக்க வேண்டியிருக்கு.. எப்பவாவது சீக்கிரம் வீட்டுக்குப் போகனும்னு இந்தப் பாலத்தை யூஸ் பண்ணுவேன்.. ஒவ்வொரு முறையும் எத்தனை வண்டிகளைக் கிராஸ் பண்றேன்னு எண்ணிக்கிட்டே வருவேன்.. ஒருமுறைகூட பத்து வாகனங்களைத் தாண்டினது இல்ல..

சுமார் இரண்டு ஆண்டுகள் இந்தத் திட்டம் நடந்துச்சு.. அந்த சமயங்கள்ல இங்கே இருக்கற மக்கள் பட்ட அவஸ்தை கொஞ்சம் நஞ்சமல்ல.. சூழ்நிலை சீர்கேடு, டிராபிக்குன்னு நிறைய அவஸ்தைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது.. இப்பவும் அதேநிலைதான் தொடருது..

பெங்களூர்.. அதிகமாகப் பாலங்கள் கட்டப்பட்டுள்ள நகரம்.. போக்குவரத்து நெரிசல்தான் காரணம்..

ஓசூர் சாலையிலும் பிரச்சினைக்குரிய இடங்களான பொம்மனஹல்லியிலும், எலக்ட்ரானிக் சிட்டியிலும் சிறிய பாலங்களை அமைச்சிருந்தாலே.. அவங்கவங்க.. எந்த பிரச்சனையும் இல்லாம பயணம் செய்திருக்க முடியும்.. ஒரே ஒரு நிறுவனம் பயனடையறதுக்காக இந்தப் பாலத்தை அமைச்சிருக்காங்கன்னா அது எவ்வளவு பெரிய மோசம்..

போக்குவரத்து நெரிசல் உண்டாகற இடங்கள்ல என்னைப் போல பைக் வைச்சிருக்கறவங்களும்.. ஆட்டோக்காரங்களும் பண்ற சர்க்கஸ் இருக்கே.. பாதசாரிகளுக்கு அதெல்லாம் கடுப்பாகத்தான் இருக்கும்.. வேற வழியில்ல.. விக்ரம் மாதிரி லைன்கட்டி வந்திட்டு இருந்தா.. நைட் பத்து மணிக்குத்தான் வீடு வந்து சேரமுடியும்.. ஏதாவது ஸ்பெசல் பவர் இருந்தா.. பில்டிங் மேலயே வண்டி ஓட்டிட்டு வந்திடலாம்னு தோனுது..

வெகுஜனத்திற்கு தொல்லை கொடுத்து.. கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..


51 comments:

 1. வெகுஜனத்திற்கு தொல்லை கொடுத்து.. கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..  ......எல்லாம் contract கணக்குக்காக இருக்கும். மக்கள் படும் கஷ்டங்களை யாரும் கண்டுக்கலைனு தெரியுது.

  ReplyDelete
 2. Chitra said...

  வெகுஜனத்திற்கு தொல்லை கொடுத்து.. கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..

  ......எல்லாம் contract கணக்குக்காக இருக்கும். மக்கள் படும் கஷ்டங்களை யாரும் கண்டுக்கலைனு தெரியுது.///

  சரிதாங்கா சித்ரா.. இங்கே மக்களை கருத்தில் கொண்டு எந்த வேலையை செய்றாங்க...

  ReplyDelete
 3. ஒரு கம்பேனிக்காக ஒரு பாலமா...? வெளங்கும்யா இந்த நாடு....!

  ReplyDelete
 4. பாலம் கட்ட ரொம்ப நாளா திங்க் பண்ணியிருப்பாய்ங்கன்னு நெனக்கிறேன், அதான் இப்படி!

  ReplyDelete
 5. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ஒரு கம்பேனிக்காக ஒரு பாலமா...? வெளங்கும்யா இந்த நாடு....! ///

  பாலம் கட்டிக்கிட்டு இருந்தப்போ.. அப்படியே கம்பெனி வாசல்லயே ஒரு பாலத்தை இறக்கலாம்னு திட்டம்போட்டுட்டு இருந்ததா கேள்விப்பட்டேன்.. ஆனால் அது ரொம்ப ஓவராப் போயிடும்னு அப்படி செய்ல போல.. நீங்க சொன்ன மாதிரி இப்படி இருந்தா எப்படி நாடு விளங்கும்..

  ReplyDelete
 6. சுய லாபத்திற்காக பொது மக்களின் கஷ்டத்தை நினைத்துப் பார்க்கவில்லை!

  ReplyDelete
 7. எஸ்.கே said...

  சுய லாபத்திற்காக பொது மக்களின் கஷ்டத்தை நினைத்துப் பார்க்கவில்லை! ////

  பொதுமக்களுக்கு பயனளிக்காத இதுபோன்ற திட்டத்திற்கு அரசும்.. துணையாய் இருந்திருக்கிறது.. அப்புறம் எப்படி நினைச்சுப் பார்ப்பாங்க.. :-(

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க எஸ்.கே..

  ReplyDelete
 8. //
  ஏதாவது ஸ்பெசல் பவர் இருந்தா.. பில்டிங் மேலயே வண்டி ஓட்டிட்டு வந்திடலாம்னு தோனுது..

  //
  antha alavukku mosama pocha......... pavam neenga...

  ReplyDelete
 9. வழிப்போக்கன் - யோகேஷ் said...

  //
  ஏதாவது ஸ்பெசல் பவர் இருந்தா.. பில்டிங் மேலயே வண்டி ஓட்டிட்டு வந்திடலாம்னு தோனுது..

  //
  antha alavukku mosama pocha......... pavam neenga... ////

  என்ன பண்றதுங்க யோகேஷ்.. இந்தக் கொடுமையான டிராஃபிக்ல வண்டி ஓட்டிட்டு வர்றப்போ அப்படித்தான் தோனுது..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

  ReplyDelete
 10. // ஒரு நாளைக்கு அப் அண்ட் டவுன் இந்தப் பாலத்தை யூஸ் பண்ணினா 20 ரூபாயும், ஒரு வழிப் போக்குவரத்துக்கு யூஸ் பண்ணினா 15 ரூபாயும் செலவாகுது.. //

  இந்த வரியை மட்டும் நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா... அப்போது போக்குவரத்து நெரிசல்கள் குறைய வாய்ப்புகள் உள்ளன....

  ReplyDelete
 11. //வெகுஜனத்திற்கு தொல்லை கொடுத்து.. கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..//

  அருமை நண்பரே,

  விழிப்புணர்வுடன் சிந்திக்கக்கூடிய தகவல்களை சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்
  தொடருங்கள்.......

  ReplyDelete
 12. பயனுள்ள பதிவு.இன்னும் 2 ஃபோட்டோ போட்டிருக்கலாம்

  ReplyDelete
 13. >>>வெகுஜனத்திற்கு தொல்லை கொடுத்து.. கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..

  வேற எதுக்கு>?தனக்கு கொஞ்சம் தேத்திக்கத்தான்

  ReplyDelete
 14. //வெகுஜனத்திற்கு தொல்லை கொடுத்து.. கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..\\

  கமிசன் பாபு கமிசன்
  நமக்கு தொல்லை அரசியவாதிகளுக்கு
  டப்பு பாபு டப்பு.

  ReplyDelete
 15. //வெகுஜனத்திற்கு தொல்லை கொடுத்து.. கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..//

  வித்தியாசமா இருக்கே...

  ReplyDelete
 16. . கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..

  //

  கண்டிப்பா காரணம் இல்லாம இருக்காது நண்பரே,... எல்லாம் காசு தானே..

  ReplyDelete
 17. அந்த மொதலாளியும் இவெங்களும் நல்லா பாலம் கட்டிரிப்பாங்க!!!

  ReplyDelete
 18. //வெகுஜனத்திற்கு தொல்லை கொடுத்து.. கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..//

  இத விட பாலத்தை கட்டாமல் விட்டு இருக்கலாம்

  இங்கயும் ஒன்றை கட்டி விட்டு பெரிய வாகனங்களை செல்ல விடுறாங்கள் இல்லை , பாலம் கவிழ்ந்து விடும் என்ற பயத்தில் .

  ReplyDelete
 19. Actually it is a good bridge. I used couple of times when going to coimbatore. Empty one and you can escape from all the traffic under the flyover (toll is also not much - compare this with L&T toll in Ukkadam Aathupaalam bridge they charge 8 rs for the small bridge).

  ReplyDelete
 20. நேற்று தான் இந்த அனுபவத்தை நான் சந்தித்தேன் ...மொத்தமே என்னை 6 வண்டிகள் மட்டுமே கடந்து போனது..இத்தனைக்கும் நான் 60 கி.மி. வேகத்தில் தான் சென்றேன்...

  ReplyDelete
 21. கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..//

  என்ன பாஸ் இதுகூட தெரியாம இருக்கீங்க..கொள்ளையடிக்க தான்...

  ReplyDelete
 22. philosophy prabhakaran said...

  // ஒரு நாளைக்கு அப் அண்ட் டவுன் இந்தப் பாலத்தை யூஸ் பண்ணினா 20 ரூபாயும், ஒரு வழிப் போக்குவரத்துக்கு யூஸ் பண்ணினா 15 ரூபாயும் செலவாகுது.. //

  இந்த வரியை மட்டும் நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா... அப்போது போக்குவரத்து நெரிசல்கள் குறைய வாய்ப்புகள் உள்ளன.... ////

  ஒரு வகையில உண்மைதாங்க.. பாலத்துக்கு அடுத்து இருக்கற மக்கள் இந்தப் பாலத்தை யூஸ் பண்ணுவாங்க.. ஆனால் போக்குவரத்துக்கு பேருந்துகளைப் பயன்படுத்தும் மக்கள் கதி எப்பவுமே ஒரேநிலைதான்..

  ReplyDelete
 23. மாணவன் said...

  //வெகுஜனத்திற்கு தொல்லை கொடுத்து.. கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..//

  அருமை நண்பரே,

  விழிப்புணர்வுடன் சிந்திக்கக்கூடிய தகவல்களை சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்
  தொடருங்கள்.......

  ரொம்ப நன்றிங்க..

  ReplyDelete
 24. சி.பி.செந்தில்குமார் said...

  பயனுள்ள பதிவு.இன்னும் 2 ஃபோட்டோ போட்டிருக்கலாம் ///

  ரொம்ப நன்றிங்க.. நானும் 4 ஃபோட்டோ போடனும்னுதான் எடுத்து வைச்சிருந்தேங்க.. நான் மொபைல்ல நெட் கனெக்ட் பண்ணியிருக்கறதால.. 2 ஃபோட்டோக்களை அப்லோட் பண்ணி பதிவை பப்ளிஷ் பண்றதுக்குள்ள 1 மணிநேரமாயிடுச்சு..

  ReplyDelete
 25. venkat said...

  //வெகுஜனத்திற்கு தொல்லை கொடுத்து.. கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..\\

  கமிசன் பாபு கமிசன்
  நமக்கு தொல்லை அரசியவாதிகளுக்கு
  டப்பு பாபு டப்பு. ////

  ரொம்ப சரிங்க.. ஆனால் இங்கே மக்களும், மீடியாக்களும் இந்தப் பாலத்தின் மீதுள்ள குறைகளைப் பெரிசுபடுத்தாமல் விட்டிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கு..

  ReplyDelete
 26. அன்பரசன் said...

  //வெகுஜனத்திற்கு தொல்லை கொடுத்து.. கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..//

  வித்தியாசமா இருக்கே... ////

  ஆமாங்க.. வருகைக்கு நன்றி..

  ReplyDelete
 27. வெறும்பய said...

  . கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..

  //

  கண்டிப்பா காரணம் இல்லாம இருக்காது நண்பரே,... எல்லாம் காசு தானே.. ////

  சரியாக சொன்னீங்க.. எல்லாம் காசுதான்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 28. வைகை said...

  அந்த மொதலாளியும் இவெங்களும் நல்லா பாலம் கட்டிரிப்பாங்க!!! ////

  ஹா ஹா ஹா.. நல்ல உவமை..

  ReplyDelete
 29. nis said...

  //வெகுஜனத்திற்கு தொல்லை கொடுத்து.. கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..//

  இத விட பாலத்தை கட்டாமல் விட்டு இருக்கலாம்

  இங்கயும் ஒன்றை கட்டி விட்டு பெரிய வாகனங்களை செல்ல விடுறாங்கள் இல்லை , பாலம் கவிழ்ந்து விடும் என்ற பயத்தில் . ////

  கனரக வாகனங்களால்தான் அதிகமான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.. பெரிய வாகனங்கள் போக தகுதியில்லாத பாலங்களை எதற்கு கட்டறாங்கன்னு தெரியல..

  ReplyDelete
 30. Sridhar said...

  Actually it is a good bridge. I used couple of times when going to coimbatore. Empty one and you can escape from all the traffic under the flyover (toll is also not much - compare this with L&T toll in Ukkadam Aathupaalam bridge they charge 8 rs for the small bridge). ////

  தங்களது கருத்துக்கு மாற்றுக் கருத்து தெரிவிக்கவில்லை.. மிகவும் சிலருக்கே இந்தப் பாலம் பயன்படுகிறது என்பதையே சுட்டிக்காட்டியுள்ளேன்..
  வருகைக்கு நன்றிங்க..

  ReplyDelete
 31. sivakumar said...

  நேற்று தான் இந்த அனுபவத்தை நான் சந்தித்தேன் ...மொத்தமே என்னை 6 வண்டிகள் மட்டுமே கடந்து போனது..இத்தனைக்கும் நான் 60 கி.மி. வேகத்தில் தான் சென்றேன்... ////

  பார்த்தீங்களா.. கீழே போக்குவரத்து நெரிசலால் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்க.. மேல 6 வாகனங்கள் போவதற்கா 725 கோடி ரூபாய் திட்டம்..

  ReplyDelete
 32. ஹரிஸ் said...

  கோடிக்கணக்குல செலவு பண்ணி அந்தப் பாலம் எதுக்கு கட்டினாங்கன்னு தெரியல..//

  என்ன பாஸ் இதுகூட தெரியாம இருக்கீங்க..கொள்ளையடிக்க தான்... ////

  கரெக்டுதாங்க பாஸ்.. வருகைக்கு நன்றிங்க..

  ReplyDelete
 33. இதுல இப்டி ஒரு பிரச்சன வேற இருக்கா? நான் கூட சூப்பர் பாலம்ன்னு நெனச்சேன்

  ReplyDelete
 34. Arun Prasath said...

  இதுல இப்டி ஒரு பிரச்சன வேற இருக்கா? நான் கூட சூப்பர் பாலம்ன்னு நெனச்சேன் ///

  பாலமெல்லாம் சூப்பர் பாலம்தாங்க அருண்.. ஆனால் மக்களுக்குத்தான் யூஸ் ஆகல..

  ReplyDelete
 35. // என்னைப் போன்று இந்தப் பாலம் முடிவடையற இடத்துல இருக்கறவங்களும் இந்தப் பாலத்தை யூஸ் பண்றதில்லை.. காரணம் ஒரு நாளைக்கு அப் அண்ட் டவுன் இந்தப் பாலத்தை யூஸ் பண்ணினா 20 ரூபாயும், ஒரு வழிப் போக்குவரத்துக்கு யூஸ் பண்ணினா 15 ரூபாயும் செலவாகுது..//

  அட கொடுமையே ..?! அப்புறம் அந்த பாலம் எதுக்குங்க .!!

  ReplyDelete
 36. /போக்குவரத்து நெரிசல் உண்டாகற இடங்கள்ல என்னைப் போல பைக் வைச்சிருக்கறவங்களும்.. ஆட்டோக்காரங்களும் பண்ற சர்க்கஸ் இருக்கே.. //

  சர்கஸ் எல்லாம் பண்ணுவீங்களா ..?

  ReplyDelete
 37. ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

  // என்னைப் போன்று இந்தப் பாலம் முடிவடையற இடத்துல இருக்கறவங்களும் இந்தப் பாலத்தை யூஸ் பண்றதில்லை.. காரணம் ஒரு நாளைக்கு அப் அண்ட் டவுன் இந்தப் பாலத்தை யூஸ் பண்ணினா 20 ரூபாயும், ஒரு வழிப் போக்குவரத்துக்கு யூஸ் பண்ணினா 15 ரூபாயும் செலவாகுது..//

  அட கொடுமையே ..?! அப்புறம் அந்த பாலம் எதுக்குங்க .!! ////

  அதுதாங்க தெரியல.. யாருமே யூஸ் பண்றதில்லை..

  ReplyDelete
 38. ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

  /போக்குவரத்து நெரிசல் உண்டாகற இடங்கள்ல என்னைப் போல பைக் வைச்சிருக்கறவங்களும்.. ஆட்டோக்காரங்களும் பண்ற சர்க்கஸ் இருக்கே.. //

  சர்கஸ் எல்லாம் பண்ணுவீங்களா ..? ////

  நீங்க இங்க வந்து வண்டி ஓட்டுங்க.. சர்கஸ் என்ன.. ஜிம்னாட்டிக்ஸே பண்ணுவீங்க..

  ReplyDelete
 39. Hi Babu i am staying in garavapalaya actually this bridge is highly idiotic one. For inFosys company usage they made this.. I came to know that for this bridge construction infosys given half of the amount... that too now are reconstucting to end the bridge with infosys building itself.. Idiotic politics.....

  ReplyDelete
 40. லோகேஷ்வரன் said...

  Hi Babu i am staying in garavapalaya actually this bridge is highly idiotic one. For inFosys company usage they made this.. I came to know that for this bridge construction infosys given half of the amount... that too now are reconstucting to end the bridge with infosys building itself.. Idiotic politics..... ////

  இந்தப் பாலத்தின் ஒரு பகுதி அந்தக் கம்பெனிக்குள்ளயே போறதாத்தான் முன்னமே திட்டம்.. ஏனோ அதை அவர்கள் நிறைவேற்றல.. ஒரே ஒரு நிறுவனத்தின் உபயோகத்திற்காக 11 கிலோமிட்டர் பாலமெல்லாம் கட்டினா.. எப்படி உருப்படும்..

  உங்களது எண்ணம்தான் என்னுடைய எண்ணமும்..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

  ReplyDelete
 41. இவர்கள் கொள்ளை அடிக்க நாம் கஸ்டப்பட வேண்டும்..வாழ்க இந்தியா

  ReplyDelete
 42. பாலம் பார்த்தா காத்துக்கு ஆடுற மாதிரி இருக்கு...

  ReplyDelete
 43. Please dont try to find fault with everything. This flyover is not meant for those who travel everyday commuters. The purpose is to serve for the Cars and other vechile from long distance to enter into the city. If the flyover is only meant for Infosys, what is wrong with that? They bring billion rupees to the country and being the keysource for the economic development of the country. In foreign nations u can find fly overs,bridges, under passages from building to building to inter-connect them and cross big roads too. DOnot be narrow minded.How can we develop infrastructure without paying money.Fly overs does not for short distance travellers.It is for the people those for long distances.Do u ever think of wasting fuel in signals?Howmany hours of manpower saved?.I leave it to your judgement.tks,Dhiyanarasu

  ReplyDelete
 44. @cottongrower..

  நண்பரே.. நேரோ மெண்டோட இதை எழுதல.. இந்தப் பகுதியில 3 ஆண்டுகளாக இருந்துட்டு வர்றேன்..
  லாங் டிஸ்டன்ஸ் போற வண்டிகளுக்காகத் தான் இந்த பாலம் கட்டப்பட்டதாக மென்சன் பண்ணியிருக்கீங்க.. தப்பில்லை.. அப்படி லாங் டிஸ்டன்ஸ் போற வண்டிகளுக்கு இடைஞ்சலா இருந்தது.. நான் பதிவில் குறிப்பிட்டிருந்த பொம்மனஹல்லி மற்றும் எலக்ட்ரானிக் சிட்டியின் டிராஃபிக்தான்.. அந்த இடங்களைத் தாண்டிட்டா.. இரு பக்க சாலைகளிலும் சாலிடா நான்கு பேருந்துகள் பயணிக்கற அளவுக்கு பெரிய அளவிலான சாலைகளே முன்பிருந்தே இருந்தது..

  உண்மையாக மக்களுக்கும் உபயோகமாக திட்டத்தை செயல்படுத்தனும்னு யோசிச்சிருந்தா.. பிரச்சினைக்குரிய பகுதிகளில் சிறியதாக ஒரு மேம்பாலம் கட்டியிருந்தாலே போதுமானது..

  இன்ஃபோசிஸ்காகவே பாலம் கட்டப்பட்டிருந்தாலும் அதுல என்ன தப்பு.. அவங்களால நாட்டுக்கு நிறைய இன்கம் வர்றதாக சொல்லியிருக்கீங்க.. இது சரியான பேச்சில்ல.. இன்ஃபோசிஸ் மட்டுமே இங்கே இருக்கற ஒரே நிறுவனம் அல்லவே.. அப்போ அவங்களுக்கெல்லாம் தனித்தனியாக பாலம் கட்டுவதா?..

  வெகுஜன மக்களுக்கு தொல்லையளிக்காமல் எப்படி வேண்டுமானாலும் இன்ஃப்ராஸ்ட்ரக்சரை அவங்க மேம்படுத்திக்கட்டும்.. நீங்கள் எப்போதாவது அந்த மேம்பாலத்தின் மேல் பயணப்படுவதை மட்டுமே கருத்தில் கொள்கிறீர்கள்.. இதனால் இப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்படும் தொல்லை.. இங்கே வாழ்ந்து பார்த்தாத்தாங்க தெரியும்..

  தங்களது கருத்துக்களை வரவேற்கிறேன்.. நன்றி..

  ReplyDelete
 45. ஆர்.கே.சதீஷ்குமார் said...

  இவர்கள் கொள்ளை அடிக்க நாம் கஸ்டப்பட வேண்டும்..வாழ்க இந்தியா ///

  ம்ஹும்.. ஆமாங்க..

  ReplyDelete
 46. ஆர்.கே.சதீஷ்குமார் said...

  பாலம் பார்த்தா காத்துக்கு ஆடுற மாதிரி இருக்கு... ///

  ஹா ஹா ஹா.. அப்படி இல்லைங்க.. ஏற்ற இருக்கமான சாலைகளுக்கு இணையா ஏற்ற இறக்கமாகக் கட்டியிருக்காங்க..

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க..

  ReplyDelete
 47. அனுபவித்த உண்மைங்க.

  ReplyDelete
 48. தாராபுரத்தான் said...

  அனுபவித்த உண்மைங்க. ////

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

  ReplyDelete
 49. இந்த பாலத்தில் தான் நான் தினமும் பயணித்து அலுவலகம் போகிறேன்.
  பெரும்பாலான மக்களுக்கு இந்த பாலம் உபயோகப்படவில்லை என்பது சரியே.
  ஆனால் Electronic City இல் அமைந்திருக்கும் 100 சொச்சம் கம்பனிகள் மற்றும் அதன் ஊழியர்கள் பயன்படுத்த தொடங்கினால் , நாளடைவில் traffic jam குறைய வாய்ப்புகள் இருக்கு .
  என்னால 15 நிமிசத்துல ஆபீஸ் போக முடியறது நல்லதுதான் , இருந்தாலும் toll ஐ நீக்கியோ அல்லது குறைத்தோ வாங்கினால் , இன்னும் அதிகம் பேர் பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன் .

  ReplyDelete
 50. @Vijay @ இணையத் தமிழன்..

  உங்கள் கருத்துக்கள் சரியே நண்பா.. அட்லீஸ்ட் கம்பெனி வண்டிகளாவது அந்தப் பாலத்தை யூஸ் பண்றாங்களான்னா.. அதுவும் இல்லை.. நாளடைவில் என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..

  ReplyDelete
 51. Slot Machines, Casino Games | DrmCD
  From 보령 출장샵 the classic 3-reel slots to a range 평택 출장마사지 of new 동두천 출장안마 video 구리 출장마사지 slots, this classic casino slot machine has some classics 부천 출장마사지 to play. Enjoy a great time enjoying your

  ReplyDelete