.

Monday, April 18, 2011

பெர்முடா முக்கோணம் - "மர்மங்கள்"


அழகன்..
எங்க பிரண்ட்ஸ் குரூப்புல எல்லாரும் இவன அப்படித்தான் செல்லமாக் கூப்பிடுவோம்.. ரொம்ப நல்லவன்.. பிரண்ட்ஸ் எல்லாத்துக்கும் சரிசமமா Care எடுத்துக்கணும்னு நினைக்கிறவன்.. எங்க ரெண்டு பேருக்கும் சின்ன வயசுல ரொம்ப சண்டை வரும்.. கைகலப்பு எல்லாம் ஆயிருக்கு.. ஆனா ரெண்டு பேரும் ரொம்ப குளோஸா இருப்போம்.. கோழி கிறுக்கன மாதிரியே இருக்குன்னு சொல்லுவாங்க இல்லையா!! அது இவனோட ஹேண்ட் ரைட்டிங்கப் பார்த்தா தெரிஞ்சுக்கலாம்.. ஸ்கூல்ல இதுக்காகவே ரொம்ப அடி வாங்குவான்.. மக்குப் பய!!!

விளையாட்டுல ரொம்ப ஸ்ப்ரிட்டா இருப்பான்.. அதுவும் கிரிக்கெட் ரொம்ப நல்லா விளையாடுவான்.. இவன் தான் எங்க டீம் கேப்டன்.. கிரவுண்டுல ரொம்பவும் நல்லாத்தான் பிளான் பண்ணுவான்.. ஆனா நாங்க யாருமே சரியா விளையாட மாட்டோம்.. மேக்ஸிமம் இவன் மட்டும் தான் ரன் அடிப்பான்.. வேற.. எங்க பிரண்ட்ஸ் குரூப்புக்கு ரொம்ப பொழுதுபோக்கா இருப்பான்.. எல்லாரும் இவன ஓட்டுவோம், ஆனாலும் சளைக்காம எல்லாத்தையும் சமாளிப்பான்..
இவனோட வாழ்க்கை இலட்சியமாவே ஒரு விசயம் இருந்தது.. அது என்னன்னு எங்க ஊருக்கே தெரிஞ்ச ரகசியம்.. ஆனால் இங்கே சொன்னா.. பெங்களூர் வந்து உதைப்பான்..

இப்போ மேட்டருக்கு வர்றேன்.. பெர்முடா முக்கோணம் பத்தி எழுதச் சொல்லி நேற்று மெயில் பண்ணியிருந்தான்.. சோ நண்பனுக்காக இந்தப் பதிவை டெடிக்கேட் பண்றேன்.. :-)


நிலவுல போய் பிளாட் வாங்கறேன்னு கிளம்பற அளவுக்கு இப்போ டெக்னாலஜி முன்னேறி இருந்தாலும்..சில விசயங்கள் இன்னும் புரியாத புதிராகவே இருக்கு.. அதுல பெர்முடா முக்கோணமும் ஒன்னு..

வட அட்லாண்டிக் கடலோட மேற்குப் பகுதியில் இருக்கற ஒரு குறிப்பிட்ட பரப்பை பெர்முடா முக்கோணம்னு சொல்றாங்க.. பஹாமாஸ், புளோரிடா நீரிணைப்பு மற்றும் கரீபியன் தீவுகள் முழுவதுமே இந்தப் பரப்புக்குள்ள அடங்குது.. அப்புறம் இன்னும் சில பகுதிகளும் இந்தப் முக்கோணத்துக்குள்ள வரும்னு சொல்றாங்க..

இந்தப் பகுதியில நிறைய கப்பல்களும் விமானங்களும் காணமப் போயிட்டதாக சொல்லப்படுது.. இந்த மர்மத்தை பற்றி முதன்முதலாக 1950 ஆண்டு ஒரு ஆர்டிகல் வெளியாகியிருக்கு.. அப்புறம் இரண்டு வருசம் கழிச்சு இந்த விசயம் பற்றி இரண்டாவது ஆர்டிகல் வெளியாச்சு.. பிளைட் 19 ரக விமானங்கள் ஐந்து.. அந்தப் பகுதியில பயிற்சி எடுத்துட்டு இருந்தப்போ காணாமப் போயிட்டதாகவும்.. அந்த விமானங்கள்ல இருந்த ஒரு கேப்டன்.. "நாங்க இப்போ வெள்ளைக் கலர்ல இருக்கற தண்ணிக்குள்ள போயிட்டிருக்கோம்.. இல்ல... இல்ல.. இந்தத் தண்ணி பச்சையா இருக்கு.. அப்படின்னு சொன்னதா ரெக்கார்ட் ஆயிருக்குன்னு சொல்றாங்க.. அந்த விமானங்களோட திசைகாட்டியும் தாறுமாறா அப்போ வேலை செய்திருக்கு.. அவங்களைத் தேடிக்கிட்டு ஒரு குரூப் இன்னோரு விமானத்துல போக அந்த விமானத்தையும் காணோம்.. இந்த விசயத்தை விசாரணை பண்ணின அதிகாரிகள்.. விமானங்கள் எல்லாம் செவ்வாய் கிரகத்துக்கு பறந்து போயிடுச்சு சொன்னதாகவும் கூறப்பட்டிருக்கு..

அப்புறமென்ன.. இந்த இடத்தைப் பற்றி ஆவி, புதம், பேய், ஏலியன்ஸ்ன்னு நிறையக் கட்டுக்கதைகள்.. (எனக்கே டைப் பண்ணப் பண்ண.. இன்னும் நாலு பிட்டு எக்ஸ்ட்ரா போடலாம்னுதான் இருக்கு.. :-).. )

உண்மையில.. கடல் பகுதியில ஏற்பட்ட பல விபத்துகள்.. பெர்முடா பகுதியில நடந்ததாக திரிச்சு சொல்லியிருக்காங்கன்னும் அதுக்கான நிறைய விளக்கங்களையும் பல ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்காங்க.. பல விசயங்கள் நடக்காமயே நடந்ததாகவும் கதை கட்டியிருக்காங்க.. உதாரணத்துக்கு.. 1937 ஆம் ஆண்டு புளோரிடா கடற்கரைப் பகுதியில் ஒரு பிளைட் விபத்துக்குள்ளானதை நிறையப் பேரு பார்த்ததாக சொல்லப்படுது.. ஆனால் லோக்கல் நியூஸ் பேப்பர்ல அந்த விபத்து பற்றின எந்த நியூஸுமே வெளியாகல..

இந்தப் பகுதிக்குள்ள நுழையற எந்த பொருளுமே காணமப்போகல.. அங்கேயே வேற வடிவத்துல இருக்குன்னும்.. எல்லாப் பொருட்களுமே ஒரு அணுவாக மாறி காற்றோட கலந்துடுதுன்னும் ஏகப்பட்ட கெஸ்ஸிங்..

விஞ்ஞான ரீதியாகவும் இந்த விசயத்துக்கு பல விளக்கங்களைக் கொடுத்திருக்காங்க..

மீத்தேன் ஹைட்ராய்டு அப்படிங்கற ஒரு இயற்கை எரிவாயு.. நீரோட அடர்த்தியைக் கம்மி பண்ணி.. கப்பல் தண்ணியில மிதக்க முடியாம மூழ்கடிக்கும்னு ஆஸ்திரேலியாவுல நடத்தப்பட்ட சோதனைகள்ல சொல்லியிருக்காங்க.. ஆனால் பெர்முடா பகுதியில மீத்தேன் ஹைட்ராய்டோட எந்த தாக்கமும் எப்போதும் இருந்திருக்கல..

கடல்ல உண்டாகற பயங்கர சூறாவளிகள் காரணமாக இருந்திருக்காலாம்னு சொல்லப்படுது..

சுனாமி அலைகள் மாதிரி இராட்சச அலைகள் உருவாகி.. கப்பல்களையும், விமானங்களையும் மூழ்கடிச்சிருக்கலாம்னும் சொல்றாங்க..

பெர்முடாப் பகுதியோட ஏதாவது மையப்பகுதியில.. ஈர்ப்புவிசை ரொம்ப அதிகமாக இருந்து.. எல்லாப் பொருட்களையும் உள்ளே ஈர்த்துக்குன்னும் ஒரு கெஸ்ஸிங்..

கடற்கொள்ளையர்கள் மேலயும் டவுட்டு இருந்திருக்கு.. ஆனால் அவங்க எப்படி விமானத்தைக் கொள்ளையடிப்பாங்க.. (என்னோட டவுட்டு இது.. :-).. )

பெர்முடா முக்கோணத்தின் குறிப்பிடத்தக்க சம்பவங்கள்னு சொல்லனும்னா..

1. பிளைட் 19 காணாமப்போனதும்.. அந்த விமானங்களைத் தேடி மீட்பு பணிக்காகப் போன 13 பேர் கொண்ட குழுவும் காணாமல் போனது.. இந்த விசயத்துக்காக கொடுக்கப்பட்ட விளக்கங்கள் துல்லியமான உண்மைகளாகத் தெரியல..

2. மேரி செலஸ்டின்னு ஒரு கப்பல் 1872 ஆம் ஆண்டு மர்மமான முறையில் துலைஞ்சு போயிருக்கு.. பெர்முடா முக்கோணம்தான் இதுக்கு காரணம்னு சொல்லப்பட்டிருக்கு.. இதே பேர்ல இருந்த ஒரு கப்பல் 1860கள்ல மூழ்கிப் போனதை இந்தக் கப்பலோட இணைச்சு குழம்பியிருக்கலாம்னும் சொல்றாங்க..

3. 1881 ஆம் ஆண்டு எலன் ஆஸ்டின்னு ஒருத்தர்.. ஒரு கப்பல் கடல்ல அநாதையாக வர்றதைப் பார்த்திருக்கார்.. மீட்புப் பணியாட்களை அனுப்பி.. அந்தக் கப்பலையும் சேர்த்து நியூயார்க் ஓட்டிட்டு வந்துடலாம்னு அவர் எண்ணம்.. ஆனால்.. அந்தக் கப்பல் மீண்டும் பணியாட்களோட காணாமப் போனதாக சொல்லப்படுது..

இப்படி ஒரு பெரிய லிஸ்டே இருக்கு.. இது போதும்.. :-)..

பெர்முடா முக்கோணம் பற்றின தேடுதல்ல.. இன்னொரு விசயமும் தெரிஞ்சுக்க முடிஞ்சது.. ஜப்பான் பக்கத்துல ட்ராகன் ட்ரையாங்கில்னு இன்னொரு இடமும்.. சேம் பீஸ்தானாம்.. அந்தப் பகுதிகுள்ள நுழையற எந்த ஆப்ஜெக்டும் திரும்பறதில்லையாம்..

டிஸ்கி: பெர்முடா முக்கோணத்துல இப்போ எந்த விபத்துகளும் நடக்கறதில்லையாம்.. உண்மையில ஏதாவது நடந்துச்சா.. நடக்கலையா.. அடப் போங்கப்பா..

43 comments:

 1. ஹ்ம்ம் ஒன்னும் புரியலையே .. என்னதான் நடக்குது அங்க

  ReplyDelete
 2. பேசாம நம்ம அரசியல்வாதிகளை ஒரு விமானத்தில் ஏற்றி அங்க அனுப்பிடலாமா ?

  ReplyDelete
 3. பெர்முடா முக்கோணம் பற்றி பெரிதாக எதுவும் எனக்கு தெரியாது. புரிய வைத்ததற்கு நன்றி பாபு!

  ReplyDelete
 4. Good post. Actually, this mystery is quite interesting. I watched a TV program about it.

  ReplyDelete
 5. வந்தேன் வாக்களித்து சென்றேன்


  கலைஞர் கருணாநிதி பற்றி சிறு குறிப்புகள்
  http://speedsays.blogspot.com/2011/04/blog-post_18.html

  ReplyDelete
 6. Quiet interesting!.. :)

  ReplyDelete
 7. நண்பா முடிவே தெரியலையே.........நம்ம வளர்ச்சி போல!

  ReplyDelete
 8. நானும் இதைப் பற்றி நிறைய படிச்சிருக்கேன், போனவருசம் டிஸ்கவரி சேனல்ல இதைப் பற்றி ஒரு புரோகிராம் போட்டாங்க, அதுல பெர்முடா ட்ரையாங்கிள்ல இருந்து தப்பி வந்த ஒரு விமானி பத்தியும் சொன்னாங்க (அவர் பேட்டியும் வந்தது), திடீர்னு திசைகாட்டும் கருவிகள் வேலை செய்யலை,விமானம் ஏதோ டன்னலுக்குள்ள போற மாதிரி இருந்ததா சொன்னார். அதில் ஆச்சர்யமான விஷயம், இரண்டு மணீ நேரத்தில் செல்ல வேண்டிய தூரத்தை அவர் 20 நிமிடங்களில் கடந்து இருந்தாராம். டைம் ட்ராவல் போன்று ஒன்று இருந்தால்தான் இது சாத்தியம் என்றும் சொன்னார்கள்!

  ReplyDelete
 9. பெர்முடா முக்க்கோணம் பற்றி, அறியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன். ஆனாலும் இந்த விமானங்கள் காணாமற் போகும் விடயங்கள் என்னவோ மர்மங்களாகத் தான் இருக்கின்றன.

  ReplyDelete
 10. பெர்முடா ட்ரை ஆங்கிள் ஒரு மர்மமான இடம் தான் இன்று வரை...

  ReplyDelete
 11. உங்க நண்பர் உண்மைலேயே அழகாத்தான் இருக்கார். அப்புறம் நானும் பெர்முடா முக்கோணம் பத்திக் கேள்விப்பட்டும் படிச்சு இருக்கேன். ஆனா நீங்க சில லிஸ்ட் எடுத்து கொடுத்திருக்கறது எனக்குப் புதுசு.

  அங்க போற பொருள் எல்லாம் என்ன ஆகுதுன்னு கண்டுபிடிக்கனும்னா நாம அங்க போய்தான் பார்க்கணும் போல .. ஹி ஹி

  ReplyDelete
 12. சிதம்பர ரகசியம்தான் போல!

  ReplyDelete
 13. //ஜப்பான் பக்கத்துல ட்ராகன் ட்ரையாங்கில்னு இன்னொரு இடமும்.. சேம் பீஸ்தானாம்..//
  இது வேறா!நல்லாப் பீதியக் கிளப்பறாங்க!

  ReplyDelete
 14. நானும் இதை பற்றி கொஞ்சம் அறிந்து வைத்திருந்தேன் ...
  எனக்கும் ரொம்ப குழப்பம் தான் நண்பா...

  ReplyDelete
 15. இந்த விசயத்த பத்தி முன்னாடியே கேள்விபட்டாலும் சில தகவல்கள் உண்மையிலேயே எனக்கு புதுசுதான் நண்பா, பகிர்வுக்கு நன்றி, அதுசரி பெர்முடா முக்கோணம் பத்தின பதிவுல தேவையில்லாம உங்க பிரண்ட் அழகன வம்புக்கு இழுத்து இருக்கீங்க பார்த்து உங்கள பெர்முடா முக்கோணத்துல வீசிட போறார் :-)

  ReplyDelete
 16. விட்டுப் போன கதைனு கால தேச வர்த்தமான வித்தியாசம் பற்றி சொல்ல வந்தேன். நண்பர் ப. கு. ராமசாமி அதைச் சொல்லியுள்ளார். வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும் இது போன்ற தகவல்கள் ஆச்சர்யம் தருபவை. அது சரி, முத்து காமிக்ஸில் காற்றில் கரைந்த கப்பல்களும் விண்ணில் மறைந்த விமானங்களும் படித்திருக்கிறீர்களோ...!!

  ReplyDelete
 17. ம்ஹீம்..ஒருத்தரும் திருப்தியான பதில் சொல்ல முடியாத மர்ம பிரதேசம் பெர்முடா..ஆன்னா அறிவியல் நிறைய வளர்ந்திருக்கிற இப்பவும் இதை இன்னும் விளக்க முடியலையே ஆய்வாளர்களால்..என்பது ஆச்சர்யமா இருக்கு

  ReplyDelete
 18. எல் கே said...
  பேசாம நம்ம அரசியல்வாதிகளை ஒரு விமானத்தில் ஏற்றி அங்க அனுப்பிடலாமா ?


  Good choice!

  ReplyDelete
 19. பெர்முடா முக்கோணம் பற்றி முன்பு யாரோ சொன்னமாதிரி நினைவு.இருந்தாலும் நீங்க சொல்றதுக்காக இன்னொரு முறை:)

  ReplyDelete
 20. எல் கே said...

  ஹ்ம்ம் ஒன்னும் புரியலையே .. என்னதான் நடக்குது அங்க..

  பேசாம நம்ம அரசியல்வாதிகளை ஒரு விமானத்தில் ஏற்றி அங்க அனுப்பிடலாமா ?////

  அடடா,, எலெக்சனுக்கு முன்னாடியே இந்த யோசனை வந்திருந்தா தமிழ்நாடு தப்பிச்சிருக்குமே.. :-)..

  ReplyDelete
 21. ! சிவகுமார் ! said...

  பெர்முடா முக்கோணம் பற்றி பெரிதாக எதுவும் எனக்கு தெரியாது. புரிய வைத்ததற்கு நன்றி பாபு!////

  வாங்க சிவகுமார்..

  ReplyDelete
 22. Chitra said...

  Good post. Actually, this mystery is quite interesting. I watched a TV program about it.////

  ஆமாங்க.. நானும் பார்த்திருக்கேன் அந்த புரோகிராம்.. செம திரில்லிங்கா இருந்தது..

  ReplyDelete
 23. Speed Master said...

  வந்தேன் வாக்களித்து சென்றேன்


  கலைஞர் கருணாநிதி பற்றி சிறு குறிப்புகள்
  http://speedsays.blogspot.com/2011/04/blog-post_18.html///

  ரைட்டு..

  ReplyDelete
 24. Balaji saravana said...

  Quiet interesting!.. :)/////

  நன்றிங்க பாலாஜி..

  ReplyDelete
 25. விக்கி உலகம் said...

  நண்பா முடிவே தெரியலையே.........நம்ம வளர்ச்சி போல!////

  கரெக்டா சொன்னீங்க நண்பா.. :-)

  ReplyDelete
 26. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நானும் இதைப் பற்றி நிறைய படிச்சிருக்கேன், போனவருசம் டிஸ்கவரி சேனல்ல இதைப் பற்றி ஒரு புரோகிராம் போட்டாங்க, அதுல பெர்முடா ட்ரையாங்கிள்ல இருந்து தப்பி வந்த ஒரு விமானி பத்தியும் சொன்னாங்க (அவர் பேட்டியும் வந்தது), திடீர்னு திசைகாட்டும் கருவிகள் வேலை செய்யலை,விமானம் ஏதோ டன்னலுக்குள்ள போற மாதிரி இருந்ததா சொன்னார். அதில் ஆச்சர்யமான விஷயம், இரண்டு மணீ நேரத்தில் செல்ல வேண்டிய தூரத்தை அவர் 20 நிமிடங்களில் கடந்து இருந்தாராம். டைம் ட்ராவல் போன்று ஒன்று இருந்தால்தான் இது சாத்தியம் என்றும் சொன்னார்கள்!////

  அந்த விமானி சொன்னதும் ஆதாரத்தோட நிரூபிக்கப்படலங்க.. எது உண்மைன்னே தெரியல..

  ReplyDelete
 27. நிரூபன் said...

  பெர்முடா முக்க்கோணம் பற்றி, அறியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன். ஆனாலும் இந்த விமானங்கள் காணாமற் போகும் விடயங்கள் என்னவோ மர்மங்களாகத் தான் இருக்கின்றன.////

  வாங்க நிரூபன்..

  ReplyDelete
 28. சி.பி.செந்தில்குமார் said...

  பெர்முடா ட்ரை ஆங்கிள் ஒரு மர்மமான இடம் தான் இன்று வரை...///

  வாங்க சி.பி.

  ReplyDelete
 29. கோமாளி செல்வா said...

  உங்க நண்பர் உண்மைலேயே அழகாத்தான் இருக்கார். அப்புறம் நானும் பெர்முடா முக்கோணம் பத்திக் கேள்விப்பட்டும் படிச்சு இருக்கேன். ஆனா நீங்க சில லிஸ்ட் எடுத்து கொடுத்திருக்கறது எனக்குப் புதுசு.

  அங்க போற பொருள் எல்லாம் என்ன ஆகுதுன்னு கண்டுபிடிக்கனும்னா நாம அங்க போய்தான் பார்க்கணும் போல .. ஹி ஹி////

  ஆஹா!! நாம போறதா.. ஆனால் கண்டிப்பா உங்களை வைச்சி ட்ரை பண்ணிக்கலாம்..

  ReplyDelete
 30. சென்னை பித்தன் said...

  சிதம்பர ரகசியம்தான் போல!////

  சிதம்பர ரகசியமேதான்.. :-)

  ReplyDelete
 31. அரசன் said...

  நானும் இதை பற்றி கொஞ்சம் அறிந்து வைத்திருந்தேன் ...
  எனக்கும் ரொம்ப குழப்பம் தான் நண்பா...////

  வாங்க அரசன்..

  ReplyDelete
 32. shanmugavel said...

  very intresting///

  நன்றிங்க சண்முகவேல்..

  ReplyDelete
 33. இரவு வானம் said...

  இந்த விசயத்த பத்தி முன்னாடியே கேள்விபட்டாலும் சில தகவல்கள் உண்மையிலேயே எனக்கு புதுசுதான் நண்பா, பகிர்வுக்கு நன்றி, அதுசரி பெர்முடா முக்கோணம் பத்தின பதிவுல தேவையில்லாம உங்க பிரண்ட் அழகன வம்புக்கு இழுத்து இருக்கீங்க பார்த்து உங்கள பெர்முடா முக்கோணத்துல வீசிட போறார் :-)////

  வருகைக்கு நன்றி நண்பா..

  ReplyDelete
 34. ஸ்ரீராம். said...

  விட்டுப் போன கதைனு கால தேச வர்த்தமான வித்தியாசம் பற்றி சொல்ல வந்தேன். நண்பர் ப. கு. ராமசாமி அதைச் சொல்லியுள்ளார். வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும் இது போன்ற தகவல்கள் ஆச்சர்யம் தருபவை. அது சரி, முத்து காமிக்ஸில் காற்றில் கரைந்த கப்பல்களும் விண்ணில் மறைந்த விமானங்களும் படித்திருக்கிறீர்களோ...!!

  நிறைய மாயாவி காமிக்ஸ் புக்ஸ் படிச்சிருக்கேன்.. ஒரு வேளை அந்த எஃபெக்ட்டா இருக்குமோ.. :-)

  ReplyDelete
 35. ஆர்.கே.சதீஷ்குமார் said...

  ம்ஹீம்..ஒருத்தரும் திருப்தியான பதில் சொல்ல முடியாத மர்ம பிரதேசம் பெர்முடா..ஆன்னா அறிவியல் நிறைய வளர்ந்திருக்கிற இப்பவும் இதை இன்னும் விளக்க முடியலையே ஆய்வாளர்களால்..என்பது ஆச்சர்யமா இருக்கு///

  உண்மைதாங்க சதீஷ்.. டெக்னாலஜி இவ்ளோ இம்ப்ரூவ் ஆயிருக்கப்போ.. இந்த விசயத்தை மட்டும் கண்டுபிடிக்காதது ரொம்ப மூடுமந்திரமாகவே இருக்கு.. விஜயகாந்த் அந்த ஏரியால இருந்திருந்தா இன்னேரம் கண்டுபிடிச்சிருப்பார்.. ஹா ஹா ஹா..

  ReplyDelete
 36. நிலாமகள் said...

  எல் கே said...
  பேசாம நம்ம அரசியல்வாதிகளை ஒரு விமானத்தில் ஏற்றி அங்க அனுப்பிடலாமா ?


  Good choice!/////

  வாங்க நிலாமகள்..

  ReplyDelete
 37. ராஜ நடராஜன் said...

  பெர்முடா முக்கோணம் பற்றி முன்பு யாரோ சொன்னமாதிரி நினைவு.இருந்தாலும் நீங்க சொல்றதுக்காக இன்னொரு முறை:) ///

  ரொம்ப நன்றிங்க ராஜ நடராஜன்..

  ReplyDelete
 38. பிள்ளைகளுக்கு பர்முடா ட்ரௌசர்ஸ் வாங்கி பழக்கம்,இப்ப தான் பர்முடா முக்கோணம் பற்றி தெரிய வருது..very interesting but scary also.

  ReplyDelete
 39. நல்லா அலசல் பாஸ்...டிராகன் ட்ரையாங்கில் புதுசான விஷயம்

  ReplyDelete
 40. சகோ, எங்கே போயிட்டீங்க, நலமாக இருக்கிறீர்களா.

  ஆளையே காணலை

  ReplyDelete
 41. அமெரிக்காவை (இரண்டாவதாக) கண்டுபிடித்த கொலம்பஸ் கூட அந்த பெர்முடா முக்கோணம் வழியா போன போது, அங்கே வானத்தில் தீப்பிழம்புகளைப் பார்த்ததாக குறிப்பு எழுதியிருக்கிறார் என்று சொல்கிறான் என் பையன் விஷ்ணு.... அங்கே ஒரு வகையான டைமேன்ஷனல் போர்டல் இருப்பதகாவும் சொல்லப் படுகிறதாம். (இதுவும் என் பையன் உபயம் தான்.....!)

  ReplyDelete
 42. மர்மம் இன்னும் மர்மமாகவே உள்ளது.....

  ReplyDelete
 43. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றி!

  ReplyDelete