.

Wednesday, January 5, 2011

பழனிக்கு வாங்க - நம்ம ஏரியா!

முன் குறிப்பு: தமிழ் மணம் விருதுகள் மூன்றாம் சுற்றுக்கு என்னுடைய Shutter Island - திரைவிமர்சனம் பதிவு தேர்வாயிருக்கு.. இந்தப் பதிவுக்கு வாக்களித்து என்னை மூன்றாவது சுற்றுக்கு நகர்த்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.....
பழனி ஒரு கோயில் நகரம்னு பலருக்கு முன்பே தெரிஞ்சிருக்கும்.. முருகன்.. சிவபெருமான்கிட்ட கோவிச்சுட்டு நம்ம ஊருக்கு வந்துதான் செட்டில் ஆயிட்டார்.. தென் இந்தியாவில் திருப்பதிக்கு அப்புறம்.. அதிகமான வசூலைப் பெருவதும் நம்ம பழனி மலை முருகன்தான்..

பழனி மலைக்கு வர்ற பக்தர்கள் பெரும்பாலானவங்க கேரள மக்கள்தான்.. அவங்களுக்கு என்னமோ முருகன் மேல அவ்வளவு கிரேஸ்.. என்னுடைய மலையாளி நண்பன் ஒருவன்கிட்ட இதைப்பற்றிக் கேட்டதுக்கு.. பழனி முருகரோட பார்வை கேரளாவைப் பார்த்த மாதிரி இருக்காம். அதனாலதான்.. கேரளா நல்லா செழிப்பாக இருக்குதாம்.. அதனாலதான் எங்க மக்களுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்னு பதில் சொன்னான்.. இதுதான் சரியான காரணமான்னு தெரியலை எனக்கு..

நான் படிச்ச காலேஜை பழனி மலை தேவஸ்தானம்தான் நடத்திட்டு வருது.. அதனால படிக்கறப்போ எங்களுடைய ஐ.டி. கார்டு முருகனைப் பார்க்கறதுக்கு ஒரு பாஸ் மாதிரி.. அதைக் காமிச்சுட்டு ஸ்பெசல் தரிசனம் வழியில நாங்க போக முடியும்.. (:-))..

சரி இப்ப முருகனை தரிசிக்கலாம் வாங்க..

பஸ் ஸ்டாண்டை விட்டு இறங்கினவுடனே.. மலைக்கு எந்த வழியில் போகணும்னு யாரையும் கேக்கவே தேவையில்லை.. மலை தெரியற பக்கம் இரண்டு பாதைகள் போகும்.. எந்த பாதையில போனீங்கன்னாலும் மலைக்குப் போயிடலாம்.. மலைக்குப் பக்கத்தில் சன்னிதி ரோட்டைப் பிடிக்கறப்போ.. அங்கே திருஆவினன்குடியில குழந்தை முருகனை ஒரு விசிட் அடிக்க வேண்டியிருக்கும் நீங்க.. கோயிலுக்கு வர்றவங்க எல்லாரும் இங்கே குழந்தை முருகனை கும்பிட்டுட்டுதான் மேல போறாங்க..

இந்தக் கோயில்ல தினமும் நைட் 8 மணிக்கு டான்னு பெல்லு அடிச்சவுடனே பொங்கல் தருவாங்க பாருங்க.. சான்ஸே இல்ல.. நெய்யொழுக அருமையான டேஸ்டுல இருக்கும்.. காலேஜ் படிக்கறப்போ.. நண்பர்கள் எல்லாரும் கோயிலுக்கு சாமி கும்பிடப் போறேன்னுட்டு போய் பொங்கல் வாங்கித் திம்போம்..

இந்தக் கோயில் மாடத்துல புலிபடம் வரைஞ்சிருப்பாங்க.. எந்த டைரக்சன்ல நின்னு மேல பார்த்தாலும் நம்மலைப் பார்க்கற மாதிரியே இருக்கும் ஓவியம்.. கலக்கியிருக்காங்க வரைஞ்சவங்க.. உள்ளே முருகனை சுற்றி நிறைய சாமி சிலைகள் இருக்கும்..

அப்புறம் முருகனோட திருவிளையாடல்களை ஓவியங்களாக வரைஞ்சி மேல மாட்டியிருப்பாங்க.. குழந்தை முருகனை வேண்டிக்கிட்டு வெளியே வந்தா சன்னதி ரோடு..

இப்போ மலைக்கு கீழே இருக்கற பாதவிநாயகருக்கு ஒரு வணக்கம் போட்டுட்டு மேலே ஏற ஆரம்பிச்சா.. நீங்க இரண்டு விதமான பாதைகளைப் பார்க்கலாம்.. வயசானவங்களும்.. குழந்தைகளுக்கும் வசதியாக மலை மேல போறதுக்கு வின்ச், ரோப் கார்லாம் கூட இருக்கு..

முருகனைப் பார்க்கறதுக்கு இங்க.. பொது தரிசனம்.. 10ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய்னு வழிகள் அமைச்சிருக்காங்க.. காசுக்கு தகுந்த மாதிரி.. நாம முருகனை மீட் பண்ண சுத்தற பாதைகள் கம்மியாகும்..
இங்கே இருக்கற முருகனோட சிலையை போகர்னு ஒரு சித்தர் நிறைய மூலிகைகளைக் கொண்டு செய்திருக்கிறாரு.. முருகனை வேண்டிக்கிட்டு தீர்த்தத்தைக் குடிக்கிற மக்களோட நோய்கள் எல்லாம் குணமாயிடறதால.. நிறைய மக்கள் வர ஆரம்பிக்க.. அந்தக் காலத்தில பழனி ஏரியால அரசாட்சி பண்ணிட்டு இருந்த சேரமான் அப்படிங்கற மன்னர் இந்தக் கோயிலை எடுத்துக் கட்டியிருக்கிறார்.. அப்புறம் நிறைய மன்னர்கள் கைக்குப் போய் நிறைய ஆல்ட்ரேசன் பண்ணி.. இப்போ நாம பாக்கற கோயில் வரைக்கும் நிறையா மாறுதல்கள் பண்ணியிருக்காங்க..

முருகனுக்கு ராஜ அலங்காரம், ஆண்டி அலங்காரம்னு நிறைய அலங்காரங்கள் இருக்கு.. மாற்றி மாற்றி பண்ணிட்டு இருப்பாங்க.. என்ன பேசிஸ்லன்னு எனக்குத் தெரியாது.. :-)

அப்புறம் பழனிக்கு வர்ற பக்தர்கள்கிட்ட நம்ம ஆளுங்க.. ஏமாற்றி மொட்டை அடிச்சு விட்டுடறாங்க அப்படிங்கறது பரவலாக இருக்கற ஒரு குற்றச்சாட்டு.. ஆனால் எல்லா சுற்றுலாத் தளங்கள்லயுமே நடக்கற விசயம்தானே இது.. அதனால நாமதான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும்..

முருகனைப் பார்க்கற ஆவல்ல பழனியில எந்த மூலையில் வந்து இறங்கினாலும்.. மலையோட தோற்றத்தைப் பார்த்து பக்தர்கள் பிரமிச்சு நின்னுடறாங்க.. அவங்க ஆ!!ன்னு பார்த்துட்டு நிக்கறதைப் பார்த்துட்டு அவங்களை ஏமாற்றறதுக்கு நிறையப் பேரு பஸ் ஸ்டாண்டுலயே வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.. எந்த பஸ் வந்து நின்னாலும் சரி.. மலைக்குப் போறவங்க எல்லாம் இந்தப் பக்கம் போங்கன்னு சொல்லிட்டு நாலுபேர் வந்து நின்னுடுவாங்க.. அவங்களைக் கண்டுக்காம போறவங்க தப்பிச்சாங்க.. அடடா! எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க.. இப்படி பஸ்ல இருந்து இறங்கினவுடனே.. வழி கேக்காமலே நமக்கு வழி சொல்றாங்களேன்னு நினைச்சுட்டு அவங்க பக்கம் ஒரு லுக் விட்டாலே போதும்.. ஊர் திரும்பறப்போ.. அவங்க மொட்டையே அடிக்கலைன்னாலும்.. அடிச்சு குளுகுளுன்னு சந்தனம் பூசி தாட்டி விட்டுடுவாங்க..

அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு.. மலையை நோக்கி நடக்க ஆரம்பிச்சா.. நிறைய பஞ்சாமிர்தக் கடைகளும்.. பூஜை சாமான்கள் விக்கற கடைகளும் வரும்.. வேடிக்கை பார்த்துட்டே போயிட்டு இருக்கற பகதர்கள்கிட்ட.. சன்னதி ரோட்லயே செருப்பு போட்டுட்டு நடக்கக்கூடாது.. இங்கேயே கழட்டிவிட்டுட்டு பூஜை சாமான்களை வாங்கிட்டு போங்கன்னு கையைப் பிடிச்சு இழுத்தே சொல்லுவாங்க.. இதை நம்பி நிறையப் பேர் அங்கேயே செருப்பை கழட்டி விட்டுட்டுப் போறதையும் பார்த்துருக்கேன்..

மலை மேல ஏற ஆரம்பிச்சவுடனே.. எவன் மூஞ்சியைப் பார்த்தா ரொம்ப ஏமாளியாத் தெரியுதுன்னு பார்த்து.. திடீர்னு வந்து.. உங்க நெத்தியில திருநீரைப் பூசிவிட்டு.. கையிலயும் சின்ன ஒரு வேலைக் கொடுத்துட்டு.. முருகனுக்கு நீங்க காணிக்கைப் போட்டாத்தான் இப்போ நகர முடியும்னு நின்னுக்குவாங்க.. இதெல்லாம் 5 செகண்டுக்குள்ள நடந்திடும்.. என்னடா நடந்ததுன்னே தெரியாம அவங்ககிட்ட 10,20ரூபாய் கொடுத்துட்டு மேல ஏறவேண்டியிருக்கும்.. சின்னப் பையனாக இருந்தப்போ எனக்கும் இப்படி நடந்திருக்கு.. அப்புறம் இதே ஊர்னு சொன்ன உடனே ரிலீஸ் பண்ணிட்டாங்க.. என்ன ஒரு தொழில் தர்மம் பாருங்க. கோவிலுக்கே போனாலும் நாமதான பாதுகாப்பா இருந்து ஏமாறாம தரிசனம் பண்ணிட்டு வரனும்.. அப்பதான் அதோட பலன் கிடைக்கும் இல்லீங்களா..

சரி இப்பவே பதிவு பெருசாயிட்டதால இத்தோட முடிச்சிக்கறேன்.. இனி நம்ம ஊரைப் பத்தியும் அடிக்கடி எழுதறேன்..

71 comments:

  1. கண்டிப்பாக எழுதுங்க..... நிறைய விஷயங்களை தெரிஞ்சிக்கிறோம்.
    இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. //இனி நம்ம ஊரைப் பத்தியும் அடிக்கடி எழுதறேன்..//
    எழுதுங்க எழுதுங்க! :-)

    ReplyDelete
  3. நான் அடிக்கடி உங்க ஊருக்கு வேலைக்காரனமாக வருவேன் . ஆனா உங்க ஊருல இருக்குற ஹோட்டல் அநியாயம் பண்றாங்க எல்லாம் அநியாய ரேட் . அந்த கோவில் வச்சுதான் இவுங்க பொழப்பே ஓடுது . அந்த ஊருக்கு புதுசா வரவுங்களை ஏமாற்றி பிழைக்க ஒரு கூட்டமே இருக்கு உங்க ஊர்ல . நல்ல ஏமாத்தி காச வாங்கிட்டு அந்த பாவத்த போக்க கோவில் உண்டியல ஒரு தொகையை போட்டு விடுவார்கள் நினைக்கிறேன் .

    ReplyDelete
  4. மறக்க முடியாக இடங்களில் பழனியும் ஒன்று! எங்க ஊரு பக்கம்தான்.

    ReplyDelete
  5. உங்களின் shutter island தமிழ்மணத்தில் இறுதி சுற்றிற்கு தேர்வாகியுள்ளது நண்பரே....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அண்ணே நிறைய தகவல்களை தெரிஞ்சுகிட்டேன் இன்னும் தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.....

    ஊருக்கு வரும்போது கண்டிப்பா பழனிக்கு வரனும்

    ReplyDelete
  7. ஹி.. ஹி .. இப்படி ஏமாத்துகிறவர்களை முருகன் ஏன் தண்டிப்பதில்லை..

    ReplyDelete
  8. முருகனுக்கு ராஜ அலங்காரம், ஆண்டி அலங்காரம்னு நிறைய அலங்காரங்கள் இருக்கு//
    இப்போ ராஜ அலங்காரம் மட்டும்தான்னு நினைக்கிறேன்...நல்ல பதிவு

    ReplyDelete
  9. //இப்படி பஸ்ல இருந்து இறங்கினவுடனே.. வழி கேக்காமலே நமக்கு வழி சொல்றாங்களேன்னு நினைச்சுட்டு அவங்க பக்கம் ஒரு லுக் விட்டாலே போதும்.. ஊர் திரும்பறப்போ.. அவங்க மொட்டையே அடிக்கலைன்னாலும்.. அடிச்சு குளுகுளுன்னு சந்தனம் பூசி தாட்டி விட்டுடுவாங்க..//
    காவல்துறையும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை தான்..

    ReplyDelete
  10. முதலில் வாழ்த்துக்கள் பாபு....

    அடுத்த மாசம் இந்தியா வரும்போது பழனி விசிட் பிளான் பண்ணி இருக்கேன்... சரியான நேரத்துல பதிவு போட்டு இருக்கீங்க... ரொம்ப நன்றி பாஸ்

    ReplyDelete
  11. பழம் நீ அப்பா !

    ReplyDelete
  12. பாபு...பழனி எங்களுக்கும் பக்கத்து ஊரு தான்ப்பு..:) எங்க குட்டிபாஸ் கு ரெண்டு வாட்டி அங்க தான் மொட்டை:))..என் தோழியின் உறவினர் அந்த விஞ் விபத்தில் இறந்துட்டாங்க பாபு...அதுனாலே வின்ச் னாலே கொஞ்சம் பயமா இருக்கு கொஞ்ச நாளா..:(( மத்தபடி அங்கே தமிழ்நாடு ஹோட்டல் இல் சாப்பாடு சூப்பர் ..அந்த கீரை பொரியலை இன்னும் நினைச்சுப்பேன்...எனக்கு பழனி கோவில் ரொம்ப பிடிக்கும் பாபு..:) அடுத்த பதிவு பெங்களூர் பத்தி தானே...:))))).

    ReplyDelete
  13. தைப்பூசம் பக்கத்துல வர நேரத்துல சரியா பதிவு போட்டு இருக்கீங்க பாபு :-) நல்ல பதிவு, நல்ல தகவல்கள்

    ReplyDelete
  14. நிறைய தகவல்கள்! ஆனா நான் பொதுவா கூட்டமா உள்ள கோவில்களுக்கு போறதில்லை!

    ReplyDelete
  15. // பழனி முருகரோட பார்வை கேரளாவைப் பார்த்த மாதிரி இருக்காம். அதனாலதான்.. கேரளா நல்லா செழிப்பாக இருக்குதாம்.. அதனாலதான் எங்க மக்களுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்னு பதில் சொன்னான்.. இதுதான் சரியான காரணமான்னு தெரியலை எனக்கு.//

    நம்ம ஊர்ப்பக்கம் திரும்பி பாக்க சொல்லுங்களேன் , சரி நான் பழனி வரும்போது சொல்லுறேன் ..!!

    ReplyDelete
  16. //திடீர்னு வந்து.. உங்க நெத்தியில திருநீரைப் பூசிவிட்டு.. கையிலயும் சின்ன ஒரு வேலைக் கொடுத்துட்டு.. முருகனுக்கு நீங்க காணிக்கைப் போட்டாத்தான் இப்போ நகர முடியும்னு நின்னுக்குவாங்க.. இதெல்லாம் 5 செகண்டுக்குள்ள நடந்திடும்.. என்னடா நடந்ததுன்னே தெரியாம அவங்ககிட்ட 10,20ரூபாய் கொடுத்துட்டு மேல ஏறவேண்டியிருக்கும்..//

    ஹி ஹி ஹி , நான் இரண்டு தடவ வந்திருக்கேன் , ஆனா இந்த மாதிரி அனுபவம் இல்ல , ஏன்ன அப்ப நான் சின்னப்பையன் , எனக்கு பழனி அப்படின்னு சொன்னதுமே நியாபகம் வராது பஞ்சார்மிர்தம்தான் .!

    ReplyDelete
  17. Chitra said...

    கண்டிப்பாக எழுதுங்க..... நிறைய விஷயங்களை தெரிஞ்சிக்கிறோம்.
    இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்! ////

    வாங்க சித்ரா.. சொன்னபடி கரெக்டாக 5 ஆம் தேதி வந்துட்டீங்க..

    உங்களுக்கும் என் இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்.. பொங்கல் வாழ்த்துக்களும்..

    ReplyDelete
  18. ஜீ... said...

    //இனி நம்ம ஊரைப் பத்தியும் அடிக்கடி எழுதறேன்..//
    எழுதுங்க எழுதுங்க! :-) ///

    வாங்க ஜீ..

    ReplyDelete
  19. நா.மணிவண்ணன் said...

    நான் அடிக்கடி உங்க ஊருக்கு வேலை காரணமாக வருவேன் . ஆனா உங்க ஊருல இருக்குற ஹோட்டல் அநியாயம் பண்றாங்க எல்லாம் அநியாய ரேட் . அந்த கோவில் வச்சுதான் இவுங்க பொழப்பே ஓடுது . அந்த ஊருக்கு புதுசா வரவுங்களை ஏமாற்றி பிழைக்க ஒரு கூட்டமே இருக்கு உங்க ஊர்ல . நல்ல ஏமாத்தி காச வாங்கிட்டு அந்த பாவத்த போக்க கோவில் உண்டியல ஒரு தொகையை போட்டு விடுவார்கள் நினைக்கிறேன் . ////

    ஹா ஹா ஹா.. ரொம்பக் கோவமாக இருக்கீங்களே நண்பா.. ஹோட்டல்ல எல்லாம் அதிகமான பணம் வாங்கறது உண்மைதான்.. ஆனால் மலைக்குப் போற வழியில் இருக்கற ஹோட்டல்கள்லதான் அப்படிப் பார்க்கலாம்..

    நம்ம ஊரைச்சுற்றி நிறைய விளைநிலங்கள் இருக்கறதால நிறைய விவசாயிகளும் அதிகம்..

    ReplyDelete
  20. எஸ்.கே said...

    மறக்க முடியாக இடங்களில் பழனியும் ஒன்று! எங்க ஊரு பக்கம்தான். ////

    நீங்க நம்ம ஊர் பக்கம்தானா!! ரொம்ப சந்தோசமாக இருக்குங்க எஸ்.கே..

    ReplyDelete
  21. ரஹீம் கஸாலி said...

    உங்களின் shutter island தமிழ்மணத்தில் இறுதி சுற்றிற்கு தேர்வாகியுள்ளது நண்பரே....வாழ்த்துக்கள் ////

    இந்த சந்தோசமான விசயத்தை காலையிலேயே தெரிவித்ததற்கு ரொம்ப நன்றிங்க நண்பரே..

    ReplyDelete
  22. மாணவன் said...

    அண்ணே நிறைய தகவல்களை தெரிஞ்சுகிட்டேன் இன்னும் தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.....

    ஊருக்கு வரும்போது கண்டிப்பா பழனிக்கு வரனும் ////

    கண்டிப்பா வாங்க நண்பா..

    ReplyDelete
  23. கே.ஆர்.பி.செந்தில் said...

    ஹி.. ஹி .. இப்படி ஏமாத்துகிறவர்களை முருகன் ஏன் தண்டிப்பதில்லை.. ////

    ஹா ஹா ஹா...

    ReplyDelete
  24. ஆர்.கே.சதீஷ்குமார் said...

    முருகனுக்கு ராஜ அலங்காரம், ஆண்டி அலங்காரம்னு நிறைய அலங்காரங்கள் இருக்கு//
    இப்போ ராஜ அலங்காரம் மட்டும்தான்னு நினைக்கிறேன்...நல்ல பதிவு ////

    ஓ அப்படிங்களா.. இந்த விசயத்தை தெரிவிச்சதற்கு நன்றிங்க..

    பாராட்டுக்கு நன்றிங்க சதீஷ்குமார்..

    ReplyDelete
  25. Balaji saravana said...
    காவல்துறையும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை தான்.. ////

    உண்மைதான்.. :-(

    ReplyDelete
  26. வழிப்போக்கன் - யோகேஷ் said...

    arumai.... ///

    நன்றிங்க..

    ReplyDelete
  27. அருண் பிரசாத் said...

    முதலில் வாழ்த்துக்கள் பாபு....

    அடுத்த மாசம் இந்தியா வரும்போது பழனி விசிட் பிளான் பண்ணி இருக்கேன்... சரியான நேரத்துல பதிவு போட்டு இருக்கீங்க... ரொம்ப நன்றி பாஸ் ////

    வாழ்த்துக்களுக்கு நன்றிங்க அருண்..

    பழனி வர்றீங்களா.. சூப்பர்..

    ReplyDelete
  28. ஆகாயமனிதன்.. said...

    பழம் நீ அப்பா ! ///

    :-)

    ReplyDelete
  29. ஆனந்தி.. said...

    பாபு...பழனி எங்களுக்கும் பக்கத்து ஊரு தான்ப்பு..:) எங்க குட்டிபாஸ் கு ரெண்டு வாட்டி அங்க தான் மொட்டை:))..என் தோழியின் உறவினர் அந்த விஞ் விபத்தில் இறந்துட்டாங்க பாபு...அதுனாலே வின்ச் னாலே கொஞ்சம் பயமா இருக்கு கொஞ்ச நாளா..:(( மத்தபடி அங்கே தமிழ்நாடு ஹோட்டல் இல் சாப்பாடு சூப்பர் ..அந்த கீரை பொரியலை இன்னும் நினைச்சுப்பேன்...எனக்கு பழனி கோவில் ரொம்ப பிடிக்கும் பாபு..:) அடுத்த பதிவு பெங்களூர் பத்தி தானே...:))))). ////

    நம்ம பக்கத்து ஊர்காரரா நீங்க.. ரொம்ப சந்தோசங்க..

    வின்ச் அவிழ்ந்து விழுந்தது.. ரொம்பக் கொடுமையான சம்பவம் அது..

    பெங்களூர் பத்தித்தானே.. எழுதிட வேண்டியதுதான்..

    ReplyDelete
  30. இரவு வானம் said...

    தைப்பூசம் பக்கத்துல வர நேரத்துல சரியா பதிவு போட்டு இருக்கீங்க பாபு :-) நல்ல பதிவு, நல்ல தகவல்கள் ////

    நன்றிங்க..

    ReplyDelete
  31. வைகை said...

    நிறைய தகவல்கள்! ஆனா நான் பொதுவா கூட்டமா உள்ள கோவில்களுக்கு போறதில்லை! ////

    ஹா ஹா ஹா.. சரியான முடிவு..

    ReplyDelete
  32. கோமாளி செல்வா said...

    // பழனி முருகரோட பார்வை கேரளாவைப் பார்த்த மாதிரி இருக்காம். அதனாலதான்.. கேரளா நல்லா செழிப்பாக இருக்குதாம்.. அதனாலதான் எங்க மக்களுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்னு பதில் சொன்னான்.. இதுதான் சரியான காரணமான்னு தெரியலை எனக்கு.//

    நம்ம ஊர்ப்பக்கம் திரும்பி பாக்க சொல்லுங்களேன் , சரி நான் பழனி வரும்போது சொல்லுறேன் ..!! ////

    ஹா ஹா ஹா.. எனக்குத் தெரியும் நீங்க இப்படித்தான் சொல்வீங்கன்னு..

    ReplyDelete
  33. பழனி மலை முருகனுக்கு அரோகரா!!!
    பழனி மலை வர்ற பக்தனுக்கு கோவிந்தா !! கோவிந்தா!!
    --
    மதுரை பாண்டி
    http://maduraipandi1984.blogspot.com

    ReplyDelete
  34. மதுரை பாண்டி said...

    பழனி மலை முருகனுக்கு அரோகரா!!!
    பழனி மலை வர்ற பக்தனுக்கு கோவிந்தா !! கோவிந்தா!! ////

    ஹா ஹா ஹா.. நல்லா பாடறீங்களே..

    ReplyDelete
  35. Good one.
    Need more links, pictures, references..

    Keep it up.

    ReplyDelete
  36. >>>சரி இப்பவே பதிவு பெருசாயிட்டதால இத்தோட முடிச்சிக்கறேன்.. இனி நம்ம ஊரைப் பத்தியும் அடிக்கடி எழுதறேன்..

    ok waiting..write.pazani is near to my erode , 80 kms

    ReplyDelete
  37. ச்சின்னப் பையன் said...

    Good one.
    Need more links, pictures, references..

    Keep it up. ////

    நன்றிங்க..

    படங்கள் கிடைக்காததாலதான்.. நிறைய விசயங்களை எழுத முடியல.. சீக்கிரம் கலெக்ட் பண்ணிட்டு நிறைய யூஸ்புல்லான விசயங்களை எழுதறேன்.. :-)

    ReplyDelete
  38. சி.பி.செந்தில்குமார் said...

    >>>சரி இப்பவே பதிவு பெருசாயிட்டதால இத்தோட முடிச்சிக்கறேன்.. இனி நம்ம ஊரைப் பத்தியும் அடிக்கடி எழுதறேன்..

    ok waiting..write.pazani is near to my erode , 80 kms ///

    ம்ம்ம்.. தெரியுங்க.. பெங்களூர் வரும்போதெல்லாம்.. ஈரோடு வழிதான.. :-)

    ReplyDelete
  39. பழனி மிக பிடித்த ஊர். பிடித்த என்றால் ரொம்ப ரொம்ப பிடித்த ஊர்..

    ReplyDelete
  40. //உங்களின் shutter island தமிழ்மணத்தில் இறுதி சுற்றிற்கு தேர்வாகியுள்ளது நண்பரே....//

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. நம்ம ஊரப் பத்தி எழுதி கலக்கிட்டீங்களே!!

    ReplyDelete
  42. அருமை நண்பரே!!
    //தமிழ் மணம் விருதுகள் மூன்றாம் சுற்றுக்கு என்னுடைய Shutter Island - திரைவிமர்சனம் பதிவு தேர்வாயிருக்கு.//
    வாழ்த்துக்கள்♥♥♥

    ReplyDelete
  43. வாழ்த்துக்கள் பாபு..... சரளமான எழுத்து நடை...... நல்லாருக்கு....!

    ReplyDelete
  44. Shutter Island விருது பெற எனது வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  45. சுரேஷ் பழனியிலிருந்து... அப்படின்னு ஒரு பதிவர் இருக்கிறார்... அவர் உங்களோட இந்தப் பதிவை படிச்சா சந்தோஷப்படுவார்...

    ReplyDelete
  46. பதிவு அருமை.

    "ஏண்டாப்பா காசு வேணாம், துணி வேணாம்னு இங்க வந்து நின்னா , இந்த இடத்துலேயே வர்றவங்க கோவணத்த உருவுரீங்கள மக்கா"

    - இப்படிக்கு பழனி முருகன்.

    ReplyDelete
  47. உங்களுக்கு புண்ணியமா போகும் இந்த பதிவப்பாருங்க
    >>>>>
    உதவுங்கள்...

    http://vikkiulagam.blogspot.com/2011/01/help.html

    காத்திருக்கிறேன்........

    ReplyDelete
  48. சாரி தல... கொஞ்சம் லேட் ஆய்டுச்சு.. புத்தாண்டு வாழ்த்துக்கள்;

    ReplyDelete
  49. பாரத்... பாரதி... said...

    பழனி மிக பிடித்த ஊர். பிடித்த என்றால் ரொம்ப ரொம்ப பிடித்த ஊர்..////

    உங்களுக்கு நம்ம ஊரை ரொம்பப் பிடிச்சிருக்கறது ரொம்ப சந்தோசமா இருக்குங்க..

    ஏதாவது பொண்ணை சைட் அடிச்சிட்டு இருக்கீங்களா நம்ம ஊர்ல (சும்மா விளையாட்டுக்கு.. :-))

    ReplyDelete
  50. பாரத்... பாரதி... said...

    //உங்களின் shutter island தமிழ்மணத்தில் இறுதி சுற்றிற்கு தேர்வாகியுள்ளது நண்பரே....//

    வாழ்த்துக்கள்///

    ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  51. அன்பரசன் said...

    நம்ம ஊரப் பத்தி எழுதி கலக்கிட்டீங்களே!!

    ஆமாங்க.. இன்னும் எழுதனும்.. வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  52. டக்கால்டி said...

    Superb////

    நன்றிங்க..

    ReplyDelete
  53. பழனி பத்தி எழுதுனீங்க அயக்குடி கொய்யா பழம் பத்தி அடுத்த பதிவு எழுதுங்க

    ReplyDelete
  54. பலே பிரபு said...

    அருமை நண்பரே!!
    //தமிழ் மணம் விருதுகள் மூன்றாம் சுற்றுக்கு என்னுடைய Shutter Island - திரைவிமர்சனம் பதிவு தேர்வாயிருக்கு.//
    வாழ்த்துக்கள்♥♥♥////

    ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  55. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    வாழ்த்துக்கள் பாபு..... சரளமான எழுத்து நடை...... நல்லாருக்கு....!///

    நன்றிங்க..

    ReplyDelete
  56. Philosophy Prabhakaran said...

    Shutter Island விருது பெற எனது வாழ்த்துக்கள்...///

    நன்றிங்க பிரபாகரன்..

    ReplyDelete
  57. Philosophy Prabhakaran said...

    சுரேஷ் பழனியிலிருந்து... அப்படின்னு ஒரு பதிவர் இருக்கிறார்... அவர் உங்களோட இந்தப் பதிவை படிச்சா சந்தோஷப்படுவார்...///

    அப்படிங்களா.. பழனியிலிருந்தே எழுதறாரா.. சூப்பர்..

    ReplyDelete
  58. விக்கி உலகம் said...

    பதிவு அருமை.

    "ஏண்டாப்பா காசு வேணாம், துணி வேணாம்னு இங்க வந்து நின்னா , இந்த இடத்துலேயே வர்றவங்க கோவணத்த உருவுரீங்கள மக்கா"

    - இப்படிக்கு பழனி முருகன்./////

    ஹா ஹா ஹா... சரியாக ஓட்டிட்டீங்க..

    நன்றிங்க..

    ReplyDelete
  59. நாடோடிப் பையன் said...

    Good post.///

    நன்றிங்க..

    ReplyDelete
  60. Arun Prasath said...

    சாரி தல... கொஞ்சம் லேட் ஆய்டுச்சு.. புத்தாண்டு வாழ்த்துக்கள்///

    உங்களுக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் அருண்..

    ReplyDelete
  61. சிட்டி பாபு said...

    பழனி பத்தி எழுதுனீங்க அயக்குடி கொய்யா பழம் பத்தி அடுத்த பதிவு எழுதுங்க ////

    பழனியைப் பற்றி தாங்க எனக்கு அதிகம் தெரியும்.. ஆயக்குடி கொய்யா பழத்தைப் பற்றி உங்களுக்கு நிறையத் தெரிஞ்சிருக்கும் போலவே.. நீங்களே எழுதிடுங்க..

    ReplyDelete
  62. சுவாரஸ்யமான விவரங்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  63. ella vurkarangalum avanga vurappatti eppidi detaila eluthina ellarukkum uthaum. ravi.r

    ReplyDelete
  64. ஸ்ரீராம். said...

    சுவாரஸ்யமான விவரங்களைப் பகிர்ந்துள்ளீர்கள். ///

    நன்றிங்க..

    ReplyDelete
  65. ravie said...

    ella vurkarangalum avanga vurappatti eppidi detaila eluthina ellarukkum uthaum. ravi.r ////

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க ரவி..

    ReplyDelete
  66. என்னை வாழ வைக்கும் தமிழ்கடவுள் முருகனின் தலம் பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி பாபு!!

    ReplyDelete
  67. சிவகுமார் said...

    என்னை வாழ வைக்கும் தமிழ்கடவுள் முருகனின் தலம் பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி பாபு!! ////

    ரொம்ப சந்தோசங்க சிவகுமார்.. எனக்கும் மகிழ்ச்சிதான்..

    ReplyDelete
  68. மிக அருமையான, பயனுள்ள பதிவு. நான் பிறந்து வளர்ந்தது சென்னை. ஆனால் நான் +1, +2 படித்தது திருத்தணி அரசு மேல்நிலைப்பள்ளியில். உங்க பதிவை படிக்கும்போது நான் திருத்தணியை எவ்வளோ miss பண்றேன்னு தெரியுது.

    ReplyDelete
  69. அட இன்னா பாஸ் நீங்க?
    நம்ம சைட்டுக்கு வாங்க!
    கருத்து சொல்லுங்க!!
    நல்லா பழகுவோம்!!!

    ReplyDelete