எட்வர்டு நார்டன் இந்தப் படத்தோட கதை சொல்லியா இருக்கார்.. தன்னோட வாழ்க்கையில நடக்கற சம்பவங்களை நமக்கு சொல்ற மாதிரி படம் நகருது..
முதல் காட்சி.. ஏதோ ஒரு கட்டிடத்தோட மேல் மாடில நார்டனைக் கட்டிப்போட்டு.. அவர் வாய்க்குள்ள துப்பாக்கியை விட்டு சுட்டுடுவேன்னு மிரட்டிட்டு இருக்கார் ஒருத்தர்.. அவருக்கு என்னாச்சு.. ஏன் அந்தாள் நார்டனை அடிச்சுக் கட்டிப்போட்டிருக்கார்??..
பிளாஷ்பேக்ல ஆறுமாசத்துக்கு முன்னாடிக் கொண்டு போறாங்க நிகழ்வுகளை..
நார்டனுக்கு அவர் செய்ற வேலையில திருப்தியே இல்ல.. வாழ்க்கையில இஷ்டமில்லை.. உறக்கமின்மை நோயால பாதிக்கப்பட்டிருக்கார்.. நைட் முழுவதும் கொட்டக்கொட்ட முழிச்சிட்டே உட்கார்ந்திருக்கார்.. டாக்டர்கள் அவரோட நோயைக் குணப்படுத்த முடியாதுன்னு கைவிரிச்சிடறாங்க.. தான் ரொம்பக் கஷ்டப்படறதா ரொம்ப எமோஷனலா பேசறார் நார்டன்.. "ஆதரவாளர்கள் அமைப்பு"க்குப் போய் பார்.. அங்கே இருக்கறவங்க எவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு உனக்குப் புரியும்.. போய் ஒழுங்கா உடற்பயிற்சியெல்லாம் கடுமையா செய்து தூக்கம் வரவழைக்கற வழியப் பார்ன்னு டாக்டர் சொல்லிட்டுப் போயிடுவார்..
ஏதாவது பெரிய நோய்களால அவதிப்பட்டுட்டு இருக்கறவங்க.. சீக்கிரம் செத்துப் போகற நிலையில இருக்கவங்க எல்லாம் சேர்ந்து வாரத்துல ஏதாவது ஒரு இடத்துல ஒரு கூட்டம் போட்டு.. தங்களோட துக்கங்களைப் பகிர்ந்துக்கிட்டு வாய்விட்டு அழுவாங்க.. அதான் ஆதரவாளர்கள் அமைப்பு..
டாக்டர் சொன்னதுல இப்ரஸ் ஆன நார்டன் ஒரு ஆதரவாளர்கள் அமைப்புக்குப் போறார்.. அங்கே எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சு அழறாங்க.. இவரும் "பாப்"னு ஒருத்தரைக் கட்டிப்பிடிச்சு அழறார்.. அன்னைக்கு நைட் குறட்டை விட்டுத் தூங்கறார்.. இந்தமாதிரிக் கூட்டங்கள்ல கலந்துக்கறதால தன்னோட மன அழுத்தங்கள் குறையுதுன்னு நினைக்க ஆரம்பிக்கறார் நார்டன்.. அதனால எங்கெங்க கூட்டங்கள் நடக்குதோ அங்கெல்லாம் போய்.. அழுது.. தன்னோட மன அழுத்தத்தைக் குறைச்சிக்கறார்..
மார்லான்னு ஒரு பொண்ணும் புதுசா கூட்டங்கள்ல கலந்துக்க ஆரம்பிக்கறாங்க.. அவங்களோட வருகை நார்டனை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது.. தன்னைப் போலவே அவங்களும் நோயிருக்கறதா பொய் சொல்லி கூட்டங்கள்ல கலந்துக்கறதா நினைக்கிறார்.. அவர்கிட்ட இருந்து விலகிப் போகனும்னு நினைக்கிறார்..
நார்டன் வியாபார விசயமா வெளியூர் போறப்போ விமானத்துல டைலர்ன்னு ஒருத்தரை சந்திக்கறார்.. அவர் சோப்பு விக்கற சேல்ஸ் மேன்.. ரெண்டு பேரும் விமானத்துல நல்லா பேசி அறிமுகமாயிக்கறாங்க..
வெளியூர் டிரிப் முடிஞ்சு வீட்டுக்குப் போற நார்டனுக்கு பெரிய அதிர்ச்சி.. அவரோட அபார்ட்மெண்ட் தீ பிடிச்சு எறிஞ்சுட்டு இருக்கு.. அவருக்கு வேற எதுவும் போக்கிடம் இல்ல.. அவருக்கு அங்கே தெரிஞ்சது மார்லாவும் விமானத்துல அவர் சந்திச்ச டைலரும்தான்..
ரொம்ப யோசிச்சதுக்கு அப்புறம் டைலருக்குப் போன் பண்றார் நார்டன்.. ரெண்டு பேரும் ஒரு நைட் பார்ல சந்திச்சு தண்ணியடிக்கறாங்க.. டைலரோட தங்கறதுக்கு நார்டன் அனுமதி கேக்கறார்.. நீ எங்கூட வரனும்னா என் மூஞ்சியில குத்து அப்படின்னு சொல்றார் டைலர்.. நார்டனும் அதுபோலவே செய்ய.. டைலர் அவரைத் திரும்பக் குத்தறார்.. ரெண்டு பேரும் பயங்கரமா சண்டை போட்டுக்கறாங்க.. ஆனால் அந்த சண்டை ரெண்டு பேருக்குமே ரொம்ப பிடிச்சிப் போயிடுது..
சண்டை போடறதால தன்னோட மன அழுத்தம் குறையறதை ஃபீல் பண்றார் நார்டன்.. டைலரும் நார்டனும் அடிக்கடி அந்த நைட் பார் முன்ன சண்டை போட்டுக்கறாங்க.. அவங்களோட சண்டை அங்கே வர்றவங்களுக்கு பிடிச்சுப் போகுது.. நானும் சண்டை போடறேன்னு ஒவ்வொருத்தரா அவங்களோட சண்டையில கலந்துக்கறாங்க..
கொஞ்ச நாள்ல அந்த நைட் பாரோட பேஸ்மெண்ட்லயே சண்டை போட ஆரம்பிக்கறாங்க.. டைலர் அந்த பேஸ்மெண்டுக்கு பைட் கிளப்புன்னு பேர் வைக்கறார்..
பைட் கிளப்புல கலந்துக்கிறதுக்கு சில விதிகளை விதிக்கறார் டைலர்..
விதி 1: ஃபைட் கிளப்புல இருக்கறவங்க ஒருத்தரை ஒருத்தர் எந்தக் கேள்வியும் கேக்கக்கூடாது..
விதி 2: ஃபைட் கிளப் பத்தி யார்கிட்டயும் பேசக்கூடாது
அங்கே சண்டை போடறவங்க.. ஜெயிக்கனும் தோக்கனும்னு எந்த நோக்கத்துக்காகவும் சண்டை போடறதில்லை.. பணம் கட்டி விளையாடறதில்லை.. சண்டை போடறதுல ஒரு திருப்தி கிடைக்குது அங்கே வர்றவங்களுக்கு.. இந்த சண்டைக்கு நிறையப் பேர் அடிக்ட் ஆகறாங்க.. டைலர் சொல்றதை எல்லாம் மெஸ்மெரிசம் செய்யப்பட்டவங்க போல கேக்க ஆரம்பிக்கறாங்க..
பைட் கிளப்புல சண்டை போடறது மட்டுமில்லாம உறுப்பினர்களுக்கு ஹோம் ஒர்க் கொடுக்க ஆரம்பிக்கறார் டைலர்.. ஒரு உதாரணம்.. தெருவுல போற யாரையாவது வம்பிழுத்து வழிய அடிவாங்கனும் இதுதான் ஹோம் ஒர்க்.. இது எப்படி இருக்கு.. அவர் என்ன சொன்னாலும் அப்படியே செய்ய ஆரம்பிக்கறாங்க எல்லாரும்.. இப்போ குறைஞ்சது ஒரு 200 பேர் சேர்ந்திடறாங்க அந்த கிளப்புல.. அந்தக் கிளப் உறுப்பினர்கள் எல்லாரையும் கொஞ்ச கொஞ்சமா சட்ட விரோத செயல்களை செய்யத் தூண்டறார் டைலர்..
பைட் கிளப்புக்கு கிடைக்கிற வரவேற்பைப் பார்த்து வேற வேற ஊர்களுக்கும் போய் அந்தக் கிளப்பை ஆரம்பிக்கறார் டைலர்.. கொஞ்சம் நாள்ல ஒரு சமூக விரோதிகள் அமைப்பு மாதிரி நிறையப் பேர் உருவாயிடறாங்க.. புதுசா பைட் கிளப்புக்கு பிராஜெக்ட் மேஹம்னு பேர் வைக்கறார்..
டைலர் சொன்ன ஒரு ஹோம் ஒர்க்கை பண்ற சமயத்துல நார்டனோட நண்பர் பாப் இறந்துடறார்.. நிலைமை ரொம்ப சிரீயஸா போறதைப் பார்த்த நார்டன் இந்த வேலைகளை நிறுத்த சொல்லி டைலர்கிட்ட சண்டை போடறார்.. டைலர் அவர்கிட்ட கோவிச்சுக்கிட்டு அந்த இடத்தை விட்டுப் போயிடறார்.. ஆனாலும் நார்டன் அவரைக் கண்டுபிடிச்சு இந்த சட்ட விரோத செயல்களை தடுத்த நிறுத்த ஊர் ஊரா டைலரைத் தேடிப் போறார்.. அவர் போற இடங்கள்ல எல்லாம் எல்லாரும் சண்டை போட்டுட்டே இருக்காங்க.. நிலைமை ரொம்ப மோசமாயிருக்கு..
டைலரை எங்கே தேடியும் கிடைக்கல..
அந்தத் தேடுதல்ல நிறைய அதிர்ச்சியான விசயங்களைத் தெரிஞ்சுக்கறார் நார்டன்..
நார்டன் டைலரைத் தேடி அவரோட இந்த வேலைகளை நிறுத்தினாரா?.. டைலர் ஏன் இப்படி ஒரு சமூக விரோதிகள் அமைப்பை உருவாக்கினார்?.. உண்மையில டைலர் யார்? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் திரைக்கதை சுவாரஷ்யமான பதில்களை சொல்லும்..
படத்தோட முதல் காட்சிதான் கடைசிக் காட்சியும் கூட..
நார்டன் படம் முழுக்க நமக்கு கதை சொல்லிக்கிட்டே இருப்பார்.. திரைக்கதை ஓட்டத்தை நல்லா கவனிச்சா.. நடக்கப்போற விசயங்களை யூகிச்சுட முடியும்னு நினைக்கிறேன்.. படம் பார்த்து முடிஞ்ச பிறகு காட்சிகளை யோசிச்சுப் பார்த்தப்போ.. அப்பவே கண்டுபிடிச்சிருக்கலாம்னு புரிஞ்சது..
ஆனால் விறுவிறுப்பான திரைக்கதை..
நார்டனும், பிராட் பிட்டும் நல்லா நடிச்சிருக்காங்க.. பிராட் பிட் ரொம்ப மேன்லியா இருப்பார்..
பிராட் பிட்.. நார்டனோட நண்பி மார்லாவைக் கரெக்ட் பண்ணிடுவார்.. அதுக்கப்புறம் வர்ற காட்சிகள் சின்னப் பசங்க பார்க்கறதுக்கு உகந்ததல்ல.. ஆனால் மார்லாவா நடிச்சிருக்கற பொண்ணுக்கு திரைக்கதையில பெரிய ஸ்கோப் ஏதும் இல்ல.. டைலர் அவரைக் கரெக்ட் பண்ற காட்சிகள் மாதிரி.. கதையோட்டத்துக்கு யூஸ் ஆகறாங்க அவ்லோதான்..
கதையோட்டத்துக்கு லாஜிக் இல்லாத விசயங்களும் சில இருந்தது..
இந்தப் படத்தை டைம் இருந்தா பார்க்கலாம்.. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது..