படத்தோட டைட்டிலே ரொம்ப சிம்பிளாகப் போட்டாங்க.. எந்த கிராபிக்ஸும் இல்ல.. சாதாரணமாக எழுத்துப் போடறாங்க.. இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம்.. கமல்ஹாசன்.. ஆனால் கதை ஏற்கனவே இரண்டு உலகப்படங்களில் இருந்து கமல் சுட்டுட்டார்னு படிச்சேன்.. சுட்ட கதையாக இருந்தாலும்.. இந்த வருடத்தில் ஒரு அருமையான படமே..
இப்படத்தில் திரிஷா.. ஒரு நடிகையாகவே வர்றாங்க.. திரிஷாவை மாதவன் காதலிக்கிறார்.. முதல் காட்சியிலயே ஒரு பாடல்காட்சி.. அதில் சூர்யாவுடன்.. திரிஷா சூட்டிங்ல இருக்கறமாதிரி அந்தப் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கு.. சூட்டிங் ஸ்பாட் வர்ற மாதவன்.. திரிஷாவையும் சூர்யாவையும்.. சந்தேகப்பட்டு திரிஷாகூட சண்டைபோடறார்.. ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டே மலைப்பாதையில் கார் ஓட்டிட்டு வர்றப்போ.. எதுத்து வர்ற வண்டியைப் பார்க்காமல் ஒரு ஆக்சிடெண்ட் ஆயிடுது.. எப்படியோ சமாளித்து.. வண்டியை நிப்பாட்டித் திரும்பிப் பார்க்க.. ஆக்சிடெண்ட் ஆன மற்றொரு வண்டியைக் காணோம்.. சரி இடிச்சுட்டு ஓடிட்டாங்க போலன்னு நினைச்சுட்டு.. திரிஷாவும் மாதவனும் சண்டையைத் தொடர்றாங்க.. இதனால மனசு வருத்தப்பட்டு.. மன மாறுதலுக்காக அவருடைய தோழி சங்கீதா இருக்கற ஊருக்குப் போறார் திரிஷா..
இங்கேதான் கமல் அறிமுகமாகிறார்.. இவர் யாருன்னா.. திரிஷாவை ஃபாலோ பண்ணி அவர் வேற யார் கூடயாவது தொடர்பு வைச்சிருக்காரான்னு மாதவன் துப்பறிய அனுப்பி வைத்த ஒரு டிடெக்டிவ்.. சங்கீதாவை அறிமுகப்படுத்தியதில் இருந்து திரிஷாவுக்கு அதிகமான டயலாக்கே இல்லை.. சங்கீதாவே நிறையப் பேசறார்.. அசால்ட்டா நிறைய லந்தடிக்கறார்.. அவருடைய குழந்தைகளாக வரும் கதாப்பாத்திரங்களும் சூப்பர்..
ஒருகட்டத்தில் திரிஷா மற்றும் சங்கீதாவுடன் கமல் நட்பாகிறார்.. அப்போது கமல் கூறும் அவருடைய ஃபிளாஸ்பேக்கில் ஒரு ஆக்சிடெண்ட் வருது.. அந்த ஆக்சிடெண்ட் திரிஷா பண்ணினதுதான்.. அதனால் குற்ற உணர்ச்சியில் திரிஷா தவிக்கிறார்.. கமலும் பணத்தேவைக்காக.. திரிஷா யார்கூடவோ சுத்தறார்ன்னு மாதவன்கிட்ட பொய் ரிப்போர்ட் கொடுத்துட்டு குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார்.. ஒருபட்சத்தில் கமலுக்கு நடந்த ஆக்சிடெண்டுக்கு காரணம் தான்தான்னு திரிஷா சொல்ல.. கமல் அதை ஸ்போட்டிவாக எடுத்துக்கறார்.. ரெண்டு பேருக்குள்ளேயும் இப்போ காதல்..
மாதவன் திடீர்னு கமலையும்.. திரிஷாவின் மோசடியையும் நேர்ல பார்க்கனும்னு வர.. அப்போ இருந்து காமெடி+மொக்கை ஆரம்பம்.. கடைசியில் கமலும் திரிஷாவும் சேர்றாங்க.. சங்கீதாவும், மாதவனும் சேர்றாங்க.. படம் ஓவர்..
படத்தின் முதல் காட்சியில் இருந்து வசனங்கள் எல்லாம் கவிதை மாதிரியே பேசறாங்க.. நிறைய ஆழ்ந்த கருத்துள்ள வசனங்கள்.. மாதவன் அவருடைய பார்ட்டை சிறப்பாகவே செய்திருக்கிறார்.. கமலைப் பற்றி சொல்லவே வேண்டாம்.. அருமை..
அடுத்து.. படத்தின் ஹீரோயின் திரிஷாவை விட.. சங்கீதாவே மனசில் நிக்கிறார்.. காமெடிக் காட்சிகளில் அவருடைய நடிப்பு சூப்பர்.. அதுவும்.. கடைசிக் காட்சிகளில்.. மாதவனிடம் மாட்டிக் கொள்ளவிருக்கும் கமலைக் காப்பாற்ற போட்டப் பிளான் சொதப்ப.. கமல் தன்னைத் துப்பறிய வந்த ஒரு டிடெக்டிவ்ன்னு தெரியாத திரிஷா.. அதே இடத்துக்கு வர.. அங்கு நடக்கும் லூட்டியில் தியேட்டர் முழுவதும் ஒரே சிரிப்பு.. அந்தக் காட்சிகள் சிறப்பாக அமைந்ததற்கு சங்கீதாவின் நடிப்பே காரணம்..
ரமேஷ் அரவிந்தை அடையாளமே தெரியல.. ரமேஷ் அரவிந்த் பார் எப்படி ஆயிட்டார்னு.. கூடபடத்துக்கு வந்திருந்த நம்ம பிரியமுடன் ரமேஷ் சொல்லத்தான்.. ஓ அப்படியான்னு பார்த்தேன்..
கமல் ஃபிளாஸ்பேக் சொல்ல ஆரம்பிக்கும் போது.. வரும் பாடல் காட்சி.. ஆக்சிடெண்ட் ஆனதில் இருந்து.. காட்சிகள் பின்னோக்கி நகர்வதுபோல காமிச்சிருப்பாங்க.. பதிவாக்கிய விதம் அருமை.. ஆனால் காட்சிகள் எல்லாம் கமலுடன் சேர்ந்து பின்னோக்கி செல்லும்போது.. கமலின் வாய் அசைவுகள் மட்டும்.. பாடல் வரிகளை கரெக்டா உச்சரிச்சது எப்படின்னு தெரியல.. ரொம்ப நல்லாயிருந்தது..
திடீர்னு ஊறுகாய் மாதிரி.. ஓவியாவும் வர்றார்.. அதைப் படத்துலயே மாதவன் நக்கலாக சொல்லிக் காமிச்சிட்டார்..
இந்தப் படத்தின் பிரச்சினைக்குரிய கவிதை.. இரண்டுமுறை வருது..
கடைசிக் காட்சிகள் காமெடியாக இருந்தாலும் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது..
மன்மதன் அம்பு - கடைசி 45 நிமிடக் காட்சிகளைத் தவிர்த்தால் இரண்டு முறை பார்க்கலாம்..
ரெண்டுதடவ பாக்கலமா? நீங்க சரிதானப்பு!
ReplyDeleteதல! ரெண்டு பேரும் (ரமேஷ்)என்ன சொல்லிவச்ச மாதிரி ஒரே படத்துக்கு வேறு வேறு மாதிரி விமர்சனம் எழுதி இருக்கீங்க!! பக்கத்து பக்கத்துல உட்காந்து பார்க்கலியா? அதான்!! :-)))
ReplyDeleteகமலுடன் வரும் அந்த வெளிநாட்டு பெண்மணி...?
ReplyDeleteவிமர்சனம் அருமை...
ReplyDeleteசுடச்சுட விமர்சன பகிர்வுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteஅதற்குள் விமர்சனமா...
ReplyDeleteஇவ்வளவும் சொல்லிட்டு இரண்டு முறை பார்க்கலாம் என்கிறீர்களே...
கடைசி 45 மணி நேரம்...?!!
>>>கடைசிக் காட்சிகள் காமெடியாக இருந்தாலும் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது..
ReplyDeleteசரியா சொன்னீங்க
நல்ல விமர்சனம் பாபு
ReplyDeleteநல்ல விமர்சனம் நண்பரே...
ReplyDeleteஇன்னைக்கு பாத்திருவோம்...
நான் நேத்துதான் பார்த்தேன்! முதல் பாதி கமலின் ஆதிக்கம்! இரண்டாம் பாதி ரவிகுமாரின் ஆதிக்கம்! இந்த படத்துக்கு அந்த கவிதை தேவையா?!
ReplyDeleteநல்ல தெளிவான விமர்சனம் படம் பார்க்க வேண்டும்
ReplyDelete"இரண்டு முறை பார்க்கலாம்.."
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ரசிக கண்மணியே
பார்த்துடுவோம் :))
ReplyDeleteவிமர்சனம் நல்லா இருக்கு! ஆனா படம் சுமார்தானா?
ReplyDeleteபடம் நல்லாயிருக்கா இல்லை சுமாரா இருக்கான்னு சொல்லுங்க பாபு?
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteரெண்டுதடவ பாக்கலமா? நீங்க சரிதானப்பு! ////
:-).. வாங்க பன்னிக்குட்டி ராம்சாமி..
எம் அப்துல் காதர் said...
ReplyDeleteதல! ரெண்டு பேரும் (ரமேஷ்)என்ன சொல்லிவச்ச மாதிரி ஒரே படத்துக்கு வேறு வேறு மாதிரி விமர்சனம் எழுதி இருக்கீங்க!! பக்கத்து பக்கத்துல உட்காந்து பார்க்கலியா? அதான்!! :-))) ////
ஹா ஹா ஹா.. ரெண்டு பேரும்.. அவங்க அவங்களுக்குத் தோனினதை எழுதினோம்..
philosophy prabhakaran said...
ReplyDeleteகமலுடன் வரும் அந்த வெளிநாட்டு பெண்மணி...? ////
வெளிநாட்டுப் பெண்மணி பற்றி சொல்ல வேண்டாம்னு பார்த்தேங்க.. அதான் எழுதல..
///விமர்சனம் அருமை... ////
நன்றிங்க..
மாணவன் said...
ReplyDeleteசுடச்சுட விமர்சன பகிர்வுக்கு நன்றி நண்பரே ////
நன்றிங்க மாணவன்..
ஸ்ரீராம். said...
ReplyDeleteஅதற்குள் விமர்சனமா...
இவ்வளவும் சொல்லிட்டு இரண்டு முறை பார்க்கலாம் என்கிறீர்களே...
கடைசி 45 மணி நேரம்...?!! ////
கடைசி 45 நிமிடம் கண்டிப்பாக இரண்டாவது முறை பார்க்க முடியாது தாங்க நண்பரே.. மற்றபடி படம் ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரஸ்யமாகவே இருந்தது..
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete>>>கடைசிக் காட்சிகள் காமெடியாக இருந்தாலும் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது..
சரியா சொன்னீங்க ////
வாங்க செந்தில்குமார்..
ஆமினா said...
ReplyDeleteநல்ல விமர்சனம் பாபு...
நன்றிங்க..
வெறும்பய said...
ReplyDeleteநல்ல விமர்சனம் நண்பரே...
இன்னைக்கு பாத்திருவோம்... ///
சூப்பர் நண்பா.. கண்டிப்பாகப் பாருங்க..
பாராட்டுக்கு நன்றிங்க ஜெயந்த்..
வைகை said...
ReplyDeleteநான் நேத்துதான் பார்த்தேன்! முதல் பாதி கமலின் ஆதிக்கம்! இரண்டாம் பாதி ரவிகுமாரின் ஆதிக்கம்! இந்த படத்துக்கு அந்த கவிதை தேவையா?! ////
கண்டிப்பாக அந்தக் கவிதை தேவையில்லைதான்..
சௌந்தர் said...
ReplyDeleteநல்ல தெளிவான விமர்சனம் படம் பார்க்க வேண்டும் ////
நன்றிங்க செளந்தர்..
விக்கி உலகம் said...
ReplyDelete"இரண்டு முறை பார்க்கலாம்.."
பகிர்வுக்கு நன்றி ரசிக கண்மணியே ////
நன்றி வாசகர் கண்மணியே.. :-)
நல்ல தெளிவான விமர்சனம்...பாபு
ReplyDeleteஎன்னங்க எல்லாரும் கடைசி கட்சி தான் நல்ல இருக்குன்னு சொன்னங்க.... ஹ்ம்ம்...
ReplyDeleteபாத்துடுவோம் நண்பா .நீங்க மட்டும் தான் ரெண்டு தடவ பாக்கலாம் எழுதறீங்க நிறைய பேர் சொம்பு ,கம்பு ,எழுதுறாங்களே ?
ReplyDeleteஒரு முறை மட்டுமாவது பார்க்க முடியுமா? என்று பார்க்கிறேன்..
ReplyDeleteஎன்னய்யா குழப்பிட்டீங்க... ஒருமுறை பார்க்கறேன்... பின்னோக்கு செல்லும் டெக்ணிக்குகாக
ReplyDeletegood super....
ReplyDeletekarthikkumar said...
ReplyDeleteபார்த்துடுவோம் :)) ///
வாங்க karthikkumar..
எஸ்.கே said...
ReplyDeleteவிமர்சனம் நல்லா இருக்கு! ஆனா படம் சுமார்தானா? ////
இல்லங்க படம் நல்லாயிருந்தது.. முடிவு சரியில்ல.. கமல் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் படத்தை முடிக்கத் தெரியாமல் திணறியிருப்பது சோகமான விசயம்..
இரவு வானம் said...
ReplyDeleteபடம் நல்லாயிருக்கா இல்லை சுமாரா இருக்கான்னு சொல்லுங்க பாபு? ///
படம் நல்லாயிருந்தது.. முடிவு சரியில்ல..
பிரஷா said...
ReplyDeleteநல்ல தெளிவான விமர்சனம்...பாபு ////
நன்றிங்க..
Arun Prasath said...
ReplyDeleteஎன்னங்க எல்லாரும் கடைசி கட்சி தான் நல்ல இருக்குன்னு சொன்னங்க.... ஹ்ம்ம்... ////
அப்படிங்களா.. ஒவ்வொருத்தரின் ரசனையும் ஒருமாதிரி.. கடைசிக் காட்சிகளும் நன்றாகவே இருந்தன.. ஆனால் அவ்வளவு நேரம் ஓடியக் காட்சிகள் அதனால் பலவீனமாயிடுச்சு..
நா.மணிவண்ணன் said...
ReplyDeleteபாத்துடுவோம் நண்பா .நீங்க மட்டும் தான் ரெண்டு தடவ பாக்கலாம் எழுதறீங்க நிறைய பேர் சொம்பு ,கம்பு ,எழுதுறாங்களே ? ////
ம்ம்ம்.. மற்ற நண்பர்களின் கருத்து அது நண்பா.. ஆனால் படம் முழுக்க சுவாரஸ்யமாகவே இருக்கும்.. நல்ல படமே..
கே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDeleteஒரு முறை மட்டுமாவது பார்க்க முடியுமா? என்று பார்க்கிறேன்.. ////
வாங்க செந்தில்..
அருண் பிரசாத் said...
ReplyDeleteஎன்னய்யா குழப்பிட்டீங்க... ஒருமுறை பார்க்கறேன்... பின்னோக்கு செல்லும் டெக்ணிக்குகாக ////
ஹா ஹா ஹா.. பாருங்க கண்டிப்பா..
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeletegood super.... ///
நன்றிங்க..
பாபு..ஒரு குரூப்பு..கடைசி 45 நிமிஷம் தான் படமே நல்ல இருக்குங்கிறாங்க...:)) (அவங்க அவங்க ரசனைய பொறுத்து:)))..அநேகமா காதலா..காதலா படம் மாதிரி இருக்குமோ கடைசி சில நிமிடங்கள்???
ReplyDeleteஆனந்தி.. said...
ReplyDeleteபாபு..ஒரு குரூப்பு..கடைசி 45 நிமிஷம் தான் படமே நல்ல இருக்குங்கிறாங்க...:)) (அவங்க அவங்க ரசனைய பொறுத்து:)))..அநேகமா காதலா..காதலா படம் மாதிரி இருக்குமோ கடைசி சில நிமிடங்கள்??? ////
உண்மைதாங்க.. ஒவ்வொருத்தர் ரசனையும் ஒருமாதிரி இருக்கு.. ஆனால் கடைசிக்காட்சிகளும் ரசிக்கமுடியாதவை இல்ல.. எல்லோரையும் விட சங்கீதா காமெடியில கலக்கியிருப்பார்..
இது நான் படிக்கிற மூணாவது விமர்சனம்..
ReplyDeleteமன்மதன் அம்பு கமல் படம் அப்படிங்கிறதால விமர்சனம் பத்தி எனக்கு கவலை இல்ல .. பார்ப்பேன் .. ஹி ஹி ஹி .. ஆனா நீங்களும் நல்லா இருக்குனு தான் சொல்லிருக்கீங்க .. கடைசில தான் கொஞ்சம் போர்.. நான் பார்த்திட்டு வந்து சொல்லுறேன் . ஹி ஹி ஹி
கோமாளி செல்வா said...
ReplyDeleteஇது நான் படிக்கிற மூணாவது விமர்சனம்..
மன்மதன் அம்பு கமல் படம் அப்படிங்கிறதால விமர்சனம் பத்தி எனக்கு கவலை இல்ல .. பார்ப்பேன் .. ஹி ஹி ஹி .. ஆனா நீங்களும் நல்லா இருக்குனு தான் சொல்லிருக்கீங்க .. கடைசில தான் கொஞ்சம் போர்.. நான் பார்த்திட்டு வந்து சொல்லுறேன் . ஹி ஹி ஹி ////
படம் சூப்பர்தான் செல்வா.. கண்டிப்பா ரொம்ப சந்தோசப்படுவீங்க.. கடைசிக்காட்சிகளும் போர் எல்லாம் இல்ல.. உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்..
பாபு!! நான் இன்னைக்கு தான் படம் பார்த்தேன்... ரொம்ப எதிர் பார்த்து போனேன்... எனக்கு ஏமாற்றம் தான்... கொஞ்சம் கூட சிரிப்பே வரலை... செகண்ட் ஹால்ப் ல நிறைய சீன் continutiy மிஸ் ஆனா மாதிரி பீலிங்... படத்துல அந்த கவிதை , படம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் backround ல வந்துச்சு!!!
ReplyDelete--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
மதுரை பாண்டி said...
ReplyDeleteபாபு!! நான் இன்னைக்கு தான் படம் பார்த்தேன்... ரொம்ப எதிர் பார்த்து போனேன்... எனக்கு ஏமாற்றம் தான்... கொஞ்சம் கூட சிரிப்பே வரலை... செகண்ட் ஹால்ப் ல நிறைய சீன் continutiy மிஸ் ஆனா மாதிரி பீலிங்... படத்துல அந்த கவிதை , படம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் backround ல வந்துச்சு!!! /////
அந்தக் கவிதை.. இரண்டு முறை வரும்.. முதல் முறை.. திரிஷா.. கமலோட ஆக்சிடெண்டுக்கு காரணம் நாந்தான்னு ஒத்துக்குக்கறதுக்கு முதல் சீன்லயும்.. நீங்க சொன்னமாதிரி படம் முடிந்து எழுத்துப்போடும் போதும் வரும்..
நீங்க சொல்றதைப் பார்த்தால்.. காட்சிகள் கட் செய்யப்பட்டிருக்குன்னு நினைக்கிறேங்க.. அதனால்கூட உங்களுக்கு படம் பிடிக்காமல் போயிருக்கலாம்.. எனக்கும் கடைசியில் வரும் காட்சிகளில் திருப்தியில்லை.. ஆனால் நிறையப் பேருக்கு அந்தக் காட்சிகள் ரொம்பப் பிடிச்சிருக்கு.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை..
விமர்சனம் சூப்பர் நண்பா ..
ReplyDeleteஆனாலும் படம் செம பொழுதுபோக்கு ,கத்தாரில் அதிகமான தமிழ் படங்கள் வெளியிடுவதில்லை இந்த வருடம் வெளியான படங்களிலேயே படம் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை திரையரங்கு சிரிப்பிலே கதிகலங்கியது ...நீண்ட நாட்களுக்கு பிறகு சலிப்பு வராமல் பார்த்த படம்
FARHAN said...
ReplyDeleteவிமர்சனம் சூப்பர் நண்பா ..
ஆனாலும் படம் செம பொழுதுபோக்கு ,கத்தாரில் அதிகமான தமிழ் படங்கள் வெளியிடுவதில்லை இந்த வருடம் வெளியான படங்களிலேயே படம் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை திரையரங்கு சிரிப்பிலே கதிகலங்கியது ...நீண்ட நாட்களுக்கு பிறகு சலிப்பு வராமல் பார்த்த படம் ///
விமர்சனத்தை ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி நண்பா..
உண்மைதான்.. இந்த வருடத்தில் இதுவும் ஒரு சிறந்த படம்.. ஆரம்பம் முதல் கடைசி வரை நம்முடைய ஆர்வத்தைக் குறைக்கவே விடமாட்டாங்க..
நல்ல விமர்சனம், கடைசி காட்சி குறித்த கருத்துக்கு எனக்கும் உடன்பாடுதான்..பார்க்க என் விமர்சனம்:
ReplyDeletehttp://alonealike.blogspot.com/2010/12/good-to-see.html
மனக்குதிரை said...
ReplyDeleteநல்ல விமர்சனம், கடைசி காட்சி குறித்த கருத்துக்கு எனக்கும் உடன்பாடுதான்..///
பாராட்டுக்கு நன்றிங்க..