12 Monkeys - 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்..
1997 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஒருவிதமான வைரஸ் தாக்கி மனித இனமே அழிஞ்சுடுது..
படம் வருங்காலத்துல ஏதோ ஒரு ஆண்டுல இருந்து தொடங்குது.. வைரஸ் தாக்குதல்ல தப்பிச்சு.. உயிரோட இருக்கற மனிதர்கள்.. பூமிக்கு அடியில தங்களோட இருப்பிடங்களை அமைச்சிக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க.. பூமியைத் திரும்பவும் விலங்குகள் ஆட்சி செய்ய ஆரம்பிச்சிடுச்சு.. பூமியைத் தாக்கியிருக்கற வைரஸ் என்ன வகையின்னு தெரிஞ்சுக்க முடியாமல்.. அதுக்கு எந்தக் கியூரும் இதுவரைக் கண்டுபிடிக்க முடியல..
பூமிக்கு அடியில வாழ்க்கையை நடத்திக்கிட்டு இருக்கற மனிதர்களோட இருக்கற அறிவியலாளர்கள்.. அந்த வைரஸை அழிக்கறதுக்கான முயற்சியில ஈடுபட்டுட்டு இருக்காங்க.. 1997 ஆம் ஆண்டு இந்த வைரஸைப் பரப்பினது.. 12 மங்கிஸ்னு ஒரு தீவிரவாதக்குழு அப்படிங்கற விசயம் மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு..
புரூஸ் வில்ஸை.. டைம் மெசின் மூலமாக 1996 ஆம் ஆண்டோட இறுதிக்கு அனுப்பி.. அந்த 12 மங்கிஸ் குருப்பைப் பற்றியும்.. வைரஸைப் பற்றியும் தகவல் தெரிஞ்சுட்டு வரச்சொல்லி அனுப்பறாங்க.. ஆனால் 1996 ஆம் ஆண்டுக்கு அனுப்பப்படறதுக்கு பதிலாக.. 1990 ஆம் ஆண்டுக்கு அனுப்பப்பட்டுடறார்.. அங்கே போய் அவரும் பேந்தப் பேந்த முழிச்சுக்கிட்டு நான் புயூட்சர்ல இருந்து வந்திருக்கேன்.. நீங்கள் எல்லாரும் செத்துப் போயிட்டீங்க.. நீங்க எல்லாரும் இறந்தகாலத்துல இருக்கீங்க.. அப்படின்னெல்லாம் உளற.. அவரைத் தூக்கி மெண்டல் ஹாஸ்பிட்டல்ல போட்டுடறாங்க..
புரூஸ்வில்ஸுக்கு சின்ன வயசுல இருந்தே ஒரு கனவு வந்துட்டே இருக்கு.. கனவு என்னன்னா.. அவரோட எட்டு வயசுல ஒரு ஏர்போட்டுல இருக்கறப்போ.. ஒருத்தரைப் போலீஸ் சுடறாங்க.. சுடப்பட்டவரைப் பார்த்து "நோ"ன்னு கத்திக்கிட்டே ஒரு பொண்ணு ஓடிப்போயி அவரைத்தன் மடியில வைச்சிக்கிட்டு அழுகுது.. தினமும் இந்தக் கனவையே காண்கிறார்..
மெண்டல் ஹாஸ்பிட்டல்ல பிராட் பிட்டை சந்திக்கறார்.. அவருக்கு கொஞ்சம் மூளை கலங்கியிருக்கு.. அவருக்கு ட்ரிட் பண்ண வர்ற லேடி டாக்டரைப் பார்க்கற புரூஸ் வில்ஸ் உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கேன்னு சொல்ல.. எனக்கும் உன் முகம் ரொம்ப பெமிலியராக இருக்குன்னு சொல்றாங்க.. சோ அவங்கதான் கதாநாயகி..
தவறாக 1990 ஆம் ஆண்டுக்குப் போன புரூஸ் வில்ஸை மீண்டும் அழைச்சுக்கறாங்க சயண்டிஸ்ட்ஸ்.. திரும்பவும் கரெக்டான வருசத்துக்கு அனுப்பறோம்.. சரியாக வேலையை முடிச்சுட்டு வான்னு அவரை வார்ன் பண்ணி அனுப்பறாங்க.. ஆனால் இப்போ அவர் போனதோ.. முதல் உலகப்போர் நடந்துட்டு இருக்கற ஒரு வார் ஃபீல்டு.. அங்கே அவருக்கு ஒரு குண்டடி பட்டுடுது.. இந்த தவறை சரிசெய்து.. அவரைக் கரெக்டாக.. 1996 ஆம் ஆண்டு இறுதிக்கு அனுப்பறாங்க சயண்ட்டிஸ்ட்ஸ்..
குண்டடிபட்டு இருக்கற புரூஸ் வில்ஸ்.. 1996 ஆம் ஆண்டுல.. ஒருகாரை வழிமறிச்சு ஏறிக்கறார்.. அந்தக் கார்ல அவருக்கு முன்பு சிகிச்சை அளித்த லேடி டாக்டர்தான் இருக்காங்க.. அவரை மிரட்டி.. தன்னோட குறிப்புகள்ல 12 மங்கிஸ் குரூப் இருந்ததா சொல்லப்படற.. பிலடெல்பியா நகரத்துக்குப் போக சொல்றார் புரூஸ் வில்ஸ்.. அவரும் அழுதுக்கிட்டே கூட்டிட்டுப் போறார்..
12 மங்கிஸ் குரூப்போட தலைவன் யாருன்னா.. முன்பு மெண்டல் ஹாஸ்பிடல்ல புருஸ் வில்ஸ் சந்திச்ச பிராட் பிட்தான்.. பிராட் பிட் இன்னும் மறை கழண்ட மாதிரியேதான் இருக்கார்..
நான் வருங்காலத்துல இருந்து 12 மங்கிஸ் அப்படிங்கற குரூப்பைக் கண்டுபிடிக்க வந்துருக்கேன்னு நீ உளறிட்டு இருந்ததை வைச்சுத்தான் நான் இந்த குரூப்பையே ஃபாம் பண்ணினேன்.. நீ சொன்னமாதிரி மனித இனத்தை அழிப்பேன்.. இந்த ஐடியாவே நீதான் எனக்குக் கொடுத்த.. அப்படின்னு பிராட்பிட்.. புரூஸ் வில்ஸ் மேலயே பழியைத் தூக்கிப் போடறார்.. இப்படி அவர் சொல்ல.. புரூஸ்வில்ஸுக்கு பயங்கரமான அதிர்ச்சி.. ஆனால் பிராட் பிட்டுக்கு வைரஸைப் பற்றியெல்லாம் எந்த நாலேட்ஜும் இல்ல..
சோ.. 12 மங்கிஸ் அப்படிங்கறது ஒரு சப்பையான குரூப்.. சும்மா காலித்தனம் பண்றதுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்குன்னும்.. வேற யாரோதான் வைரஸ் தாக்குதலுக்கு காரணம்னும் புரிஞ்சுக்கறார் புரூஸ் வில்ஸ்..
புரூஸ் வில்ஸ் சொல்லும் விசயங்களோட இப்போ நடக்கற நிகழ்வுகள் எல்லாம் ஒத்துப்போறதால.. அவர் சொல்றது எல்லாம் உண்மைதான்னு நம்ப ஆரம்பிக்கறார் அந்த லேடி டாக்டர்.. நடக்கப்போறதை எப்படியும் தடுக்க முடியாது.. அதனால இருக்கற வரைக்கும் என்ஜாய் பண்ணலாம்னு ரெண்டு பேரும் கிளம்பறாங்க அந்த ஊரை விட்டு..
கிளைமாக்ஸ்.. புரூஸ் வில்ஸும், லேடி டாக்டரும்.. ஏர்போர்ட் போக.. அங்கே இருக்கற ஒரு ஆள்தான் வைரஸைக் கையில வைச்சிருக்கான்னு புரூஸ்வில்ஸுக்கு பியூட்சர்ல இருந்து இன்ஃபர்மேசன் வருது.. அந்த ஆளைக் அவர் கொல்லப்போக.. போலீஸ் புரூஸ் வில்ஸை சுட.. லேடிடாக்டர்.. அவரைத் தன்னோட மடியில கிடத்தி அழறாங்க.. அதை ஒரு சின்னப் பையன் கலக்கமாகப் பார்த்துட்டு இருக்கான்.. அது யாருன்னா... அதுதான் சின்னப் பையனாக இருக்கற புரூஸ் வில்ஸ்..
வைரஸோட அந்த ஆள் எஸ்கேப்.. முடிவை நாமலே கணிச்சுக்க வேண்டியதுதான்..
மிகவும் அருமையான கதைக்களம்.. ஹாலிவுட்காரங்களுக்கு உலகத்தை அழிச்சு அழிச்சு விளையாடறதுதான் ரொம்பப் பிடிச்சுருக்கு போல.. அதுவும் உலகம் அழியெறதெல்லாம் அமெரிக்காவுல இருந்தேதான் ஆரம்பிக்கும்.. அதேபோலதான் இந்தப் படமும்.. 2012 திரைப்படம் மாதிரி பிரமாண்டமாக எடுத்திருக்க வேண்டிய திரைப்படம்.. ஆனால் ரொம்ப லோ பட்ஜெட்ல எடுத்துட்டாங்க போல.. எல்லாமே சீனையுமே சின்ன செட்டைப் போட்டே முடிச்சுட்டாங்க..
பூமியில மனிதர்கள் எல்லாம் அழிஞ்சிடறாங்க.. விலங்குகள் ஆட்சி செய்ற பூமியில போய்.. சில பூச்சிகளோட சேம்பில்ஸை எடுத்துட்டு வரச்சொல்லி புரூஸ் வில்ஸை மேலே அனுப்பறாங்க.. பூமிக்கு மேல அவர் வர்றதை எவ்வளவோ திரில்லாகக் காட்டியிருக்க முடியும்.. ஆனால் பூமியில விலங்குகள் நிறைய நடமாடுதுன்னு காமிக்கறதுக்காக.. ஒரே ஒரு சிங்கத்தையும்.. கரடியையும் மட்டும் அவர் பார்க்கறதாகக் காமிச்சிட்டாங்க..
வைரஸுக்குப் பயந்து அண்டர்கிரெளண்ட்ல மனிதர்கள் வாழ்ந்துட்டு இருக்காங்க அப்படிங்கறதுதான் கான்செப்ட்.. ஆனால் அந்த விசயத்தைக் காமித்ததும் சரியில்ல... ஏதோ கூண்டு கூண்டாக காமிச்சு முடிச்சுட்டாங்க.. மற்றொரு காமெடி.. சயண்டிஸ்ட்ஸ்.. அவங்களை என்னடான்னா.. மந்திரவாதிகள் மாதிரி காமிச்சு பில்டப் குடுத்துட்டாங்க..
புரூஸ் வில்ஸ் ஒவ்வொரு முறையும் காலம் மாறிப் போயிடறதையும் நல்ல வெயிட்டாகக் காமிச்சிருந்திருக்கலாம்.. முதலாம் உலகப்போர் நடந்திட்டு இருக்குங்கறதைக் காமிக்க.. நாலுபேர் அவரைச் சுத்திக் கத்திக்கிட்டே சுடறமாதிரி ஒரு சீன் அவ்லோதான்..
இப்படி எடுத்திருக்கலாம்.. அப்படி எடுத்திருக்கலாம்னு குறை சொல்லிட்டு இருந்தாலும்.. அடுத்து என்ன நடக்கும்னு விறுவிறுப்பாகவே படத்தைக் கொண்டு போயிருக்காங்க.. சில இடங்கள் மட்டும் எதார்த்தம் இல்லாம..
சோ.. நம்ம ஹீரோ உலகத்தைக் காப்பாற்றாமயே இறந்திடறார்.. நல்ல மூவி..
படங்கள்: நன்றி கூகுள்