பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்..
பதிவு எழுதி கிட்டத்தட்ட 2 மாசம் ஆகப்போகுதுன்னு நினைக்கறேன்.. சரி அப்போப்போ ஒரு அட்டென்னெஸாவது போட்டுடலாம்னுதான் நினைச்சேன்.. ஆனால் ஒர்க் லோட் ரொம்ப அதிகமாக இருந்ததாலவும்.. ஆபிஸ்ல பிளாக்கர் சைட்ஸை பிளாக் பண்ணிட்டதாலவும் எழுதவே முடியல.. :-)
சரி ரொம்ப நாள் கழிச்சு.. இப்போ ஏதாவது எழுதலாம்னு யோசிச்சா.. என்ன எழுதறதுன்னே புரியமாட்டேங்குது.. சரி முன்போலவே ஒரு ஆங்கிலப் பட விமர்சனம் எழுதிடலாம்னு நினைக்கிறேன்..
இந்தப் பதிவுல நான் எழுதப் போற படத்துக்குப் பேரு எக்ஸாம் (EXAM - 2005)..
உலகத்துல அதிகமான பேரும் புகழோடவும்.. ரொம்ப மதிப்போடவும் இருக்கற கம்பெனியில ஒரு பெரிய பதவிக்கு.. 8 பேர் பைனல் ரெளண்டுக்கு செலக்ட் ஆகி.. பைனல் ரெளண்ட் நடக்கற ஒரு ரூமுக்குள்ள வர்றாங்க.. அந்த ரூமுக்குள்ள அவங்களை கண்காணிக்கறதுக்கு கைத்துப்பாக்கியோட ஒரு செக்யூரிட்டி வேற..
80 நிமிஷம் நடக்கப்போற டெஸ்ட் இது.. இந்த டெஸ்ட் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி.. அதோட 3 ரூல்ஸை சொல்ல ஆரம்பிக்கிறார்.. அந்த டெஸ்டை வைக்கிறவர்..
1. எக்ஸாம் ஆரம்பிச்ச பிறகு என்னையோ, செக்யூரிட்டியையோ கம்யூனிகேட் பண்ண ட்ரை பண்ணினாலோ
2. உங்க டெஸ்ட் பேப்பரை தவறுதலாகவோ, வேணும்னோ ஸ்பாயில் பண்ணினாலோ
3. ஏதாவது காரணங்களுக்காக இந்த ரூமை விட்டு வெளியே போக நினைச்சாலோ
நீங்க இந்த எக்ஸாம்ல தோல்வியடைஞ்சதாக அர்த்தம்.. அப்புறம் உங்களுக்கு முன்னே ஒரே ஒரு கேள்வி இருக்கும்.. அந்த கேள்விக்கு யார் கரெக்டா பதில் சொல்றாங்களோ அவங்களுக்கு வேலைன்னு சொல்லிட்டு.. ஏதாவது டவுட் இருக்கான்னு கேக்கறார்.. எல்லாரும் டெஸ்ட் எழுதத் தயாராகறாங்க.. டெஸ்ட் ஆரம்பிக்குது..
டெஸ்ட் பேப்பரை பார்க்கற எல்லாரும் பெரிய அதிர்ச்சி.. அது ஒரு பிளான்க் ஷீட்.. எதுவுமே அதுல எழுதப்படல.. என்னடா இதுன்னு எல்லாரும் மண்டையைப் பிச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்க.. ஒரு பொண்ணு மட்டும் எழுத ஆரம்பிக்குது.. அந்தப் பொண்ணு கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்றார் செக்யூரிட்டி... சோ தவறான விடை எழுதினாலும் வெளியே தள்ளப்படறாங்க..
மீதம் இப்போ 7 பேர்.. யாரும் பேசக்கூடாதுன்னு ரூல்ஸ் இல்லையே.. அதனால 7 பேரும் பேசிக்க ஆரம்பிக்கறாங்க.. ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்ணிக்கிட்டு கொஸ்டின் என்னன்னு கண்டுபிடிக்கலாம்னு முடிவு எடுக்கப்படுது..
பேப்பர்ல கண்ணுக்குத் தெரியாத இங்க் யூஸ் பண்ணி ஏதாவது எழுதப்பட்டிருக்கலாம்னு.. கூர்ந்து பார்க்கறாங்க.. தண்ணீர் ஊத்திப் பார்க்கறாங்க.. ரூம்ல இருக்கற லைட்டை எல்லாம் உடைச்சிட்டு.. இருட்டுல ஏதாவது தெரியுதான்னு பார்க்கறாங்க.. எதுவும் வேலைக்கு ஆகல.. கொஸ்டின் என்னன்னு கண்டுபிடிக்க முடியல.. 80 நிமிசத்துல 30 நிமிசம் முடிஞ்சுடுது..
7 பேர்ல ஒருத்தன் ரொம்ப டாமினேட்டிங்கா எல்லாத்துக்கிட்டயும் நடந்துக்கிறான்.. சில சூழ்ச்சிகள் பண்ணி ரூம்ல.. அவங்களோட இருந்த 2 பேரை வெளியே போக வைச்சிடறான்.. மீதம் 5 பேர்.. இந்த நடவடிக்கையால கைகலப்பு ஏற்படுது.. இன்னொருத்தன் அங்கே இருக்கற ஒரு பொண்ணுக்கு கொஸ்டின் தெரிஞ்சிருக்கனும்னு நினைச்சு.. டார்ச்சர் பண்ண ஆரம்பிக்கிறான்.. எல்லாமே பெய்லியர்.. ஒரு மணி நேரம் முடிஞ்சுடுது.. மீதம் 20 நிமிசம்தான்..
அங்கே இருக்கற ஒவ்வொருத்தரையா வெளியே அனுப்பிட்டா.. கடைசியா இருக்கறவங்கதான் ஜெயிப்பாங்கன்னு நினைச்சுட்டு.. ஒருத்தன் செக்யூரிட்டியோட துப்பாக்கியைப் பிடுங்கி எல்லாரையும் வெளியே போக சொல்றான்.. இந்த கலேபரத்துல ஒருத்தனுக்கு குண்டடிபட்டு மயக்கமாகிடறான்.. இந்த எல்லா பிரச்சினைகளும் முடிஞ்சு.. அங்கே அவங்களுக்கு கேட்கப்பட்ட கொஸ்டின் என்னன்னு.. ஒரு பொண்ணு கண்டுபிடிக்குது.. ஸ்ஸ்ஸ்.. ப்ப்பாபான்னு ஆயிடுச்சு..
படம் ஓடின ஒன்னரை மணிநேரமும் ஒரே ரூமுக்குள்ள நடக்குது.. செக்யூரிட்டி, டெஸ்ட் நடத்தறவரை சேர்த்து பத்தே கேரக்டர்.. படம் தீயா ஓடுது.. படம் ஆரம்பிச்ச 10வது நிமிசத்துல இருந்து.. அங்கே 9வது ஆளா நாமலும் உட்கார்ந்துட்டு கொஸ்டின் யோசிச்சுட்டு இருக்கறமாதிரி ஃபீலிங்..
கேள்வியைக் கண்டுபிடிக்க அவங்க நடத்தற ஒவ்வொரு முயற்சிகளும் அற்புதமாக இருக்கும்.. அங்கே இருக்கற லைட்ஸை ஒடைச்சா.. அதுக்குள்ள இன்னொரு லைட் இருக்கு.. அதையும் உடைச்சிட்டா.. மறைச்சி வைக்கப்பட்டிருக்கற இன்னொரு லைட்ஸ் எரியும்.. இந்தமாதிரி அந்த ஒரு ரூமுக்குள்ள நிறைய விசயங்கள் மறைச்சி வைக்கப்பட்டிருக்கும்..
செக்யூரிட்டி வைச்சிருக்கற துப்பாக்கியை.. ஒரு கேரக்டர் எடுக்கற சீன் செம.. ஒவ்வொரு சீனும்.. நம்முடைய எதிர்பார்ப்பையும்.. பிரஷரையும் அதிகரிக்குது..
அப்பாடா.. ஒரு வழியா என்ன கொஸ்டின் கேட்டானுங்கன்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு..
நீங்களும் கெஸ் பண்ணுங்களேன்.. அவங்களுக்கு கேட்கப்பட்ட கேள்வி என்ன? பின்னூட்டத்துல சொல்லுங்க.. :-)
டிஸ்கி: ஏற்கனவே படத்தைப் பார்த்தவங்க.. கொஸ்டினை லீக் பண்ணீடாதீங்க.. :-)
க்ளூ: கேள்வி இந்தப் பதிவிலேயே இருக்கு.. :-)
வாங்க வாங்க .. நல்லா இருக்கீங்களா ..? அதிபயங்கர ஆணிகள் இருப்பதால் நான் அப்புறமா வந்து உங்க பதிவ படிக்கிறேன் .. ரொம்ப நாள் கழிச்சு வந்ததால ஒரு வணக்கம் மட்டும் சொல்லிக்கிறேன் !
ReplyDeleteகோமாளி செல்வா said...
ReplyDeleteவாங்க வாங்க .. நல்லா இருக்கீங்களா ..? அதிபயங்கர ஆணிகள் இருப்பதால் நான் அப்புறமா வந்து உங்க பதிவ படிக்கிறேன் .. ரொம்ப நாள் கழிச்சு வந்ததால ஒரு வணக்கம் மட்டும் சொல்லிக்கிறேன் ! ////
வாங்க செல்வா.. நான் நல்லா இருக்கேன்.. நீங்க எப்டி இருக்கீங்க..
சீக்கிரம் வாங்க செல்வா.. வெயிட் பண்றேன்..
கேள்வி: இந்த மாதிரி ஒரு சூழ்நிலைல என்ன பண்ணுவீங்கதானே? சரியா?
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteகேள்வி: இந்த மாதிரி ஒரு சூழ்நிலைல என்ன பண்ணுவீங்கதானே? சரியா?////
இல்லங்க தப்பு.. :-)
கேள்வியை இந்தப் பதிவுலயே எழுதியிருக்கேன்.. ட்ரை பண்ணுங்க.. :-)
உங்களுக்கு முன்னே ஒரு கேள்வி இருக்குன்னா, இண்டெர்வியூ பண்றவர்தான் முன்னே இருக்கார், அவருதான் கேள்வியா?
ReplyDelete@பன்னிக்குட்டி ராம்சாமி...
ReplyDeleteம்ம்ம்.. இல்லங்க அவர் கேள்வி இல்ல..
எப்படி இருக்கீங்க நல்லாயிருக்கீங்களா!
ReplyDeleteஅந்த கேள்வியை கண்டுபுடிச்சிட்டேன்(பதிவில இருக்குனு நீங்க சொன்னதை வச்சு!)
//ஏதாவது டவுட் இருக்கான்னு கேக்கறார்.. //இது ஒண்ணுதான் பதிவில் இருக்குற கேள்வி.:-)
ஆனா இதுக்கு பதில் என்னனு புரியலையே!
@எஸ்.கே..
ReplyDeleteநான் ரொம்ப நல்லா இருக்கேங்க எஸ்.கே.. நீங்க நல்லா இருக்கீங்களா..
ம்ம்ம்.. உங்களுடைய விடை (அதாவது கொஸ்டின்) கரெக்டான்னு அப்புறம் சொல்றேங்க.. ஓகேவா.. :-)
நான் நல்லா இருக்கேன். ஆணி ரொம்ப அதிகமோ உங்களை காணோமேன்னு நினைச்சேன். பிரியமுடன் ரமேஷ் கூட பதிவு போடலை!
ReplyDelete@எஸ்.கே..
ReplyDeleteஆமாங்க எஸ்.கே.. வேலையும் ரொம்ப அதிகம்.. இப்போ ஆபிஸ்லயும் பிளாக் படிக்க முடியறதில்லைங்க.. அதான் எழுத முடியல..
ரமேஷும் சீக்கிரம் எழுத வந்திடுவார்.. நன்றிங்க எஸ்.கே..
andha kelvi "Summa Iru"??
ReplyDeleteSuresh said...
ReplyDeleteandha kelvi "Summa Iru"?? ///
இல்ல இது அந்த கேள்வி இல்ல..
Babu..neegale sollidungalen !!
ReplyDeleteசரி அப்போ நானும் வெயிட் பண்றேன்... மத்தபடி எல்லாம் நலம் தானே....?
ReplyDelete@சுரேஷ்..
ReplyDelete:-).. கொஞ்ச நேரத்துல சொல்லிடறேன் சுரேஷ்..
"நீங்க இந்த எக்ஸாம்ல தோல்வியடைஞ்சதாக அர்த்தம்.. அப்புறம் உங்களுக்கு முன்னே ஒரே ஒரு கேள்வி இருக்கும்.. அந்த கேள்விக்கு யார் கரெக்டா பதில் சொல்றாங்களோ அவங்களுக்கு வேலைன்னு சொல்லிட்டு.. ஏதாவது டவுட் இருக்கான்னு கேக்கறார்.. எல்லாரும் டெஸ்ட் எழுதத் தயாராகறாங்க.. டெஸ்ட் ஆரம்பிக்குது.. "
ReplyDeleteIngadhaan yedho matter irukku babu..correcta?
ஏதாவது டவுட் இருக்கா
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteசரி அப்போ நானும் வெயிட் பண்றேன்... மத்தபடி எல்லாம் நலம் தானே....? ////
ரொம்ப நல்லாயிருக்கேன் நண்பரே.. நீங்க நல்லா இருக்கீங்களா.. நன்றிங்க..
எனக்கும் எக்சாமுக்கும் எப்பவுமே ஆகாது .அதனால நா அப்பீட்டாயிடுறேன்
ReplyDeleteANSWER IS 1 CORRECT A BABU :)
ReplyDeleteakbar said...
ReplyDeleteANSWER IS 1 CORRECT A BABU :) ////
இல்லங்க அக்பர்.. கரெக்ட் இல்ல.. :-)
நா.மணிவண்ணன் said...
ReplyDeleteஎனக்கும் எக்சாமுக்கும் எப்பவுமே ஆகாது .அதனால நா அப்பீட்டாயிடுறேன்...////
ஹா ஹா ஹா.. ஓகே நண்பா.. போயிட்டு வாங்க..
ஏதாவது டவுட் இருக்கா.. ITHU CORRECT A?
ReplyDeleteவிடை சொல்றவரைக்கும் வெயிட் பண்றேன் பாஸ்! :)
ReplyDeleteஉங்களுக்கு முன்னே ஒரே ஒரு கேள்வி இருக்கும்.. ITHUVA?
ReplyDeleteகொஸ்டின் என்னன்னு.. ஒரு பொண்ணு கண்டுபிடிக்குது... INTHA PONNUKUTHAN ANTHA VIDAI THERIUM CORRECT A?
ReplyDeleteakbar said...
ReplyDeleteஉங்களுக்கு முன்னே ஒரே ஒரு கேள்வி இருக்கும்.. ITHUVA? ///
haa haa haa.. கொஞ்சம் பொறுங்க அக்பர்.. இன்னும் ஒரு மணிநேரத்துக்குள் சொல்லிடறேன்..
akbar said...
ReplyDeleteகொஸ்டின் என்னன்னு.. ஒரு பொண்ணு கண்டுபிடிக்குது... INTHA PONNUKUTHAN ANTHA VIDAI THERIUM CORRECT A? ///
ஹா ஹா ஹ... அந்தப் பொண்ணுக்கும், எனக்கும் தெரியும்.. :-)
பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...
ReplyDeleteகேட்கப்பட்ட கேள்வி:
ஏதாவது டவுட் இருக்கா?
இதுதாங்க கேள்வி..
எஸ்.கே முதல் ஆளாக கரெக்டா கெஸ் பண்ணினார்.. அவருக்குப் பாராட்டுக்கள்..
ராமச்சந்திரனும் கரெக்டான விடை சொன்னார்..
பன்னிக்குட்டி ராமசாமி, சுரேஷ், அக்பர் எல்லாரும் அருமையா ட்ரை பண்ணினாங்க..
அனைவருக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்..
இந்த படத்தை நான் பார்த்துட்டேன்
ReplyDeleteentha doubt tum ill...lai vaalththukkal
ReplyDeleteWelcome back to the Blog World!
ReplyDeleteஎன்ன பாபு, எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா ஆளே காணலயேன்னு நெனச்சேன். ஒரு சூப்பர் பதிவோட வந்துட்டிங்க. Welcome Back நண்பரே.
ReplyDeleteஏதாவது டவுட் இருக்கா?
ReplyDeleteமன்னிக்கவும் மேலே பின்னூட்டத்தை கவனிக்கவில்லை.நானும் இந்த படத்தை பார்த்திருக்கிறேன்,நல்ல ஒரு விறுவிறுப்பான படம்.நன்றி நண்பா!
ReplyDeleteரொம்ப நாளா லீவ் போல... ஃபிகர் மேட்டரா?
ReplyDeleteபடம் செம த்ரில் போல .. பார்த்துடலாம்.. உங்க விமர்சன ஸ்டைல் அழகு
ReplyDeleteபிரபு நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் வருகை தந்துள்ளீர்கள்.நலமா?
ReplyDeleteவழக்கம் போலவே ஆன உங்களது அருமையான விமர்சனம், பதிவுலகில் பாபுன்னு பேர வச்சிட்டு பதிவுலகிற்கு லீவு போட்டா எப்படி நண்பா? ஒகே வந்துட்டீங்கள்ள, நல்லா இருக்கீங்களா? எப்ப்டி போயிட்டு இருக்கு வேலையெல்லாம்..
ReplyDeletewelcome back nanbaaaaa
ReplyDeleteநல்லா இருக்கீங்களா பாஸ்? நல்ல விமர்சன நடை. விடையை நீங்களே சொல்லிட்டதாலே நான் எழுதலங்க! தொடர்ந்து எழுதுங்க பாஸ்!!
ReplyDeleteபடத்தை விட உங்க விமர்சனம் திரில்லிங்கா இருக்கே..இவ்வளவு அழகா எழுத்து நடையை கொண்டு போறது கஸ்டம்
ReplyDeleteஉங்க விமர்சனம் படம் பார்க்க தூண்டுது
ReplyDeleteSpeed Master said...
ReplyDeleteஇந்த படத்தை நான் பார்த்துட்டேன்///
வாங்க ஸ்பீடு மாஸ்டர்.. :-)
மதுரை சரவணன் said...
ReplyDeleteentha doubt tum ill...lai vaalththukkal///
நன்றிங்க..
Chitra said...
ReplyDeleteWelcome back to the Blog World!///
வாங்க சித்ரா.. நல்லா இருக்கீங்களா.. நன்றிங்க..
N.H.பிரசாத் said...
ReplyDeleteஎன்ன பாபு, எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா ஆளே காணலயேன்னு நெனச்சேன். ஒரு சூப்பர் பதிவோட வந்துட்டிங்க. Welcome Back நண்பரே.///
ரொம்ப நல்லா இருக்கேங்க பிரசாத்.. நன்றிங்க நண்பரே..
Meshak said...
ReplyDeleteஏதாவது டவுட் இருக்கா?///
சரியான விடை(கொஸ்டின்).. :-)
Meshak said...
மன்னிக்கவும் மேலே பின்னூட்டத்தை கவனிக்கவில்லை.நானும் இந்த படத்தை பார்த்திருக்கிறேன்,நல்ல ஒரு விறுவிறுப்பான படம்.நன்றி நண்பா!///
வருகைக்கு நன்றிங்க நண்பா..
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteரொம்ப நாளா லீவ் போல... ஃபிகர் மேட்டரா?////
ஹா ஹா ஹா.. ஃபிகர் மேட்டர் எல்லாம் இல்லங்க சி.பி... வேலை அதிகமாக இருந்தது.. :-)
சி.பி.செந்தில்குமார் said...
படம் செம த்ரில் போல .. பார்த்துடலாம்.. உங்க விமர்சன ஸ்டைல் அழகு///
ரொம்ப நன்றிங்க சி.பி.
தோழி பிரஷா said...
ReplyDeleteபிரபு நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் வருகை தந்துள்ளீர்கள்.நலமா?///
ரொம்ப நல்லா இருக்கேங்க தோழி பிரஷா.. நீங்க நல்லா இருக்கீங்களா.. நன்றிங்க..
இரவு வானம் said...
ReplyDeleteவழக்கம் போலவே ஆன உங்களது அருமையான விமர்சனம், பதிவுலகில் பாபுன்னு பேர வச்சிட்டு பதிவுலகிற்கு லீவு போட்டா எப்படி நண்பா? ஒகே வந்துட்டீங்கள்ள, நல்லா இருக்கீங்களா? எப்ப்டி போயிட்டு இருக்கு வேலையெல்லாம்..///
ரொம்ப நல்லா இருக்கேங்க நண்பா.. நீங்க நல்லா இருக்கீங்களா.. இனி தொடர்ந்து எழுதிடலாம்ங்க.. பாராட்டுக்கு நன்றி.. :-)
FARHAN said...
ReplyDeletewelcome back nanbaaaaa///
நன்றிங்க ஃபர்ஹான்..
எம் அப்துல் காதர் said...
ReplyDeleteநல்லா இருக்கீங்களா பாஸ்? நல்ல விமர்சன நடை. விடையை நீங்களே சொல்லிட்டதாலே நான் எழுதலங்க! தொடர்ந்து எழுதுங்க பாஸ்!!///
ரொம்ப நல்லா இருக்கேங்க பாஸ்.. பாராட்டுக்கு நன்றிங்க..
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteபடத்தை விட உங்க விமர்சனம் திரில்லிங்கா இருக்கே..இவ்வளவு அழகா எழுத்து நடையை கொண்டு போறது கஸ்டம்///
பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க சதீஷ்குமார்.. :-)
ஆர்.கே.சதீஷ்குமார் said...
உங்க விமர்சனம் படம் பார்க்க தூண்டுது////
நல்ல திரில்லர் மூவிங்க.. கண்டிப்பாகப் பாருங்க..
நேரமில்லை என்றால் டிவிட்டர் மாதிரி நாலு லைன்ல பதிவு போடுங்க...# ஐடியா.
ReplyDelete//ரூம்ல இருக்கற லைட்டை எல்லாம் உடைச்சிட்டு.. //
ReplyDeleteஏன் ஆப் பண்ண முடியாதா? # ட்வுட்.
பாரத்... பாரதி... said...
ReplyDelete//ரூம்ல இருக்கற லைட்டை எல்லாம் உடைச்சிட்டு.. //
ஏன் ஆப் பண்ண முடியாதா? # ட்வுட். ////
அந்த ரூமுக்குள்ள லைட் சுவிச் எல்லாம் இருக்காது.. அதான் உடைச்சிடறாங்க..
ஆனால் அந்த லைட்ஸ் எல்லாம் வாய்ஸ் ஆக்டிவேட் ஆயிருக்கும்.. அதைப் பின்னாடி கண்டுபிடிப்பாங்க.. :-)
பாரத்... பாரதி... said...
ReplyDeleteநேரமில்லை என்றால் டிவிட்டர் மாதிரி நாலு லைன்ல பதிவு போடுங்க...# ஐடியா. ////
ஹா ஹா ஹா.. ஐடியா சூப்பருங்க.. இனி பயன்படுத்திடலாம்..
ரொம்ப நாளைக்கி பிறகு வந்தாலும் அட்டகாசமான எண்ட்ரிங்க...
ReplyDeleteபாரத்... பாரதி... said...
ReplyDeleteரொம்ப நாளைக்கி பிறகு வந்தாலும் அட்டகாசமான எண்ட்ரிங்க... ////
உங்களுடைய பாராட்டு ரொம்ப சந்தோசமாக இருக்குங்க பாரத்... பாரதி... நன்றிங்க..
எல்லோரும் பதிவ மட்டும் தான் படிக்க சொல்லுவாங்க நீங்க பின்னுட்டத்தையும் படிக்க வச்சுட்டீங்க
ReplyDeleteசூப்பர்
சிட்டி பாபு said...
ReplyDeleteஎல்லோரும் பதிவ மட்டும் தான் படிக்க சொல்லுவாங்க நீங்க பின்னுட்டத்தையும் படிக்க வச்சுட்டீங்க
சூப்பர் ////
வாங்க சிட்டி பாபு..
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க..
பகிர்வுக்கு நன்றி நண்பா
ReplyDeleteடவுட்டுக்கே லைட்டடிச்ச நீவர் வாழ்க ஹி ஹி!
//டவுட்டுக்கே லைட்டடிச்ச நீவர் வாழ்க ஹி ஹி!//
ReplyDeleteஹா ஹா ஹா
ReplyDeleteரொம்ப அருமைங்க
விக்கி உலகம் said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பா
டவுட்டுக்கே லைட்டடிச்ச நீவர் வாழ்க ஹி ஹி!////
ஹா ஹா ஹா.. வருகைக்கு நன்றி நண்பா..
பாரத்... பாரதி... said...
ReplyDelete//டவுட்டுக்கே லைட்டடிச்ச நீவர் வாழ்க ஹி ஹி!//
:-)..
பலே பிரபு said...
ReplyDeleteஹா ஹா ஹா
ரொம்ப அருமைங்க ///
வாங்க பலே பிரபு.. பாராட்டுக்கு நன்றிங்க..
வணக்கம் பாபு,
ReplyDeleteஉங்கள் வலைப்பூவின் அறிமுகம் இப்பொழுது தான் கிடைத்தது....உங்கள் இடுகைகளை படிக்க ஆரம்பித்து உள்ளேன்....
விமர்சனங்கள் மிகவும் அருமை....
இந்த இடுகையில் நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை....ஹம் ஹம்..படம் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.....சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும்
நானும் இந்த படத்தை பற்றி எழுதி உள்ளேன்....நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்..
http://hollywoodraj.blogspot.com/2011/10/exam-2009.html