.

Tuesday, October 26, 2010

பெங்களூரும்.. இரவு வாழ்க்கையும்..

பெங்களூர்ல IT சம்பந்தப்பட்ட அனைத்து துறைகள்லையும் அதிகமான வேலை வாய்ப்புகள் இருக்கறதால இந்தியாவுல அனைத்து மாநிலங்கள்ல இருந்தும் நிறையப் பேர் வேலைக்கு வர்றாங்க.. அப்படி வர்றவங்களுக்கு முதல்ல இருப்பிடம் ஒரு பெரிய பிரச்சினையா இருக்கு.. வரும்போதே கொஞ்சம் வெல்த்தியா வர்றவங்களும் சிட்டியில ஏற்கனவே நண்பர்கள் இருக்கறவங்களும் அவங்களோட அறைகளை ஷேர் பண்ணிக்கறாங்க.. இல்லைனா புதுசா ரூம் எடுத்து தங்கிக்கறாங்க..

சிட்டியில தங்கறதுல நாம எல்லாரும் சந்திக்கற முதல் பிரச்சினை என்னன்னா ரூம் அட்வான்ஸும் வாடகையும்.. நகர்பகுதிகள்ல 1 BHK ரூமூக்கு குறைஞ்சது ஐம்பதாயிரத்தில் இருந்து அட்வான்ஸ் கேப்பாங்க.. அதேபோல ரூம் வாடகையும் குறைஞ்சது ஐந்தாயிரமா இருக்கு.. இந்த அளவுக்கு ரூம் வாடகை குடுக்க முடியாதவங்க என்ன செய்றாங்க.. நகரை விட்டு வெளியே எலக்ட்ரானிக் சிட்டி, ராமமூர்த்தி நகர் மாதிரி ஒதுக்குப்புறமான இடங்களுக்கு குடியேறிடறாங்க.. அங்கேயும் குறைஞ்ச வாடகை எல்லாம் இல்ல.. ரெண்டு பேர் தங்கறமாதிரி ரூமுக்கு மூவாயிரத்து ஐநூரில் இருந்து நாலாயிரம் வரை வாடகை வாங்கிடறாங்க..

இந்த மாதிரி நகருக்கு வெளியே தங்கறவங்களுக்கு ஏற்பட முதல் பிரச்சினை என்னன்னா பாதுகாப்பின்மை.. இந்தமாதிரி ஏரியா எல்லாமே ஏதாவது நேசனல் ஹைவேயை ஒட்டி இருக்கு.. IT சம்பந்தமான வேலைகள் பார்க்கறவங்க பெரும்பாலும் ஜெனரல் ஷிஃப்ட் பார்க்கறதில்லை.. கண்ட நேரத்துக்கு ஷிஃப்ட் வைச்சி அவங்க உயிரை வாங்கிடுவாங்க.. அதுல நைட் நேரங்கள்ல வேலைக்கு போறவங்க தங்களோட கம்பெனி வண்டிகளுக்காக காத்திட்டிருக்கப்போ ஹைவேயில வழிப்பறி பண்றவங்களால தாக்கப்படறாங்க..

3 ஆண்டுகளுக்கு முன்ன என்னோட நண்பர் ஒருத்தர் ராமமூர்த்தி நகர்ல எங்களோட ஆபிஸ் வண்டிக்கு வெயிட் பண்றப்போ அவரோட பர்ஸ், ஜெர்கின் எல்லாத்தையும் புடிங்கிட்டு அடிச்சுப் போட்டு போயிட்டாங்க..
என்னோட இன்னொரு நண்பர் ஒருத்தர் இந்த மாதிரி ஒரு ஒதுக்குப்புறமான இடத்துல நின்னுட்டு இருந்தப்போ இதேமாதிரி வழிப்பறி நடந்திருக்கு.. இவருக்கு நடந்ததுன்னா இன்னும் மோசம்.. என் நண்பர்கிட்ட அப்போ பணம் இருந்திருக்கல.. ஆனா ஏடிஎம் கார்டு மட்டும் வச்சிருந்திருக்கார்.. அவரை ஒரு ஒதுக்குப்புறமான ஏடிஎம்முக்கு கூட்டிப்போயி அவர் பணத்தை எல்லாம் அவரையே எடுக்க வைச்சி அங்கேயே அவரை அடிச்சிப் போட்டுட்டாங்க.. ஆள் ஒருவாரம் ஆபிஸ் வரலை ஜுரத்துல.. அப்புறம்தான் விசயம் தெரிஞ்சது.. அந்த சம்பவங்களைக் கேட்டதுல இருந்தே நைட் வேலைக்கு போறதா இருந்தா ஒரு நூறு ரூபாய் மட்டுமே எப்பவுமே நான் எடுத்துக்கறது..

இந்த மாதிரி ஒருகதை போச்சுனா.. இன்னொரு முறையாகவும் வழிப்பறி பண்றாங்க.. நம்ம சென்னையில இருக்கற மாதிரி நடுராத்திரியா இருந்தாலும் இங்க நைட் சர்வீஸ் எதுவுமே இல்ல.. ஆட்டோ டிரைவர்ஸ் காலையில இருந்து நைட் வரைக்கும் மீட்டர் போட்டே வண்டி ஓட்ட மாட்டாங்க.. ஆனா நைட் சவாரி ஏதாவது வந்தா மட்டும் மீட்டரைப் போட்டுட்டு டபுள் மீட்டர் ஜார்ஜ் வாங்கிடுவாங்க.. ஒரு நடுராத்திரியில இப்படி நான் பஸ் இல்லாம மாட்டிக்கிட்டப்போ என்னோட இருப்பிடத்துக்கு வர்றதுக்கு மொத்தம் பதினெஞ்சே கிலோமிட்டருக்கு 300 ரூபாய் கொடுத்திருக்கேன்.. ஆக்சுவலா நான் இங்க சொல்ல வந்ததே வேற.. வேற ஏதோ பேசிட்டு இருக்கேன்..

இங்க சென்னை மாதிரி நைட் சர்வீஸ் எதுவுமே இல்ல.. அதனால நைட் நேரங்கள்ல ஆஃப் டியூட்டியில இருக்கற ஆபிஸ் வண்டிகள்ல லிஃப்ட் கேட்டு போற பழக்கத்தை பெங்களூர்ல நிறைய பேர் வச்சிருக்காங்க.. அந்தமாதிரி போறவங்களும் சிலநேரங்கள்ல பிரச்சனைகள்ல மாட்டிக்கறாங்க.. யாராவது ரொம்ப ரிச்சா லேப்டாப்பும் கையுமா தெரிஞ்சாங்கன்னா.. டிரைவர்களுக்கு தோதான இடமா இருந்தா அவங்களை ஏதாவது ஒரு ஒதுக்குப்புறமான பகுதிகளுக்கு அழைச்சிட்டுப் போய் அடிச்சுப் போட்டுட்டு எல்லாத்தையும் புடிங்கிட்டு விட்டுடறாங்க.. இந்த மாதிரியும் என்னோட நண்பரோட நண்பர் அனுபவப்பட்டிருக்கார்.. ஆனா அவரை வழிப்பறி பண்ணின டிரைவரை போலீஸ் டிராக் பண்ணி புடிச்சிட்டாங்க.. ஓகே எல்லாம் திரும்பக் கிடைச்சிட்டதுன்னு நாம சந்தோசப்பட ஒன்னும் இல்ல.. அடிச்சுப்போடாம கொலை ஏதும் பண்ணினாங்கன்னா என்ன செய்றது.. எதுவும் உத்தரவாதம் இல்லை.. இங்கே அப்படி வண்டி ஓட்டற எல்லா டிரைவர்களையும் நான் குறை சொல்லல.. இந்த மாதிரி சம்பவங்களும் நடக்குதுன்னு சொல்ல வர்றேன்..

நகருக்கு ஒதுக்குபுறமான இடங்கள்ல வசிக்கறவங்களோட இன்னொரு பெரிய பிரச்சினை "நாய்".. என்னடா நாயிக்கு பயந்தவனா நீன்னு கேக்காதீங்க.. பெங்களூர்ல கல்லை விட்டு எறிஞ்சா எதாவது சாஃப்ட்வேர் கம்பெனி மேல போய் விழும், இல்லைனா ஏதாவது நாய் மேல போய் விழும்னு என் பிரண்ட் ஒருத்தன் நக்கலா சொல்லிக் கேட்டிருக்கேன்.. அவ்லோ நாய்ங்க திரியுதுங்க.. அதனால நகரைக் கிளீன் பண்றேன்னு எல்லாத்தையும் புடிச்சுட்டு வந்து சிட்டிக்கு வெளியே விட்டுடறாங்க.. அதெல்லாம் நைட் பண்ற அட்டூழியம் தாங்க முடியாது.. ஒரு வருசத்துக்கு முன்ன நகர்புறத்துக்கு வெளியே இருக்கற வீடுகள்ல தங்கியிருந்த ரெண்டு, மூனு குழந்தைகளை அடுத்தடுத்து பத்து, பதினைந்து நாய்கள் கடிச்சே கொன்னுட்டதா செய்திகள் வெளியாச்சு..

இரவு நேரங்கள்ல வெளியே எங்கேயாவது போகனும்னா எப்படியும் பத்துல இருந்து இருபது நாய்கள் நமக்கு பாடிகார்டா வருங்க.. கொஞ்சம் அதுங்களுக்கு சந்தேகம் வந்ததுன்னா ஆளுக்கு ஒரு பீஸ் எடுத்துட்டு போயிடுங்க.. அதனால நம்ம எந்திரன் ரோபோ மாதிரியே நடந்து வரவேண்டியிருக்கும்.. இந்தமாதிரி எனக்கும் ஒருமுறை ஒரு அனுபவம் ஏற்பட்டுச்சு..

(அதைப்பற்றி அடுத்த பதிவுல பார்ப்போம்)

28 comments:

 1. ஹ்ம்ம்... நல்லா போகுது பதிவு!!!! ஆனா 1 BHKக்கு 5,000 ரூபா கம்மிதானே!!!! சென்னைல இதை விட அதிகமா கேக்குறாங்க!

  ReplyDelete
 2. @சிவா...
  அப்படிங்களா சிவா!! இக்கரைக்கு அக்கரை பச்சைதான்.. நன்றி சிவா..

  ReplyDelete
 3. //ஒரு வருசத்துக்கு முன்ன நகர்புறத்துக்கு வெளியே இருக்கற வீடுகள்ல தங்கியிருந்த ரெண்டு, மூனு குழந்தைகளை அடுத்தடுத்து பத்து, பதினைந்து நாய்கள் கடிச்சே கொன்னுட்டதா செய்திகள் வெளியாச்சு.. //

  சுப்ஹானல்லாஹ். எந்த விதத்திலும் இப்பல்லாம் உயிருக்கு உத்த்ரவாதமே இல்லை. அஞ்சு வருஷம் முன்னாடி பெங்களூர்ல இருந்தப்ப ஒருத்தன் கம்பெனி டிரைவர்னு பொய் சொல்லி கர்ப்பிணி பெண்ணை நடு ராத்திரி ஷிஃப்டுக்கு கூப்பிட்டு போய் ரேப் ப்ண்ணி கொலை பண்ண சம்பவமும் நடந்தது. என்ன சொல்ல, க்ளோபலிசேஷனுங்கற பெயர்ல கலாசார சீரழிவும் பாதுகாப்பற்ற வாழ்க்கையும்தான் எல்லாருக்கும் கிடச்சிருக்கு :((

  ReplyDelete
 4. @அன்னு..
  உண்மைங்க அன்னு...

  ReplyDelete
 5. பீதிக் கொள்ளச் செய்கிறது இரவு வாழ்க்கை .பயங்கரமானத் தகவல்கள் . ஆ பத்தான விஷயம்... பயமாய் இருக்கிறது..

  ReplyDelete
 6. உங்க அனுபவம் அருமை பாபு.

  ReplyDelete
 7. ஆபத்துகளுக்கு மத்தியில்தான் வாழ வேண்டி இருக்கிறது!!

  ReplyDelete
 8. நல்லா விவரிச்சிருக்கீங்க! வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
 9. உண்மை பாபு! நாடு வளர வளர ஆபத்தும் வளர்ந்துட்டுதான் இருக்கு

  ReplyDelete
 10. பெங்களூர்ல இவ்ளோ பிரச்சினை இருக்கா ..?
  என்னால நம்பவே முடியலைங்க .. ஆனா வாடகை பிரச்சினை கேள்விபட்டிருக்கேன். நாய்கள் பிரச்சினை புதுசு .. !!

  ReplyDelete
 11. அருமையா சொல்லியிருக்கீங்க நண்பா...

  ReplyDelete
 12. பெங்களூரு -- மறுபக்கம் - பயங்கரமாகத் தான் இருக்குது.... எச்சரிக்கை செய்யும் பதிவு.

  ReplyDelete
 13. @மதுரை சரவணன்..
  வருகைக்கு நன்றிங்க சரவணன்..

  @அன்பரசன்..
  நன்றிங்க..

  @எஸ்.கே..
  உண்மைதாங்க.. வருகைக்கு நன்றி..

  @அருண்பிரசாத்..
  வருகைக்கு நன்றிங்க..

  @ப.செல்வக்குமார்..
  நாய்களால ஏற்படற பிரச்சனைகளைப் பற்றி அடுத்தபதிவுல விளக்கமாக சொல்றேங்க.. வருகைக்கு நன்றி..

  @வெறும்பய..
  நன்றிங்க ஜெயந்த்..

  @சித்ரா..
  கருத்துக்களுக்கு நன்றிங்க சித்ரா..

  ReplyDelete
 14. அம்மாடி,பெங்களூரில் எங்க சொந்தக்காரங்க எவ்வளவு பேரு இருக்காங்க,பயமாவுல இருக்கு,என்ன கொடுமை இது?பகிர்வுக்கு நன்றி.விழிப்புணர்வுள்ள பதிவு,தொடர்ந்து எழுதுங்க,தெரியாதவங்க இது மாதிரி பதிவை பார்த்தாவது அலர்ட் ஆக இருப்பாங்க.

  ReplyDelete
 15. பெங்களூர் னா ஆஹா ஓஹோ அப்படின்னு சொன்னாங்க. இவ்ளோ இருக்கா ?

  ReplyDelete
 16. // அந்த சம்பவங்களைக் கேட்டதுல இருந்தே நைட் வேலைக்கு போறதா இருந்தா ஒரு நூறு ரூபாய் மட்டுமே எப்பவுமே நான் எடுத்துக்கறது..//

  சரி இப்படி எழுதி இருக்கீங்களே, இத படிச்சிட்டு யாரும் உங்கள ஃபாலோ பண்ண மாட்டங்க என்பது என்ன நிச்சயம். ஹா..ஹா.. நல்ல உஷார் பதிவு.

  ReplyDelete
 17. எப்ப இந்த நிலைமை மாறுமென்று தெரியலையே??

  ReplyDelete
 18. @ஆசியா உமர்..
  வருகைக்கு நன்றிங்க.. கண்டிப்பாக எழுதுகிறேன்.. நன்றி..

  @இளங்கோ..
  ஆமாங்க இளங்கோ.. இன்னும் எவ்வளவோ இருக்கு.. வருகைக்கு நன்றிங்க..

  @எம் அப்துல் காதர்..
  நன்றிங்க..

  @நாகராஜசோழன் MA
  முதல்வருகைக்கு நன்றிங்க..

  ReplyDelete
 19. அதனால நம்ம எந்திரன் ரோபோ மாதிரியே நடந்து வரவேண்டியிருக்கும்...


  Yes Boss, நானும் இப்படி நடந்து போயிருக்கேன். நான் இருக்கிறது பெலந்தூர்.. எப்படியும் ஒரு பத்து பதினைந்து பாடிகார்டு நான் இருக்குற தெருவுல மட்டும் இருக்காய்ங்கே..

  ReplyDelete
 20. நல்லா போகுது....

  ReplyDelete
 21. @தினேஷ்..
  ///Yes Boss, நானும் இப்படி நடந்து போயிருக்கேன். நான் இருக்கிறது பெலந்தூர்.. எப்படியும் ஒரு பத்து பதினைந்து பாடிகார்டு நான் இருக்குற தெருவுல மட்டும் இருக்காய்ங்கே..///

  அவுட்டர்ல தங்கியிருந்தாலே இந்தப் பிரச்சனை பெரிய பிரச்சனையா இருக்குங்க..

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 22. @சிவா..
  நன்றிங்க..

  ReplyDelete
 23. ராத்திரியும் பகலும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சா நோகாம பிடிங்கிட்டுப் போயிடறாங்க. என்ன செய்யறது. சென்னையிலயும் இரவில் நாய் தொல்லை உண்டு.

  ReplyDelete
 24. @ஜெயந்தி..
  அப்படி அடிச்சுப் பிடிங்கின காசோட எப்படிதான் வாழ்றாங்க தெரியலைங்க..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

  ReplyDelete
 25. Babu correcta solli irukkinga....but inga nadakkura kodumayellam patha nammalala nambavey mudiyadhu.........bayangaramana KALACHAARA SEERAZHIVU...
  Yosichi patha enga thirumbavum therinji therinjey vella karanga kayukkulla poida poromo ellarumnu thonudhu....
  tiffin ellam kidayadhu..only pizza, burger
  lunch na mac donalds la dhaan
  dressna skirts and jeans,legins nu nu ayachu...chudi pottakooda ennamo vera planetla irundhu vandha madhiri oru look indha bangalorela ...nu poitrukku life...
  idhula comment vera tamilnadu karangalukku basha abimanamam...hindi ya acceptey panna mattomam...TN la english a pakkavey mudiyadham...
  Yaravadhu ipdi sonna nalla araiyanum pola thonum....

  enna solringa friends???

  ReplyDelete
 26. @கவி..
  தமிழ் நாட்டுக்காரங்களைப் பார்த்தா.. இவங்க எல்லாம் வேஸ்ட்டு அப்படிங்கற மாதிரிதான் நடந்துக்கறாங்க பெரும்பாலும் இங்க..

  நீங்க சொல்லியிருக்கற விசயங்களை ஒரு பதிவாகவே எழுதனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருக்கேங்க.. உங்க கோவம் மிகச்சரி..

  ReplyDelete
 27. ஐயோ....இதென்ன திகில் கதையா இருக்கு!!!!

  அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.

  சொல்லும் 'நடை' நல்லா இருக்குதுங்க. இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
 28. @துளசி கோபால்..

  நன்றிங்க..

  ReplyDelete