அழகன்..
எங்க பிரண்ட்ஸ் குரூப்புல எல்லாரும் இவன அப்படித்தான் செல்லமாக் கூப்பிடுவோம்.. ரொம்ப நல்லவன்.. பிரண்ட்ஸ் எல்லாத்துக்கும் சரிசமமா Care எடுத்துக்கணும்னு நினைக்கிறவன்.. எங்க ரெண்டு பேருக்கும் சின்ன வயசுல ரொம்ப சண்டை வரும்.. கைகலப்பு எல்லாம் ஆயிருக்கு.. ஆனா ரெண்டு பேரும் ரொம்ப குளோஸா இருப்போம்.. கோழி கிறுக்கன மாதிரியே இருக்குன்னு சொல்லுவாங்க இல்லையா!! அது இவனோட ஹேண்ட் ரைட்டிங்கப் பார்த்தா தெரிஞ்சுக்கலாம்.. ஸ்கூல்ல இதுக்காகவே ரொம்ப அடி வாங்குவான்.. மக்குப் பய!!!
விளையாட்டுல ரொம்ப ஸ்ப்ரிட்டா இருப்பான்.. அதுவும் கிரிக்கெட் ரொம்ப நல்லா விளையாடுவான்.. இவன் தான் எங்க டீம் கேப்டன்.. கிரவுண்டுல ரொம்பவும் நல்லாத்தான் பிளான் பண்ணுவான்.. ஆனா நாங்க யாருமே சரியா விளையாட மாட்டோம்.. மேக்ஸிமம் இவன் மட்டும் தான் ரன் அடிப்பான்.. வேற.. எங்க பிரண்ட்ஸ் குரூப்புக்கு ரொம்ப பொழுதுபோக்கா இருப்பான்.. எல்லாரும் இவன ஓட்டுவோம், ஆனாலும் சளைக்காம எல்லாத்தையும் சமாளிப்பான்..
இவனோட வாழ்க்கை இலட்சியமாவே ஒரு விசயம் இருந்தது.. அது என்னன்னு எங்க ஊருக்கே தெரிஞ்ச ரகசியம்.. ஆனால் இங்கே சொன்னா.. பெங்களூர் வந்து உதைப்பான்..
இப்போ மேட்டருக்கு வர்றேன்.. பெர்முடா முக்கோணம் பத்தி எழுதச் சொல்லி நேற்று மெயில் பண்ணியிருந்தான்.. சோ நண்பனுக்காக இந்தப் பதிவை டெடிக்கேட் பண்றேன்.. :-)
வட அட்லாண்டிக் கடலோட மேற்குப் பகுதியில் இருக்கற ஒரு குறிப்பிட்ட பரப்பை பெர்முடா முக்கோணம்னு சொல்றாங்க.. பஹாமாஸ், புளோரிடா நீரிணைப்பு மற்றும் கரீபியன் தீவுகள் முழுவதுமே இந்தப் பரப்புக்குள்ள அடங்குது.. அப்புறம் இன்னும் சில பகுதிகளும் இந்தப் முக்கோணத்துக்குள்ள வரும்னு சொல்றாங்க..
இந்தப் பகுதியில நிறைய கப்பல்களும் விமானங்களும் காணமப் போயிட்டதாக சொல்லப்படுது.. இந்த மர்மத்தை பற்றி முதன்முதலாக 1950 ஆண்டு ஒரு ஆர்டிகல் வெளியாகியிருக்கு.. அப்புறம் இரண்டு வருசம் கழிச்சு இந்த விசயம் பற்றி இரண்டாவது ஆர்டிகல் வெளியாச்சு.. பிளைட் 19 ரக விமானங்கள் ஐந்து.. அந்தப் பகுதியில பயிற்சி எடுத்துட்டு இருந்தப்போ காணாமப் போயிட்டதாகவும்.. அந்த விமானங்கள்ல இருந்த ஒரு கேப்டன்.. "நாங்க இப்போ வெள்ளைக் கலர்ல இருக்கற தண்ணிக்குள்ள போயிட்டிருக்கோம்.. இல்ல... இல்ல.. இந்தத் தண்ணி பச்சையா இருக்கு.. அப்படின்னு சொன்னதா ரெக்கார்ட் ஆயிருக்குன்னு சொல்றாங்க.. அந்த விமானங்களோட திசைகாட்டியும் தாறுமாறா அப்போ வேலை செய்திருக்கு.. அவங்களைத் தேடிக்கிட்டு ஒரு குரூப் இன்னோரு விமானத்துல போக அந்த விமானத்தையும் காணோம்.. இந்த விசயத்தை விசாரணை பண்ணின அதிகாரிகள்.. விமானங்கள் எல்லாம் செவ்வாய் கிரகத்துக்கு பறந்து போயிடுச்சு சொன்னதாகவும் கூறப்பட்டிருக்கு..
அப்புறமென்ன.. இந்த இடத்தைப் பற்றி ஆவி, புதம், பேய், ஏலியன்ஸ்ன்னு நிறையக் கட்டுக்கதைகள்.. (எனக்கே டைப் பண்ணப் பண்ண.. இன்னும் நாலு பிட்டு எக்ஸ்ட்ரா போடலாம்னுதான் இருக்கு.. :-).. )
இந்தப் பகுதிக்குள்ள நுழையற எந்த பொருளுமே காணமப்போகல.. அங்கேயே வேற வடிவத்துல இருக்குன்னும்.. எல்லாப் பொருட்களுமே ஒரு அணுவாக மாறி காற்றோட கலந்துடுதுன்னும் ஏகப்பட்ட கெஸ்ஸிங்..
விஞ்ஞான ரீதியாகவும் இந்த விசயத்துக்கு பல விளக்கங்களைக் கொடுத்திருக்காங்க..
கடல்ல உண்டாகற பயங்கர சூறாவளிகள் காரணமாக இருந்திருக்காலாம்னு சொல்லப்படுது..
சுனாமி அலைகள் மாதிரி இராட்சச அலைகள் உருவாகி.. கப்பல்களையும், விமானங்களையும் மூழ்கடிச்சிருக்கலாம்னும் சொல்றாங்க..
பெர்முடாப் பகுதியோட ஏதாவது மையப்பகுதியில.. ஈர்ப்புவிசை ரொம்ப அதிகமாக இருந்து.. எல்லாப் பொருட்களையும் உள்ளே ஈர்த்துக்குன்னும் ஒரு கெஸ்ஸிங்..
கடற்கொள்ளையர்கள் மேலயும் டவுட்டு இருந்திருக்கு.. ஆனால் அவங்க எப்படி விமானத்தைக் கொள்ளையடிப்பாங்க.. (என்னோட டவுட்டு இது.. :-).. )
பெர்முடா முக்கோணத்தின் குறிப்பிடத்தக்க சம்பவங்கள்னு சொல்லனும்னா..
1. பிளைட் 19 காணாமப்போனதும்.. அந்த விமானங்களைத் தேடி மீட்பு பணிக்காகப் போன 13 பேர் கொண்ட குழுவும் காணாமல் போனது.. இந்த விசயத்துக்காக கொடுக்கப்பட்ட விளக்கங்கள் துல்லியமான உண்மைகளாகத் தெரியல..
2. மேரி செலஸ்டின்னு ஒரு கப்பல் 1872 ஆம் ஆண்டு மர்மமான முறையில் துலைஞ்சு போயிருக்கு.. பெர்முடா முக்கோணம்தான் இதுக்கு காரணம்னு சொல்லப்பட்டிருக்கு.. இதே பேர்ல இருந்த ஒரு கப்பல் 1860கள்ல மூழ்கிப் போனதை இந்தக் கப்பலோட இணைச்சு குழம்பியிருக்கலாம்னும் சொல்றாங்க..
3. 1881 ஆம் ஆண்டு எலன் ஆஸ்டின்னு ஒருத்தர்.. ஒரு கப்பல் கடல்ல அநாதையாக வர்றதைப் பார்த்திருக்கார்.. மீட்புப் பணியாட்களை அனுப்பி.. அந்தக் கப்பலையும் சேர்த்து நியூயார்க் ஓட்டிட்டு வந்துடலாம்னு அவர் எண்ணம்.. ஆனால்.. அந்தக் கப்பல் மீண்டும் பணியாட்களோட காணாமப் போனதாக சொல்லப்படுது..
இப்படி ஒரு பெரிய லிஸ்டே இருக்கு.. இது போதும்.. :-)..
பெர்முடா முக்கோணம் பற்றின தேடுதல்ல.. இன்னொரு விசயமும் தெரிஞ்சுக்க முடிஞ்சது.. ஜப்பான் பக்கத்துல ட்ராகன் ட்ரையாங்கில்னு இன்னொரு இடமும்.. சேம் பீஸ்தானாம்.. அந்தப் பகுதிகுள்ள நுழையற எந்த ஆப்ஜெக்டும் திரும்பறதில்லையாம்..
டிஸ்கி: பெர்முடா முக்கோணத்துல இப்போ எந்த விபத்துகளும் நடக்கறதில்லையாம்.. உண்மையில ஏதாவது நடந்துச்சா.. நடக்கலையா.. அடப் போங்கப்பா..