வங்கியில் ஒரு நாள்


  
என்னுடைய ஊர் பழனி.. ஊர்ல எனக்கு ஒரு பேங்க் அக்கெளண்ட் கிரியேட் பண்ணிக்கிட்டா கொஞ்சம் வசதியா இருக்குமேன்னு.. போன மாதம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் அக்கெளண்ட் கிரியேட் பண்ணப் போயிருந்தேன்.. எங்க ஊரைச் சுற்றி நிறைய கிராமங்கள் இருக்கறதால.. அந்த கிராமங்களைச் சுற்றியிருக்கற நிறைய விவசாயிகள்தான் பேங்குல அக்கெளண்ட் வச்சிருக்காங்க..

அன்னைக்கு என்னோட வேலை எனக்கு ஒரு அகெளண்ட் கிரியேட் பண்ணனும்.. கிரியேட் பண்ணினதுக்கு அப்புறம் கொஞ்சம் பணத்தை என்னோட அக்கெளண்டுல போடனும்.. என் அப்பாவோட பாஸ்புக்கிற்கு என்ட்ரி போடனும்.. சாதாரணமா ஏதாவது ஒரு வேலையை செய்யனும்னாலே அரசாங்க வங்கிகள்ல பாதி நாள் போயிடும்.. எனக்கு மூன்று வேலை இருந்தது.. சரி இன்னைக்கு முழுக்க அங்கேதான் அப்படின்னு நினைச்சிட்டு.. தயாராகத்தான் போனேன்..

முதல்ல அகெளண்ட் கிரியேட் பண்ண ஃபாம் வாங்கிட்டு அதை ஃபில் பண்ணினேன்.. அப்போ சிலர் அந்த ஃபாமை ஃபில் பண்ணத் தெரியாம திணறிட்டு இருந்தாங்க.. அதுல ரெண்டு பேருக்கு.. ஃபில் பண்ணிக் கொடுத்தேன்.. ஃபாமை சப்மிட் பண்ணியாச்சு.. ஃபாமை வாங்கறவங்களுக்கு எதிர்த்தாப்புல ஒரு சின்ன பொண்ணு உட்கார்ந்திருந்தது.. ஸ்டேட் பாங்க் இப்பொதான் எங்க ஊர்ல கம்ப்யூட்டரைஸ்டு பண்ணியிருக்காங்க.. அதனால நாங்க கொடுக்கற ஃபாம்களை வாங்கி வைக்கறதுதான் அங்கே உட்கார்ந்து இருந்தவங்களோட வேலையா இருந்தது.. அக்கெளண்ட் கிரியேட் பண்ற வேலைகளை எல்லாம் அந்தப் பொண்ணே பார்த்துக்கிட்டது.. அங்கே ஃபாம் கொடுக்கறதுக்கே 2 மணிநேரம் காக்க வேண்டியிருந்தது.. மதியம் வாங்க கிரியேட் ஆயிருக்கும்னு சொன்னாங்க..

அடுத்த வேலை.. அப்பாவின் பாஸ்புக்கிற்கு எண்ட்ரி போடனும்.. கம்ப்யூட்டரைஸ்டு ஆக்கிட்டாலும்.. இன்னும் பாஸ்புக் குடுத்து நம்ம டிரான்சக்ஸன்களை எண்ட்ரி போடற சிஸ்டம்தான் ஃபாலோ பண்றாங்க.. அங்கே வரிசையில நிக்க ஆரம்பிச்சேன்.. அங்கே எண்ட்ரி பண்ணிட்டு இருந்தவர் பக்கத்துல ஒருத்தர் சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தார்.. அவர் கையில ஒரு 5,6 பாஸ்புக்குகளை எண்ட்ரி போட்டுக் குடுத்துட்டே இருந்தார் அங்கே வேலை செய்றவர்.. ஒருவழியாக அந்தாள் நகர.. எனக்கு முன்பிருந்த பையன் பாஸ்புக்கை உள்ளே நீட்டினான்.. கடந்த மூன்று மாசமாக எண்ட்ரி போடலயாம்.. நிறைய டிரான்சக்சன் ஆயிருக்கு.. அடிக்கடி வந்து எண்ட்ரி போடறதில்லையா அப்படின்னு கன்னாபின்னான்னு திட்ட ஆரம்பிச்சார் உள்ளே இருந்தவர்.. கூட்ட சமயமாக இருந்ததால.. அங்கே எல்லாரும் வேடிக்கை பார்க்க அந்தப் பையனுக்கு ரொம்ப அவமானமாக ஆயிடுச்சு.. கெளண்டர்ல இருந்தவர் தொடர்ந்து திட்டிக்கிட்டே இருக்க.. நான் ஏங்க இதுக்கு முன்ன நின்னு உங்ககிட்ட சிரிச்சு பேசிட்டு இருந்தவருக்கு ஒரு வருசத்துக்கு எண்ட்ரி போட்டமாதிரி இருந்தது.. இப்போ மட்டும் என்ன இந்தப் பையனை இவ்வளவு திட்டறீங்க.. உங்க வேலையை செய்ங்கன்னு சொன்னேன்.. உடனே அந்தாளுக்கு கோவம் வந்துடுச்சு.. உன் வேலையைப் பாருன்னு சொல்ல.. க்யூல நின்ன எல்லாரும் எனக்கு சப்போர்ட்டுக்கு வந்துட்டாங்க.. அதனால வேறவழியில்லாம பேசாம வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டார் அவர்..

ஒரு மணிநேரத்துல அந்த வேலையும் முடிஞ்சது.. 12 மணி ஆயிருந்தது.. அகெளண்ட் கிரியேட் ஆயிடுச்சான்னு.. அந்த உதவியாளர் பொண்ணுகிட்ட கேட்டேன்.. கிரியேட் பண்ணியாச்சுங்க.. மேடம் அங்கே பேசிக்கிட்டு இருக்காங்க.. வந்தவுடனே வாங்கிக்கிங்கன்னு சொல்லுச்சு பொண்ணு.. ஒன்னும் அஃபிசியலாக எல்லாம் பேசல.. அங்கே இன்னொரு கெளண்டர்ல போய் வெட்டி அரட்டை.. வரவே இல்லை.. அப்படியே சாப்பிட போயிட்டாங்க.. இனி 2 மணிக்குத்தான் வருவாங்கன்னு தெரியுமே.. நானும் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வந்து ஒருவழியா பாஸ்புக்கையும் கையில வாங்கிட்டேன்..

இப்போ பணம் கட்டனும்.. டோக்கன் எடுத்துட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. அங்கே ஒரு பெரியவரை கேசியர் பயங்கரமாகத் திட்டிக்கிட்டு இருந்தாங்க.. கெளண்டருக்குப் பக்கத்துலதான் உட்காந்திருந்தால என்ன விசயம்னு புரிஞ்சது.. பெரியவர் 10, 20 ரூபாய் நோட்டுகளாக கொண்டு வந்திருக்காராம்.. அதை நான் எப்படி எண்ணுவது.. போய் மாத்திக் கொண்டு வாங்கன்னும்.. நீங்க ஸ்லிப் தப்பா ஃபில் பண்ணியிருக்கீங்கன்னும் திட்டிட்டு இருந்தாங்க.. நான் போய் ஏங்க இப்படி பெரியவரைத் திட்டறீங்க.. உங்க வேலையே அதுதானன்னு கேட்டால்.. இந்தக் கெளண்டரிலும் உங்க வேலையைப் பாருங்கன்னு பதில்.. அந்தப் பெரியவரிடம் சரிவாங்க நாம மேனேஜர் ரூம்ல போய்.. 10,20 ரூபாய் நோட்டெல்லாம் கேசியர் வாங்க மாட்டாங்களாம்.. அதனால் நீங்க வாங்கிக்கங்கன்னு சொல்லிக் கட்டிட்டு வரலாம்னு சொல்ல.. உடனே அந்தப் பெரியவரிடம் நோட்டுகளை வாங்கி வேலையை முடிச்சுக் கொடுத்துட்டாங்க.. என்னோட 3வது வேலையும் முடிஞ்சது..

கிராமப்புற மக்கள் அதிகமாக வர்ற பேங்க்காக இருக்கறதால.. ஜனங்களுக்கு அந்த ஸ்லிப்பை எல்லாம் ஃபில் பண்ணத் தெரியல.. என்னை மாதிரி வர்றவங்ககிட்ட தம்பி இதை ஃபில் பண்ணிக் கொடுப்பான்னு கெஞ்சிக் கேக்கறாங்க.. சிலர் தப்பா ஃபில் பண்ணிக் கொடுத்திட்டாலும் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிப் போகலாம் வேலை செய்றவங்க.. அங்கே வேலை செய்றவங்களுக்குத்தான் இருக்கற தலைவலி புரியும்னு நீங்க நினைக்கலாம்.. அப்படி ஒன்னும் விழுந்தடிச்சுக்கிட்டு வேலை செய்யலையே.. அவங்க பாட்டுக்கு ஹாயா.. வேலை செய்றாங்கதான்.. அதனால இந்தமாதிரி படிக்காதவங்ககிட்ட கடிஞ்சுக்கிறதைக் குறைச்சிக்கலாம்..

அங்கே ஒவ்வொரு கெளண்டர்ல இருக்கறவங்களுக்கும் என்னா கிராக்கி.. ஒரு பேப்பரை அந்தப் பக்கம் இருந்து இந்தப் பக்கம் எடுத்துக் கொடுக்கனும்னா.. ஒரு மணிநேரமாவது வெயிட் பண்ண வைக்கறாங்க.. பிரைவேட் பேங்குல இந்தத் தொல்லைகள் இருக்காது.. ஆனால் டெப்பாஸிட் பணம்னு சொல்லி அவங்க ஆளையே காலி பண்ணிடுவாங்க.. இங்கே அகெளண்ட் கிரியேட் பண்ண 500 ரூபாய் இருந்தால் போதுமானது.. செக்புக்கோட வேணும்னா 1000 கட்டனும்.. நமக்கு பிற்காலத்துல ஏதாவது லோன் வாங்கனும்னா.. செக்புக் இருந்தால்தான் ஆகும்.. அதனால அதையும் சேர்த்து வாங்கிக்கறதுதான் சரி..

இப்போ மேட்டர் என்னன்னா.. எனக்கு ஒரு வாரத்துல வீட்டுக்கு அனுப்பறதாக சொல்லியிருந்த செக்புக்கை ஒரு மாசம் ஆனதுக்கு அப்புறமும் அனுப்பல.. கேட்டால் நீங்க செக்புக்குக்கு இனி தனியா எழுதிக் கொடுக்கனும்னு சொன்னாங்க.. அடுத்த முறை போனா.. நீங்க எழுதிக் கொடுத்த ஃபாமே இல்ல.. திரும்பவும் எழுதிக் கொடுங்கன்னு சொன்னாங்க.. இன்னும் செக்புக் வந்து சேரல.. இதெல்லாம் எனக்குத் தேவையா.. போனோமா.. வேலையை முடிச்சிட்டு வந்தோமான்னு இல்லாம நியாயம் கேட்டதுக்கு இப்படி ஒரு தண்டனை.. இனி எத்தனை முறை அலைய விடுவாங்களோ தெரியல..


71 Responses So Far: