கிரெடிட் கார்டு "அபாயங்கள்"கிரெடிட் கார்டு புதுசா யூஸ் பண்ண ஆரம்பிக்கறவங்க.. கஸ்டமர்கேர்ல வேலை செய்றவங்களால.. சந்திக்கற பிரச்சினைகளைப் பற்றி கிரெடிட் கார்டும்.. கஸ்டமர்கேரும்.. அப்படிங்கற பதிவுல சொல்லியிருந்தேன்..

என்னுடைய அந்தப் பதிவை தினமலரும்.. "தெரிஞ்சுக்கோ"ன்னு ஒரு திருட்டுப் பதிவரும் சுட்டிருந்தாங்க.. அந்த விசயத்தை எனக்குத் தெரியப்படுத்திய நண்பர்கள் ராஜா மற்றும் நா. மணிவண்ணன் இருவருக்கும் எனது நன்றிங்கள்..

திருட்டுப் பதிவரின் வலைத்தளத்திற்குப் போய் அனைவரும் திட்ட.. அந்தத் திருட்டுப் பதிவர் (எத்தனை முறைத் திருட்டுப் பதிவர்.. திருட்டுப் பதிவர்ன்னு சொல்றாம் பாருன்னு பார்க்கறீங்களா.. அப்படி சொல்லியாவது மனதை ஆற்றிக்க வேண்டியதுதான்.. :-) ).. என்னுடைய பதிவை அவருடையத் தளத்தில் இருந்து அடுத்த நாள் அழித்து விட்டார்.. தினமலருக்கு நான் இதுவரை மூன்று முறை மெயில் பண்ணிட்டேன்.. அவங்களுக்கு இது யூசுவலான விசயம் போல.. எந்த ரிப்ளையுமே கொடுக்கல.. நிறைய நண்பர்கள் பின்னூட்டத்தில் அவர்களை சட்டப்படி அணுகும்படிக் கூறியிருந்தார்கள்.. என்னுடைய வேலைகளுக்கு மத்தியில் அவர்களை சட்ட ரீதியாக அணுகுவதெல்லாம் முடியாத காரியம்.. ஆனால் எனக்கு ஆறுதலாகவும்.. ஆதரவளித்தும் பேசிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்..

இப்பதிவில் கிரெடிட் கார்டை ரொம்ப காலமாக யூஸ் பண்றவங்க.. சந்திக்கற மோசடிகளைப் பற்றி எனக்குத் தெரிந்த தகவல்களைத் தெரிவிக்கிறேங்க..

கிரெடிட் கார்டில் பல வகைகள் உண்டுன்னு எல்லாருக்கும் தெரியும்.. அதுல பிளாட்டினம் கார்டு வகையில் அதிகமான கிரெடிட் லிமிட் கிடைக்கும்.. நம்முடைய சாலரி மாதம் 50000 ரூபாயைத் தாண்டினால் தொடக்கத்திலேயே பிளாட்டினம் கார்டு தந்திடுவாங்க.. நிறையப் பேருக்கு அவங்களோட கோல்டு மற்றும் டைட்டானியம் கார்டுல இருந்து அப்கிரேட் பண்ணிக்கூட பிளாட்டினம் கார்டு தருவாங்க.. அவங்க எல்லாம் பெர்பெக்டா தங்களோட பில்லைக் கட்டியிருப்பாங்க.. அதான் பிளாட்டினம் கார்டு கொடுத்திட்டாங்கன்னு நீங்க நினைத்தால் அதான் தப்பு..

அந்த கஸ்டமர்ஸ் ஒவ்வொரு மாதமும் அதிகமாக டிரான்சக்சன்ஸ் காமிச்சு.. அடிக்கடி சரியான தேதியில பில் கட்டாம விட்டு.. அப்புறம் வட்டியோட கட்டற ஆளுங்களாக இருப்பாங்க.. சோ.. இன்னும் கிரெடிட் லிமிட்டை அதிகம் பண்ணிக் கொடுத்தால்.. அதையும் செலவு பண்ணிட்டு.. இன்னும் அதிகமாக தண்டம் கட்டுவாங்கள்ல.. அந்த பிளான்தான் பேங்க்காரங்களுக்கு..

இந்த ஆண்டு முடிந்தால்.. நான் என்னுடைய கோல்டு கார்டை வாங்கி மூன்று ஆண்டுகளாகிறது.. எந்த அப்கிரேடும் இதுவரை இல்ல.. அதே கிரெடிட் லிமிட்தான்.. ஏன்னா இந்த மூன்று ஆண்டுகளில் ஒருமுறைகூட பில்டேட் தவறினதே இல்ல (அடுத்த மாத பில்லை நினைத்தால்தான் பக்குன்னு இருக்கு.. :-( ).. சோ என்னால எந்த யூஸும் இல்ல அவங்களுக்கு அதான்..

கிரெடிட் கார்டு மூலமாக லோன்கூட அப்ளை பண்ணிக்க முடியும்.. என்னுடைய கிரெடிட் லிமிட்ல இருந்து 75% சதவீதத்தை லோனாக வாங்கிக் கட்டமுடியும்.. வட்டி தீட்டிடுவாங்க..
என்னுடயை நண்பர் ஒருவர்.. தன்னுடைய கிரெடிட் கார்டில் இருந்து 30000 ரூபாய் லோன் வாங்கி ரெண்டு மாதத் தவணையைக் கரெக்டாகக் கட்டியிருந்தார்.. அவருக்கு கஸ்டமர்கேர்ல இருந்து போன்.. சார் உங்க டிரான்ஸக்சன்ஸ் எல்லாம் நல்லா இருக்கு.. அதனால உங்களுக்கு பிளாட்டினம் கார்டு இஷ்யூ பண்றோம் சார்.. கங்கிராட்ஸ்னு சொல்ல.. நண்பருக்கு பயங்கரமான சந்தோசம்.. ஆஹா!! கிரெடிட் லிமிட் நிறைய வருமே.. சூப்பர்னு நினைச்சுட்டு ஓகே சொல்லிட்டார்.. ஒரு வாரத்துல பிளாட்டினம் கார்டும் வந்திடுச்சு.. தொடர்ந்து அடுத்த மாத பில்லில் வந்தது அவருக்கு ஆப்பு..

அவருடைய லோன் அமெளண்ட் 30000 ரூபாயில் இருந்து 78000 ரூபாய் என்று ஆகியிருந்திருக்கு.. அந்த அதிர்ச்சியை எப்படித் தாங்கிக்க முடியும்.. ஆடிப்போயிட்டார்.. கஸ்டமர்கேருக்கு போன் பண்ணி விசயம் கேக்க.. சார் கன்சர்ன் டிபார்மெண்டுக்கு டிரான்ஸ்பர் பண்றோம் பண்றோம்னு காலை மாத்திவிட்டுட்டே இருந்தாங்க.. அப்படியே லைன் கட்டாயிடும்.. கஸ்டமர்கேருக்கு ஃபோன் பண்றது எல்லாம் டோல்பிரியும் கிடையாது.. மனிதர் ரொம்ப நொந்து போயிட்டார்.. ஒருமாதம் பக்கம் இப்படியே மல்லுக்கட்டிட்டு இருந்தார்.. ஒரேஒரு முறை விசயத்துக்கு இப்படி ரிப்ளை வந்திருக்கு..
"சார் உங்க கார்டை அப்கிரேட் பண்றப்போ ஏதாவது பிரிவியஸ் பேலன்ஸ் பெண்டிங் இருந்தால்.. வட்டியோட இன்கிரீஸ் பண்ணிடுவோம் சார்.. உங்களுக்கு கார்டு இஷ்யூ பண்றப்பவே அக்சப்டன்ஸ் கேட்டுத்தான் பண்ணியிருப்பாங்க" அப்படின்னு ரிப்ளை..

நண்பருக்கு பிரசர் பயங்கரமாக ஏறிடுச்சு.. இனி இவனுங்க வேலைக்கு ஆகமாட்டாங்கன்னுட்டு.. அவர் கஸ்டமர்கேருக்கு போன் பண்ணிய கால் ஹிஸ்டரி, தன்னுடைய லோன் டீட்டெய்ல்ஸ் எல்லாத்தையும் ரிசர்வ் பேங்க்கிற்கு தெளிவாக எழுதியும்.. டாக்குமெண்ட்சை அட்டாச் பண்ணியும் அனுப்பிட்டார்..

ரிசர்வ் பேங்க்கிற்கு அனுப்பிய ரெண்டாவது நாள்.. அந்த பேங்க்கோட மேனேஜர் போன் பண்றார்.. சார் ரிசர்வ் பேங்குல எதுக்கு கம்ப்ளைண்ட் பண்ணீங்க.. உங்களோட பிரச்சனையை உடனே சால்வ் பண்றோம்.. நீங்க எப்பவும் கட்டவேண்டிய அமெளண்டை இப்போ இருந்து கட்டுங்கன்னு சொல்லியிருக்கார்.. என் நண்பர் இந்த ஏய்க்கற வேலையெல்லாம் வேண்டாம்.. என்னுடைய அகெளண்ட்ல சரியான கணக்கு வரும்வரை பணம் கட்ட மாட்டேன்னுட்டு சொல்லிட்டார்.. அதுக்குப்பறம்.. 78000 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக குறைந்து வந்திருக்கு.. அதுக்கு மேல கணக்கை சரிசெய்ய முடியலையாம்.. நீங்க உங்க அமெளண்டை மட்டும் கட்டுங்க சார்.. பின்னாடி உங்க கணக்கை சரிசெய்திடறோம்.. அப்படின்னு சொல்ல.. நீங்க சரிசெய்ற வரைக்கும் லோன் அமெளண்டைக் கட்ட முடியாதுன்னு கறாராக சொல்லிட்டார் நண்பர்.. இப்போ ஒரு ஆண்டுக்கு மேலயே ஆயிடுச்சு.. அவங்க அவரோட கணக்கை சரிசெய்யவும் இல்ல.. இவர் லோன் அமெளண்டைக் கட்டவும் இல்ல.. கிரெடிட் கார்டு யூஸ் பண்றதையே நண்பர் விட்டுட்டார்..

நம்ம நண்பர் நல்ல விவரமான ஆளாக இருந்ததால இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிச்சிட்டார்.. இதுவே விவரம் தெரியாத ஆளாக இருந்திருந்தால் முதுகுல டின் கட்டியிருப்பானுங்க அந்த பேங்க்காரனுங்க..

ஏற்கனவே கிரெடிட் கார்டு வைத்திருக்கற நண்பர்களுக்கு.. உங்க கார்டை அப்கிரேட் பண்றேன்னு கஸ்டமர்கேர்ல இருந்து கேட்டால்.. ஏதாவது பிரிவியஸ் பேலன்ஸ் பெண்டிங் இருக்கான்னு பார்த்துக்கங்க.. அப்புறம் புதுக்கார்டைப் பற்றி அனைத்து சந்தேகங்களையும் தெளிவாகக் கேட்டுத் தெரிஞ்சுக்கங்க..

முழிச்சுக்கங்க.. பிழைச்சுக்கங்க..

டிஸ்கி 1: கிரெடிட் கார்டை வைச்சு நடத்தப்படற மற்றொரு மோசடியைப் பற்றியும்.. இந்தப் பதிவிலே எழுதலாம்னு இருக்கேன்.. இதுவே ரொம்ப லென்தியாக ஆயிட்டதால மற்றொரு முறை எழுதறேன்..

டிஸ்கி 2: காஸ்ட்லி மொபைல்ஸ் வாங்கற என்னமா உங்களுக்கு?.. அதில் நடக்கும் ஒரு மோசடி பற்றி அடுத்த பதிவில் எழுதறேன்.. போயிட்டு வர்றேன்.. :-)

படங்கள்: நன்றி கூகுள்61 Responses So Far: